Wednesday, August 15, 2012

இளம் பிறை கண்டு ..


இளம் பிறை கண்டு ..
இளம்சிறார்கள்  ..
நாளை பெருநாள் .என்ற
நல்லதொரு சேதியை ...
நள்ளிரவு வரை
சொல்லித்திரிவர்..

எப்ப விடியும் பொழுது
என்று உறங்கும்
சிறார்க்கு தக்பீர் முழக்கம்
 தருமே மகிழ்வை ...

உறவு தரும் பெருநாள் காசு ..
நல்ல வரவு .என்று சொல்லும்
செல்லங்களின் உள்ளம் பொங்கும்
மகிழ்வால்..நாளும் ..
கூடுதல் சொந்தங்கள் ..
கூடுதல் வரவு ...
உறவுகள் தரும் காசு ..
 உள்ளத்தில் நீங்கும் மாசு ..
 
உற்றார் உறவினர் தந்த காசுக்கு  
உம்மாவும் கணக்கு கேட்பாள் ..
ஒன்றுக்கு 
இரண்டாக . காசுகளை கொடுத்து  
உறவை இரட்டிப்பாக்க...
சுவையான  
பெருநாள் பண்டங்களும்...
தமிழ் சொல்லுக்கு 
சுவையூட்டும்
வட்டிலாப்பம் ,
கடற்பாசி 
இடி யாப்பம்,
இறைச்சியானம் .
பொரிச்ச ரொட்டி என்ற சொல் 
நாவில் நீரூறும் ..
செவியில் தேனூறும் 

இவை யனைத்தும் ஒன்று கூடி 
பசியாறுதல் .என்றழைத்து 
தமிழ் தன்னை மகிழ்விக்கும் ..
பசியாறல் முடிந்து விட்டால் 
பகல் உணவு மறந்து போகும் 
பகலெல்லாம் பசித்திருந்த 
பழக்கமாக இருக்குமென்ற ஐயம் வேண்டாம் 
பசியாறா ..பக்குவமாய் நிறைந்ததனால் ...

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும் 
பழங்கால வளம் தன்னை
பதிவாளர் சொல்லுகையில் 
தொல்லை தரும் காகம் தனை
தன கால் சிலம்பால் கிழவி 
விரட்டிடுவாள் என்று ..

அது போல 
பெருநாள் தொழுகை முடித்து விட்டு 
வீதியிலே வரும்போது ..
மாமா ..பெருணா காசு என 
சிலர்  துரத்திடுவார் ..
ஐந்து,பத்து என  ரூபாய் நோட்டு தன்னை
கொடுத்து 
நடை பயில்வார்


உல்லாசம் பொங்கும்  
உவகை பொங்கும் பெரு நாளில் 
பள்ளிக்கு செல்லும் வழிஒன்று என்றால் 
திரும்பி வரும் வழி வேறாக 
இருக்க வேண்டும் .


மலக்குகளின் துஆக்கள்  கிட்டும்  
பெருநாளின் சுகம் தன்னை
சுபமாக பெற்றிடுங்கள் ....  

இறுதி வேதம் குரானையும்
இறுதி நபி போதனையும் 
இதயம் ஏந்தி 
செயல் படுவோம்
இன்ஷா அல்லாஹ்,
வெற்றியும் பெற்றிடுவோம்.

பாலஸ்தீனம் ,
காஷ்மீர்
பர்மா,
செச்சன்யா
சிரியா 
இன்னும் 
எங்கு நம் மக்கள் 
அத்துமீறலுக்கு ஆளாகி
வதைபடும் சோதனைக்கு
அல்லாஹ்விடம் கையேந்தி 
கண்கள் சொரிந்து
மன்றாடுவோம்
இந்நாளில்-
வல்லோனும் ஏற்றிடுவான்
நம் உம்மத்தின் வாழ்வில் 
விளக்கேற்றி வைத்திடுவான் 


அதிரை சித்திக் 

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் 
 

Saturday, August 11, 2012

ஒரு நிமிடம்..! ஒரு துளி கண்ணீர்...! ஒரு வேளை பிரார்த்தனை..!


