Wednesday, November 30, 2011

'என் மகள்களின் மூன்று கேள்விகள்'


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது.
லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.

அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பலவித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர்தான் தழுவுகின்றனர்.

ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறுவிதமானது. 

இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கைமுறைதான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக்கொண்டவர் இவர். பின்னர்தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.

இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம்பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷா அல்லாஹ்.   

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக்கொள்வாராம்,
Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்க வை.
டீனேஜ் பருவத்தின்போது பிரார்த்திப்பதை நிறுத்திவிட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டாமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம்தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.  
9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல்முறையாக மேற்குகரைக்கு சென்றார்.
டெல் அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்கவிடாமல் என்னை திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.   
சுமார் ஐந்து நாட்கள் மேற்குகரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந்தோட ஆரம்பித்தன.
என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது. 
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம்போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறுபடியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின்போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒருநாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.

"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப்படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப்படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்குகரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வரவேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்தபோது, இவரது ஆவணங்களை கிழித்தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை.
கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்கவில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக்கொண்டு, என்னை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை. 
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போது அரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை. 
ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.

பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங்கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவுதான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர்தான்.  
ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும்விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவுதான்.....

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.
இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்து வருமென்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார் லாரன்.

பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக்கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசைதிருப்பத்தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.


மேற்சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார் லாரன் பூத்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதிவிலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்கவழக்கங்களை விட்டொழித்துவிட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டுவிட்டேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்வது எளிதாகவே இருந்தது.

ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவு படித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.

இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்தவரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடுபடுகின்றேன். இது வாரப்பத்திரிகை அல்ல.

அரபி மொழி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன். 

By the way, நான் ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்தவரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம்தான். 

இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.

முகத்தை மூடும்விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்தவில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மனமாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன். 

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.
  • இஸ்லாம் உன்னை மாற்றிவிடுமா?
  • நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
  • நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'. 

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சிதான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம் கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்தமதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமணமுறிவிலிருந்து தற்போது மீண்டுக்கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக்கொண்டிருக்கின்றது.

நேரம் வரும்போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக்கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.

எனக்கு தெரியவில்லை. அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மனமாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்னபோது அவர்கள் காட்டிய அணுகுமுறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்லவேண்டும்'.

சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'. 

இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக்கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.  

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'

என்னுடைய பதில்: 'இல்லை'. 

'இனியும் புகைபிடிப்பீர்களா?' 

புகைபிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்லதல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.   

அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது. 

'தற்போது முஸ்லிமாகிவிட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'

என்ன???????

இப்போதுதான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும்விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.  

'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன், 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'. 

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்துவிட்டு விளையாட சென்றுவிட்டார்கள். 

நானும் சொல்லிக்கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."

சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும், தான் இறைநம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக...ஆமீன்.  

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://www.laurenbooth.co.uklink

References:
1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link

நன்றி:
ஆஷிக் அஹ்மத் அ. 
ehirkkural.com


Tuesday, November 29, 2011

முப்பதே மாதத்தில் கப்பலில் வேலை!


பிளஸ் டூ படித்து முடித்துவிட்டு கப்பல் பணிகளில் ஈடுபட விரும்பும் மாணவர்கள்  சென்னை உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில்  நாட்டிக்கல் சயின்ஸ் டிப்ளமோ படிப்பில் சேரலாம்.

சென்னை உத்தண்டியில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் கடல் மற்றும் கப்பல் சார்ந்த படிப்புகளுக்கு சிறந்த இடம் 2012ஆம் ஆண்டிற்கான டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பிற்கு விண்ணப்பங்களை இந்த கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள் தொடர்ந்து இளநிலைப் பட்டப் படிப்பும் சேர்ந்து படிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த படிப்பிற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? அதற்கான தகுதிநிலைகள் என்ன என்பது குறித்து இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விஜயனிடம் கேட்டோம்.

