Saturday, January 28, 2012

ஏரிப்புறக்கரை தலையாறி ஆறுமுகம்


நமதூரின் வீட்டுமனைகள் நிலவில் இடம் வாங்கிப் போடும் விலைக்கு உயர்ந்ததற்கு பல்வேறு காரணிகள் உண்டு. குறிப்பாக சில,

1. பெண்ணுக்கு வீடு எனும் இஸ்லாத்திற்கு முரணான வரதட்சணை.
2. திடீரென பெருகிவிட்ட நில புரோக்கர்கள்.
3. கருணாநிதியில் இலவச நிலத் திட்டம் என பட்டியல் தொடர்ந்தாலும் இன்னுமொரு அதிபயங்கர காரணமும் உள்ளது. அது அல்ல அவர்,
4. ஏரிப்புறக்கரை தலையாறி ஆறுமுகம்

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் நிஜம்.

ஆளை நேரில் பாருங்கள் யாருமே நம்ப மாட்டார்கள் இந்த அப்பாவியா? சே;சசே இருக்காது என்பார்கள்.

அவர் வீட்டை நேரில் பாருங்கள், மூளையுடைய எவனும் சொல்ல மாட்டான் அவரை குடிசை வீட்டு கோடீஸ்வரன் என்று.

அதிகாலை 6 மணிக்கு அவர் வீட்டிற்கு சென்று பாருங்கள், பக்திப்பழமாக பூஜைகளில் 1 மணி நேரத்திற்கு மேல் ஈடுபட்டிருப்பார், இந்த பக்திமான் வேஷம்  கடவுளை ஏமாற்றவா அல்லது வெளியே கால்கடுக்க அவரை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களை ஏமாற்றவா என்பது விடைகாண முடியா வினா!

ஆனால் ஒன்று மட்டும் நிஜம், அந்த பூஜை நேரத்தில் மட்டும் தாங்க அவர் நல்லவர், யாரையும் ஏமாற்றுவதில்லை. அதற்கப்புறம் வரி செலுத்துவோரை வஞ்சித்து அரசாங்க சம்பளத்தையும் வாங்கிக் கொள்வார்.

அவர் மூலம் ஆக வேண்டிய நில அளவை போன்ற காரியங்களுக்காக போய் அழைத்துப் பாருங்கள், நாளொரு சாக்குப்போக்குகள் சாதரணமாக வந்து விழும், கலெக்டர் ஆபீஸ் போறேன், தாசில்தார் ஆபீஸ் போறேன் என மாதக்கணக்கில் இழுத்தடிப்பார். அதையும் மீறி கெஞ்சியோ கொஞ்சி அழைத்துப் பாருங்கள் வாரக்கணக்கில் இழுத்தடிப்பார். அதையும் மீறி அவர் வந்து விட்டால் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நமது மனைக்கோ நமது பக்கத்து மனைக்கோ சம்பந்தமில்லாத அந்நியர்கள் சிலர் நமக்கு முன்பே ஆஜராகியிருப்பார்கள் இவர்களை நன்றாக கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் இவர்கள் தான் நம்முடைய மனைக்கு தலையாறி ஆறுமுகத்தின் கைங்காரியத்தால் வில்லனாக வில்லங்கம் செய்ய இருப்பவர்கள்.

ரியல் எஸ்டேட் புரோக்கர் குழுவாக வலம் வரும் சிலருக்கு ஆறுமுகத்தின் ஆசி எப்போதும் உண்டு, ஊரில் இருந்த பெரும்பாலான அரசு புறம்போக்கு நிலங்களும் இந்த கும்பலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு களவு போயிருக்கக்கூடும், மாவட்ட நிர்வாகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? நடவடிக்கை எடுக்குமா? 

