Wednesday, June 29, 2011

குஜராத்:கர்ப்பிணி பெண் கற்பழித்து கொலை:குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்-CBI

கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு குற்றத்திற்கான பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்தும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, கோடிக்கணக்கான சொத்துக்களை சூறையாடி ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் இந்திய வரலாற்றிலேயே மிகக்கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தி கோரத்தாண்டவம் ஆடினர்.

இந்த மிகக்கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் பல்கீஸ் பானு. கர்ப்பிணியான இவரை ஹிந்த்துவ பாசிச பயங்கரவாதிகள் கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து அவரது குடும்பத்தினரை கொடூரமாக கொலையும் செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் மூன்று பேருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளான ஜஸ்வந்த் பாயி நாயீ, கோவிந்த பாயி நாயீ, ராதேஷம் ஷா என்ற லாலா வாகீல் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ கோரியுள்ளது. இம்மனுவை மும்பை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த பயங்கரவாதிகளுக்கு 2008 ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.

கூட்டுப்படுகொலையையும், பாலியல் வன்புணர்வையும் குற்றவாளிகள் திட்டமிட்டு செய்தார்கள் எனவும், கர்ப்பிணியான தன்னை விட்டுவிடுங்கள் என பல்கீஸ் பானுவின் கெஞ்சலை குற்றவாளிகள் காதுக்கொடுத்து கேட்கவில்லை எனவும் சி.பி.ஐ அம்மனுவில் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு எதிரான ஆதாரங்கள் பொருத்தமில்லாமல் இருப்பதாகவும், பல்கீஸ் பானுவின் வாக்குமூலத்தை மட்டுமே நீதிமன்றம் இவ்வழக்கில் பரிசீலித்துள்ளது என ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதங்களையெல்லாம் கேட்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மீண்டும் விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது
 
 

Friday, June 24, 2011

கடவுள் இருந்தால்.!

 ஓரிறையின் நற்பெயரால்...
      கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு ரீதியான தவறுகளை முன்னிருத்தி தான் கடவுள் மறுப்பதற்கு ஏதோதோ காரணங்கள் என்று சொல்ல முடிகிறதே தவிர கடவுள் இல்லை என்பதற்கு எந்தவித செயல்பாட்டு காரணங்களையும் கடவுளை நிரகரிப்போர் முன்னிருத்தவில்லை.எனினும் கடவுளை நம்பாமல் இருப்பதால் -கடவுளை நம்புதால் மனித சமுதாயம் பெறும் பயன்பாடு குறித்து இந்த சிறியவனின் பார்வையில்..
 எப்போதுமே., ஒன்றை ஏற்பதால் ஏற்படும் பயன் அதனை ஏற்காமல் இருக்கும்போதும் குறைவாகவோ., அல்லது முழுவதும் இல்லாமலோ இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர்களுக்கு ஏற்படும் அனேக இழப்புகள் கடவுளை நம்புவர்களுக்கும் ஏற்படுவதை காண்கிறோம்.இதை மையமாக வைத்து நாத்திக சிந்தனை கடவுள் இல்லை என நிறுவ முயல்கிறது. நாம் முன்னரே சொன்னதுப்போல் கடவுளின் பெயரால் அல்லது கடவுளுக்காக என அறிவற்ற மனிதர்கள் செய்யும் தேவையற்ற வணக்கங்களையும் போலி பூஜை புனஷ்காரங்களையும் காரணம் காட்டியே... கடவுளை மறுக்கிறார்களே., தவிர இதுவல்லாத வேறு எந்த செயல் ரீதியான காரணங்களும் இல்லை.
           முதலில் ஒன்றை விமர்சிப்பதாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை வெளிபடுத்த வேண்டும் பின்பு அதன் பாதிப்பை நிவர்த்தி செய்யும் ஒரு மாற்று தீர்வை அல்லது மாற்று வழியை கொண்டுவர வேண்டும்... என்ற அடிப்படையில் கடவுளை ஏற்போர் அடையும் துன்பங்களுக்கு ஒரு தெளிவான மாற்று தீர்வை கடவுளை மறுப்போர் தெரிவித்தாக வேண்டும் ஆனால் மாறாக அஃது ஏற்போர் அடையும் அனேக துன்பங்கள் கடவுளை நிரகரிப்போரும் அடைகின்றனர். உதாரணமாக பசி, குடும்பத்தில் பிரச்சனை,மோசடி ,வறுமை, திருட்டு, கொள்ளை, கொலை, ஏமாற்றம், இன்னும் இதைப்போன்ற தனிமனித மற்றும் சமுக ரீதியான இழப்புகள். ஆக இதைப்போன்ற இழப்புகள் இரு சாராருக்கும் பொதுவாக ஏற்படுகிறது என்பது தெளிவு. எனவே இதற்கு "கடவுளை ஏற்பது மறுப்பது " என்ற நிலை தாண்டி ஒரு மூன்றாம் காரணம் இருக்கிறது என்பது விளங்குகிறது அதாவது சுய நலம்,விட்டுக்கொடுக்கும் மனபான்மையின்மை, போட்டியும் பொறாமையும் கொண்ட கெட்ட மனித மனங்களே இதற்கு காரணம்
         இதை கடவுளை ஏற்போர் மொழியில் சொல்வதாக இருந்தால் கடவுள் கூறும் போதனைகளை ஏற்காமல் தன் மன இச்சையின் படி செயல்படும் மனிதர்களின் செயல் பாடே இதைப்போன்ற அனேக இழப்புகளுக்கு வழி வகுக்கிறது,
        சரி., அப்படியானால் சுய நல மில்லாத மனிதர்களாக வாழ்(இரு)ந்தாலே இவ்வுலகில் நன்மையே மேற்கொள்ள போதுமானது எனும் போது "கடவுளை ஏற்றுத்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழலாம்...


      தாராளமாக நல்லெண்ணமிக்க மனிதர்களால் பிறருக்கு எந்த வித கேடுகளையும் தாராமல் இருக்க முடியும். எனினும் சமுகத்தில் உலவும் கெட்ட மனிதர்களால் சமுகத்திற்கு ஆபத்து தானே.... மேலும் நல்ல மனிதர்களின் மனச்சாட்சியும் எப்போதும் நிலையாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது
   ஆனால்.,  கடவுளை ஏற்கும் போது எந்த செயலின் விளையும் நமது மனதிற்கு நன்மையோ தீமையோ ஏற்படுத்துவதாக இருந்தாலும் அஃது கடவுளுக்கு பயந்து நடு நிலையோடு செயல் பட தூண்டும் மேலும் இஸ்லாத்தை பொறுத்தவரை கடவுளுக்கு செய்யும் வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவிற்கு சக மனிதர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுக்காப்பு கொடுப்பதை ஒரு கடமையாகவே பணிக்கிறது
 ..."நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)   
   தனி மனிதனின் உயிருக்கு இதை விட உயரிய வரையறையே வேறு எந்த சட்டத்தால் தரமுடியும்..?
 மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் தனி மனித வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விளக்குகிறது அதிலும் குறிப்பாக அவர்களின் இறுதி பேருரையில்
 மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: "பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. 
"ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
  ஆக "படைப்புகள் மீது இரக்கம் காட்டாதவன் மீது படைப்பாளன் இரக்கம் காட்டுவதில்லை போன்ற பொன்மொழிகளும் தனி மனிதனுக்கு அவனது உயிர் மற்றும் உடமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது
   இவ்வாறு பிறருக்கு உதவுவதை பிறர் நலன் பேணுவதை ஒரு கடமையாக இஸ்லாம் பணிக்கும் போது இதை ஒரு செயலாக மட்டுமே செய்யாமல் இதற்கும் நாளை நம் இறைவனிடம் வெகுமதி உண்டு என்ற எண்ணத்தில் இதைப்போன்ற நன்மையாக காரியங்களை அதிகமாக செய்வதற்கு "கடவுள்" என்ற சொல் நமக்கு அவசியமாகிறது. எனவே கடவுள் இல்லை என்பதை விட கடவுள் இருக்கிறார் என்ற நிலையில் நாம் பிறருக்கு அதிக நன்மை செய்வதற்கு இயல்பாக மனம் நாடுகிறது. இதே எண்ணத்தின் அடிப்படையிலும் பிறரின் நலன் கெடுப்பதற்கும் கடவுள் தண்டனை தருவார் எனும் போது அதிலிருந்து விலகவே மனம் விரும்புகிறது.
 இந்த நேரத்தில் என் நாத்திக சகோதர்களே., ஒன்றை சிந்தியுங்கள் இஸ்லாம் ஓரே கடவுளை மட்டுமே வணங்குங்கள் என்று சொல்வதோடு சக மனிதர்களுக்கு நன்மை செய்து வாழுங்கள் என்றே சொல்கிறது. இதில் என்ன முரண்பாடு அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத வாதத்தை கண்டு விட்டீர்கள்...?
இறுதியாக., உங்கள் எண்ணத்தைப் போன்று இறப்பிற்கு பிறகு ஒரு வாழ்க்கை இல்லையென்றால் அஃது அது உண்மையென்றாலும் அதனால் கடவுளை நம்பியதால் அவனை வழிப்பட்டதால் எங்களை போன்றோர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை... ஆனால் நாங்கள் சொல்வதுப்போல இறப்பிறகு பிறகு ஒரு வாழ்விருந்து கடவுளை வணங்காமல் காலம் முழுவதும் வாழ்வை கழித்து அவனது முன் நிற்கும் பொழுது உங்களது நிலைமை....?
           எங்களுக்கு நூறு சதவிகித நம்பிக்கை இருக்கிறது இறப்பிற்கு பின் உள்ள வாழ்வில் உங்களது நம்பிக்கையே பரிசிலனை செய்ய நீங்களும் மேற்கண்ட பத்தியை மறுமுறையும் வாசியுங்கள்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். (அல்குர்-ஆன் 2:21)