வண்ண வண்ண மின் விளக்குகளால் 
மின்னும் மினாராக்கள்...
வித விதமான 
அரேபிய பேரீச்சம் பழங்கள்
பல ரகங்களில் பழ வகைகள் ...
பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி...
தாகம் தணிக்க குளிர் பழச் சாறு...
இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும்
பள்ளி வாசல்கள்...
அசைவ உணவின்றி முழுமை பெறாத
சஹர் நேர சாப்பாடு...

இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. 
அருள்மிகு மாதத்தை நாம் ஆனந்தமாய் அனுபவித்து வரும் நிலையில் நம் சகோதர முஸ்லிம்கள் அஸ்ஸாம்மியான்மர்சிரியாபாலஸ்தீனம்இராக் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அனுபவித்து வரும் இன்னல்களை கவனிக்கத் தவறிவிட்டோம். எனவே தான் அவர்கள் படும் துன்பங்கள் நம் உள்ளத்தில் எந்த வித உருத்தளையும் ஏற்படுத்தவில்லை.

புனித ரமளானை இறையில்லங்களில் கழிக்க வேண்டிய  முஸ்லிம்கள்  இன்று நிவாரண முகாம்களில் இருட்டறையில் தங்கள் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர். நாம் நோன்பு துறக்க கஞ்சி குடித்து வரும் நிலையில்அங்குள்ள மக்கள் நோன்பு  வைக்கவே கஞ்சியின்றி பட்டிணி கிடந்து வருகின்றனர்.

பெருநாள் நெருங்கி வரும் நிலையில் நம் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் புத்தாடைகளை எடுப்பதற்காக கடை கடையாக ஏறி இறங்கி கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்ஸாம்மியான்மரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் உடுப்பதற்கு மாற்று துணி கூட இல்லாமல் கிழிந்த ஆடைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாகி விட்ட நிலையில் நூற்றுக்கனக்கான இளம் பெண்கள் தங்கள் கணவர்களை துப்பாக்கி  குண்டுகளுக்கு  பலி கொடுத்து விட்டு விதவைகளாக கண்ணீர் வடித்து வருகின்றனர். குடியிருந்த இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டதால் வானமே கூரையாக தங்கள் வருங்காலத்தில் தாட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


பல இடங்களிலும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் பிரியாணி விருந்துடன்
உணவு திருவிழாவாக விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த மக்களுக்கோ சரியான உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு கால் வயிறு உணவு அளிக்கக் கூட வழியில்லாமல் பெற்றோர்கள் சாப்பாட்டுத் தட்டுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

நம் செல்லப் பிள்ளைகள் மீது உச்சி வெயில் பட்டாலே உள்ளமெல்லாம் கொதிக்கிறது. ஆனால் மியான்மரில் பல பச்சிளம் குழந்தைகள் கொடூரமான தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ரமலான் நோன்பை கூட நிம்மதியாக வைக்க முடியாமல் தங்கள் ஈமானையும்உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் சகோதரர்கள் அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இருண்டு போன எதிர்காலத்தையும் அழிந்து போன நிகழ்காலத்தையும் எண்ணி வெட்ட வெளியில் நிர்கதியாக நின்று கொண்டிருக்கின்றனர்.
          சொந்த நிலத்தையும்சொந்த பந்தங்களையும் இனக் கலவரங்களில் இழந்து விட்டு வயதான பெற்றோரையும் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு ஒதுங்க இடமில்லாமல் நாடோடிகளாக அலைந்து கொண்டிருக்கும் மக்களுக்காக புண்ணிய மிகு மாதத்தில் உடனடியாக நாம் செய்ய வேண்டியது ஒரு நிமிடம் மனதார சிந்தும் ஒரு துளி கண்ணீரும் அவர்களில் பாதுகாப்பிற்காக இறைவனின் முன்பு உளமாற கேட்கும் ஒரு வேளை பிரார்த்தனையும் தான்.
          இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து நம் அனைவரையும் வல்ல இறைவன் பாதுகாப்பானாக! ஆமீன்.