“பிளஸ் டூ வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். டிப்ளமோவுடன் கூடிய பட்டப்படிப்பை மூன்று பிரிவாகப் பிரித்து நடத்துகிறோம். முதல் ஆறு மாதங்கள் கேம்பஸ் படிப்பாக இருக்கும். அடுத்து, பதினெட்டு மாதங்கள் கப்பலில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சியின்போது தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி முடிந்த பின்பு 4 மாதங்கள் மீண்டும் கேம்பஸில் படிக்க வேண்டும். மொத்தம் முப்பதே மாதங்களில் படிப்பு முடிந்து விடும்.

உயர்தரமான பயிற்சியும், படித்து முடித்தவுடன் அதிகளவில் வேலை வாய்ப்புகளும்  காத்திருக்கின்றன. படிக்கும்போது, படிப்பிற்குத் தேவையான உடைகள் மற்றும் இதரப் பயிற்சிகள் அனைத்தையும் கல்வி நிறுவனமே வழங்கும். மேலும் விடுதியில் தங்கியிருந்துதான் படிக்க வேண்டும்.  பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு படிப்பிற்கான கட்டணம் இரண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். படித்து முடித்தவுடன், வேலைவாய்ப்பு காத்திருப்பதால், இந்தப் படிப்பை மேற்கொள்ளும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாட்கோ நிறுவனமும், மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு  மீன்வளத்துறையும் உதவித்தொகை வழங்குகின்றன. மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வில் பிளஸ் டூ பாடங்களில் இருந்தும், பொது அறிவுப் பகுதிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். தற்போது பிளஸ் டூ படித்து வரும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்” என்றார் விஜயன்.

நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பு முடித்தவுடன் ஆயிரக்கணக்கில் சம்பளமும், சில மாதங்கள் கப்பலிலும், சில மாதங்கள் விடுமுறையிலும் உலகை வலம் வரலாம். பணி அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க சம்பளமும், வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 30 ம் தேதி.

நுழைவு தேர்வு நடைபெறும் நாள் : டிசம்பர் 18.
விவரங்களுக்கு: 

நன்றி
அன்ஸர்ர்.

குறிப்பு

இந்தப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு வங்கிக் கடன் எளிதில் கிடைக்குமாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது வட்டியின் அடிப்படையில் இருக்குமெனில் அவசியம் தவிர்ந்து கொள்வதே மார்க்கச் சட்டமாகும். 

Monday, November 28, 2011

எல்லை மீறும் ஊடக பயங்கரவாதம்


இந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவிரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன. 

பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் 'அதிபயங்கரமான ஐம்பது முஸ்லிம் தீவிரவாதிகள்' பட்டியல் ஒன்றை அண்மையில் நமது உள்துறை அமைச்சகம் தயாரித்தது. அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து, "இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டது. 

நமது ஊடகங்களுக்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா? பேனைப் பெருச்சாளியாக்கி, நம் நாட்டின் எல்லா மொழி ஊடகங்களும் அதை எழுதித் தள்ளின  

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த வாஜுல் கமர் கான் என்பவர், இந்தியாவின் மும்பையை அடுத்துள்ள தானேவில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை சில நடுநிலை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "... சிறிய தவறு நடந்துவிட்டது. இத்தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்" என்று பெருந்தன்மையாக அறிவித்தார். 

அடுத்த சில நாட்களில் இரண்டாவது 'சிறிய தவறு' வெளிவந்தது. அதே 'அதிபயங்கரமானவர்களின் பட்டியலில்' 24ஆவது ஆளாக இருக்கும் இன்னொரு தீவிரவாதியான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமானது. முதல் தீவிரவாதியான வாஜுல் கமர் கான் என்பவராவது தானேவில் வசிக்கும் சாதாரண இந்திய முஸ்லிம். இரண்டாமவரான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் என்பவர் ஏற்கனவே 1993இல் மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு வழக்கில் 'சேர்க்கப்பட்டு'க் கடந்த 2010 பிப்ரவரி மாதம் கைதாகிச் சிறையில் இருப்பவர். http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563936_1_arthur-road-jail-mumbai-jail-special-tada-court 