                                                              அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Thursday, June 23, 2011

இஸபெல்லா - ஒரு புதினம், ஒரு புரட்சி..!! (1)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே...,

பல்வேறு காரணிகளால், இந்த வலைப்பூவில் எழுதுவதென்பது அரிதாகிக் கொண்டே வந்தது. கிடைத்த இரண்டு வாய்ப்புகளிலும் எழுதிய ஒரு தொடரை தொடரும் எண்ணம் தற்போதைக்கு விடுமுறை எடுத்துள்ளது. :)) இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் அந்த தொடரை முடிக்கப் பார்க்கிறேன்.

இந்த தொடர், ஒரு கதை. பாகிஸ்தானிய கதாசிரியர் ஒருவருடையது. கதை மூலமே கிறிஸ்தவ மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும் ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்த்து, எது சரி, எங்கே தப்பு என்பதை உளவியல் ரீதியாக அணுகி முடிவு செய்வார். இந்தக் கதையை முதன் முதலில் படிக்கும்போது எவ்வளவு தாக்கத்தை உணர்ந்தேனோ அதே அளவு தாக்கத்தை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உணருகிறேன். இதனை கதையாக வாசித்தாலும் சரி, தர்க்க ரீதியில் அணுகினாலும் சரி, ஒரு சின்ன சலனத்தையாவது ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு மாற்றத்தையோ, சலனத்தையோ ஏற்படுத்துமெனில் அதுவே இந்த தொடரின் வெற்றியாகும். அல்லாஹ் போதுமானவன். சரி வாருங்கள், பழைய, மிகப்பழைய ஸ்பெயினின் கொர்டபா நகரை சுற்றிப்பார்க்க செல்வோம்.

---------------------------- ~~ ----------------------------

அழகிய தோட்டத்தில்...
ஏடென் தோட்டத்தில் அன்றைய மாலைப்பொழுதை கதிரவன் தன் வசமாக்கியிருந்தான். பொன்னிற கதிரை காணுமிடமெல்லாம் பாய்ச்சி கண்களுக்கு விருந்தாக்கியிருந்தான். சுற்றுலாவிற்கு வந்தவர்களும் அங்கேயே வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர்களும் என்றைக்கும் போல அன்றைக்கும் ரம்மியமான அந்த மாலைப்பொழுதை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிருக்கையில் இரண்டு இளைஞர்கள் மட்டும் தோட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்து தனியே மதங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அதே தோட்டத்தில் கொஞ்சம் தள்ளி இருந்த பெஞ்சில் அமர்ந்து தோழிகளுடன் அந்த மாலையின் அழகில் மனம் பறிகொடுத்துக் கொண்டிருந்தாள் இஸபெல்லா. இஸபெல்லா, கொர்டபாவின் பணம் படைத்த, வசதியற்ற என எல்லா இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டிருந்த ஒரே பெயர். சமூகத்தில் உயர்ந்தோரும், மத குருமாரின் வம்சங்களும் தங்கள் வசம் கொள்ளத் துடித்த தேவதை. ஆனால் அவளின் தந்தையோ, இஸபெல்லாவை இன்னொரு (மரியம் அலைஹ்) கன்னிமேரியாக்கி வைக்க வேண்டுமென்றே முடிவுடன் இருந்தார். இஸபெல்லாவிற்கு அதற்கெனவே தனியாக மதம் சார்ந்த கல்வியை கற்க வழி வகை செய்திருந்ததால் இஸபெல்லாவுக்கும் மதம் சார்ந்த விவாதங்கள் மிகுந்த மகிழ்ச்சியை தந்தன எனலாம்.

அங்கே அந்த மூலையில் இருந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்களும் தங்களுக்குள் ஏதோ ஓர் விவாதத்தில் தீவிரமாய் இறங்கியிருந்தனர்.
முதலாம் இளைஞன்:செயிண்ட் பால், அவரின் கடிதங்களில் [எபிஸ்ட்ல், கேலேஷியன்களுக்கு அனுப்பப்பட்டது 3:10] ஒன்றில் இப்படி எழுதியுள்ளாரே?

இரண்டாம் இளைஞன்:என்னவென்று?

முதலாம் இளைஞன்:அதுதான், மார்க்க கட்டளை என்பது ஒரு சாபமென்றும், அந்த சாபத்திலிருந்து விடுவிக்கவே ஏசுநாதர் இந்த மண்ணிற்கு வந்தார் என்றும். அப்படி என்றால் என்ன அர்த்தம்?
இரண்டாம் இளைஞன்: (சிரித்துக் கொண்டே) “நீ என்னிடம் இருந்து இதன் விளக்கத்தை அறிய முயற்சிக்கிறாயா? ஆளானப்பட்ட கிறிஸ்தவ குருமார்களே...

இஸபெல்லாவின் காதுகளுக்கு “கிறிஸ்தவ குருமார்களே..” என்னும் வார்த்தை தெளிவாக விழுந்தது. தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவள் இந்த வார்த்தைகளை கேட்டதும் சட்டென அமைதியானாள். தன் தோழிகளையும் அழைத்து சற்றே அமைதி காக்கும்படி கூறினாள். 

இஸபெல்லா: “இந்த இரு இஸ்லாமிய இளைஞர்களும் நம் மதத்தைப் பற்றி ஏதோ பேசுவது போல கேட்கிறதே. கொஞ்சம் அமைதியாக இருங்கள். என்ன பேசுகிறார்கள் என்று கேட்கலாம்.
தோழிகளில் ஒருத்தி: “இந்த இஸ்லாமியர்கள் இந்நாட்டிற்கு வந்ததிலிருந்து நம் மதம்தான் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது போலுள்ளது. இப்பொழுது மீண்டும் என்னவோ??
இஸபெல்லா: “ஷ்ஷ்ஷ்... சும்மாயிருங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களென்று கேட்கலாம். பின்னர் நாம் விவாதிக்கலாம்.

முதலாம் இளைஞன்:மு’ஆஸ், என்ன நீ அந்த கிறிஸ்தவ குருமார்களே இந்த விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்கிறாயா?? அப்படியென்றால் அவர்கள் கிறிஸ்தவத்தை புரிந்து கொள்ளாமலே அதை பின்பற்றுகிறார்கள் என்கிறாயா??

