Saturday, April 16, 2011

இதுவல்லவோ ஜனநாயகம்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்


நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

நபிகள் நாயகம் 

உமர்[ரலி] காலத்தில் பெண்கள் தங்கள் மகர் தொகையை அதிகரித்துக் கொண்டு செல்ல ஆண்களால் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.தங்களது குறையினை ஜனாதிபதி உமர்[ரலி] அவர்களிடம் முறையிட்டனர்.அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டஉமர்[ரலி] அவர்கள் அப்போதைய பாராளுமன்றமான வெள்ளி ஜும்மாவில்புதிய சட்டத்தை அறிவிக்கிறார்கள் .
அதாவது ,இனி பெண்கள் மகரமாக நானூறு திர்கம்களுக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகர் தொகையை நிர்ணயம் செய்கிறார்கள்.
அப்போது ஜும்மாவிர்க்கு வந்திருந்த ஒரு நபி தோழியர் அவர்கள் உடன் எழுந்து ,அமீருல் முஹ்மீன் அவர்களே ,"பெண்களுக்கு மகராக ஒரு பொருட் குவியலே கொடுத்தாலும் அவற்றிலிருந்து திரும்ப பெறாதிர்கள்,,"என்று பொருள்படக் கூடிய குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி இறைவனே பெண்களுக்கான மகரை நிர்ணயிக்கத போது அதை மாற்ற உங்களுக்கு உரிமை எப்படி வந்தது ?என்று கேட்டார்.
ஆடிப்போன உமர்[ரலி] அவர்கள் உடன் இந்த பெண் இறைவனின் சட்டத்தை சொல்லிவிட்டார்.அதுவே சரியானது நான் தொகை நிர்ணயித்ததை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.என்று கூறினார்கள்.
இன்றைய உலகில் வாய் கிழிய பேசப்படும் ஜனநாயக நாட்டில் ஒரு கவுன்சிலரிடம் கூட போலீசாரால் நியாயத்தை நிலை நிறுத்த முடியவில்லை.
ஆனால் இஸ்லாம் காட்டிய ஜனநாயகத்தில் ஒரு சாதாரண பெண்ணால் ஜனாதிபதியிடமே நீதியை தட்டி கேட்க முடிகிறது இது போன்று ஒரு ஜனநாயகத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கும் காண முடியாது.காந்திஜி பாராட்டிய இந்த ஜனநாயகத்தை முஸ்லிம் நாடுகள் இன்று தொலைத்து விட்டதால் ஓநாய் களெல்லாம் இன்று கண்ணீர் வடிக்கவேண்டிய நிலை.

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!