Saturday, July 9, 2011

யாரிடமும் சொல்லாதே


ஒருவரிடம் ரகசியம் சொல்பவர்யாரிடமும் சொல்லாதே என்ற நிபந்தனையிட்டே அந்தச் செய்தியைச் சொல்கின்றார். அவரும் அதை ஒப்புக் கொண்டுயாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த பின்னர் தான் அந்தச் செய்தியைப் பெறுகின்றார். அதன் பின்னர் தெரிந்தோ,தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ அதைப் பரப்புகின்றார் என்றால் இவர் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுகின்றார் என்று தான் அர்த்தம். வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். (அல்குர்ஆன்17:34)

ரகசியம் காத்த அனஸ் (ர­லி) நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய தாயாரிடம் வர தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், ''தாமதமானதற்கான காரணம் என்ன?'' என்று என் தாயார் வினவினார்.''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்'' என்று பதிலளித்தேன். ''அவர்களுடைய அந்தக் காரியம் என்ன?'' என்று கேட்டார். ''அது ரகசியமாகும்''என்றேன். ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே'' என்று கூறினார். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி)நூல்: முஸ்­லிம் 4533

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!