இரண்டாம் இளைஞன்:உமர் லஹ்மி!, உனக்கு என் கூற்றில் சந்தேகமிருந்தால் இதே கேள்வியை இங்கிருக்கும் யாரேனும் ஒரு சிறந்த, மார்க்க அறிவு நிரம்பிய பாதிரியாரை அழைத்து இதைக் கேட்டுப்பார். ஆனால் அதற்கு முன் செயிண்ட் பால் கூறியுள்ள விஷயத்திற்கு உன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்து கேள்.”

உமர் லஹ்மி:என்னிடம் இந்த விஷயத்தில் எந்த எதிர்ப்போ, மறுப்போ இல்லை. ஆனால் அதிகமாக கிறிஸ்தவர்களுடன் நீ இந்த விவாதங்களை செய்வதைப் பார்த்தபின்தான் உன்னிடம் இதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டுமென்று தோணியது. அதுவுமன்றி நீதான் அவர்களின் வேதங்களையும் அதிகம் படித்து வைத்துள்ளாயே. அதனால்தான். என் கேள்வியெல்லாம் ஒன்றுதான், மார்க்க சட்டங்கள் ஒரு சாபமென்றும், இறைத்தூதர் ஈஸா(அலைஹ்) / ஏசுநாதர் கிறிஸ்தவர்களை எல்லாம் இந்த சாபத்திலிருந்தே காப்பாற்ற வந்தார் என்றும் வைத்துக்கொண்டால் திருட்டு / விபச்சாரம் / பெற்றோர்களுக்கு மாறு செய்வது போன்ற எல்லாமே பின் செல்லத்தக்கவையாகி / அனுமதிக்கப்பட்டவையாகி விடுமே??  கிறிஸ்தவர்களே இதை விரும்பாதவர்களாயினும் அவை அனுமதிக்கப்பட்டவையாகிவிடுமே என்றுதான் குழம்புகிறேன்

மு’ஆஸ்:என்ன உளறுகிறாய்? எனக்கு புரியவில்லை. எப்படி மார்க்க சட்டம் ஒரு சாபமென்றால், திருட்டு, விபச்சாரம் போன்ற பாவங்கள் அனுமதிக்கப்பட்டவையாகும் என்கிறாய்? எனக்கு புரியவில்லை??

உமர் லஹ்மி:நான் என்ன சொல்கிறேன் என்றால், பழைய ஏற்பாட்டின்படி மார்க்க சட்டங்களில் ஒருவர் திருடுவதோ, விபச்சாரம் செய்வதோ, பக்கத்துவீட்டினருக்கு தொல்லை அளிப்பதோ, பெற்றோருக்கு மாறு செய்வதோ அனுமதிக்கப்படாது. ஆனால், முழுதாக மார்க்க சட்டங்களே ஒரு சாபம் என்றானால், இந்த தடை உத்தரவுகளையெல்லாம் ஏற்க வேண்டியதில்லை. ஏனெனில் இந்த தடை உத்தரவுகளெல்லாம் மார்க்க சட்டங்களின் ஆணிவேர்தானே. செயிண்ட் பால் கூறுவது சரியென்றால் பின் இவர்களெல்லாம் திருடலாம், விபச்சாரம் செய்யலாம், இன்னும் பல பாவங்களையும் செய்யலாம் என்றுதானே பொருள்? அப்படிப் பார்த்தால் இந்த சாபங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு பாவகாரியங்கள் செய்பவர்களே கிறிஸ்தவர்கள் என்றும், இந்த பாவங்களை, பாவங்களே என்று ஒதுக்குகிறவர்கள் மார்க்கத்தை மதிக்கவில்லை என்றுதானே பொருள்படும்???

மு’ஆஸ்:வேடிக்கையாக உள்ளது. நான் இதுவரை எந்த விஷயத்தை எதிர்ப்படுகிற எல்லா கிறிஸ்தவர்களிடமும் பதில் சொல்லுமாறு கேட்கிறேனோ, அதே கேள்வியை நீ என்னிடம் விளக்க சொல்கிறாய்??

உமர் லஹ்மி:என்ன? இதை நீ முன்னமே கிறிஸ்தவர்களிடம் கேட்டுள்ளாயா?? அப்படியெனில் அவர்களின் பதில் என்ன??

மு’ஆஸ்:அவர்கள் அதற்கு பதிலுரைத்திடத்தான் விரும்புகிறார்கள். ஆனால் பின் அவர்களே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.

பேச்சின் சுவாரஸ்யத்தில் நேரம் கழிந்து மஃக்ரிப் (அந்திமாலை தொழுகை) தொழுகையின் பாங்கு சத்தம் கேட்கிறது. உடனே அவ்விருவரும் எழுந்து அருகில் உள்ள நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீரெடுத்து ஒலு (தொழுகைக்கான சுத்தம் செய்யும் வழக்கம்) செய்து தொழ விரைகின்றனர்.

இஸபெல்லாவோ இதையெல்லாம் கேட்டபின் நெருப்பிலிட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள். அவளின் பாடங்களில் இன்னும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல பயிற்றுவிக்கப்படவில்லையே. இல்லையெனில் அங்கேயே அவர்களின் மூக்குடைவது போல் பதிலுரைத்திருக்கலாமே என்று தவித்தாள். அவளுக்கு தெரிந்த ஞானத்தைக் கொண்டு உமர் லஹ்மிக்கும், மு’ஆஸுக்கும் பதில் அளித்திட சிந்தனையில் ஆழ்ந்தாள். ஆனால் எப்படி யோசித்தும் அவளுக்கு விடை கிட்டவில்லை. எனவே தோழிகளுடன் அவ்விடத்தை விட்டகன்று, பின் தந்தையிடம் பேசி இதற்கு தீர்வை தர எண்ணினாள். அவளின் தந்தை, அவ்வூரிலேயே மிகச்சிறந்த மதகுரு. எனவே அவருக்கு தெரியாத விஷயம் இருக்காது என்றே முடிவு செய்தாள்.

தோட்டத்தை ஒட்டி இருந்த ஒரு நாற்சந்திப்பில் தோழிகளை விட்டு பிரிந்து கொர்டோபாவின் கிழக்கு வாசலை நோக்கி நடக்கலானாள்.

(தொடரும்... இன்ஷா அல்லாஹ்)

Tuesday, June 21, 2011

சிந்திக்க சில நபிமொழிகள்


1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

2மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121). 

3ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள்.அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481). 

4ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442). 

5உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444). 
6ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).
7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045). 

8மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம். 

9இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி. 

13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

14) ''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி

16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம். 

17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.

18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

19) எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
20செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி).  நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான். 

22இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி. 

23இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ. 

24தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.



Thanks and Regards,
H. JAMEEL AHAMED

Saturday, June 18, 2011

கார்ப்பரேட் சாமியார்


 ஊழல் ஒழிப்பு, வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள இந்தியர் களின் கறுப்புப் பணம் மீட்பு உட்பட அதிரடிக் கோரிக்கைகளுடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது ஓர் உண்ணாவிரதப் போராட்டம்.

யோகா குருவான பாபா ராம்தேவுடைய முதல் கட்டப் போராட்டம் பாதியிலேயே முடிந்தாலும், நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது. ஆனால், அவருடைய போராட்டம் ஊழல் ஒழிப்பைவிடவும் அவரைப் பற்றிய விவாதங்களை அதிகம் உருவாக்கி இருப்பதுதான் வேடிக்கை!

ராம்தேவ் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இது முதல் தடவை அல்ல! பதஞ்சலி மரபின் அடிப்படையில் யோகா பயிற்சியை முன்வைத்துக் கற்பிக்கும் ராம்தேவ், 100 வாக்குப்பதிவு, 100 தேசி யம், 100 சுதேசி, 100 மக்கள் ஒற்றுமை, 100 யோகாவை மையப்படுத்திய தேசமே தன் கொள்கை எனப் பிரகடனப்படுத் தியவர், அவ்வப்போது அரசியல் சர்ச்சை களிலும் சிக்குவார். மார்ச் 2005-ல் ராம் தேவுடைய 'திவ்ய யோக மந்திர் அறக் கட்டளையைச் சேர்ந்த 113 ஊழியர்கள், தங்களுக்குக் குறைந்த அளவே ஊழியம் வழங்கப்படுவதாகப் போராட்டத்தில் குதித்தனர். ஓரளவுக்கு ஊழியர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டாலும், போராட்டத்தை வழி நடத்திய முக்கியமான ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.

