Wednesday, March 9, 2011

முஸ்லீம் லீக் கலைப்பு,தி மு கவுடன் இணைந்தது?


//மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப் பாட்டு கோட்பாட்டின் தாரக மந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம்.//

மேற்கண்ட செய்தியினை நம் இணையத்தினை வாசிக்கும் சகோதரர்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டார்கள்!.இனி என்ன செய்யப் போகிறாய்?.... என்ற நம் கட்டுரையில் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்க்கு முன்பே வந்த வாசகம்தான் இது!!. ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம் என்று நாம் அந்தப்பாராவை முடித்திருந்தோம்!. தற்போது அது உண்மையிலேயே வேறுபட்டுவிட்டது!. ஆம்!. அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படுபவரால், “கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்!. 

தன்மானத்தை இழந்து, சுயசின்னத்தில் கூட போட்டியிட முடியாமல், அரசியல் அரங்கில் அனாதையாக இருக்கும் முஸ்லிம்லீகிற்கு இதுவும் வேண்டும்!. இதற்கு மேலும் வேண்டும்!. இதற்கு மேல் வேறு என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பதும் எனக்கு தெரியும்!. ஏன் கொடுத்த மூன்று தொகுதியையும் திரும்ப தர வேண்டும் என்று கேட்டால் (பிடுங்கினால்) கூட, சரணம் சரணம் கச்சாமி....! சாமிசரணம் கச்சாமி.....! என்று அதை தாராளமாக வாரி கொடுப்பதற்கு கொடைவள்ளல் காதிர்முகைதீன் தயாராக இருந்திருப்பார்!. அதையே திமுகவும் செய்திருக்கலாம்!. தாழ்த்தப்பட்டோரை விட முஸ்லிம்களின் நிலை பரிதாபமாக உள்ளது என்ற நீதிபதி சச்சார் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அரசியல் அரங்கில் காட்சிகள் நிறைவேறிக் கொண்டிருகின்றது!. பொறுத்திருந்து பாருங்கள்!. காதர்முகைதீனிடம் இருந்து கூடிய சீக்கிரமே, சட்டமன்ற மேலவையில் இடம் தருவதாக எங்களுக்கு திமுக வாக்களித்துள்ளது என்று ஓரு டயலாக் வரும்!.

பாருங்கள் சகோதரர்களே!. முப்பத்தி ஒன்று தொகுதியைப்பெற்ற பாமக விடம் ஒன்றை பிடுங்கியதை கூட நியாயப்படுத்திவிடலாம்!. ஆனால் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சமூகமான முஸ்லிம்களுக்கு திமுக சார்பில் தரப்பட்ட மூன்றே மூன்று தொகுதியைக்கூட விட்டுவைக்காமல், திரும்ப முஸ்லிம்லீக்கிடம் இருந்து பிடுங்கியது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்கள் மேலும் மேலும் வஞ்சிக்கப்படுவது எந்தவிதத்தில் நியாயம்?. முஸ்லிம்லீக்கிடம் திரும்ப பெற்றதைப் போல், கடந்த தேர்தலில் பெற்ற ஒன்பது தொகுதியைவிட, ஓரு தொகுதியை அதிகம் பெற்ற விடுதலைசிறுத்தைகள் கட்சியிடமோ, முதன்முதலாக கூட்டணியில் சேர்ந்ததுமே, ஏழு இடங்களை பெற்ற கொங்கு முன்னேற்ற கழகத்திடம் இருந்தோ இவ்வாறு பெறமுடியுமா?. முடியவே முடியாது!. அவர்களிடம் திரும்ப பெற்றால், இந்நேரம் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியேறி மாற்று அணியில் சேர்ந்திருப்பார்கள். அந்த சமூகம் தங்களின் எதிர்ப்பை காட்டி திமுக விற்கு தேர்தலில் தக்கபாடம் புகட்டி இருப்பார்கள். 

