Saturday, March 31, 2012

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்!இந்தியாவுக்கு ஐநா


"காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என மத்திய அரசை, ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, எந்த நாடுகளில் இருந்தெல்லாம் புகார்கள் வருகிறதோ, அந்த நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார். ஐ.நா., பொதுச் செயலரால் இந்தப் பிரதிநிதி நியமிக்கப்படுவார். அப்படி நியமிக்கப்பட்டவர், குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு சென்று, அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா என, விசாரணை நடத்தி, அது உண்மை என தெரியவந்து அறிக்கை சமர்ப்பித்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டிற்கு, ஐ.நா., சார்பில் கடிதம் அனுப்பப்படும். அதில், தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படும்.

அதேபோல், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா என, விசாரணை நடத்திய ஐ.நா., பிரதிநிதி ஹெய்னஸ் கூறியுள்ளதாவது:காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடுவோரை சுட, ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதற்காக ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற சட்டம் அமலில் உள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில், இதுபோன்ற சட்டங்களுக்கு இடமில்லை. எனவே, அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். என்னுடைய காஷ்மீர் பயணத்தின்போது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் கொடுமையானது, வெறுக்கத்தக்கது என, பலரும் வர்ணித்தனர். இப்படிப்பட்ட ஒரு கடுமையான சட்டம் அமலில் இருப்பது சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது.அரசியல் சட்ட ரீதியான உத்தரவாதங்கள் இருந்த போதும், வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது, இந்தியாவில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.. இது கவலை தரும் விஷயம்.இவ்வாறு ஹெய்னஸ் கூறியுள்ளார்.
ஆயுதப் படை சிறப்பு அதிகாரத்தை, ரத்து செய்ய வேண்டும் என, காஷ்மீரில் ஏற்கனவே கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், ஐ.நா., அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.


Monday, March 26, 2012

நம்பிக்கை கொண்டோரே!


தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்அறிந்தவன்.
 அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு,செலவிட்டதைப் பின்னர் சொல்லிக் காட்டாமலும்தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்துதொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும்மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்சகிப்புத் தன்மைமிக்கவன்.
 நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும்இறுதி நாளையும்நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல்உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும்,தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
 அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும்தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல் வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம்உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
 பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது;அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றனஅதில் அனைத்துக் கனிகளும் அவருக்கு உள்ளனஅவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறதுஅப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எரித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாராநீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான்.
 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும்பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்புகழுக்குரி யவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
 ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும்அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்அறிந்தவன்.
 தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
தமது செல்வங்களை இரவிலும்பகலிலும்இரகசியமாகவும்,வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

Sunday, March 18, 2012

தண்ணீர் : சேமிப்பீர் !


தண்ணிர் சிக்கனம் தன்னலமற்ற சேவையாகும்

இன்று மார்ச் 22  “ உலக தண்ணீர் தினம் ” கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நான்கில் மூன்று பங்கு நீரைக்கொண்டுள்ள இவ்உலகப் பரப்பளவில் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக உள்ள இத்தண்ணீரைக் இன்று நம்மில் அநாவசியமாக செலவழிப்பது வேதனையளிக்கக் கூடியதாகவே உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நமதூர் மட்டுமல்ல பல ஊர்களிலும் ஏன் பல்வேறு நாடுகளிலும் கூட தண்ணீர் பற்றாக் குறையாகவே உள்ளது. எதிர்காலத்தில் இத்தண்ணீருக்காக உலக யுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பது வல்லுனர்களின் கருத்து.

மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பாகும்

அல்லாஹ் நமக்களித்த அருட்கொடை “மழை” இம்மழை நீரைச் சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீர்வளத்தை பெருக்க இயலும்.
இத்தண்ணீருக்காக, எங்கோயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வரட்டும்....................
இன்று நாம்................................. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நமது பங்களிப்பாக அதைச் சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம் ( இன்ஷா அல்லாஹ் ! )

இறைவன் நாடினால் ! தொடரும்......................

Friday, March 16, 2012

வேலுப்பிள்ளை பிரபாகரன் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள்

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.

சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

முஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும்இ போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!


இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14இ844.

யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ வவுனியாஇ மன்னார்இ கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள்இ முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சிஇ மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர்இ பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள்இ 36 பேர் பெண்கள்இ 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறைஇ முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறைஇ அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம்இ அநுராதபுரம்இ குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.





















நன்றி : யாழ் முஸ்லிம் 
 
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ  (05-02)
..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)
”..நீங்கள் நன்மையிலும்இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)
 Regards 
Ansar (U.L)

Thursday, March 15, 2012

ஆபத்தான குற்றங்கள்!

அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும்! கப்ருகளை வணங்குவதும்!

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
    அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.

  

   இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்அன் 31:13)

   
  ஈமான் கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள் நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் நாடினால் 'தவ்பா' (பாவமீட்சி) இல்லாமலும் மன்னித்து விடலாம். ஆனால் "இணை வைத்தல்" என்ற பாவத்தை 'தவ்பா' இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:   
 
    நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்...... (அல்குர்அன் 4:48)
    "ஷிர்க்'கில் ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல் இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார். முஸ்லிம்களிடையே இதுபோன்ற பல இணைவைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம்.
    கப்ருகளை வணங்குவது "ஷிர்க்" அகும்
  
  இறந்துவிட்ட இறைநேசர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவார்கள், சிரமங்களைக் களைவார்கள் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோருவது, இரட்சிக்கத் தேடுவது போன்ற செயல்களனைத்தும் "ஷிர்க்' ஆகும்.
    ஏனெனில் இவ்வகையான செயல்கள் மார்க்கத்தில் வணக்கமாகக் கருதப்படுகிறது. அல்லாஹ் வணக்கங்களை தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென திருமறையின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகிறான்.
    (நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்... (அல்குர்அன் 17:23)

    
இறைத் தூதர்கள் அல்லது நல்லோர்களை சிபாரிசுக்காகவோ அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை பெறவோ அழைப்பதும் இணைவைப்பாகும் ஆகும்.

... அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக் கூடும்?... (அல்குர்அன் 2:255)
    (நபியே! நீர் கூறுவீராக) சிபாரிசு அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அல்குர்அன் 39:44)
    சிலர் உட்காரும்போதும், எழும்போதும், எதேனும் திடுக்கம் எற்பட்டாலும், துன்பத்திலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.
    உதாரணமாக: "யா முஹ்ம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா ஜீலானி, யா ஷாதுலி, யா ரிபாயீ, யா முஹ்யித்தீன், (யா கெளஸ், யா காஜா, யா ஷாஹுல் ஹமீது, யா கரீப் நவாஸ்') என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
    இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
    நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!..... (அல்குர்அன் 7:194)
    கப்ரை வணங்கும் சிலர் அதை வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும் சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள். அதன் மண்ணை எடுத்து பூசிக் கொள்கிறார்கள், ஸஜ்தா செய்கிறார்கள், பணிவுடன் நிற்கிறார்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றக் கோருகிறார்கள். சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பேற்றையும் கோருகிறார்கள். சிலர் யா ஸய்யிதீ! தூரமான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்! என்றெல்லாம் கூறுகிறார்கள்.
    இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.

மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது.  (அல்குர்அன் 46:5)

நபி அவர்கள் கூறுகிறார்கள்:
    "யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில் மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்'' (ஸஹீஹுல் புகாரி)
    சிலர் கப்ருகளுக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்கள். சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்காக்களுக்குச் செல்கிறார்கள். மற்றும் சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள். அவர்களால் நன்மை தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
    இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
    அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது....(அல்குர்அன் 10:107)
    இவை போன்ற இணைவைப்பதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக.

Engr.Sulthan

Monday, March 12, 2012

மன்னார்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை தேவையா?


மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையே, அகல ரயில்பாதை அமைப்பதற்கான நில சர்வே முடிந்து விட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் அகல ரயில்பாதை முடியாமல், ரயில் பயணம் சுமையாக இருக்கும் போது இது மிகவும் அவசியமானதா என்று புரியவில்லை.

மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடைப்பட்ட தூரம், 39 கி.மீ., இங்கு அகலரயில்பாதை அமைப்பது என்றால், 39 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கும் நூறு மீட்டர் அகலத்திற்கும் குறைந்த பட்சம் நிலம் தேவை. அதன் அளவு, 983 ஏக்கர் ஆகும்.75 லட்சம் பேர் உணவு: இப்பகுதியில் உள்ள வீட்டு மனைகள் மற்றும் ஆற்றுப்பகுதி, புறம்போக்கு நிலங்களை அதில் கழித்து விட்டால், குறைந்த பட்சம், 900 ஏக்கர் நிலம் தேவை. இப்பகுதியில் அதிகம் நெல் விளையும் நஞ்சை நிலப்பரப்பு அதிகம். நெல்விவசாயம் பாதிக்கப்படும். இப்பகுதியில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு குறைந்தது, 50 மூட்டை நெல் விளையும். ஒரு மூட்டையின் எடை 60 கிலோ. ரயில் பணிக்கு எடுக்கப்படும், 900 ஏக்கர் நிலத்தில் மொத்தம், 27 லட்சம் கிலோ நெல் கிடைக்கும். இதனை அரிசியாக மாற்றினால் ஒரு நாளைக்கு 75 லட்சம் பேருக்கு உணவாகும்.

அதே சமயம் ஏற்கனவே காரைக்குடியில் இருந்து திருவாரூர்வரை , மீட்டர்கேஜ் ரயில் பாதை இருக்கிறது. அதை அகலரயில்பாதையாக்கினால், புதிதாக நிலம் கையகப்படுத்தத் தேவையில்லை. விளைநிலங்கள் அழியாது. அந்தப் பாதை அகலரயில் பாதையாக்கப்படும் போது, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற நகராட்சிகளும், மூன்று தேர்வு நிலை நகராட்சிகளும் பயன் பெறும். அப்பகுதி மக்களும் அதிக போக்குவரத்து வசதியால், பொருளாதார வளம் பெறுவர்.இதைத் தவிர திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள, வேதாரண்யத்தில் வருடத்திற்கு ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில், உப்பு உற்பத்தி நடக்கிறது. இதைச் சென்னை போன்ற பகுதிகளுக்கு, ரயில் மூலம் கொண்டு செல்லவும், ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கவும் உதவிடும்.

மேலும், சென்னையில் இருந்து மாயாவரம், திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி மார்க்கத்தில் ரயில் சென்றது உண்டு. ராமேஸ்வரம் வரை மக்கள் பயணிக்க வசதியாக இருந்தது. இந்த வழித்தடத்தில், மீட்டர் கேஜை மாற்றி அகலரயில்பாதை அமைத்தால் மக்களுக்கு அதிக வசதி ஏற்படும். பின்தங்கிய பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைவர். தவிரவும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை ஏற்கனவவே உள்ள மீட்டர்கேஜ் பாதை அகலரயில் பாதையாக மாற்றும் திட்டம் கடந்த பத்து ஆண்டுகளாக ரயில்வே துறையால் கிடப்பில் போடப்பட்ட திட்டம்.இவற்றை எல்லாம் பார்க்கும் போது பட்டுக் கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு புதிய ரயில் பாதை அவசியம் தானா? அரசுப்பணம் விரயம் ஆவதில், மக்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது?

அகலரயில்பாதையாக மாற்றும் முக்கியத் திட்டங்கள் பலவும் முழுவதும் நிறைவேறாமல் தமிழகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் போது, பட்டுக்கோட்டைக்கும் மன்னார்குடிக்கும் இடையே புதியதிட்ட சர்வே ஏன் என்பது தெரியவில்லை என்று, இப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர். தவிரவும் விளைநிலங்களை இழக்க நேரிடுமோ என்று விவசாயிகளும் அச்சப்படத் துவங்கி விட்டனர். இத்திட்டத்திற்கு ஓர் அரசியல்வாதி மிகவும் ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் புரியவில்லை.

- நமது சிறப்பு நிருபர் -
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=425233#comment 

Sunday, March 11, 2012

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!

ஐந்தாண்டுகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசிலும் 8 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசிலும் அங்கம் வகித்த தி.மு.க தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மார் தட்டிக் கொள்கிறது.  இவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம்.  ஆனால் தமிழகத்திற்கான ரயில் திட்டங்களின் அவலத்திற்கு எடுக்காட்டாய் நிற்பது திருவாரூர் - காரைக்குடி ரயில்பாதை.