இதேபோல், ஜனவரி 2006-ல் ராம்தே வுடைய அறக்கட்டளைக்குச் சொந்தமான 'திவ்யா ஃபார்மசியில் தயாரிக்கப்படும் மருந்துகளில் விலங்கு எலும்புகள் கலக்கப்படுவதாக சி.பி.எம். தலைவர் பிருந்தா காரத் சர்ச்சையைக் கிளப்பினார். சரத் பவார், முலாயம் சிங் போன்ற தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்காக பிருந்தாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க-வோ, வக்கீல் நோட்டீஸே அனுப்பியது. ஒரு வழியாக டெல்லியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகம், 'திவ்யா ஃபார்மசியின் மருந்துகளில் அப்படி எதுவும் எலும்புகள் இல்லை என்று மறுத்தது.

ஆனால், அதே ஆண்டு டிசம்பரில் எய்ட்ஸையும் கேன்சரையும் யோகா மூலம் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறி புதிய பரபரப்புக்கு வழிவகுத்தார் ராம்தேவ்.

''பாடப் புத்தகங்களில் பாலியல் கல்வி கற்றுத் தருவதற்குப் பதிலாக, யோகாவைக் கற்றுத் தந்தால் எய்ட்ஸைத் தடுக்கலாம்'' என்றார். 2009 ஜூலையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குச் சட்டரீதியான உரிமைகளை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது. இதற்கு எதிராகக் கொதித்து எழுந்த ராம்தேவ், ''ஓரினச் சேர்க்கை யாளர்கள் நோயாளிகள். அவர்களை மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும்.

சுப்ரீம்கோர்ட் சொல்வதை மத்திய அரசு நிறைவேற்றினால், வீதியில் இறங்கிப் போராடுவேன்'' என்றார். இப்படி அவ்வப்போது அடிபட்ட ராம்தேவுடைய பெயர், கடந்த இரண்டு வாரங்களில் இந்தியா முழுவதும் உச்சரிக்கப்பட்டது!

அண்ணா ஹஜாரேவின் போராட்டத் துக்குக் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, ராம்தேவும் போராட்டத்தில் குதித்தார். காந்திய வழியில் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்தப் போராட்டத்தின் செலவு மட்டும் 18 கோடி என்கிறார்கள். 2.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு, ஏர்கூலர்கள் வைக்கப்பட்டு, 5,000 மின் விசிறிகள் பொருத்தப்பட்டன. போர்வெல் போட்டு 650 குழாய்களில் குடிநீர் வசதியும், உண்ணாவிரதத்துக்கு வருவோ ருக்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளியல் அறைகளும் கழிப்பறைகளும் கட்டப்பட்டன.

60 டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பந்தல் முழுவ தும் கண்காணிப்பு கேமராக்கள். இதை, 'ஐந்து நட்சத்திரப் போராட்டம் என்று வர்ணித் தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராகிய திக் விஜய் சிங்.

''ஏழை களுக்காகப் பரிந்து பேசும் ராம்தேவின் யோகா பயிற்சி வகுப்பில் முதல் வரிசையில் அமர 50,000, நடு வரிசையில் அமர 30,000, கடைசி வரிசையில் அமர 1,000 வசூலிக்கப்படுகிறது'' என்பது திக்விஜய் சிங்கின் குற்றச்சாட்டு. ராம் தேவுடைய மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்களின் மதிப்பு மட்டும் 15,000 கோடி என்பது அவருடைய இன்னொரு குற்றச்சாட்டு.

திக் விஜய் சிங்கின் குற்றச்சாட்டு கள் காங்கிரஸைக் காப்பாற்றுவதற் காகவே சொல்லப்படுபவை என்றாலும், ராம்தேவுக்கு உள்ள கோடிக்கணக்கான சொத்துகள், மதவாத சக்திகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் ஆகியவை அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் அல்ல;

ராம்தேவுக்கு அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலம் இருப்பதாக வும் ஸ்காட்லாண்டில் தனித் தீவு இருப்ப தாகவும் சொல்லப்படுகிறது. மேலும், கறுப்புப் பணத்தைப் பற்றிப் பேசும் அதே வேளையில், எந்த உழைப்பிலும் உற்பத்தி யிலும் ஈடுபடாத இத்தகைய கார்ப்பரேட் சாமியார்களிடம் கோடிக்கணக்கில் பணம் குவிவதுபற்றியும் பேசித்தான் ஆக வேண்டும்!

மணிப்பூரில் 10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடிவரும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக் கும் ஈழத்தில் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகத்தில் நடை பெற்ற தீக்குளிப்புப் போராட்டங்களுக் கும் கிடைக்காத முக்கியத்துவம், இத்தகைய 'ஊழல் எதிர்ப்பு போராட்டங் களுக்கு மட்டும் ஏன் கிடைக்கிறது என் பதும் ஆராயப்பட வேண்டிய, மிக முக்கியமான ஒன்றே!

ஆனந்த விகடன் 15.06.2011

Friday, June 17, 2011

தலித் சிறுவன் தாக்கப்பட்டான்


தலித் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.


கோவை மாவட்டம் கரிக்கிலிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வசந்தகுமார். தலித் இனத்தைச் சேர்ந்தவன். அங்கு நிலவி வந்த வறட்சியின் காரணமாக கிராமத்திலுள்ள பொது குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளான்.


இதை வேறோர் இனத்தைச் சார்ந்த 3 பெண்களும் மற்றொரு நபரும் கண்டித்ததுடன் சிறுவனை அடித்துள்ளனர்.


காயமடைந்த சிறுவன் வசந்தகுமார் சிகிச்சைக்காக அன்னூர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டான். இந்த நிகழ்வு பத்திரிகையொன்றில் செய்தியாக வந்துள்ளது.
மேலும் தலித்துகள் வீட்டுக்கு வெளியே செல்போன் பேசவும், உள்ளூரில் முடி வெட்டிக் கொள்ளவும் கிராமத்தினர் தடை விதித்துள்ளதாகவும் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்தப் பத்திரிகை செய்தியையே தன்னேற்பு மனுவாக எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும், இதுபோன்று தலித்துகளின் மீதான
தாக்குதலில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரத்தையும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் ஏதும் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கும்படி கேட்டுள்ளது.


பத்திரிகையில் வந்த செய்தி உண்மையாக இருந்தால் அது 1989-ம் ஆண்டின் "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் பாதுகாப்புச் சட்டத்தை'
மீறியதாகக் கருதப்படும் என மனித உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
DINAMANI
 (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.3;105
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.4;1
THE QURAN

Tuesday, June 14, 2011

இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

கனிமொழி கைதும் கருணாநிதி புலம்பலும்!


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமத்தை ஸ்வான் நிறுவனத்திற்கு முறைகேடாக விற்றதற்குப் பரிசாக லஞ்சப் பணம் ரூபாய் 214 கோடி, கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்டதற்கு, ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகக் கனிமொழியும் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கனிமொழியின் சிறையிருப்பு, ஒரு தந்தை என்ற நிலையில் கருணாநிதிக்குத் துயரத்தை அளித்திருக்கிறது. தாம் பிறந்தநாளில் குடும்பத்தினர் அனைவரும் தமக்கு வாழ்த்துச் சொல்ல வரிசையாக நின்ற வேளையில், பாசமகள் கனிமொழி தம்மோடு இல்லையே என்ற வருத்ததுடன் இருந்த கருணாநிதி, கடந்த வாரம் (05/06/2011) திருவாரூரில் நடந்த திமுக நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில், கனிமொழி சிறையில் வாடுவது பற்றிச் சொல்லிக் கண்ணீர் விட்டுள்ளார். "திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி" என்று கூறினார்.

