புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இசுலாமியர்களுக்கு போலீஸ் சான்றிதழ் இல்லாமல் 8 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி முதல் பாஸ்போர்ட் சென்னையில் வழங்கப்பட்டது.
சாதாரணமாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தால் முகவரி மற்றும் பிற தகவல்கள் உண்மையானவை எனச் சான்றழிக்கும் போலீஸ் சான்றிதழ் சமர்ப்பித்த பிறகே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதனால் அனாவசிய தாமதம் ஏற்படுகிறது.
மக்காவுக்கு புனித ஹஜ் பயணம் வருபவர்களுக்கு சர்வதேச கடவுச்சீட்டு அவசியம் என சமீபத்தில் சவூதி அரேபிய அரசு அறிவித்ததையடுத்து ஹஜ் யாத்ரீகர்களின் நலனுக்காக, விரைந்து பாஸ்போர்ட் வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஹஜ் யாத்திரிகர்கள் போலீஸ் சான்றிதழ் இல்லாமலேயே 8 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகத் தக்க சர்வதேச பாஸ்போர்ட் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் 8 மாதத்திற்கான தற்காலிக ஹஜ் பாஸ்போர்ட் வழங்கப்படும். நிரந்தரமாக மாற்றிக் கொள்ள விரும்பினால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிறகு போலீஸ் சான்றிதழ் உள்ளிட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்த பாஸ்போர்ட்டாக அது மாற்றித்தரப்படும்.
இதுகுறித்து அனைத்து வட்டார பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் மத்திய வெளியுறவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,
ஹஜ் கமிட்டி கவர்எண் உள்ள அனைத்து ஹஜ் விண்ணப்பத்தாரர்களுக்கும் புதிய திட்டப்படி உடன டியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும். தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டு உள்ளன.ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் புதிய பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்த ஒருவருக்கு15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக துணை பாஸ்போர்ட் அதிகாரி K.S. தவுலத் தமீம் அறிவித்தார்.
No comments:
Post a Comment