கடந்த திமுக ஆட்சியே இந்த நிலத்திருட்டுக் கும்பலின் பொற்காலம் எனலாம், ஏனெனில் கருணாநிதி கொண்டு வந்த இலவச நிலத் திட்டமே புறம்போக்கு நிலங்களை பட்டியலிட்டு காட்டியது. இந்த இலவச நிலங்களை முறைகேடாக பெற்றவர்களை கண்டறிவதுடன் இதில் ஆறுமுகத்தின் திருவிளையாடல் என்ன என்பதையும் கண்டறிய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

நமக்கு சொந்தமான மனைக்கு பக்கத்தில் ஏதாவது சிறிய துண்டு புறம்போக்கு நிலம் இருந்தால் உடன் நடவடிக்கையில் இறங்கி உங்கள் மனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் ஆறுமுகத்தின் உதவியோடு உங்கள் மனையின் ஒரு பகுதியை போலி ஆவணங்களை உருவாக்கி, களவாடி புறம்போக்குடன் இணைத்து மூன்றாவது பார்ட்டிக்கு விற்றுவிடுவார்கள் பின்பு வாங்கியவரும் நாமும் கோர்ட், கேஸ் என்று அடித்து கொண்டு தெருவில் நிற்க வேண்டும்.

பட்டுக்கோட்டையிலிருந்து நாம் முறைப்படி கட்டணம் செலுத்தி சர்வேயர்களை அழைத்து வந்தாலும் தலையாறி ஆறுமுகம் தன் உள்குத்து இருக்கும் மனைக்கு அவர் வரவே மாட்டார், மனையை அளக்க கடைசி வரை ஒத்துழைப்பும் தர மாட்டார்.

இப்போது சொல்லுங்கள், நம்மூர் மனை விலையேற்றங்களுக்கு தலையாறி அறுமுகமும் ஒரு காரணமா?  இல்லையா?

ஆறுமகத்தின் மீது துறைசார் நடவடிக்கைகான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன, மேலும் என்னைப் போன்று பாதிக்கப்பட்டோர் யாருமிருந்தால் உடன் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு புகார் அனுப்பும்படியும், விழிப்புணர்விற்காக இணையத்தில் பதியவும் வேண்டுகிறேன்.

டெய்ல் பீஸ்: ஆறுமுகத்திற்கு நெருக்கமான புரோக்கர் கும்பலைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய நிலத்தில் பள்ளிவாசல் ஒன்றை கட்டப்போகிறராம். ஆறுமுகத்தின் அதே டெக்னிக், தினமும் 1 மணி நேரம் பூஜை செய்து விட்டு எந்த அக்கிரமம் செய்தாலும் கடவுள் கண்டு கொள்ளாது என்று நினைப்பதை போல் நில வில்லங்கம் செய்து விட்டு அல்லாஹ்விற்காக பள்ளிவாசலை கட்டி கொடுத்து விட்டால் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என நினைக்கிறார் போலும், சகோதரா! விலகிக் கொள், அல்லாஹ்வின் தண்டனையை நாம் யாரும் தாங்க முடியாது.

முஹமது அமீன்
பிலால் (ரலி) நகர்
ஏறிப்புறக்கரை ஊராட்சி

Friday, January 27, 2012

”பைபில் இறைவேதமா”


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கேஅல்லாஹ்வின் அருளால் இவ்விவாதத்தின் மூலம்பைபிள் இறைவேதம் அல்ல என்பதனை தெள்ளத் தெளிவாக அடுக்கடுக்கான சான்றுகளுடன்நிரூபித்துள்ளோம்இதனை கொண்டு கண்டிப்பாக கிறிஸ்தவ மக்களிடம் அழகிய அழைப்பு பணியைநம்மால் செய்ய முடியும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட ஒரு மலையைப்பார்த்து நீ கடலில் போய் விழு என்று சொன்னால்,அது கடலில் போய் விழுந்துவிடும் என்று இயேசு சொன்னது உண்மையானால்பைபிள் இறைவேதம்என்பது உண்மையானால்என்னுடைய அறைகூவலை ஏற்று நாங்கள் சொல்வதை செய்து காட்டுங்கள்என்று பீஜே ஒரு சவால்விட்டாரேகிறுஸ்தவ பாதிரிகளின் அடிவயிறு அப்போதே கலங்கியிருக்கும்!