பெற்ற பிள்ளை சிறையில் வாடும்போது எந்தத் தந்தைக்கும் ஏற்படும் உணர்வுதான் இது. அதை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் பொது வாழ்வில் - அரசியலில் - ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் அரசுப் பதவியைப் பயன்படுத்தி லஞ்ச ஊழல் குற்றம் புரிந்துள்ளார் எனச் சிறையில் இருப்பதை ஏதோ தியாகம் செய்ததுபோல் சொல்லிக் காட்டுவது தான் விமர்சனத்துக்குரியது.
2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கோடிக்கணக்கில் பணம் பெற்ற ஆ.ராசாவுடன் கூட்டுச் சதியில் ஈடுபட்டுச் சற்றொப்ப 214 கோடி ரூபாய் பணத்தைக் கலைஞர் டி.வி.க்காகக் கனிமொழி பெற்றார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக ஸி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக் கூறியே கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி ஸி.பி.ஐ. நீதிமன்றமும் டெல்லி உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. இதையொட்டி திமுகவின் உயர்நிலைக் குழு கூடி விவாதித்துள்ளது. அவர்கள் கூடி விவாதித்து என்ன செய்ய முடியும்? திமுகவின் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டபோது கூட்டப்படாத திமுகவின் உயர்நிலைக்குழு கனிமொழிக்காக இரு முறை கூடியது, கருணாநிதியின் மகள் என்பதற்காகவே. திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியைவிடக் கருணாநிதியின் மகள் என்ற தகுதியே முன்னிலைக் காரணமானது.

கனிமொழி கைது செய்யப்பட்டது, அரசியல் எதிரி ஜெயலலிதாவால் முன்னர் கருணாநிதி கைது செய்யப்பட்டதுபோல் இல்லை; வழக்கும் அரசியல் காரணங்களால் இல்லை. இந்தியக் குற்ற நடைமுறைச் சட்டப்படி வழக்குத் தொடுக்கப்பட்டுக் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளர். "பெண்” எனும் எனும் ஸென்டிமென்ட் காரணத்தைச் சொல்லிக் கனிமொழியின் ஜாமீன் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதாவைக் கருணாநிதி கைது செய்து சிறையில் வைத்தபோது "பெண்" என்ற ஸென்டிமென்ட் எங்கே போனது?

கருணாநிதியும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இந்தப் பெண் எனும் சாக்கைப் பலமுறை கையாண்டுள்ளார். கனிமொழி கைது செய்யப்படுவதற்கு முன், முதல்வராக இருந்த கருணாநிதியிடம் பெண் பத்திரிகையாளார் ஒருவர்,"ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்படுமா?" என வினவியபோது, "ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதயத்தை எடுத்து வைத்துவிட்டு இது போன்ற கேள்வியைக் கேட்கக்கூடாது" என்றார். அதுபோல நீரா ராடியாவுடனான அமைச்சர் பூங்கோதையின் தொலைபேசி உரையாடலைப் 
பற்றி வினவிய செய்தியாளரிடம், "இரண்டு பெண்மணிகள் தானே பேசிக்கொண்டார்கள்; அதில் உங்களுக்கென்ன" எனத் திருப்பி வினவினார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கால் கருணாநிதி தடுமாறியிருந்தார். கனிமொழி கைதுக்குப் பின் நிலைகுலைந்து போயுள்ளார். எதைச் சொல்கிறோம்; ஏன் சொல்கிறோம்; மக்கள் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற சிந்தனை இன்றி அறிக்கை விடுகிறார். கடந்த மாதம் (மே 22) கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,"என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை. இறுதிப் போரில் வெல்வோம்" என்று கூறியுள்ளார். லஞ்சக் குற்றசாட்டைச் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திதுக் கொண்டிருக்கும் அதே வேளையில் இப்படிப் பட்ட அனுதாபம் தேடும் புலம்பல்களையும் கண்ணீரையும் கருணாநிதி கைவிட வேண்டும்.

"என் மகள் கனிமொழி" குற்றமற்றவள்; வஞ்சனையாளர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர்" எனப் புலம்பும் கருணாநிதி தம் ஆட்சிக் காலத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடிய அப்பாவிகளின் கண்ணீரை என்றாவது நினைத்துப் பார்த்திருப்பரா? சான்றுக்கு, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் வடவேங்கடம் முதல் தென் குமரி வரை தேடுதல் வேட்டை என்ற பெயரில் காவல்துறை நடத்திய அத்துமீறல்களை இவர் என்றாவது கண்டித்தாரா? ஆயிரக் கணக்கான கோடிகள் பணமும் ஐந்து நட்சத்திரச் சொகுசு வாழ்வும் வாழும் கனிமொழிக்காகக் கண்ணீர் விடும் கருணாநிதி, குடும்பத்தைக் காப்பாற்ற வருவாய் ஈட்டும் கடமையில் இருந்த இளைஞர்களைப் பொய் வழக்குப் புனைந்து சிறையில் இட்டபோது, சோற்றுக்கு வழியின்றிக் கதறிய அந்த ஏழைத் தாய்மார்களின் கண்ணீரைக் கற்பனை செய்திருப்பாரா? அவ்வழக்கில் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடி, நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர்களின் கண்ணீருக்கு மதிப்பளித்தாரா?

மக்கள் விழிப்புடனே இருக்கிறார்கள். அனைத்தையும் கவனிக்கிறார்கள். எனவே புலம்பல்களால் மக்களைத் திசை திருப்பி விட முடியாது என்பதை உணர்ந்து, எதையும் தைரியத்துடன் எதிர்கொண்ட, எதற்கும் கலங்காத, போர்க்குணம் மாறாத கருணாநிதியாய் வழக்கைச் சந்தித்து மகளை மீட்கச் சட்டப்படி  முயல்வதே கருணாநிதிக்கு நல்லது. அனுதாபம் தேடுவதை கருணாநிதி தொடர்ந்தால், அனுதாபத்தைவிட அருவருப்பே மிஞ்சும்.

- ரஸ்ஸல்
inneram.com

தமுமுக நிர்வாகிகள் மீதான பிடிவாரண்ட் ரத்து செய்தது நீதிமன்றம்


1997 ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவையில் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோயம்பத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி என்ற பெயரில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய மக்களிடம் நன்கொடை வசூலித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. முறையாக வருமானவரி துறையினர் கணக்கு சமர்பிக்கப்பட்டு அவர்கள் இது தொடர்பான விசாரணைகளை நடத்தி இந்த நிதியின் ஒவ்வொரு பைசாவும் முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப் பட்டு விட்டது என்று சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.

ஆனால் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் மத்தியில் ஆட்சியில் இருந்த பிஜேபி தலைமையிலான அரசு கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி நிர்வாகிகள் மீதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோர் மீதும் ஒரு பொய் வழக்கை தொடுத்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு சென்று வருகின்றார்கள்.

இதனிடையே, நேற்று வழக்குறைஞரின் கவனக்குறைவினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் ஆஜராகவில்லை. இதன் காரணமாக நீதிமன்றத்தின் வழக்கமான நடைமுறையின் அடிப்படையில் பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டது.

இன்று பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் செ. ஹைதர் அலி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய  பிறகு, பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் இது ஏதோ அசாதாரண நிகழ்வு போன்றும், புதிதாக வழக்கு தொடுத்திருப்பது போன்றும் சிலர் சித்தரிக்க முயன்றுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
 http://tmmk.in/index.php

Monday, June 13, 2011

ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றம் பிடி ஆணை

 மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.

 அறக்கட்டளை ஒன்றுக்காக வெளிநாடுகளில் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., ஹைதர் அலி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.
 
எனவே, அவர்களுக்கு எதிராகப் பிடி ஆணைப் பிறப்பித்து நீதிபதி மோகன்தாஸ் உத்தரவிட்டார்.


