Wednesday, April 7, 2010

வட்டித்தொல்லை தற்கொலைகள் தடுக்க இஸ்லாமே நன்முறை- டாக்டர் சுவாமிநாதன்

விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கருணா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்," விதர்பா பகுதியில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

நேற்று கூட 30 பேர் அங்கு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கி முறையை அங்கு அமல்படுத்த வேண்டும். அதுதான் அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண உதவும்."

1 comment:

  1. //வட்டியே இல்லாமல் கடன் கொடுக்கும் இஸ்லாமிய வங்கி முறையை அங்கு அமல்படுத்த வேண்டும்.//


    எல்லாத்துக்கும் கொடுப்பாங்களா!? இல்லை இஸ்லாமியர்களுக்கு மட்டும் தானா?

    வட்டி இல்லாமல் கொடுத்தால் எப்படி வங்கியை நடத்த முடியும், வேலை செய்பவர்களுக்கு சம்பளமாவது கொடுக்கனுமே, நீங்க உண்மையை தான் சொல்றிங்களா, கொஞ்சம் விளக்குங்களேன்!

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!