ஆனால் தன்மானம் இழந்த முஸ்லிம்லீக்கிடம் இருந்து மட்டுமே, இதுபோல் திரும்ப பெறமுடியும்!. “இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா" என்று திமுகவிலே கேவலமாக பேசப்படுபவரும், இதற்கு துணை போகியுள்ளவருமான காதர்முகைதீனிடம் இருந்து, முஸ்லிம்லீக் கட்சியின் தலைவர் பதவியை பிடுங்கவேண்டும். இவர் உடனே தூக்கி எறியப்பட வேண்டும்!. சட்டமன்ற இருக்கையில் இடம் பெறாமல், கருணாநிதியின் இதயத்தில் இடம் பெரும் இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரையும், இதுபோன்று சமுதாய நலனை குப்புறதள்ளிய சுயநலவாதிகள் இருக்கும்வரையும், முஸ்லிம்கள் ஒருக்காலும் அரசியல் அரங்கில், தங்களின் பங்களிப்பை பெறமுடியாது!. தற்போது பிறைக்கொடி அம்மனமாக திரிகின்றது!. இந்த துரோகத்திற்கு தானா முஸ்லிம்லீக் கட்சியினர் லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்து கருணாநிதிக்கு விருது கொடுத்தனர்?.

முஸ்லிம்லீக்கின் கடைசி அத்தியாயத்தினை காதர்முகைதீன் அவர்கள் எழுதிவிட்டார். முஸ்லிம்லீக்கை புதைகுழியில் இவர் தள்ளிவிட்டார். இனி முஸ்லிம்லீக் என்ற பெயரை உச்சரிக்கவே இவர் தகுதியற்றவர். தற்போது இவர்கள் பெற்று இருக்கும் இரண்டு தொகுதிகளில் கூட, நிச்சயம் மமக வை எதிர்த்து நிறுத்தப்படுவார்கள். அதற்கும் முஸ்லிம்லீக் துணைபோய், மேலும் இரண்டு முஸ்லிம்கள் சட்டமன்றத்திற்கு செல்வதையும் தடுத்துவிடுவார்கள். இனி அடுத்த சட்டமன்ற தேர்தலில், முஸ்லிம்லீக் என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருக்காது என்றே நமக்கு தோன்றுகின்றது. எந்த கோரிக்கையாவது நிறைவேற்றக்கோரி முஸ்லிம்லீக் கட்சி களத்தில் இறங்கி போராட்டம் நடத்தியதுண்டா?. எனவே முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் அடிப்படை உறுப்பினர் பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு, மாற்று கட்சியான மமக வில் சேர்ந்துவிடுங்கள். 

குறைந்தபட்சம் அந்த கட்சியாவது தங்களின் பங்களிப்பை இனி அரசியலில் ஆற்றட்டும்!. அல்லது முஸ்லிம்களின் அரசியல் வெற்றிடத்தை ததஜ களத்தில் இறங்கி நிரப்பட்டும்!. அல்லது பாப்புலர் பிரன்டின் சோசியல் டெமாக்ரடிக் பார்டி அதை நிரப்பட்டும்!. ஏனெனில் எங்களுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும். எங்களின் கோரிக்கையை எடுத்துக்கூற பிரதிநிதிகள் சட்டமன்றத்தின் இருக்கையில் இடம் வேண்டும்!. எவர்களின் இதயத்திலும் எங்களுக்கு இடம் வேண்டாம்!. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களின் இதயத்திற்கு அட்டாக் வந்துவிடலாம்!.

19 கருத்து சொல்ல வாங்க!:


அதிரை அஹ்மது சொன்னது…
உண்மை! துணிச்சலான கருத்துப் பதிவு!