நன்றி தினமணி 

Saturday, June 11, 2011

நாளை துவக்க விழா:தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்


வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை, நாளை மாலை மத்திய அமைச்சர் வாசன் துவக்கி வைக்கிறார். இதற்கான கட்டண விவரங்கள், விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"பிளமிங்கோ லைனர்ஸ்' என்ற தனியார் நிறுவனம் சார்பில், "ஸ்காட்டியா பிரின்ஸ்' பயணிகள் கப்பல் திங்கள், வெள்ளிக் கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கும், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கும் இயக்கப்படவுள்ளது. இருவழித் தடத்திலும், மாலை 6 மணிக்கு புறப்படும் இக்கப்பல், மறுநாள் காலை 8 மணிக்கு (14 மணிநேரம்) மறுமுனையை சென்றடையும். துவக்கத்தில், வாரம் இருநாட்கள் இயக்கப்படவுள்ள இச்சேவை, பின், வாரம் மூன்று முறையாக அதிகரிக்கப்படவுள்ளது. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இந்த,"ஏசி' கப்பலில், 1,044 பயணிகளும், 200 ஊழியர்களும் பயணம் செய்யலாம். ஒன்பது மாலுமிகளைக் கொண்ட இக்கப்பல், மணிக்கு 13 முதல் 18 கடல் மைல் வேகத்தில் செல்லும். 111 எக்கனாமி வகை அறைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 2 சிறப்பு வசதி அறைகள், 22 டீலக்ஸ் அறைகள், 169 சூப்பர் டீலக்ஸ் அறைகள், 11 முதலாம் வகுப்பு அறைகள், 2 சூட் அறைகள் என, மொத்தம் 317 அறைகள் உள்ளன. ஒரே நேரத்தில் 250 பேர் அமர்ந்து உணவு உண்ணக்கூடிய ஓட்டல், மீட்டிங் ஹால், மருத்துவமனை, நடன அரங்கம், பார் ஆகியவை உள்ளன. 300 டன் சரக்குகளையும் கொண்டு செல்ல முடியும்.

 இங்கிருந்து கொழும்பு செல்ல, குறைந்தபட்ச கட்டணம், 2,990 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 19,550 ரூபாய். கொழும்புவில் இருந்து தூத்துக்குடி வர குறைந்தபட்ச கட்டணம், 3,128 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 20,470 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவக்க விழா சிறப்பு கட்டணம், 2,243 ரூபாய். கப்பலுக்குச் சென்றவுடன் தரப்படும் குளிர்பானம் மற்றும் வரையறுக்கப்பட்ட இரவு உணவு விலை ஆகியவையும் பயணக் கட்டணத்தில் அடங்கும். இதுதவிர, கப்பலிலுள்ள கேன்டீனிலும் பணம் கொடுத்து தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை வாங்கலாம். இதில், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு, கட்டணச் சலுகையும் உண்டு. இதற்கான டிக்கெட் விற்பனை உரிமத்தை, தூத்துக்குடி மூன்று தனியார் நிறுவனத்தினர் பெற்றுள்ளனர். டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.

 கப்பலில் பயணம் செய்பவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே வரவேண்டும். டிராவல்பேக், லேப்-டாப் பேக் உள்ளிட்ட ஏதாவது இருபொருட்களை தங்களது அறைக்கு எடுத்துச் செல்லலாம். இதுதவிர, எக்கனாமி வகுப்பு பயணிகள், 100 கிலோ எடை வரையும், முதல் வகுப்பு பயணிகள், 200 கிலோ எடை வரையும் லக்கேஜ்களை கொண்டு செல்லலாம். வெளியில் வாங்கப்பட்ட மதுபானங்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

 இக்கப்பலில் பயணம் செய்ய விரும்புவோர் கண்டிப்பாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இலங்கை சென்றவுடன், அவர்களுக்கு அந்நாட்டு அரசு சார்பில், சுற்றுலா விசா வழங்கப்படும். 30 நாட்கள் வரை இது செல்லுபடி ஆகும். அதற்குள், அவர்கள் கொழும்பிலிருந்து தூத்துக்குடி வர வேண்டும்.

 இக்கப்பல் சேவை துவக்க விழா, நாளை மாலை தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் நடக்கிறது. மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன், கொடியசைத்து, கப்பலை இயக்கி வைக்கிறார். இச்சேவை மூலம் இந்தியா-இலங்கை நாடுகளிடையே கலாசாரம், பண்பாடு, சுற்றுலா, வணிகம் மேம்படும்.

Thursday, June 9, 2011

நல்லவர் என்றோ தீயவர் என்றோ தீர்மானிக்க வேண்டாம்


புதிதாக கல்லூரியில் சேரப்போகும் உங்களுக்கு நீங்கள் நினைத்த வண்ணம் வெற்றி அடைய முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்முடைய வாழ்கையில் பள்ளி கல்வி முடிந்து கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் அந்த தருணம் மிக முக்கியமானது. இது நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான ஒரு திருப்பு முனை. இதை நாம் நல்ல முறையில் எதிர்கொண்டு வெற்றி அடைய வேண்டாமா?? உங்கள் கல்லூரி வாழ்கை சிறப்படைய ஒரு சர்வகலாசாலையில் பேராசிரியராக பணி புரியும் நான் என்னுடைய அனுபவங்களை வைத்து சில ஆலோசனைகளும் குறிப்புகளும் தரலாம் என்று நினைக்கிறேன். இந்த ஆலோசனைகள் மகளை கல்லூரியில் சேர்க்கப்போகும் தாய்மார்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கல்லூரியில் சேர்ந்து பெற்றோர்களுக்கு பிரியா விடை கொடுத்த பிறகு தான் தெரியும் வீட்டு நினைவால் ஏற்படும் துயரம் (ஹோம் ஸிக்னஸ் ) எவ்வளவு பாதிக்கும் என்று. இவை மட்டும் அல்லாமல் இதுவரை நமக்கு புரியாத / வந்திராத சில புதிய பிரச்சினைகளையும் தனியாக எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த பிரச்சினைகள் என்னென்ன அவற்றை எங்கனம் எதிர்கொள்ள வேண்டும் என்று கல்லூரியில் சேரும் முன்பே நாம் தெரிந்து கொண்டால் கல்லூரி வாழ்கை சுகமாகவும்சந்தோஷமாகவும் வெற்றியுடனும் முடியும்.

ஹோம் ஸிக்னஸ்
தாய் தந்தையரின் அரவணைப்பில் இத்தனை நாள் வளர்ந்து விட்டு திடீரென அவர்களை விட்டு பிரியும் போது ஏற்படும் பிரிவு துயரமே இது. ஆண்களை விட பெண்களையே இது அதிகமாக தாக்குகிறது. பெற்றோர்களை தற்காலிகமாக பிரிந்தாலும் நம் உள்மனது அதை ஏற்க மறுக்கும். நாம் எதற்காக இந்த கல்லூரியில் சேர்ந்தோம் என்பதே சில சமயம் மறந்து விடும். படிப்பை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விடலாம் என்று கூட தோன்றும். இப்படி பட்ட சூழ்நிலையில் உங்களுக்கு படிப்பின் மேல் உள்ள ஆர்வம் குறையும் இந்த நிலை புதிய நட்பு கிடைக்கும் வரையே என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

