ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடை மறித்து அவர்களது ஒட்டகத்தின் 'கடிவாளத்தை' அல்லது 'மூக்கணாங் கயிற்றைப்' பிடித்துக்கொண்டார். பிறகு, "அல்லாஹ்வின் தூதரே" அல்லது "முஹம்மதே" என விளித்து, "என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்க வல்லதொரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு பதில் கூறாமல்) நிதானமாகத் தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் "நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்" என்றோ அல்லது "நேர்வழி நடத்தப்பட்டு விட்டார்'" என்றோ கூறிவிட்டுப் பின்னர் அவரிடம் திரும்பி, "நீங்கள் என்ன கேட்டீர்கள்?" என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை (மட்டுமே) நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான)தொழுகையைக் கடைபிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு, "எனது ஒட்டகத்தை விடுங்கள் (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்)." என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி).