பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது:
புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 85 . கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. - நன்றி.தினமலர்
முதலில் விமர்சனங்களுக்கும்,அவரது கொள்கைகளுக்கும் அப்பாற்பட்டு, சாய்பாபா என்ற நபர் செய்த பல்வேறு நலத்திட்டங்களை கருத்தில் கொண்டு அவரது இறப்பிற்கு சகமனிதன் என்ற முறையில் எனது இறங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விஷயத்துக்கு வருவோம்..இவர் ஒரு சாதாரண மனிதர் என்பதை கடந்து கடவுளாகவும்,கடவுளின் அவதாரமாகவும், பூஜிக்கப்பட்டு,அவரை வணங்கவும், அவரிடம் ஆசிபெறவும்,பெரும் பெரும் தலைவர்கள், அறிவியலாளர்கள் முதற்கொண்டு பலகோடி மக்கள் உலகம் முழுவதிலும் உள்ளனர்.இவரை கடவுளாக ஏற்று வழிபடும் மக்கள் சமீபகாலமாக கடவுள் மரணித்துவிடக்கூடாதென்று பிராத்திக்க ஆரம்பித்துவிட்டிருந்தனர்.கடவுள் உடல்நலக்குறைவு காரணமாக மனிதர்களின் உதவி வேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொடுமை வேறு.இப்படிப்பட்ட பலகீனமான கடவுள்,கடவுள்தானா???... முதலில் தன்னை போன்ற மனிதனை கடவுளாகக் கொண்டாடுவதே அறிவுக்கு பொருந்தாத மூடத்தனம் இல்லையா..
சரி.கடவுளின் வரையறைதான் என்ன?கடவுளை அத்துனை எளிதில் வரையறுத்திட முடியாது...இருந்தாலும் குறைந்தபட்ச தன்மைகளின் படி, கடவுளானவன் முழுமையாக இப்பேரண்டத்தை படைத்து,பரிபாலித்து,மனித மற்றும் இன்னபிற உயிர்களை படைத்து,பாதுகாத்து உணவளித்து, அண்டசராசர இயக்கங்களை தன்வசப்படுத்தி,முக்காலமும் அறிந்து, தனக்கு இணை எதிலும்,யாரும்,எப்போதும், இல்லை என்ற தன்மையுடையவனாய் இருத்தல் வேண்டுமே...அல்லது இவர்களின் குறைந்தபட்ச அறிவானது கடவுளானவன் குறைந்தது பிறப்பு,பிணி,மூப்பு, மரணம் போன்ற ஏதும் அண்டாதவனாகவாவது இருக்கவேண்டுமே..என ஏன் சிந்திக்கவில்லை.
இவர் செய்த சாகசங்கள்,சித்துவிளையாட்டுக்கள் அனைத்தும் யூட்யூபில் குவிந்து கிடக்க,அவர் என்ன செய்தாலும்,எப்படி இருந்தாலும்,அவரின் காலை கழுவி புண்ணியம் தேடிக்கொள்ளலாம் என்று எண்ணும் மூடத்தனத்தை என்ன்வென்று சொல்வது??..இந்த கடவுள்???,உறக்கம்,உணவு,ஓய்வு,கழிவு, வலி, சுத்தம்,நோய்,மருந்து,என அத்துனையிலும் மனித பலகீனத்தை கொண்டவராகவும்,அனைத்தின் மீது தேவையுடையவர்ரகவும் இருக்க,எந்தத் தகுதி இவரை கடவுளாக்கியது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்தக் கடவுள்?? பிறர் தேவையை நிறைவேற்றுவது இருக்கட்டும்,இவர் எல்லாக்காலங்களிலும்,தேவையுடையவராகவே இருந்து,கடைசியில் யாருடைய தேவையும் பயனளிக்காமல்,பிறந்து விட்ட ஒவ்வொரு உயிரும் சுவைத்தே தீரவேண்டிய மரணத்தை சுவைத்துவிட்டார்.இனி இவர் பெயரில் இன்னொறு அவதாரம் தயாராகிக் கொண்டிருக்கும்,விரைவில் வெளிவரும்... அதையும்..துக்கி உக்காரவைத்து காலைக்கழுவி நன்மையை பெற்றுக்கொள்ள மக்கள் அலைமோதத்தான் போகிறார்கள்....
மனிதன் எல்லாக்காலத்திலும் தேவை உள்ளவனாகவே இருக்கிறான்.மனிதன் அவ்வாறே படைக்கப்பட்டுள்ளான்.அவனை படைத்ததும் பரிபாலிப்பதும் ஒருவனாக இருக்க...அவனை நிராகரித்துவிட்டு,கண்ணில் கண்டவர்களையெல்லாம் கடவுளாக்கி வண்ங்கி முக்தி பெற்றுவிடலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் மனிதன்,தான் தவறான முகவரிக்கு மடல் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறோம் என்பதை ஒருபோதும் உணர்வதில்லை.
உதாரணமாக கருணாநிதி நமக்கு ஓர் உதவி செய்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம்,அதற்கு நாம் ஒரு கரப்பான் பூச்சிக்கு நன்றி சொல்லிவிட்டு, அவருக்கே நன்றி சொல்லியதாக கருதிக்கொண்டு இருக்க. நாளை அவரை நேரில் சந்திக்கும் போது,அவர் கேட்பாரா மாட்டாரா...என்னப்பா...உனக்கு உதவியவன் நானாக இருக்க நன்றியை எனக்கு அறிவிக்காமல் கரப்பானுக்கு சொல்லி இருக்கிறாயே என்று???
இல்லை இல்லை..என்னால் அப்போது உங்களை நேரில் சந்திக்க முடியாததால்,கரப்பானை நீங்கள் என உருவகித்து அதற்கு நன்றி சொல்லிவிட்டேன்...என்றால்??? எப்படி இருக்கும்..அப்படியா..சரி போ...என விட்டுடுவாரா என்ன...நன்றி சொல்லாவிட்டால் கூட பரவாயில்ல..என்னைய கேவலம் ஒரு கரப்பான் பூச்சியாவா கற்பனை பண்ணுனன்னு கோபப்படுவாரா, மாட்டாரா??போயும் போயும் சக மனிதனாக இருக்கும் கருணாநிதிக்கே தன்னை கரப்பான் பூச்சியாக்கியதை பொருத்துக் கொள்ள முடியாதே... அனைத்தையும் படைத்து,இயக்கி,தனக்கு எப்போதும் யாரிடத்தும், எத்தேவையும் இல்லாத,கடவுளுக்கு,இணையாக எதுவுமே இல்லை என இருக்கும் நிலையில்,அவன் படைத்த மனிதனையும் மனிதனிலும் கெட்ட அற்ப பொருள்களையும் அவனுக்கு இணையாக்கி...படைத்தவனின் திறனை கேலிக்கூத்தாக்குவது அவனுக்கு தகுமானதாக இல்லையே..
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்..கடவுள் நேரடியாக வந்து உதவுவதில்லை..அவர் மக்களுக்கு உதவ,உபதேசிக்க ஒருவரை தன் அவதாரமாக அனுப்பிவைக்கிறார்.அவர் கடவுளின் பிரதிநிதியாக இருப்பதால் அவருக்கு நன்றியை செலுத்திவிடுகிறோம்.அவரிடம் வேண்டியதை கேட்கிறோம். ஏன் முஹம்மது நபி(ஸல்) அவர்களை கடவுளின் தூதராக முஸ்லீம்கள் நம்புவதில்லையா?அப்படித்தான்...