புதுநட்பு
நீங்கள் புதிய சூழ்நிலைக்கு ஒத்துப்போகும் வரைஉங்களை எப்பொழுதும் எதாவது வேலைகளில் ஈடுபடுத்தி கொள்ளவேண்டும். தனிமையை தவிர்த்துக்கொள்ளுங்கள். தனிமை நமக்கு கிடைக்கும் போது,நாம் என்னென்ன இழந்தோம் என்று மனது அசை போடத்தொடங்கும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபாடு வரும். அதனால் உங்கள் படிப்பு மற்றும் அன்றைய வேலை முடிந்து விட்டால் உங்கள் விடுதி அறையில் தனித்திருக்காது நூல் நிலையத்திற்கு செல்லுங்கள் அல்லது பொது அறைகளில் தொலைக்காட்சிவிளையாட்டு மற்றும் செய்திதாள்களில் ஈடுபடுத்திகொள்ளுங்கள். அங்கு இருக்கும் மற்ற மாணவர்களிடம் பேச்சு கொடுங்கள். இது உங்களின் உரையாடல் திறமையை வளர்க்கும். ஏற்கனவே அங்கு தங்கி இருப்பவர்களிடம் இதன் மூலம் பரிச்சயம் கிடைக்கும். எவரையும் உடனடியாக நல்லவர் என்றோ தீயவர் என்றோ தீர்மானிக்க வேண்டாம். சில நாட்கள் கூட கழியட்டுமே.......
அன்புக்கு ஏக்கம் / காதல்
இருபாலாரும் படிக்கும் கல்லூரியானால் சகஜமாக பழகும் ஆண்கள் கூட அன்பு செலுத்துவதாக நினைத்து அவர்கள் மேல் ஈடுபாடு வரும். அவர் நல்லவரா கெட்டவரா என்று சிந்திக்க தவறி விடுவீர்கள். தீய நட்டபின் கைகளில் விழ வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய நட்பு உங்கள் வாழ்கையின் குறிக்கோளை தகர்த்து விடும். அதனால் நாம் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். கல்லூரி படிப்பு முடியும் வரை காதல் வேண்டாமே.. காதலித்து விட்டீர்களா?? பொறுமையாக இருங்கள். நீங்கள் கற்க வந்த கல்விக்கு முதலிடம் கொடுங்கள். மிகுந்த பெண்களின் கல்வி இந்த காதலினால் பாதிக்க படுகிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு காதலே உலகம் என்று தனம்பிக்கையை இழந்து விடக்கூடாது. காதல் மற்றும் திருமணம் வெற்றியடையாத போது நீங்கள் கற்ற கல்வி தான் கைகொடுக்கும். கவனமாக இல்லையென்றால் வேறு அவமானங்களும் வந்து சேரும். சில பெண்கள் வெளியில்சொல்ல முடியாமல் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள். இது பல கல்லூரிகளில் நடக்கிறது. இந்தவிஷயம் எப்பொழுதும் உங்கள்-மனதில்-இருக்க-வேண்டும்.
தன் கையே தனக்கு உதவி
பிறர் உதவி இன்றிநம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தெரிந்து கொள்ளுங்கள். பல வீடுகளில்பெண்களை பொத்தி பொத்தி வளர்த்திருப்பார்கள் பெற்றோர்கள். வங்கிக்கணக்கு துவங்குவது,அவசியமான பொருட்கள் வாங்க கடைகளின் விவரம்அவசியமுள்ள பஸ் ரூட்டுகள்அருகில் சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களுடைய விலாசம்தொலைபேசி எண்நகல் எடுக்கும் நிலையங்கள்.. என்று இவற்றை பற்றி தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொன்றிற்கும் நாம் மற்றவரை சார்ந்திருந்தால் நேர விரயம் மட்டுமல்லாமல் சில சமயம் நட்பும் முறிந்து விடும்.

ஆண் சிநேகம்
கல்லூரி வாழ்வில்பல ஆண்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்கள் உங்கள் ஆசிரியராகவோசக மாணவனாகவோஉங்கள் சகோதரர்களின் நண்பர்களாகவோஉங்கள் தோழிகளின் சகோதரர்களாகவோ,உங்கள் டிபார்ட்மெண்டில் வேலை செய்பவராகவோபஸ்ஸில் தினமும் உங்களுடன் கூட பிரயாணம் செய்பவராகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். ஆண்களோடு பழகும் போது கவனமாக இருங்கள். இவர்களோடு பழகும் போது உங்கள் உள்ளுணர்வு சொல்லவதை கேளுங்கள். பெண்களுக்கு அவர்கள் உள்ளுணர்வு ஒரு நல்ல வழி காட்டி.உதவி கேட்க தயங்காதீர்கள்.

தன்னம்பிக்கை
தொழுகை மற்றும் உடற்பயிற்சி தினமும் செய்து வந்தால் உங்கள் மனதின் எண்ண சிதறல்களை ஒருமுகபடுத்தலாம். ஆரோக்யமாகவும் இருக்கலாம். பரிட்ச்சை நேரங்களில் உங்களின் உற்சசாகமின்மையை குறைத்து தன்னபிக்கையை உயர்த்தும். நீங்கள் கலூரியில் எதற்கு சேர்ந்தீர்கள் என்ற குறிக்கோளை ஒருபோதும் மறக்காதீர்கள். நீங்கள் வாங்கும் மார்குகள் மட்டும் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போவதில்லை. உங்களை எப்பொழுதும் மற்றவரோடு ஒப்பிட்டு பார்க்காதீர்கள். அது உங்களை நீங்களே அவமதிப்பதாக அர்த்தம். வெறும் ஏட்டுக்கல்வி மட்டும் இருந்தால் அது உதவாது. உங்களுக்குள் இருக்கும் மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். உங்களுடன் படிப்பவர் வசதி உள்ளவராக இருக்கலாம்மிகுந்த அழகுள்ளவராக இருக்கலாம்விலையுயர்ந்த ஆடைகள் உடுத்தலாம்அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கலாம். அழகும்வசதியும்ஆடைகளும் ஒருவரின் வாழ்கையை ஒரு போதும் நிர்ணயிக்கப்போவதில்லை. உள்ளத்தின் அழகே உண்மையான அழகு. ஆகையால் நல்ல குணமுள்ளவராக நடந்து கொள்ளுங்கள். இயல்பாகவே உங்களை மற்றவர்களுக்கு பிடிக்கும்.

வெற்றி உங்கள் கையில்

நன்றி- மைதிலி கிருஷ்ணன்

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் வைத்திருக்கும் தொடர்பு. உங்கள் வசதியை பொறுத்து அவர்களுடன் தினமும் ஒரு முறையோ அல்லது வாரம் ஒருமுறையோ தொடர்பு கொண்டு உங்கள் கல்லூரியில் நடக்கும் விஷயங்களையும், உங்கள் பிரச்சனைகளையும் தெருவித்து அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று கொள்ளுங்கள் அவர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களை வழிநடத்தி கல்லூரி வாழ்கையை வெற்றி பெற வைக்கும். உங்களின் கவனத்தை சிதற வைக்கும் காரணங்களை தெளிவாக புரிந்து கொண்டால்அதற்கு ஏற்ற தீர்வு காணும் வழி முறைகளை கண்டுவெற்றி பெறலாம். கல்லூரி வாழ்க்கையை இனிமையாக மாற்றி கொள்ளலாம்.

Monday, June 6, 2011

ஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...


ஆஸ்திரேலியாவில், இதுவரை இல்லாத அளவிலான இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை, தாங்கள் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது சிட்னியை தலைமையிடமாக கொண்ட "மை பீஸ் (My Peace)" என்ற அமைப்பு. 

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சிட்னி நகரின் பரபரப்பு மிக்க சாலைகளில் மிகப்பெரிய அளவிலான விளம்பரப்பலகைகளை நிறுவியுள்ளது இந்த அமைப்பு. கடந்த மே 26 ஆம் தேதி நிறுவப்பட்ட இந்த விளம்பரங்கள் இன்னும் நான்கு வார காலத்திற்கு அந்த பகுதிகளில் நீடிக்கும். 

இது குறித்த செய்தி ஆஸ்திரேலியாவின் பாரம்பரியமிக்க நாளிதழான "சிட்னி மார்னிங் ஹெரால்ட்"டில் வெளிவந்தவுடன் கூடவே பரபரப்பும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. இந்த விளம்பர பலகைகள் பற்றி கருத்து தெரிவிக்கும் இந்த பத்திரிகை "கிருத்துவ நம்பிக்கையின் அடிப்படையிலேயே கை வைப்பதாக உள்ளன இந்த விளம்பரங்கள்" என்று குறிப்பிட்டுள்ளது. 

அப்படி என்ன இருக்கின்றது அந்த விளம்பர பலகையில்? 

பின்வருவது தான் அந்த விளம்பர பலகைகளில் உள்ள வாசகம், 
Jesus: A Prophet of Islam - இயேசு : ஓர் இஸ்லாமிய இறைத்தூதர்
மேற்கண்ட வாசகத்திற்கு பக்கத்தில் இந்த அமைப்பின் தொலைப்பேசி எண்கள் மற்றும் வலைத்தள முகவரி கொடுக்கப்பட்டு "குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை" இலவசமாக பெற தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.             



இந்த விளம்பரங்கள் குறித்து விளக்கமளிக்கும் இத்திட்ட அமைப்பாளர் தியா முஹம்மத் (Diaa Mohamed), முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் ஒரு பொதுவான பார்வையின் கீழ் கொண்டுவரவும், முஸ்லிம்கள் ஏசுவை நம்புகின்றவர்கள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே இந்த விளம்பரங்கள் என்று கூறியுள்ளார். 