மும்பை (ஆர்தர் சாலை) சிறையில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கு எதிராக இண்டர்போலில் புகார் செய்து "தேடப்படும் குற்றவாளி" ஃபெரோஸ் கானுக்கு எதிராக ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்கும் மேலாக உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது நமது புலனாய்வுத்துறை. அது மட்டுமின்றி, மும்பைச் சிறையிலிருக்கும் ஃபெரோஸைப் பாகிஸ்தானில் 'பதுங்கி'க் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீவிரவாதியைப் பிடிப்பதற்குப் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியும் வந்தது. 

நமது நடு(!)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் முஸ்லிம் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது சேவையைச் செவ்வனே செய்தன. 

*****

ஏறத்தாழ இதேபோன்று ஒரு செய்தியை, சன் குழுமத்தின் நம்பர் ஒன்(?) மாலை இதழான 'தமிழ் முரசு' கடந்த 23.11.2011இல் தலைப்பாக்கி வெளியிட்டது. 

தலைப்பு: "8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கத் தலைவர் கைது!" http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943 

அதிரையைச் சேர்ந்த, தவ்ஃபீக்கைக் காவல்துறை 8 ஆண்டுகளாகத் தேடி வந்ததாகத் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும் அழுத்தம் திருத்தமாக தமிழ் முரசு நாளிதழ் கூறியுள்ளது. காணொளியாக சன் தொலைக்காட்சியில் செய்தியும் சொல்லப்பட்டது. 

தமிழ் முரசு நாளிதழின் இதே செய்தியை அதே "8 ஆண்டுகள் ..." தலைப்பிட்டு நெல்லை ஆன்லைன், தன் செய்தியைப் போன்று அப்படியே வாந்தி எடுத்துப் பதித்துள்ளது. http://nellaionline.net/view/32_24021/20111123164224.html 

இதே செய்தியை தி ஹிண்டுவும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டது. http://www.thehindu.com/news/states/other-states/article2651009.ece?homepage=true  பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் இந்து நாளிதழ் மற்றொரு இடத்தில் 2008ஆம் ஆண்டு தவ்ஃபீக் பிணையில் வெளிவந்ததாகவும் கூறுகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பிணையில் வெளிவருவது சுலபம் அல்ல என்பது இந்து நாளிதழுக்குத் தெரியாததன்று. பின் எந்த வழக்கில் அவர் பிணையில் வந்தார் என்பதையும், அவர்மீது போடப்பட்ட பொடா சட்டத்தின் நிலை என்னவாயிற்று என்பதையும் இந்து நாளிதழ் அறிந்து கொள்ள விரும்பவில்லை.

8 ஆண்டுகள் தவ்ஃபீக்கைத் தேடியதில் என்னதான் சிக்கல்? 

கடந்த 2.12.2002இல் மும்பையின் அம்ருத் நகரிலிருந்து காட்கோபர் இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து இருவர் பலியாயினர்; 49 பேர் காயமடைந்தனர். சுறுசுறு(!)ப்புக்குப் பேர்போன மும்பைக் காவல்துறை உடனடியாக, மும்பை ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் முஹம்மது அப்துல் மத்தீன், ஷேக் முஹம்மது முஸம்மில், ஸாஹிர் அஹ்மது, இம்ரான் அஹ்மது கான், முஹம்மது அல்தாஃப் இஸ்மாயீல் ஆகிய ஐவரை மேற்காணும் வெடிகுண்டு வழக்கில் 'சேர்த்து' வழக்குப் பதிந்தது. ஆறாவது விசாரணைக் கைதியான ஸையித் காஜா யூனுஸ், காவல்துறை கஸ்ட்-அடியில் மரணமடைந்தார். பதறிப்போன மும்பைக் காவல்துறை, ஹைதராபாத் என்கவுண்ட்டரில் நவம்பர் 2002இல் போட்டுத் தள்ளப்பட்ட ஸையித் அஸீஸ் (எ) இம்ரானையும் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்ஃபீக்கையும் இந்த வழக்கில் 'சேர்த்து' அடுத்த வாரம் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. மேலும், இவர்கள் அனைவரும் ஜெய்ஷே முஹம்மது, அல் காயிதா, லஷ்கரே தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என்பதாக வழக்கை ஜோடித்தது மும்பை காவல்துறை. http://articles.timesofindia.indiatimes.com/2003-04-10/mumbai/27270630_1_imran-rehman-khan-supplementary-chargesheet-mohammed-abdul-mateen 

பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. 

குற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும், 11.6.2005இல் 'அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அஷோக் பங்காலே, "இந்த வழக்கு அரசுத் தரப்பால் கட்டியெழுப்பப்பட்டது" என்று குட்டும் வைத்தார். http://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200529.htm 

இந்த வழக்கில் தவ்ஃபீக்கின் தொடர்பு என்ன? 

கடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாள்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. இச்செய்தியும் வழக்கம்போல் எல்லா ஊடகங்களிலும் வெளியானது. 

நவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிஸம்பர் 2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது. 

2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவ்ஃபீக், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/AC179CANDIDATE.htm 

பின்னர், கொடுங்கையூர் வழக்கு பிசுபிசுத்துப்போய் பிணையில் வெளிவந்தார் தவ்ஃபீக். என்றாலும் அவ்வப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வரும்போது தவ்ஃபீக்கைக் காவல்துறையினர் அழைத்துப் போய் சிறையில் வைத்திருந்து வெளியே விடுவது 2008வரை வழக்கமாகவே இருந்து வந்தது. 

அவ்வப்போது நமது புலனாய்வு(!) எழுத்தாளர்கள் சிலர், தவ்ஃபீக்கை சர்வதேச பயங்கரவாதி என்பதுபோல் சித்தரிப்பது தொடர்ந்தது. 

இரா. சரவணன் என்பவர் ஜூவியின் 25.5.2008 பதிப்பில் "டென்ஷனில் தமிழகம்! டேஞ்சரஸ் தவ்பீக்..." என்று தலைப்பிட்டு நல்ல கற்பனை வளத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.

அவருடைய கற்பனை வளத்துக்குச் சான்றான பகுதி:

"ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. (ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து). 

இந்தப் பதிவுக்குப் பின்னர் ஜூவியைத் தொடர்பு கொண்டு தவ்ஃபீக்கைப் பற்றி உண்மைக்கு மாற்றமாக எழுதியதை அவருடைய குடும்பத்தார் விசாரித்தபோது, தவ்ஃபீக்கின் குடும்பத்தினரின் கருத்துகளையும் உண்மை அறியும் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரனின் கருத்துகளைப் பெற்று, மூன்று மாதத்துக்குப் பின்னர் ஜூவி வெளியிட்டது. அதில்,  சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகிறார்: 

'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள்.http://adiraixpress.blogspot.com/2008/08/blog-post_4794.html 

கடந்த 2008 மே மாதம் 17இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 13.5.2008இல் ஜெய்ப்பூரின் 9 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பத்தாவது குண்டைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவிகள் 63 பலியாயினர்; 216 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக மும்பையைச் சேர்ந்த விஜய் என்பவனை முதன்முதலாகக் காவல் துறை கைது செய்தது. http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=1618&Itemid=54 

வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி மீனா எனும் பெயருடைய பெண் கூறியதாகக் காவல்துறையினர் விஜயிடமிருந்து வாக்குமூலம் 'வாங்கினர்'. தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். http://tamil.oneindia.in/news/2008/05/14/india-60-killed-150-injured-as-terror-strikes-raja.html 

ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு ஆர் டி எக்ஸ் எனும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர் டி எக்ஸ் என்பது இராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. நமது இராணுவத்துக்குச் சொந்தமான ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளில் பெரும்பகுதி, முன்னாள் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மூலம் கடத்தப்பட்டு சங் பரிவாருக்கு சப்ளை செய்யப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். http://www.satyamargam.com/1096 

மும்பை மாலேகான் ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் சாமியாரிணி சாத்வீ ப்ரக்யா சிங் தாகூரோடு முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டனர். http://www.satyamargam.com/1078 

இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை! காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை. 