மலையை நீங்கள் பெயர்த்து ஆற்புதம் செய்ய வேண்டாம்இதோ இந்த பேப்பர் வெயிட்டை மட்டும் ஃபூஎன்று ஊதி நகர்த்திக்காட்டுங்கள் என்று பீஜே கேட்டதற்கு கடைசி வரைக்கும் அவர்கள்வாய்திறக்கவில்லை என்பதே இது ஒரு மனித கற்பனை என்பதும்அது உளறல் என்பதற்கும்தெளிவான சான்றாக அமைந்துள்ளது

உங்கள் வீட்டு படுக்கை அறையில் இருந்து ஒரு பிணத்தை எடுத்துக் கொண்டு வந்து ரோட்டில் போட்டுவிட்டேன்அதை யார் கொலை செய்தார்கள்எப்படி கொலை செய்தார்கள்ஏன் கொலை செய்தார்கள்?எப்போது கொலை செய்தார்கள்எதற்காகக் கொலை செய்தார்கள் என்ற விவரத்தை நீங்கள் தான்கண்டறிய வேண்டும் என சகோ.கலீல் ரசூல் கொடுத்த இறுதி பஞ்ச் பிரமாதம்சகோ.பீஜே விஷபாட்டிலை கையில் எடுத்ததை யாரும் எதிர்பார்த்திரவில்லைஅனைவருக்கும் இறைவன்அருள்செய்வானாக

உன்னதப்பாட்டு என்ற அந்த மன்மதப்பாட்டு பகுதியை வாசித்துக்காட்டிய போது ஏதோ செக்ஸ்புத்தகத்தை வாசித்துக்காட்டியது போலத்தான் இருந்ததுஇது போல 600 சிலேடுகளுக்கு மேல்வைத்திருப்பதாகவும் பீஜே குறிப்பிட்டார்அதையெல்லாம் போட்டுக்காண்பித்தால் என்னவாகுமோ!

என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்இது போல காமபுத்தகத்தை (பைபிளை)  எந்த சிறுவர்கள்கையிலும் தெரியாமல்கூட கொடுத்துவிட வேண்டாம்அசத்தியத்தை அக்குவேறு ஆணிவேறாகநொருக்கிய அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாபுகழும்.
விவாதத்தைக் காண இங்கே சொடுக்கவும்

Wednesday, January 25, 2012

மகன் விரட்டியதால் அனாதையாக வீதியோரத்தில் கிடந்த பரிதாபத் தாய்!


மதுரை மாநகராட்சி வளாக ரோட்டில்நேற்று காலை, 70 வயது மூதாட்டி ஒருவர்மயங்கிக் கிடந்தார். மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் எனபலரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல்ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தார். அசைவுகள் இல்லாததால்சந்தேகப்பட்ட சிலர்அவரை நெருங்கினர்.
அப்போது அவர்மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. சிகிச்சைக்கு அனுப்ப, "108' ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், "காயம் இல்லாததால்அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாது'எனக்கூறிதிரும்பிச் சென்றனர்
பின்போலீசாருக்கு தகவல் தெரிவித்துஅவர்கள் வந்ததும்மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். பசி மயக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார்அவருக்கு உணவு கொடுக்க முயற்சித்தனர்.http://www.manithan.com/photos/thumbs/2012/01/moothsaddy.jpg
அதுவரை வாய் திறக்காதவர்பேசத் தொடங்கினார். ""எனக்கு உணவே வேண்டாம்தயவு செய்து என்னை விடுங்க...'' எனஅழுதார். ""மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெருவைச் சேர்ந்த குஞ்சம்மாள் நான்.
எனக்கு ஒரு மகள்மகன் . சிரமப்பட்டு அவர்களை வளர்த்தேன். விவசாய வேலைகளை செய்து,திருமணம் ஆன என் மகனுடன் வசித்து வந்தேன்.
 ஒரு விபத்தில் என் கால் காயம் அடைந்தது. இரண்டு நாள் வீட்டில் முடங்கிய என்னையாரும் கவனிக்கவில்லை. என் மகன் விரட்டியதால்அங்கிருந்து பஸ் ஏறினேன்.
15 நாட்களுக்கு முன்மதுரை வந்தேன். கையில் இருந்ததை வைத்துஉணவு தேவையை சமாளித்தேன். பணம் தீர்ந்த பின்பிறரிடம் கையேந்த மனம் வரவில்லை. கடந்த நான்கு நாட்களாக பட்டினி.
காதில் தங்கத்தோடு இருந்தாலும்அதை வைத்து சாப்பிட மனம் வரவில்லை. எனக்கு சாப்பாடு தர உறவுகள் மறுத்ததால்உணவை பார்த்தாலே எரிச்சலாக உள்ளது,'' எனஅழ துவங்கினார்.
அவரை சமாதானப்படுத்திய போலீசார்கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்துமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
------------------------------------------------------------
2:215அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”

