Friday, July 29, 2011

பொருள் தொலைந்து போச்சா ?


ரயில்களில் தொலைத்த பொருட்களைஉரியவர்கள் பெறஇணையதளம் துவக்கப்பட்டுள்ளது. ரயில்களிலும்ரயில் நிலைய பிளாட்பாரங்களிலும்பயணிகள் அவ்வப்போது தங்களது பொருட்களை,மறந்து விட்டுச் செல்கின்றனர். இவ்வாறு கிடைக்கும் பொருட்களைரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டுதங்களது பாதுகாப்பில் வைத்துக் கொள்கின்றனர். இந்தப் பொருட்களைப் பலரும் மீட்க வருவதில்லை.

இதையடுத்துரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விட்டுச் செல்லும் பொருட்களை உரியவர்கள் தெரிந்துமீட்பதற்கு வசதியாகதெற்கு ரயில்வேசென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புத் துறை,புதிய இணையதளம் ஒன்றை துவக்கியுள்ளது.
இந்த இணையதளத்தைநேற்று துவக்கி வைத்தசென்னை கோட்ட மேலாளர் அனந்தராமன் கூறியதாவது: பயணிகள் விட்டுச் செல்லும் பொருட்களைஉரியவர்கள் மீட்பதற்கு வசதியாகதெற்கு ரயில்வே இணையதளத்தில்புதிய "லிங்க்ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில்சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்ட, 86 பொருட்களின் விவரங்கள்பதிவு செய்யப்பட்டுள்ளன. படிப்படியாகசென்னை கோட்ட ரயில் நிலையங்கள் முழுவதிலும்இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பொருட்களை தொலைத்த பயணிகள், www.sr.indianrailways.gov.in என்ற ரயில்வே இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பொருட்களை தொலைத்த முதல் ஏழு நாட்கள் வரைசம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடமும்அதற்கடுத்து சென்னைசால்ட் குவாட்டர்சில் உள்ள தொலைந்த பொருட்கள் அலுவலகத்திலும், 90 நாட்கள் வரை வைக்கப்படும். பொருட்களுக்கு உரியவர்கள் ஆதாரத்தைக் காண்பித்துஅவற்றை மீட்டுச் செல்லலாம். இவ்வாறு அனந்தராமன் கூறினார்.

சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் காந்திதலைமை வணிக மேலாளர் லெனின் ஆகியோர் உடன் இருந்தனர். இத்திட்டம்இந்தியாவிலேயே முதன் முறையாகசென்னை கோட்டத்தில் தான் துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில் பார்ப்பது எப்படி? : பொருட்களை தொலைத்த பயணிகள்ரயில்வே இணைய தளமான www.sr.indianrailways.gov.in ' என்ற தளத்திற்குச் சென்று, about us என்பதை security என்ற இணைப்பிற்குள் சென்று, chennai division என்ற பகுதியில் பார்த்தால்கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!