வரும் நாட்களில் மேலும் சில வாசகங்களை கொண்ட விளம்பர பலகைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வாசகங்கள்,  

  • Holy Qur'an: The Final Testament - புனித குர்ஆன் : கடைசி ஏற்பாடு.    
  • Muhammed (s): A Mercy to Mankind - முஹம்மது (ஸல்): மனிதகுலத்தின் கருணை. 
  • Islam: Got Questions? Get Answers - இஸ்லாம்: கேள்விகளா? பதிலை பெற்று கொள்ளுங்கள். 

இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன. இரு நாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

தாங்கள் இதற்காக பின்வாங்க போவதில்லை என்றும், அந்த விளம்பரங்கள் மூலம் தங்களுக்கு வந்த அழைப்புகளில் பெரும்பாலானவை பாசிடிவ்வாகவே இருந்ததாகவும், சுமார் பத்து சதவித அழைப்புகள் மட்டுமே தங்களை தாக்கக்கூடிய எண்ண அலைகளில் இருந்ததாவும் தியா முஹம்மத் தெரிவித்துள்ளார். 

மேலும், சேதப்படுத்தப்பட்ட அந்த பலகை விரைவிலேயே சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்நிறுவனத்தின் முதல் செயற்திட்டம் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ள நிலையில் இவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகின்றது. 

அதாவது, நான்கு வார காலத்திற்கு, சிட்னியின் முக்கிய வழித்தடங்களில் ஓடும் சுமார் நாற்பது பேருந்துகள் தங்களது இஸ்லாமிய விளம்பரங்களை தாங்கி செல்லும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.

பேருந்துகளின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் இருக்கும் இந்த விளம்பரங்கள், "இஸ்லாம் குறித்த கேள்விகளா? தொடர்பு கொள்ளுங்கள் இந்த எண்களில்" என்று இருக்குமாம். இது குறித்த மாதிரியை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது "My Peace".      



நீங்கள் மேலே பார்த்தது மட்டுமின்றி, தங்களின் அடுத்தக்கட்ட திட்டமாக, தொலைக்காட்சிகள் வழியாகவும் தங்களது இஸ்லாமிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள போவதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்நிறுவனத்தின் வலைத்தளம் பல்வேறு தகவல்களை கொண்டதாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது (தள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது). தங்களது செயற்பாடுகளாக இவர்கள் கூறியுள்ளது, 

  • இஸ்லாம் குறித்த தவறான புரிந்துணர்வுகளை கையாள்வது, 
  • சக ஆஸ்திரேலியர்களுக்கு இஸ்லாம் பற்றி எடுத்து சொல்வது, 
  • இஸ்லாம் குறித்த எவ்விதமான கேள்வியையும் முஸ்லிமல்லாதவர்கள் கேட்க முன்வருமாறு அழைப்பது,   
  • குர்ஆன் மற்றும் இதர இஸ்லாமிய நூல்களை இலவசமாக அளிப்பது, 
  • பள்ளிவாசல்களுக்கு முஸ்லிமல்லாதவர்களை அழைத்து செல்வது, 
  • எந்தவொரு தலைப்பிலும் சொற்பொழிவாற்ற தயாரான நிலையில் அறிஞர்களை வைத்திருப்பது,

மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமின்றி புதிய முஸ்லிம்களுக்கு தேவையான உதவிகளை செய்வதில் மிக மும்முரமாக செயல்படுகின்றனர் இந்த இயக்கத்தினர். அல்ஹம்துலில்லாஹ். பெண்களுக்கான பகுதியும் மிக அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் பல இஸ்லாமிய இயக்கங்களை கண்டு நான் வியந்துண்டு. தங்கள் மார்க்கத்தின் மீதான ஆழ்ந்த பற்று, எவ்வித கேள்விக்கும் தங்களிடம் பதில் உண்டு என்ற அசராத நம்பிக்கை, அதனை வெளிப்படுத்தும் விதமான விவாதங்கள், நேர்த்தியான முறையில் வடிவமைப்பட்ட செயற்திட்டங்கள் என்று இந்த இயக்கங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அந்த வரிசையில் இப்போது "My Peace"சும் சேர்ந்துள்ளது. மாஷாஅல்லாஹ்...

குறிப்பு: 

நாம் மேலே பார்த்தது போன்ற செயல்திட்டத்தை "Gain peace" என்ற அமைப்பு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் செயல்படுத்தி வருவது இங்கே நினைவுகூறத்தக்கது
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

MY PEACE official website:
1. mypeace.com.au. link

Gain Peace official website:
1.gainpeace.com. link
References:
1. Press release - mypeace.com.au. link 
2. He's not the son of God, just the support act - Sydney Morning Herald, dated 28th May, 2011. link
3. Billboard loses prophet margin - Sydney Morning Herald, dated 30th May, 2011. link


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ

Friday, June 3, 2011

கற்பா? கல்லூரியா?


நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருன் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல்குர்ஆன்: 66:6)
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப்படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள் கிறார்கள்.பெரும்பாடுபடுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை.
குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறிகொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதை பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
ஆட்டோ அல்லது வேன் பயணம்
சிலர் தங்களது பருவடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
ஆட்டோ பறக்கின்ற போது, ஆட்டோ அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தை களை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுகள்.
பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாய பெண்கள் வெளியே வருகின்றனர். வாசலில் ஆட்டோவுடன் காத்தி ருக்கின்றான் ஆட்டோ ஒட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமல் கலர் கலர் பேண்ட சர்ட் அணிந்து இன் செய்து சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.
பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங் களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகிறது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்றவரை ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான். மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பிள்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை.
மறுநாள் காலையில் அதே சொகுசு பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்த கல்லூரிப் படிப்பு தேவையா என்று!
ஆட்டோ, வேண் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டி ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப்புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்புக் கிடைக்காத என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தைகெட்ட நடத்துனர்களும், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.
பட்டபடிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டி பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன், மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சி குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று.
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப்பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகை யிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்கு கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றொர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?
ஊயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்வி விட்டு, பாய் பிரண்ட்ஸ்வுடன் திரையரங்களுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின் றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக்களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதை காமகளியாட்டம் என்று வெறுக்கின்றர்களோ அதை தற்போதுள்ள சினிமாக் களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும். கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நிணைப்போம். இப்போது நிணைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?
பிற மதத்தவருடன் காதல் பயணம்
கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத் துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பறிக்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வர்று கூறுகையில் நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடியப் பாவமாகும்.
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.       (அல்குர்ஆன்: 2:217)
ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்
இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! நம்முடைய பிள்ளைகளை நரகபடு குழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.
தமிழகத்தின் தென்பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஒடுவது சர்வசாதாரணமான ஒன்றாகி விட்டது.
பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர். பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்துக் கிடக்கின்றனர். பள்ளிப்படிப்புக்கே இந்த கதி என்றால் கல்லூரிப் படிப்புக்கு என்ன கதி?
ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாக செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பென்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜூகேஷன் முறையை கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?
பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாய பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும்; இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது வல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.
அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாய பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும்போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின் றனர். சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர். இது இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்பு கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.
நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்ற நாம் தப்ப முடியாது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.உங்களில் ஒவ்வொரு வரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட் பட்டவைப் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்வித் தலைவரும் பொறுப்பாளரே! தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட் பட்டவை குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள், தள் எஜமானின் உடமைகளுக்கு பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் (நூல்: புகாரி 2409)
இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும்போது சாதகங்களை விட பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளை படிக்க வைக்க வேண்டுமானால்….
குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக்க வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.
உள்ளுராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லுஸரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.
கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) தப்ரானி)

இந்த பெண்கள் ஆட்டோ அல்லது வேளில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர் களாக இருக்க வேண்டும்.
இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.
ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்புப் படித்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதை விட சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாகரத்தில் போய் முடிகின்றது.
எனவே, இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோhர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.
கற்பா? கல்லூரியா? என்ற இந்த தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களை பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கன் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கி விடக்கூடாது.இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்துக் கொண்டிருப்பவை. இந்த தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!