abdul aziz சொன்னது…
காதர் பாய். இதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தொப்பி. சமுதாய மானத்த காப்பாத்துறது இருக்கட்டும் முதல்ல உங்க மானத்த காப்பாத்திக்கங்க. உங்களுக்கு இஸ்லாத்த எதிர்க்கிற ஐயனும், ஐயங்காரும் பரவாயில்லை. கலைஞர் அவர்களே இதிலுமா எங்களை பலிகடா ஆக்கி விடீர்கள் .அது ஏன் கொங்கு கட்சிக்கு கொடுத்ததில் ஒன்றை குறைக்க வேண்டியது தானே,இல்லை என்றால் ராமதாசுக்கு கொடுத்ததில் 2 ஐ குறைக்க வேண்டியது தானே .அதெல்லாம் விட்டு விட்டு முன்று கொடுத்ததில் ஒன்றை புடுங்கி விடீர்களே.மானம் இழந்த முஸ்லிம் லீகு ,முஸ்லிம்களின் பெயரை கேவலப் படுத்ததே.இது தான் தி முக வின் முஸ்லிம் பாசம் .மீண்டும் ஒரு முறை முஸ்லிம்களுக்கு துரோகம் .துரோகிகளையும் துரோகம் இளைடவர்களையும் தோற்கடிப்போம்
அதிரை புதியவன் சொன்னது…
//முஸ்லிம்லீக் கட்சியினர் லட்சக்கணக்கில் செலவு செய்து விழா எடுத்து கருணாநிதிக்கு விருது கொடுத்தனர்?// யாரு சொன்னது முஸ்லீம் லீக்கு காசுன்னு . அது அவங்க முதலாளி மு.க காசுங்கோ .... பிறகென்ன முதலாளி சொல்ல கேக்காம உங்க சொல்ல கேப்பாரு
AZIFAIR-SIRKALI சொன்னது…
sultan said... அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சரியான கருத்து சகோதரரே! இதயத்தில் மட்டுமே வைத்து நம்மை பார்கும் இந்த கருநானிதி நாய்க்கு நாமும் இதயத்தில் மட்டும் இடம் அளிப்போம் இன்ஷாஅல்லாஹ். அதுமட்டுமல்ல வீக்காகி விக்கிதவிக்கும் இந்த முஸ்லிம்லீகிற்கு விடை கொடுப்போம். த.மு.மு.க தொண்டர்கள் தி.மு.க கொலைவெறிக்கும்பலாள் தாக்கப்படுகிற போது ( என் சடலம் விழுந்தால்தான் இஸ்லாமியர்கள் மீது கை வைக்க முடியும் என்ற கருணாநிதியின் கூலிப்படை கொலைவெறித் தாக்குதல் நடத்தியபோது) அதை வேடிக்கை பார்த்தவன் அந்த கிழட்டுநாய். அவன் அன்றே நம்மை பொருத்தவரை செத்துவிட்டான் இவர்களுக்கு செருப்படி கொடுக்க வாக்கு கேட்டு நம்மிடம் வரும்போது செருப்பால் அடித்து துறத்த நாம் தயங்ககூடாது உடன்படிக்கையில் கையெழுத்து ஆகிவிட்டது 3 தொகுதிகள் என்று இத்தனை லட்சம் முஸ்லிம்கள் வாழும் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட் 2 (ம.ம.க - 3 & முஸ்லிம் லீக் - 2). கிடைத்திருப்பது யானை பசிக்கு சோளப்பொறி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5000 முதல் 15000 வரை ஓட்டுகள் வாங்கும் தே.மு.தி.க வுக்கு 41 சீட்கள் + துணை முதல்வர் + 1 ராஜ்ய சபா உறுப்பினர் என்று இழுத்துக்கொண்டே போகிறது. ஆனால் 25000 முதல் 40000 வரை வாக்காளார்களை கொண்ட நமக்கு, அ.தி.மு.க. சார்பில் 3 + தி.மு.க. சார்பில் 2 சீட்கள். ஏன்? அ.தி.மு.க இல்லை என்றால் தி.மு.