சென்னையில் தங்கியிருந்து கொண்டு 2008 மே மாத இறுதியில் குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பேட்டி கொடுத்த தவ்ஃபீக், ஜெய்ப்பூருக்குப் போய் குண்டு வைத்ததாகத் தமிழகக் காவல்துறை கதை புனைந்தது. பின்னர், அவரைத் தங்களுக்கு உளவு சொல்பவராக மாற்ற முயற்சி செய்தது.  அவர் மறுக்கவே, என்கவுண்டரில் போட்டுத் தள்ள அப்போதைய காவல்துறை முயன்றது. இதை தவ்ஃபீக் கூறுகிறார்: 

எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர்.http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html /  http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php 

"எங்களுக்கு உளவு சொல்; இல்லையென்றால் நீ காலி" என மிரட்டிய காவல்துறையிடமிருந்து தப்பி, கடந்த மூன்றாண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தவ்ஃபீக் பட்ட துன்பங்கள் போதும்.

தவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முறையான நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். அதுவும் விரைந்து நடைபெறவேண்டும். அப்போது நீதி நிலைபெறும். அதுவரை, "8 ஆண்டுகள் தேடப்பட்ட..." கதை சொல்லும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கட்டும். 

2003ஆம் ஆண்டு காட்கோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை 1999ஆம் ஆண்டு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

ஊடகங்களில் செயல்பாடுகளை அண்மையில்தான் பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கண்டித்திருந்தார். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பையே மதிக்காத ஊடகங்கள் வழக்கம் போலவே கட்ஜுவின் கண்டிப்பை பெரிதுபடுத்தவில்லை.

குடிமக்களே செய்தியாளர்களாக மாறியுள்ள சூழலில் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மக்களின் நம்பிக்கையை இவை இழக்க நேரிடும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.

***

முன்பு தௌபீக் மீது புனையப்பட்ட பல கேஸ்களில் மும்பை காட்கோபர்-ல் பஸ்ஸில் குண்டு வைத்ததாக புனையப்பட்ட கேசும் ஓன்று. அதில் முக்கிய சாட்சி அந்த பஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் குறுக்கு விசாரணை செய்த டிபென்ஸ் லாயர் திரு மஜீத் மேமன் : "நீங்கள் தௌபீக் -ஐ எங்கு கண்டீர்கள்?


கண்டக்டர் : "ஒரு பையை வைத்துவிட்டு அவசரமாக வெளியே இறங்கினார்"

திரு மஜீத் மேமன் "எப்பொழுது வெடித்தது"

கண்டக்டர் : "ஒரு சில நொடிகளில்"

இப்பொழுது ஜட்ஜின் பக்கம் திரும்பிய திரு மஜீத் மேமன் : "யூஆர் ஆனர், இங்கு கண்டக்டர் குறிப்பிட்ட நாள், நேரம் மாதத்திற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே வேறொரு கேசில் குற்றம் சாட்டப்பட்ட தௌபீக் சென்னை ஜுடிசியல் கஸ்டடி-ல் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளே இருக்கிறார்" என்று சொல்லிவிட்டு சான்றுக்கான டாகுமென்ட்களையும் ஜட்ஜின் பார்வைக்கு சமர்பித்தார்.

அதை நன்றாக பார்த்து பரிசீலனை செய்தபின் அதை ஆமோதித்து தலை அசைத்து திரு மஜீத் மேமனைப்பார்த்தார்.

இப்பொழுது மஜீத் மேமன் சொன்னது ஒட்டு மொத்த கோர்ட் வளாகத்தையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.