Sunday, January 15, 2012

பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்

ஆப்ரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தனது இசையால் பலரை கொள்ளைக் கொண்ட ஜோஸ் கெமிலன் ஜாஃபர் கடாபியாக தனது வாழ்வை மாற்றியுள்ளார். 

எல்லாப் புகழும் இறைவனுக்கே! 

ஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஆனால் இவரது இந்த முடிவை இவரது மனைவி டேனிலா விரும்பவில்லை. கிருத்தவத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த இவரோடு தன்னால் வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியிருக்கிறார்.

'நான் டேனிலாவோடு சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன். எனவே தான் ஐந்து வேளை தொழுகைக்கு பள்ளிக்கு செல்லாமல் வெள்ளிக் கிழமை மட்டுமே தொழுகைக்கு சென்றேன். இருந்தும் என் மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை. தொழுகை ஒரு மனிதனுக்கு அமைதியை கொடுக்கிறது. நேர்வழியை காட்டுகிறது. இது நாள்வரை அமைதியிழந்த எனக்கு தொழுகை மூலம் அமைதி கிட்டுகிறது. இதனை எனது மனைவிக்கு புரிய வைக்க முயற்ச்சிப்பேன்' என்கிறார் ஜாஃபர் கடாபி!

இவரது முடிவை மாற்றிக் கொள்ள சொல்லி பல இடங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இவரோ எவரது பேச்சையும கேட்பதாக இல்லை. 

'என் குடும்பத்துக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக உள்ளேன். எனது தொழில், எனது மனைவி, எனது பெற்றோர் அனைவரையும் நான் இன்றும் நேசிக்கிறேன். எவரையும் இழக்க நான் விரும்பவில்லை. ஆனால் எனது தந்தையோ ' ஜோஸப் மயாஞ்சோவாக வந்து என்னிடம் பேசு ஒரு முஸ்லிமாக ஜாஃபர் கடாபியாக என்னிடம் வராதே!' என்று கூறி விட்டார். இது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. எனது முடிவால் எவருக்கும் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்' என்கிறார் ஜாஃபர் கடாபி.

சுவனப்பிரியனான நானோ என்னைப் போன்ற பல தலைமுறைகளாக முஸ்லிம்களாக வாழ்ந்து வருபவர்களோ இது போன்ற பிரச்னைகளை சந்தித்ததில்லை. ஏனெனில் வழி வழியாக வெகு சுலபமாக எங்களுக்கு இந்த இஸ்லாம் கிடைத்து விட்டது. ஆனால் புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் இவரைப் பொன்றவர்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. எனவேதான் எங்களைவிட ஜாஃபர் கடாபி போன்றவர்கள் இறைவனுக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள். 

இசையால்தான் மனிதனின் மனதை ஒருமித்து அமைதியாக்க முடியும் என்பதனை இது போன்ற இசைக் கலைஞர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் பொய்ப்பிக்கப் படுகிறது. யூசுஃப் இஸ்லாம், ஏ.ஆர். ரஹ்மான், மைக்கேல் ஜாக்ஸன், ஜெராமைக் ஜாக்ஸன், ஜோஸப் மயாஞ்ஜோ என்று உலகில் இஸ்லாத்தினை ஏற்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புகழின் உச்சியில் இரக்கும் ஒருவன் தனது புகழுக்கு காரணமான இசையை வெறுக்கும் இஸ்லாத்தை ஏற்பது நமக்கு முரணாக தெரிகிறது அல்லவா!

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!