Monday, September 28, 2015

ஈரானிய ஷைத்தான்- பயங்கர சதி அம்பலம்

பதினாங்கு வருடங்களாக நிகழாத நிகழ்வு தீடீர் என ஏற்பட்ட உடன் மெக்காவில் நடந்த விபத்திற்கு சவுதி அரேபியா தான் காரணம் என்கிறார்கள். உண்மையில் சவுதியுடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவினாலும் மக்காவை சவுதியை தவிர வேறு எந்த நாட்டாலும் இவ்வளவு திறமையாக நிர்வகிக்க முடியாது என சவாலாகவே சொல்லலாம்.
முப்பது லட்சம் மக்கள் ஒன்றாக குழும் இடத்தை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல, பதிமூன்றாயிரம் சிசிடி கேமராக்கள் ஒரு நொடியும் தாமதிக்காமல் இயங்கி கொண்டு இருக்கிறது.

லட்சக்கணக்கான ஊழியர்கள் ஒவ்வொரு வினாடியும் திறம்பட இயங்குகிறார்கள். பல்லாயிரக்கணக்கான காவலர்கள் செக்யூரிடிகள் சிறு அசம்பாவிதமோ சண்டையோ நிகழாமல் கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் தவிர்க்க முடியா விபத்துகள் மொத்த நிர்வாகத்திறனையும் குறைவாக மதிப்பிடப்படுகிறது. எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும் தவறுகள் நிகழத்தான் செய்யும் இது தான் எதார்த்தம்.
ஆனால் மக்கா நெரிசல் நிகழ்வுக்கு தற்போதைய முக்கிய காரணம் ஈரானிய ஷியாக்கள் தான்.
 
இவர்கள் தான் எப்போதும் பிரச்சினை செய்ய கூடியவர்கள் 1987ல் போலீஸுடன் மோதி சண்டையிட்டு நாநூற்றுக்கும் அதிகமான மக்கள் மரணிக்க இவர்களே காரணமாக இருந்தார்கள்.

தற்போது நடந்த விபத்திற்கும் இவர்கள் தான் காரணம். தீடீர் என்று ஈரானியா ஹாஜிகள் சவுதி அரசை எதிர்த்து அங்கே போராட்டம் செய்யும் விதமாக குரல் எழுப்ப பெரியளவில் சலசலப்பு ஏற்ப்பட்டது.

மொராக்கோவை சேர்ந்த முஹம்மது அப்துல் சலாம் மற்றும் குவைத்தை சேர்ந்த கலீதல் ஹாசிமி என்பவர்கள் சொல்கிறார்கள் ஈரானிய ஷியாக்கள் தீடீர் என கூட்டத்தில் பிரச்சினை செய்யும் விதமா சவுதி அரசுக்கு எதிராக ஒன்று திரண்டு குரல் எழுப்பினார்கள், இதை தடுக்க வந்த காவலர்களிடம் தகராறில் ஈடுப்பட்டார்கள் என்றார்கள்.

கூட்டம் அதிகமாக இருக்கவே லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் குழப்பம் நிலவியதில் சிலர் கீழே விழ, கீழே விழுந்தவர்கள் மீது பின்னால் வந்தவர்கள் மேலே மிதிப்படும் நிலைக்கு ஆளாகியது.

காரணம் இவ்வாறு இருக்க சம்பந்தம் இல்லாமல் நிர்வாகம் சரி இல்லை என ஈரான் கொந்தளிப்பது தன் நாட்டை பிரேஜையின் தவறை மூடி மறைக்கத்தான். அதற்கு ஏற்றார் இங்கிருந்தும் சிலர் பிரச்சினை செய்கிறார்கள்.

ஈரானியர்களின் கேடுகெட்ட தனத்தால் நூற்றாக்கணக்கான உயிர்கள் போனதும் அல்லாமல் சவுதியை விமர்சிக்கிறார்கள்.
சவுதி எந்த வசதியும் செய்து கொடுக்காமல் மக்கள் நெரிசல் உண்டாக காரணமாக இருந்தால் விமர்சிப்பதில் தவறல்ல.

ஒவ்வொன்றிருக்கும் டைம் டேபிள் போட்டு செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பும் அவர்கள் விதிமுறைகளையும் சரியாக பின்பற்றினால் உயிர் சேதம் தவிர்க்கப்படும்.

அதே போல் பெருமைக்காக திரும்ப திரும்ப ஹஜ் செய்பவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
 
தேவையற்ற நெருக்கடியை தவிர்க்க முடிந்தளவு முயலுங்கள்.

thanks 
http://adiraipirai.in/?p=15205

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!