"யு ஆர் ஆனர், இப்படி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த என் கட்சிக்காரர் பலமான கம்பிகளை வளைத்து பல நூறு கிலோ மீட்டர் பறந்து வந்து இந்த வெடிப்பை ஏற்படுத்திவிட்டு மீண்டும் பறந்து சென்று சிறைக்கம்பிகளுக்குள் புகுந்து கொண்டார் என்று என் கட்சிக்காரரை சூப்பர் மேன் அளவுக்கு உயர்த்துவதை என்னால் நம்பமுடியவில்லை" என்று சொன்னதை ஜட்ஜ் உள்வாங்கிக் கொண்டு இலேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டார். அதே நேரம் கண்டக்டர் பம்பாய் போலீஸ் அதிகாரிகளை பார்த்தவிதம் "உங்களை எல்லாம் ............ டா" என்பதுபோல் இருந்தது.

*** 

கூடுதல் தகவல்களுக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம்

தவ்ஃபீக்கின் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி:

http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php

http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html

Thursday, November 24, 2011

டிசம்பர் 20ல் கடையடைப்பு,ஆர்பாட்டம்!காரைக்குடி மார்க்கமாக(அதிரை வழியே)அகல் ரயில்பாதை அமைக்க கோரி!


 திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், தலைஞாயிறு, முத்துப்பேட்டை ஆகிய யூனியன் பகுதிகளில் டிசம்பர் 20ம் தேதி மத்திய அரசை கண்டித்து திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணியை உடனடியாக துவக்க வலியுறுத்தி கடையடைப்பும், ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நாகை திருவாரூர் மாவ ட்ட வர்த்தக சங்க தலைவர் சிவசுந்தரம் நகராட்சி தலைவர் உமாகேஸ்வரி, யூனியன் தலைவர் வேதநாயகி ஆகியோர் முன்னிலையில் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள், சேவை சங்க பெ õறுப்பாளர்கள் சங்க சிறப்புக் கூட்டம் நடந்தது.

தென்னகத்தின் மிக பழமையான சென்னை காரைக்குடி, ராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதுக்கு உடனடியாக பணிகளை துவக்க வேண்டும்.திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வரையிலான வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதுக்கு நிதி ஒதுக்கிடு செய்வதுக்கு டிசம்பர் 20ம் தேதி திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு, வேதாரண்யம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளில் கிராமங்கள், நகரங்களில் கடையடைப்பு செய்து தபால் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Wednesday, November 23, 2011

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”


இந்தப்படத்தின் நோக்கம்
நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை.
முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
படம் தரும் படிப்பினை
பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான்  கதையின் கதாபாத்திரங்கள்.
அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது.
ஆங்காங்கே குரான் வசனங்கள் சுட்டி காட்டபடுவது மிக அருமை.
இந்த படத்தை பார்த்து தவறான வழியை தேர்ந்தெடுக்கும் இளம் பெண்கள் திருந்த வேண்டும் என்பதே இயக்குனர் அவர்களின் நோக்கம்.
இந்த படத்தை தயாரித்தவர்களின் நோக்கம் வெற்றியடைய நாம் அனைவரும் துஆ செய்வோம்.
இத்துடன் இந்த படத்தின் டிரய்லர் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படம் சி.டி வடிவில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.வேண்டும் என்பவர்கள் kdnl.org@gmail.comஎன்ற முகவரிக்கு மெயில் மூலம் தொடர்பு  கொள்ளவும்.

Click Here-நரகத்தை நோக்கி படத்தின் டிரய்லர்


கடையநல்லூரில் சி.டி கிடைக்குமிடம் 
மக்கா ஆப்டிகல்ஸ், 
(ஊரணி பள்ளிவாசல் எதிர்புரம்) 
பெரிய தெரு
கடையநல்லூர்.
மதுரையில் சி.டி கிடைக்குமிடம் 
MEDIA RESEARCH FOUNDATION(MRF)
104/231,Raja Clinic 3rd Floor,
East Veli Street,Madurai-1,
Cell:98949 92298
சென்னையில் சி.டி கிடைக்குமிடம் 
No. New No 184, Old No 229,2nd Floor,
Linghi Chetti Street,
Mannadi Chennai - 600 001,
Ph. 044- 64611961
http://kadayanallur.org/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/

Tuesday, November 22, 2011

ஒரு பிராமண சகோதரனின் கதை

 ஒரு பிராமின்  ஏன் முஸ்லிமாக மாறினேன் என அவரே சொல்லும் வீடியோ . 