க , அதும் இல்லை என்றால் என்ன செய்வது என்ற நம் நினைப்பு தான் காரணம். ஒரு முறை ஓட்டை பிரித்ததற்க்கே விஜயகாந்த் இவ்வளவு கேட்கிறார் நம்மால் பிரிக்க முடியாதா? மறு தேர்தலில் கோரிக்கை வெற்றி பெறாதா ? முடியும் இன்ஷாஅல்லாஹ், இயக்க தலைவர்கள் முன்வரவில்லை. எப்படியும் நம்மிடம்தான் வந்தாகவேண்டும் என்று திராவிட கழகங்கள் நினைக்கக் காரணம் நாம்தான். நமக்கு தெரிந்தது எல்லாம் திராவிட கழகங்கள்தானே. அதை மாற்றினால் போதும், அவர்கள் அழைப்பதர்க்கு முன்னால் நாம்தான் ஓடி விடுகிரோமே. அதை அவர்களும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தவறு நம்முடையது சகோதர, சகோதரிகளே. பிறரை சட்டமன்றத்திற்கு அனுப்புவதை நமது தழையாய கடமையாக நினைக்கும் நாம், சட்டமன்ற ஆசை இல்லாமல் இருப்பது எதனால் ? "பார்பவனை எல்லாம் பதவியில் அமர்த்தி விட்டு சிரித்தவை எல்லாம் சிம்மாசனம் ஏற்றி விட்டு ஏதுமற்ற ஏழைகளாய் படிப்பரிவற்ற பாமரராய் வாழ்ந்த்து போதும்" ஏமாறுவதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு இறை விசுவாசி இரண்டு முறை கொட்டு படமாட்டான் என்றார்கள். இந்த பொன்மொழியை அறியாததால்தான் நாம் இப்படி இருக்கிறோம். அரசியல்வாதிகள் திண்றுவிட்டு போடும் எலும்புகளுக்கு அடித்து கொள்ளாமல் நாம் திண்றுவிட்டு அவர்களுக்கும் உண்ண கொடுப்போம். நாயாக இருந்து நக்கி பிழைப்பதைவிட, சிங்கமாக கர்ஜித்து சாவது மேல்! வேங்கை
அதிரை அமீன் சொன்னது…
கேவலத்தின் முகவரி மு.லீக் அட, மானங்கெட்டவர்களா! இப்படித்தான் நம் சமுதாய கட்சியினர்களை அழைக்கத் தோன்றுகிறது. நேற்று நடந்து முடிந்த (08.03.2011) அரசியல் நாடகங்கள் மானமுள்ள தமிழக முஸ்லீம்களை வெறுப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. மமக என்றொரு கட்சி மூன்றுக்கு மேல் வேண்டாம் என்று ஒரு சாத்தானிடம்; தெரிந்தே சரணடைய, பாரம்பரியமிக்க? மு.லீக் இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என தமிழக முஸ்லீம் சமுதாயத்தையே இன்று முட்டாளாக்கி விட்டது. 2ஜி புகழ் திமுகவின் மிரட்டல் நாடகங்கள் எதுவுமே பாபரி மஸ்ஜித் துரோகிகளான காங்கிரஸிடம் பலிக்காமல் போக, கேட்ட 63 தொகுதிகளை தர வேண்டிய கட்டாயத்தில் முஸ்லீம் லீக்கின் பெயரில் ஒதுக்கிய மூன்றுறுறுறுறுறுறு தொகுதியிலிருந்து ஒன்றை பறித்து காங்கிரஸிடம் தந்துள்ளார் சிறுபான்மை மக்களின் காவலரான? கருணாநிதி, இவரோடு (குவிந்திருக்கின்ற) ஒட்டியிருக்கின்ற நிதியின் எள்முனை அளவு கூட நீதியில்லாதவர் என்பதை இன்னொரு முறை நிரூபித்துள்ளார். நேற்றுப் பிறந்த, கோவை மாவட்டத்தை தாண்டாத ஜாதி கட்சியான கொ.மு.க விற்கு ஒதுக்கிய 7ல் ஒன்றைப் திரும்பப் பெறவோ, வி.சி.