Monday, August 10, 2015

ஆண்மையுள்ள ஆனந்த விகடன்

 
 
 தண்டனை யாகூபுக்கு மட்டும் தானா ?
 
 
12-08-2015 தற்போதைய ஆனந்த விகடன் இதழில் தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா? என்ற தலைப்பிட்ட ஆக்கம் உண்மையிலேயே பத்திரிகை தர்மத்தை காப்பாற்ற இன்னும் ஒரு சில பத்திரிகை இருக்கவே செய்கிறது என நமக்கு உணர்த்துகிறது.
 
 சரணடைந்த ஒருவருக்கு அரசு சொல்லும் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் மரண தண்டனை என்றால்


*9,000 கோடி அளவிற்கு இந்திய பொருளாதாரத்தை சீரழித்த , நூற்றுக்கணக்கான உயிர்பலியை ஏற்படுத்திய மும்பை கலவரத்தை நான்தான் தொடங்கி வைத்தேன் என தனது சாம்னா பத்திரிகையில் வெளிப்படையாக எழுதிய பால்தாக்கரே வுக்கு கடைசி வரை தண்டனை கொடுக்காமல் பாதுகாப்பு கொடுத்த இந்திய நீதி துறையை காரி துப்புகிறது


*2002 ஆம் ஆண்டு வரலாறு காணாத இஸலாமியர் படுகொலையை ஏற்படுத்திய குஜராத் கலவரத்தை தூண்டியவர் யார் ? அவர்களுக்கு என்ன தண்டனை ?
கேட்கிறது செவிடனாய் இருக்கும் இந்திய நீதித்துறையை.


*2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை பற்றி அகப்பட்டுக்கொண்ட அசினாமந்தா வின் அத்தனை ஆதாரப்பூர்வமான பதில்களுக்கு பிறகும் ஏன் இன்னும் மரண தண்டனை விதிக்கவில்லை பிரக்யா சிங் பெண் ? சாமியாருக்கு ....


நாக்கை புடுங்கும் அளவிற்கு கேட்கிறது இந்திய நீதி துறையை



நாட்டில் நடந்த பெரும்பான்மையான அனைத்து வன்முறை வெறியாட்டங்களுக்கும் காரணமான ஆர்.எஸ்.எஸ் , வி.எச்.பி , பக்ரஜ்தள் போன்ற அனைத்தையும் ஏன் தடை செய்யவில்லை என நியாயமான அனைத்து கேள்விகளுக்கும் பதிலில்லை இந்திய நீதி துறையில் ...



நன்றி ஆனந்த விகடன்
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
 
 http://www.adiraixpress.in/2015/08/blog-post_35.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+adirai+%28%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%29#.VcjrubUqMrc

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!