கேளுங்கள் 


http://www.islamreligion.com/videos/2519/

Sunday, November 20, 2011

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர்இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம்


சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய  தோற்றம்   


கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்


மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். 

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர். 

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்குபயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்


தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயேஇஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள். 

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."

இறப்பு


சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை


மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். 

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

சில தகவல்கள்


  • சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும்தமிழர் ஆவார்.
  • சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜும்மா மசூதி மதினாவில் உள்ளது)
  • சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
மேற்கோள்கள்

நன்றி : http://ta.wikipedia.org/wiki/
Zahir Hussen M

Saturday, November 19, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?


இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும்கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

1.      இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
2.      இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

அத போல் தீவிரவாதம் என்ற பிரச்சாரத்துக்குப் பின் தான் உலகம் இஸ்லாத்தின் பால் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்.

  • ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதிக்கிறது.
  • மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களூக்கு உரிமை வழங்கியுள்ளது
  • விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
  • பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சஉதந்திரத்தைப் பறிக்கிறது.
  • வாரிரிசுரிமைசச் சட்டத்தில் ஆன்களூக்கு இரு மடங்கும் பெண்களூக்கு ஒரு மடங்கும் என பாரபட்சம் காட்டுகிறது.
  • இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்ட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.
  • கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குற்ப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைப்பது
  •  பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைலப் பறிக்கிறது.
  • முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை
  •  முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
  •  என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள்அனைத்துக்கும் முழுமையாகவும்எந்த எதிர்க் கேள்வியும் கேட்க முடியாத வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்
முஸ்லிமாலாதவரக்ளுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்

 

அறிமுகம்

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதாஎன்ற இந்த நூலில் பெண்கள் குறித்து எழுப்பப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது தவிர நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மட்டும் மற்றவர்களை விட அதிகமான பெண்களை மணந்தது ஏன் என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கான விளக்கத்தை 'நபிகள் நாயகம்(ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?' என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிட்டுள்ளோம்.

ஜிஸ்யாமுஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தல்கஃபாவை வணங்குதல்திசையை வணங்குதல்சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் போன்ற மற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் விடையாக'குற்றச்சாட்டுக்களும் பதில்களும்என்ற தலைப்பில் தனி நூலை வெளியிட்டுள்ளோம்.

தத்துவ ரீதியாக இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக 'அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்எனும் நூலில் விளக்கம் அளித்துள்ளோம். இந்த நான்கு நூல்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் பெறலாம்.

பதிப்புரை 
நல்லவை எங்கே கிடைத்தாலும் அதைத் தேடிப் பெற்றுக் கொள்பவர்களாகவே பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர்.
குறிப்பாக ஆன்மீகத்தின் பால் மனிதர்களின் தேடுதல் மிகவும் அதிகமாகவேஉள்ளது. இவ்வாறு தேடியலையும் மக்களுக்கு நல்ல ஆன்மீக வழி தென்படுமானால் தயக்கமில்லாமல் அவ்வழியில் செல்ல அவர்கள் தயாராகவே உள்ளனர்.
அமைதியைத் தேடியலையும் மக்களின் பார்வையில் இஸ்லாம் சிறந்த வாழ்க்கை நெறியாகத் தென்படுகிறது. அதன் கொள்கைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன.
இதன் காரணமாக அவர்களை இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில கொள்கைகளும்கோட்பாடுகளும் தவறானவைகாலத்துக்கு ஒவ்வாதவை என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உரிய விதத்தில் தெளிவுபடுத்தினால் அவர்களை இஸ்லாம் முழுமையாக ஈர்க்கும்.
முஸ்லிமல்லாத மக்களின் இந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் தமிழில்தகுதியான நூல் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவு அடைகிறோம்.
இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்துத் தான் அவர்களுக்கு அதிகப்படியான சந்தேகங்கள் உள்ளன.
அந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் 'இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற இந்த நூல் ஏழாவது பதிப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
முந்தைய பதிப்புகளை விட மேலதிகமான விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்களை நீக்க இந்த நூல் பயன்பட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
இவன்,நபீலா பதிப்பகம்