சரிதான்..கடவுள் நேரடியாக வந்து உதவுவதில்லைதான்..எனக்கு கஷ்டம் ஏற்படும்போது,எனக்கருகில் இருக்கும் மனிதனைக்கொண்டுதான் எனக்கு உதவுகிறான்...அதனால் எனக்குதவிய அம்மனிதன் கடவுளாகிவிடுவானா.. உதவிய மனிதனுக்கு எனது நன்றியை தெரிவித்துவிடுவேன்,ஏனெனில் மனிதனுக்கு நன்றி செலுத்தமுடியாதவன் கடவுளுக்கு நன்றி செலுத்துபவனாக இருக்க முடியாதே,....ஆனால் உதவி புரிந்த இறைவனுக்கு முழுமையாக அடிபணிவதே அவனுக்கும்,அவனுடைய அருளுக்கும் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்.அதுமட்டுமல்லாது,நபி முஹம்மது (ஸல்) அவர்களை முஸ்லீம்கள் ஒருபோதும் இறைவனுக்கு ஒப்பாக்கியதில்லை. அவர்களை நாம் மனிதராகவும் மனிதரில் புனிதராகவுமே பார்க்கிறோம்..நம்மை படைத்த இறைவனின் அந்தஸ்த்து மிகவும் உயர்ந்தது,அதை நாம் எத்தனை முயன்றாலும் முழுமையாக கூறிடமுடியாது.
ஆக இறைவன் இதை இதையெல்லாம் செய்தால் கோபம் கொள்வான்,அவன் இத்தகைய பாவங்களை மன்னிப்பதே இல்லை, தண்டனை உண்டு என்றால்...சிலர் கேட்கிறார்கள்...சரி...இப்படிப்பட்ட உயரிய இறைவன் அன்பிலும் பாசத்திலும் யாவரையும் மிகத்தவனாகத்தானே இருக்கமுடியும்...அப்படி இருக்க...அவன் மனிதன் செய்யும் தவறுகளை மன்னித்து அவன் மீது அன்பு செலுத்துவது தானே சரியாக இருக்கும்.அப்படிப்பட்ட கடவுள் எத்தனை பரிவுடையவனாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு தகப்பன் தான் வாங்கிய புத்தம்புது காரை தன் குழந்தை கீரி நாசப்படுத்திவிட்டால் அவனை தண்டித்துவிடுவானா??? தான் பெற்ற பிள்ளைய தண்டிக்காத மனிதன் தகப்பனாக இருக்கும் போது,..நான் செய்த தவறுக்கு என்னை தண்டிக்காதவன் தான் கடவுளாக இருக்கமுடியும் என வியாகியானம் பேசுகின்றனர்..
சரிதான்,தன் குழந்தை தனது காரை வீணாக்கிவிட்டால் எந்த தகப்பனும், தண்டிப்பதில்லைதான்.அது அறியாதது என அவன் அறிவான்.அதுவே வளர்ந்த முழுமையான அறிவு பெற்ற நல்லது கெட்டது தெரிந்த தன் பிள்ளை செய்தால்,சிறிய தவறாக அது இருந்தாலும், அவனை தண்டிக்காமல் இருப்பதில்லை.சிலர் தண்டிக்காமலும் இருக்கலாம்...
ஆனால் அதே பிள்ளை..நீ என் தகப்பனே இல்லை..நீ என்னை பெறவே இல்லை.என சொன்னாலும் பரவாயில்லை..இன்னொருவனை தகப்பனாக ஏற்றால் எந்த மனிதப்பதரும் கோபப்படாமல் இருப்பதில்லை..அற்ப மனிதனுக்கே இந்த விஷயத்தில் இத்தனை கோபம் வரும்போது....
அனைத்தையும் படைத்த சர்வ வல்லமை கொண்ட வல்லோன்,தான் படைத்த மனிதன் தன்னை வழிபடாமல்,அவனைப்போன்ற ஒருவனை,அல்லது அதனினும் கீழானதை தனக்கு இணை என கற்பிக்க...,கடவுள் கோபம் கொள்ள்க்கூடாது,தண்டிக்கக்கூடாது என வாதிடுவது அறிவுக்கு பொருந்தாத முட்டாள்தனம் என்பது விளங்கும்....
எனவே தெருவில் போகிறவனையெல்லாம் கடவுளாக்கி வழிபடாமல், கடவுளின் தன்மைகளை எவ்வித விருப்பு வெறுப்பின்றி, உணர்ந்து, அறிந்து, அவனை அடையாளம் கண்டு அவன் வழி செல்வதே சரியானதாக இருக்கும்.... அப்படியே செய்வோமாக.....
அன்புடன்
ரஜின்