தமிழகத்தில் நடைபெறும் அகலப்பாதைப் பணிகள் மற்றும் திட்ட ஒதுக்கீடு அனைத்தும் ஆமை வேகத்தில் தான் நடக்கிறது.  ஒதுக்கீடும் தவணை முறையில் தான்.  விழுப்புரம் மயிலாடுதுறை வரை வந்த ஒதுக்கீடு 40 கி.மீ தொலைவிலுள்ள திருவாரூரை அடைய பல ஆண்டுகள் ஆனது.  இன்னும் திருவாரூர் மயிலாடுதுறை ரயில் பாதையில் வண்டிகள் இயக்கப்படாதது வேறு கதை.


நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி என அகலமாக்கும் பணிகள் நடைபெற்றதென்னவோ உண்மை தான்.  ஆனால் திருவாரூரிலிருந்து சென்னை செல்ல மயிலாடுதுறை செல்லாமல் இன்னும் ஊர் சுற்றிச் செல்லும் அவலம் நீடிக்கத்தான் செய்கிறது.

காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தாம்பரம் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற மீட்டர் பாதை தொடர்வண்டி ஓடிக் கொண்டிருந்ததை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு யாரேனும் நினைவுப்படுத்தினால் நல்லது.  அவருக்கு வரவர எதுவும் நினைவில் தங்குவதில்லை.

தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு. கருணாநிதி சொல்லும் ரயில்வே திட்டங்களை விட தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவரும், நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு சொல்லும் திட்டங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதுதான் இங்குள்ள எதார்த்த நிலை.  நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவராக உள்ள டி.ஆர். பாலு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.  அதைக் கேள்விகேட்கும் அதிகாரம் தி.மு.க தலைமைக்கு வேண்டுமானால் இல்லாது போயிருக்கலாம்.  இ. காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க போன்றவை என்ன செய்து கொண்டுள்ளன?

திருக்குவளையில் துறைமுகம் என்றார்கள்.  வேளாங்கண்ணியிலிருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய வழித்தடம் என்றார்கள்.  இவை அனைத்தும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.  ஆனால் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கு ரயில் விட்டாயிற்று.  2012-13 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இப்பாதையை பட்டுக்கோட்டைவரை நீட்டிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்.  இப்படிச் செய்துவிட்டால் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி - திருவாரூர் வழித்தடத்தை மூடிவிடலாம் என்றும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

எனவே, அதற்கேற்றவாறு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து பட்டுக்கோட்டை - வடசேரி -மன்னார்குடி வழி புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி இந்த வழியில் கம்பன் எக்ஸ்பிரசை இயக்குவதுதான் தி.மு.க வின் திட்டம்.  இது நடந்துவிடும் என்ற அச்சத்தால் வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிவாழ் பொதுமக்கள், வணிகர்கள் சென்ற மாதத்தில் (டிசம்பர் 2011) ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.  இதற்கு அமோக ஆதரவு இருந்தது.

தஞ்சை - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - மன்னார்குடி போன்ற தொடர்வண்டிப் பாதை இல்லாத இடங்களை அவற்றால் இணைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  அதற்காக இருக்கின்ற வழித்தடங்களை பலியிடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.  எனவே, இருக்கின்ற திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தை முற்றிலும் அகலப்பாதையாக்க வேண்டும்.  கூடவே திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - அகஸ்தியாம்பள்ளி - கோடியக்கரை தடத்தையும் அகலப்படுத்தி பயணிகள் ரயில் போக்குவரத்திற்கும் உப்பு ஏற்றுமதிக்கும் வழிவகுக்க வேண்டும்.

     சுற்றுச்சூழல், கடலோர மக்களின் வாழ்வாதாரம் போன்றவை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், இருப்புப்பாதைகள் என தனியார் முதலாளிகள் வளம் கொழிக்க திட்டங்கள் தீட்டும் மத்திய - மாநில அரசுகள், வேதாரண்யம் கடற்கரையில் உற்பத்தியாகும் உப்பை எடுத்துச் செல்வதற்கு இருக்கின்ற இருப்புப் பாதையை அகலப்பாதையாக்க மறுக்கும் மக்கள் விரோதப்போக்கை எப்படிப்புரிந்து கொள்வது?

திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - கோடியக்கரை வழித்தடங்களை அகலப்பாதையாக்குவதைக் காட்டிலும் வடசேரி கிங் கெமிக்கல்ஸ், அங்கு அமையப்போகும் சாராய வடிப்பாலை வழியாக ரயில்பாதை அமைப்பதுதான் டி.ஆர். பாலுவிற்கு முக்கியமாகப்படுகிறது.  எனவே தான் இப்பகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.  மு. கருணாநிதிக்கு திருக்குவளையை விட கனிமொழி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்கள் முக்கியம்.  தானொரு கம்யூனிஸ்ட் என்று ஓயாமல் சொல்லி வரும் மு. கருணாநிதி தானும் பெருமுதலாளியாகி டி.ஆர். பாலு போன்ற பெருமுதலாளிகளை உருவாக்க முடிந்ததுதான் வரலாற்றின் மாபெரும் சோகம்.


உப்பை மட்டும் உற்பத்தி செய்யும் காரணத்தால் இன்று வேதாரண்யம் வெறும் தீவாகிப் போயிருக்கிறது.  கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வேளாங்கண்ணியைத் தாண்டியதும் திருத்துறைப்பூண்டிக்குள் நுழைந்து உள்நாட்டுச் சாலையாகி விடுகிறது.  அகலப்பாதை வசதியுமின்றி பிறப்பகுதிகளிடமிருந்து வேதாரண்யம் துண்டிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சாலையாக மாறிப்போன கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி அருகே ஒரு சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  அதன் கீழே வேதாரண்யம் தொடர்வண்டிப் பாதை செல்கிறது.  நாட்டிலேயே ஓடாத ரயிலுக்கு இங்குதான் சாலை மேம்பாலம் அமைந்துள்ளதை அதிசயமாக பார்க்கக் கூடிய சூழல் வெகு விரைவில் வரலாம்.

INFM IDUKKAINATHAN
M . ANSARI

thanks

http://adiraixpress.blogspot.com/2012/03/blog-post_7908.html?showComment=1331493218187#c630537712339795911 

Saturday, March 10, 2012

முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்


இன்றும் முஸ்லிம் நாடுகளில் இதே நிலைதான் காணப்படுகிறது. முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் எழுச்சியும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. ஆட்சிக்கு வருபவர்கள் இஸ்லாத்தை முறையாகக் கடைப்பிடித்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயமாகக் கிடைக்கும். 
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்தியாஇலங்கை போன்ற நாடுகளில் இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் ஸ்பெயின் ஒரு நல்ல பாடமாகும். சிறுசிறு குழுக்களாக இருந்துதங்களின் வலிமையைச் சிதறடித்துவிடாமல்,பொதுப் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. 
அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் இறைவன் உங்கள் எதிரியை அழித்துவிட்டுபூமியில் (அவனது இடத்தில்) உங்களை அமரவைக்கக்கூடும். பின்னர் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை அவன் கூர்ந்து கவனிப்பான். (7:129)



TO KNOW MORE CLICK THIS LINK               http://khanbaqavi.blogspot.in/ 


Thursday, March 8, 2012

ராயல் அப்துல் ரஜாக் மொழி




தக்தீரை(விதியை)நம்பு,
அல்லாஹ்வை (திக்ரு)தியானம் செய்,
பொறுமையுடன் இரு,
கடுமையாக உழை,
முயற்சியை விடாதே,
காலத்தை எதிர் பார்.

ராயல் அப்துல் ரஜாக்  அவர்கள் 


Wednesday, March 7, 2012

“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” - RTI !



1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.


3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.


4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.


5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.


6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.


7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ?



எடுத்துக்காட்டாக,


1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?


2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?


3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?


4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?


8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?


10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?


11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?


12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ?



இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.



மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,

காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,

( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )தேனாம்பேட்டை, சென்னை - 600 018

தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580




மத்திய அரசு தகவல்கள் பெற :-
 
Shri Satyananda Mishra

Chief Information Commissioner

Room No.306, II Floor August Kranti Bhavan

Bhikaji Cama Place New Delhi - 110 066.

Phone:- 011 - 26717355



குறிப்பு : மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.


சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.



இறைவன் நாடினால் ! தொடரும்......................

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!