க்கு ஒதுக்கிய 10ல் ஒன்றை திரும்பப்பெறவோ திராணியில்லாத கருணாநிதி தன் தைரியத்தை (தமிழக இஸ்லாமிய இயக்கங்களால்) நாதியற்ற சமூகமாக்கப்பட்டு விட்ட இஸ்லாமியர்களிடத்தில் காட்டியுள்ளார், சொந்த சின்னத்தில் நிற்கத்துணியாமல் இரவல் சூரியன் சின்னத்தில் நிற்கும் போதே இந்த நிலைமையென்றால்... நினைக்கவே குமட்டிக் கொண்டு வருகிறது. இந்த அவமானங்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் திரும்பி நிற்கின்ற சமுதாய இயக்கங்களால் விளைந்தவினை என அடித்துச் சொல்லுமளவிற்கு கட்சி, இயக்கச் சண்டைகள். சமுதாயம் நலம் நாடி ஓரணியாய் வாருங்கள் என்று எத்தனை கூப்பாடுகள், வந்தீர்களா? உங்கள் அனைவரையும் சரமாரியாக வசைபாட என் மனம் நாடுகிறது இருந்தாலும் அடக்கிக் கொண்டு இன்னும் கெட்டுவிடவில்லை வாருங்கள் ஒன்று சேருவோம், நம்முடைய சகோதர சண்டையை இன்னொரு நாளில் வைத்துக் கொள்வோம் இப்போதைக்கு ஒன்றுசேர்ந்து தேர்தலை சந்திப்போம், திமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அடுத்த தேர்தலில் நம் சமுதாயத்தின் முன் மண்டியிட வைப்போம், இன்ஷா அல்லாஹ் நம்மால் முடியும், காதில் விழுகிறதா என் சகோதரர்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:8 முஸ்லீம்கள் பாடம் படிக்க நேற்று (08.03.2011) நடந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, ஏகப்பட்ட சங்கங்களாக செயல்பட்ட அத்தனை நாடார்களும் ஒன்று சேர்ந்து அவர்களின் ஜாதிக்காக ஒரு கட்சியே தொடங்கிவிட்டார்கள், இந்தத் தேர்தலில் போதிய தொகுதிகளை யாரும் ஒதுக்காவிட்டால் தனித்து போட்டியிட்டு தங்களின் பலத்தை காட்டப்போவதாகவும் அறிவித்தும் விட்டார்கள், எல்லாம் நேற்று வரை நாம் யாருமே அறியாத கொ.மு.க.விடம் படித்த பாடம். தானும் கெட்டு சமுதாயத்தின் மானத்தையும் ஏலம் போட்ட முஸ்லீம் லீக்கே உடனே திமுக கூட்டணியை விட்டு வெளியேறு, ம.ம.கவே அதிமுகவை விட்டு வெளியேறு, சோ.டெ.பா.இ கட்சியினர்களே நீங்களும் வாருங்கள் ஒன்றாக கைகோர்த்து தேர்தல் களத்தை சந்தியுங்கள், இன்றைய தோல்வி நாளைய வெற்றி என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓட்டையும் வாங்கிக் கொண்டு சீட்டையும் பறித்துக் கொண்ட (அதாவது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும்) திமுக, பாபரி மஸ்ஜித் விவகார அயோக்கியர்களான காங்கிரஸ், நரவேட்டை காட்டுமிராண்டி கும்பலான பாஜக, கரசேவை காவி நடிகையின் அதிமுக ஆகிய அனைவரையும் சமதூரத்தில் நிறுத்துவோம், இந்த தேர்தலில் இவர்களில் யாருக்கும் முஸ்லீம்களின் ஓட்டில்லை என்ற நிலையை ஏற்படுத்துவோம். இஸ்லாமியர்களின் இயக்கங்களே! நமது சமுதாயத்தின் பெயரைச் சொல்லி கட்சி நடத்துவோர் ஒன்றிணைந்து வந்தால் தயவுசெய்து நீங்களும் சமுதாயத்தின் நலன்நாடி இந்த ஒருமுறை மட்டுமாவது உங்களுடைய முந்தைய தீர்மானங்களை வாபஸ் வாங்குங்கள், பிற அமைப்புக்களுடனும் மக்களுடனும் கரம் கோர்க்க முன் வாரீர். தாத்தா ஜெயித்தாலும், செல்வி? ஜெயித்தாலும் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை மாறாக இருப்பதை தான் பிடுங்குவார்களே தவிர வேறு எதையும் பிடுங்க மாட்டார்கள் என்பது யாருக்கும் தெரியததல்ல. ஒத்துவராத கட்சிகளையும் இயக்கங்களையும் ஒதுக்குவோம். பெயருக்கு ஆசிரியரான காதர் முகைதீன் ஒன்றை மட்டும் சரியாக செய்கிறார் அது சாமியாராக இருந்தாலும் சரி, மஞ்சள் துண்டு பகுத்தறிவாக இருந்தாலும் சரி யாருக்கும் பேதமில்லாமல் சமமாகவே மண்டியிடுகிறார், த்தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு. (தனி நபர் தக்குதல் இன்றியே எழுத நினைத்தேன், இவருடைய இழிசெயலால் முடியவில்லை மன்னியுங்கள் சகோதரர்களே) கட்சிகளே, இயக்கங்களே! தெளிவான முடிவெடுக்க இன்னும் நேரமிருக்கிறது, மனமிருக்கிறதா உங்களிடம்? அதிரை அமீன்
தாஜுதீன் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும், அனைத்து முஸ்லீம்களின் மனதில் உள்ள உண்மையை செல்லிவிட்டீர்கள் சகோதரர் முஜீப். உண்மை என்று என்று தெரிந்தும் வெளியில் சொல்லாத மனசாட்சியுள்ள முஸ்லீம் இனியாவது சிந்திக்க வேண்டும். வாங்கிகளில் அடகு வைத்து பணம் கிடைப்பது போல் தான் இதுவும் என்று சொன்னால் தகும்.பணம் வாங்குகிறார்களே இல்லையோ இரும்புக்கோட்டை கிழட்டு சிங்கத்தின் இதயத்தில் மட்டும் இடம் கிடைக்கிறது என்ற திருப்தி இவர்களுக்கு காலம் காலமாக. இவர்கள் இரண்டு சீட்டுக்காக மானத்தை அடகு வைத்துள்ளார்கள், ஒரு சிலரோ கொள்கை வேறுபாடு மட்டும் உள்ள சக முஸ்லீமை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மட்டும் ஒட்டுமொத்த சமுதாயத்தை அடகு வைக்க முயல்கிறார்கள். இன்று வந்த மமகவால் 3 தொகுதிகள் வாங்க முடிந்தது, 50 வருடத்துக்கு மேல் உள்ள இவர்களால் இரண்டு தொகுதிகளே வாங்க முடிந்தது என்றால், இது வேதனையே. இனியாவது ரோசத்தை காட்டுங்களேன்.
தாஜுதீன் சொன்னது…
மர்ஹூம் அப்துஸ்ஸமது சாஹிப், மர்ஹூம் அப்துல்லத்தீப் சாஹிப் இவர்கள் இருவரின் நினைவாக இந்த இரண்டு சீட்டுக்கள். தலைவர் காதர் மொய்தீன் இறந்த பிறகு 3 வது சீட்டு இவர் நினைவாக தந்தாலும் தருவாங்க நம்மை இதயத்தில் வைத்துள்ளவர்கள். முஸ்லீம்களை அவமானப்படுத்தியுள்ள 2சீ ஊழல்.
அபு ஆதில் சொன்னது…
“கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று, பிச்சையாக போடப்பட்ட மூன்றில் ஓரு தொகுதியை முஸ்லிம்லீக்கிடமிருந்து பிடுங்கப்பட்டு, அதை காங்கிரசிடம் திமுக அள்ளிக்கொடுத்துள்ளது!. கொடுப்பதில் காட்டாத தாராளத்தை, பிடுங்குவதில் திமுக காட்டியுள்ளது!. காங்கிரஸ்,திமுக இடையே நடந்த அரசியல் உள் விளையாட்டில் பலிகடா ஆக்கப்பட்டதோ முஸ்லிம்கள்
அபுஇபுறாஹீம் சொன்னது…
அன்பின் முஜீப் : தலை(வலி) வெட்டி ஒட்டிச் சேர்த்திருக்கும் படத்தினை தூக்கிடவும் இதுவல்ல நம் வழி... உள்ளதைச் சொல்கிறோம் உண்மையை மட்டுமே காண்பிப்போம் !