 

முன்னுரை

இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும்மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்ததுஎன்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!
அதில் தலையிடுகிறது!
தக்க தீர்வையும் சொல்கிறது!
அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!
என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.
இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும்அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.
எனவேஇஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.
ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்த பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.
மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Wednesday, November 16, 2011

தினமலர் பொய் செய்திக்கு மீண்டும் செருப்படி.


தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்
“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “
என்ற‌
தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு
மறுப்பு அறிக்கை
தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.

இளையான்குடி பேருராட்சி தலைவர்
அயூப்அலிகான் மறுப்பு அறிக்கை
 
தினமலர் செய்திக்கு பேரூராட்சி தலைவர் அயூப் அலிகான் மறுப்பு அறிக்கை.

15.11.2011 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில் கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்திய இளையான்குடி பேருராட்சி முஸ்லிம் தலைவர் என்ற தலைப்பில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், என்னிடம் எவ்வித பேட்டியும் எடுக்காமல், பேட்டி எடுத்தது போல் பொய்யான மற்றும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

மாற்று மதத்தினை சேர்ந்த எனது ஒரு சில நண்பர்கள் எனக்கு வாக்களித்த கிராமபுற மக்களுக்கு விருந்து வைத்தனர். 

பேருராட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மதநல்லிணக்கத்துடன் அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன். 

எனவே, துவேச மனப்பான்மையுடன் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அவதூரான இச்செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.


அன்புடன்,
A.அயூப்அலிகான்
பேருராட்சி தலைவர்
இளையான்குடி
************

தினமலரில் வெளியான பொய்யான மற்றும் தவறான செய்தி .
கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்

இளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அயூப் அலிக்கான், தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக, மூன்று "கிடா' வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, இளையான்குடி பேரூராட்சி 16வது வார்டு செயலராக இருந்த அயூப் அலிக்கான், நகர் செயலர் அன்வர், அவைத் தலைவர் அப்துல் குலாம் விருப்பம் தெரிவித்திருந்தனர். 

இதில், நகர் செயலர் அன்வருக்கு சீட் வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் அப்துல் குலாம், அயூப் அலிக்கானை தலைவர் பதவிக்கு, சுயேச்சையாக களத்தில் இறக்கினார். கட்சித் தலைமை அப்துல் குலாம், அயூப் அலிக்கானை கட்சியில் இருந்து நீக்கியது.

தங்களது பலத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில், அப்துல் குலாம் ஆதரவாளர்கள் தீவிரமாக வேலை செய்து, அ.தி.மு.க., வேட்பாளர் அன்வரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, அயூப் அலிக்கானை வெற்றி பெறச் செய்தனர்.

ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருந்த அ.தி.மு.க.,வை ஓரங்கட்டி, சுயேச்சையாக வெற்றி பெற்ற அப்துல் வாஹித் துணைத் தலைவரானார். 

இந்நிலையில், தலைவராக வெற்றி பெற்ற அயூப் அலிக்கான், தேர்தலில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, அருகில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நேர்த்திக் கடனாக, மூன்று "கிடா' வெட்டி, தனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் சக்தி வாய்ந்தது. எனது வேண்டுதலை நிறைவேற்றினால், அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டியிருந்தேன். எனது வேண்டுதல் நிறைவேறியதால், அம்மனுக்கு கிடா வெட்டி அன்னதானம் செய்தேன்' என்றார்.

http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_16.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!