Monday, July 3, 2017

Adirai EID gathering in California

அதிரை நியூஸ்: ஜூலை 03
அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் பலதரப்பட்ட கருத்துக்களை ஆலோசனை செய்துவருவது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு சார்பில் அரையாண்டு சந்திப்பு மற்றும் பெருநாள் சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மகாணம் பேர்பீல்ட் நகரில் உள்ள லாரல் கிரீக் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்றது.

ஜே. சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் புகாரி தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களை அவ்வமைப்பின் செயலாளர் நஜ்முதீன் விளக்கிப் பேசினார். கூட்டமைப்பின்
நிதிநிலை அறிக்கையை பொருளாளர் முகமது வாசித்தார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக சவூதி அரேபியா அதிரை பைத்துல்மால் நிர்வாகி எஸ்.தாவூது கலந்து கொண்டு, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு கடந்த 24 ஆண்டுகளாக அதிராம்பட்டினம் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிவரும் சிறப்பான செயல்பாடுகள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டியதுடன், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பிற்கு ஆதரவும் கோரினார்.

கூட்டத்தில், அமெரிக்கா வாழ் அதிரையர்களின் அடுத்த தலைமுறையான இளைஞர்களின் பங்கு பற்றி அவ்வமைப்பின் துணைச் செயலாளர் அதிரை சித்தீக் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பினர் பலர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
 
 

 
 
 
 
 
 
 
 
 
Courtesy adirainews 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!