ஸாலிஹ் சொன்னது…
இன்னும்மா நம்மல முஸ்லிம்கள் நம்புறாங்க! - கருணாநிதி
Shameed சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும் அம்மணம இருந்த காதர்முகைதீனுக்கு கோமலத்துண்டு கிடைத்தது அதையும் தானம் கொடுத்துட்டார்!
abdul சொன்னது…
alhamdulillah thangalin indha samudhaya sindanaiulla karuthai kandu poorippadaindhen insha allah koodiy viraivil muslimgal inakkamaga seyalpattal oru samudhaya puratchiku vithidalaam adirai abdul kareem
இறை நேசன் சொன்னது…
திராவிட கட்சிகளின் குத்தகை ஆட்சி இந்தத் தேர்தலோடுத் தமிழகத்தில் மலையேறும்! குனியக் குனியக் குட்டுப்பட்ட முஸ்லிம் சமுதாயம் தமிழகத்தில் நன்றாக வீறுகொண்டு எழுந்து விட்டது. இன்றைய இளைஞர்களிடம் இருக்கும் இந்த விழிப்புணர்வு, நாளைத் தமிழக அரசியலை அசைத்துப் பார்க்கும். அதற்கு - மானங்கெட்ட தமிழக முஸ்லிம் இயக்க/கட்சித் தலைமைகள் மட்டும் வழிவிட்டு ஒதுங்கினால் போதும்! ஒன்று - ஒன்றுபட வேண்டும்! இல்லையேல் - மானங்கெட்டத் தலைமைகள் ஒதுங்கி வழிவிட வேண்டும்! இந்த இரண்டு மட்டுமே ஆஃப்சன்! இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யவில்லையேல், இளைஞர்கள் தீர்மானிப்பார்கள் இயக்க/கட்சிகளின் முடிவை!
பெயரில்லா சொன்னது…
அடுத்தவங்களை குறை சொன்னவங்களே!அஸ்ஸலாமு அலைக்கும்! ஏன் சாரே!முஸ்லிம் லீக் அல்லது தமுமுக/மமக யாரோடும் கூட்டி சேராம தமிழ்நாடு முழுக்க தனித்து போட்டியிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மேற்படி கட்சிக்கு ஓட்டுபோடுவீங்களா சாரே? ஓட்டுன்னா ஒன்னு கருனாநிதி அல்லது எம.ஜி.ஆர்க்குதான்னு (இப்போ அம்மா)குத்துனீங்க சாரே.தப்பயெல்லாம் நம்ப கிட்ட வச்சுக்கிட்டு அவங்கள குறை சொல்லலாமா? சாரே. பாருங்க பா.ம.க.,விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு அவங்க ஜாதிக்காரங்க ஓட்டுபோட்டு 10 சீட்டு 20 சீட்டுன்னு பேரம் பேசி வாங்குற மாதிரி நாமெல்லாம் ஒற்றுமையா ஓட்டுபோட்டிருந்தா குறைந்தது 50 சீட்டாவது வாங்க முடியாதா சாரே. அடுத்தவங்களை குறை சொல்லியே நாசமா போறது நம்ப சமுதாயம்தான் சாரே. இனியாவது முழிச்சிக்குங்க சாரே. இல்லேன்னா அடுத்த தேர்தல்ல 1 வாங்குறதும் கஷ்டமாயிடும் சாரே.