HABEEBUR RAHMAN

Thursday, August 9, 2012

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்!‎பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.


மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விடதாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும்உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையாஎன்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்குநான் உயர்ந்தவனா அவர் உயர்ந்தவாரா என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !

''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்ததுஅகந்தை காண்டு விட்டாயாஅல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.

''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்  வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். 38:75 லிருந்து 78வரையிலான வசனங்கள்.

உயர்ந்தோன்தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.  

இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து,இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35 

தடையை மீறினார் வழி தவறினார்.
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும்நிலையான வாழ்வும்இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.

20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும்அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்

அன்று
அந்த மரத்தின் கனி

இன்று
மதுமாதுசூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)

மதுமாதுபோன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள்,உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள்,  நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறதுஅழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும்உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.

ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடியஅழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.   

அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும்அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர். 

அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.

2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்;அவன் மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன்.

7:23.''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்துஅருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

படிப்பினைகள்
உயர்ந்த படைப்பு நானா அவரா  என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர்  யார்   தாழ்ந்தவர் யார்   என்பது தெளிவாகும்.

ஆதம்ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள். 

இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.  

நமது அன்னைதந்தையாகிய ஆதம்ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் கோரி தங்களை  சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.

இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்குஉள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.

அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
இறைவன் கோப குணம் கொண்டவனல்லகருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த  இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன்கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
·          
  • உலகம் முடியும் காலம் வரை,
  • மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,

பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால்பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

Saturday, August 4, 2012

மினாரா கட்ட தடை ஏற்படுத்தியவர்,இஸ்லாத்தைத் தழுவினார்


''இஸ்லாம்தான் இறுதியான தீர்வு'' - தானியல் ஸ்ட்ரீக்

சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் தானியல் ஸ்ட்ரீக் - Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக சென்ற மாதம் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவர் நேர...டியாக சுவிட்சர்லாந்து அரச தொலை காட்சியில் தோன்றி, தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் ''Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,'' - நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இவரை பற்றி சுவிட்சர்லாந்து அரசு தொலை காட்சி இவரைப்பற்றி கூறும்போது; ''He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur'an, prays five times a day and goes to a mosque!'' - இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும், பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர், சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார், ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார், அல் குர்ஆன் படிக்கிறார்'' என்று குறிப்பிடுகிறது.

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றும், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்திய இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்பு கூறுகின்றது. ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 3,11,000 என்று கூறுகின்றது.

இங்கு 100 க்கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருக்கின்றன எனிலும் 4 மஸ்ஜிதுகள் மாத்திரம் மினாராகளை கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடை செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்தவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.

Wednesday, August 1, 2012

பெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்


பெங்களூர் மாநகரம். தன் கார் பழுதடைந்ததால் ஆட்டோவுக்காக காத்திருக்கின்றார் அந்த ஹிந்து சந்நியாசி. ஆட்டோ வருகின்றது. உட்காரும்போதே அவரை ஆச்சர்யம் தொற்றிக்கொள்கின்றது. தன் கண்ணெதிரே இருந்த இஸ்லாம் குறித்த துண்டுப்பிரசுரங்களை ஆர்வமாக எடுத்து படிக்க ஆரம்பிக்கின்றார். வியப்புடன் அந்த வார்த்தைகள் அவரிடம் இருந்து வெளிப்படுகின்றன "நீங்கள் எப்படியெல்லாம் இஸ்லாமை பரப்புகின்றீர்கள் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கின்றேன்". இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு மிகுந்துவிட

தொடர்ந்து படிக்க...http://www.ethirkkural.com/2012/08/2012.html

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!