Anvar சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் அதிரை முஜீபின் அதிரடியான கட்டுரை. ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன். ஏற்கனவே புதைக்கப்பட்ட முஸ்லீம் லீகை, மறுபடி தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்து, மீண்டும் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று எழுதினால் சரியாக இருந்திருக்கும். சகோ. அன்வர்தீன்
அபூ சுஹைமா சொன்னது…
அன்புச் சகோ. முஜீப், அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் படத்திற்கு காதிர் முகைதீன் பலமுறை விளக்கங்கள் கூறிய பின்னும் அதனைத் தொடர்ந்து இடம் பெறச் செய்வது எந்த அடிப்படையில் நியாயம் என்றும் எனக்குத் தெரியவில்லை. "சாமியாரைச் சந்தித்துவிட்டு இயலாமையின் காரணமாக கையை ஊன்றி எழும்போது, அதற்காகவென காத்திருந்தது போன்று தினமலர் எடுத்த ஃபோட்டோ அது. மற்றபடி அந்தச் சாமியாரிடம் நான் ஆசிர்வாதம் எல்லாம் வாங்கவில்லை" என்று காதிர் முகைதீன் கூறிய விளக்கங்கள் பல குழுமங்களிலும் வெளியானது. சம்பந்தப்பட்டவர் இப்படி ஒரு விளக்கத்தை கூறிவிட்ட நிலையில் இப்பிரச்சனையில் இதற்கு மேல் கருத்து கூற அடியார்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறானா என எனக்குத் தெரியவில்லை. அவரது உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ். மனிதர்களின் தீமைகளுக்காக அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் அவனுக்கே உரியது. அடியார்களுக்கு இல்லை.
அதிரை முஜீப் சொன்னது…
அபூ சுஹைமா அவர்களுக்கு வ அலைக்கும்வஸ்ஸலாம். தங்களுக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும். இங்கு வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தினை பற்றி தங்களின் கருத்தினை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த புகைபடத்தை இங்கு வெளியிட்டு இவர் சாமியாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றார் என்று நாம் எங்குமே நம் கட்டுரையில் கூறவில்லை. இந்த கட்டுரையும் அதற்க்கானதல்ல! மாறாக இவர் எப்படியெல்லாம் அரசியல் வாதிகளின் இழுதடிப்புக்கு எல்லாம் வளைந்துகொடுகின்றார் என்று ஒப்பிட்டு கூறுவதற்க்கேயாகும். சமுதாயத்தின் பிரதிநிதிகளை அதிகரிக்க செய்ய தனக்கு இருக்கும் பாரம்பரியமிக்க அரசியல் கட்சியின் தலைவர் என்ற ஓரு அதிகாரத்தினை பயன்படுத்தி தங்களிடம் இருந்து மீண்டும் சீட்டினை பெற்றதற்கு ஓரு கண்டனம் கூட தெரிவிக்காமல் விட்டுகொடுக்கின்றார் என்று கூறுவதற்கே ஆகும். மூன்று சீட்டுகள் என்றபோதும் இது எங்களின் சதவிகிதத்திற்கு ஏற்றாற்போல் இல்லை என்று ஓரு வார்த்தைகூட இவரிடம் இருந்து வெளியாகவில்லை!. அமைதியாக இருந்தார். இதை கூட அன்று ஓரு நாளிதழில் ஒருவர் " மூன்று சீட்டு, அதுவும் திமுக சின்னம் என்று நாம் கூறியபின்னும், இவரிடமிருந்து எந்தவித ரீயாக்சனும் இல்லையே!, அப்படியே ஒத்துக்கொன்டாரே!. ஒருவேளை நாம்தான் சீட்டை அதிகமாக கொடுத்துவிட்டோமோ" என்று கருணாநிதி கூறுவதுபோல் ஓரு கமென்ட் வந்தது. அன்று இவர் இவ்வாறு அழுத்தமாக கூறி இருந்தாரேயானால், இன்று இவரிடம் இருந்து பிடுங்குவதற்கு பதில் திமுக வேறு கட்சிகளிடம் இருந்து பிடுங்கி இருக்கும். ஓரு சந்தேகம்: இவர் சாமியாரை அவரின் பூஜை அறைக்கே சென்று சந்திக்க வேண்டிய அப்படி என்ன அவசியம் என்றும் நமக்கு தெரியவில்லை!.
masfa சொன்னது…
keralavil balamulla muslim leaque tamilnaatil paritaba nilayil irkaum entha arasiyal katchihal matikamal irukaum namil otrumai illatathu thaan kaaranam
'ஒருவனின்' அடிமை சொன்னது…
நல்ல கட்டுரை.என் தளத்திலும் நன்றியோடு மீள்பதிவு செய்துள்ளேன்,நன்றி

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!