Monday, July 3, 2017

Adirai EID gathering in California

அதிரை நியூஸ்: ஜூலை 03
அமெரிக்காவில் அதிகமான அதிரையர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு (AAF) தொடங்கப்பட்டது. இதையடுத்து கால் ஆண்டிற்கு ஒரு முறை அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் பலதரப்பட்ட கருத்துக்களை ஆலோசனை செய்துவருவது வழக்கம். குறிப்பாக பெருநாள் பண்டிகைகள், விடுமுறை காலங்களில் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பு சார்பில் அரையாண்டு சந்திப்பு மற்றும் பெருநாள் சந்திப்புக் கூட்டம், கலிபோர்னியா மகாணம் பேர்பீல்ட் நகரில் உள்ள லாரல் கிரீக் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை பகல் நடைபெற்றது.

ஜே. சேக் அப்துல் காதர் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு அவ்வமைப்பின் தலைவர் புகாரி தலைமை வகித்து, உரை நிகழ்த்தினார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் தீர்மானங்களை அவ்வமைப்பின் செயலாளர் நஜ்முதீன் விளக்கிப் பேசினார். கூட்டமைப்பின்
நிதிநிலை அறிக்கையை பொருளாளர் முகமது வாசித்தார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக சவூதி அரேபியா அதிரை பைத்துல்மால் நிர்வாகி எஸ்.தாவூது கலந்து கொண்டு, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பு கடந்த 24 ஆண்டுகளாக அதிராம்பட்டினம் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிவரும் சிறப்பான செயல்பாடுகள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். மேலும், அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டியதுடன், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பிற்கு ஆதரவும் கோரினார்.

கூட்டத்தில், அமெரிக்கா வாழ் அதிரையர்களின் அடுத்த தலைமுறையான இளைஞர்களின் பங்கு பற்றி அவ்வமைப்பின் துணைச் செயலாளர் அதிரை சித்தீக் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பினர் பலர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
 
 

 
 
 
 
 
 
 
 
 
Courtesy adirainews 

Monday, June 12, 2017

கலிபோர்னியாவில் அதிரை ஸ்டைலில் இப்தார்

கலிபோர்னியாவில் அதிரை ஸ்டைலில் இப்தார்


கலிபோர்னியாவில் உள்ள ஃபேர்பீல்ட் என்ற ஊரில் மஸ்ஜித் அந் நூர் பள்ளி வாசலில் அதிரை,பரங்கிபேட்டை,மீமிசல் ,கமுதி ,நீடூர் வாசிகள் இணைந்து இப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர் .


இதில் அதிரை நோன்புக் கஞ்சி,வடை,சுண்டல் ,ஆந்திரா ஸ்டைலில் கோழி பிரியாணி ,ஜூஸ்,ஐஸ் கிரீம் போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன.


இதில் ,பேர்பீல்ட் முகல்லாவாசிகள்,

ஃபிஜி,இந்தியா,அரபு நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாத்தை தழுவிய உள்ளூர் மக்கள் என சுமார் 150 பேர்கள் பங்கேற்றனர் .இதில் திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

வந்திருந்த அனைவரும் உணவு நன்றாக இருந்ததாகவும் ,துவா செய்வதாகவும் சொன்னது ,நிகழ்சி ஏற்பாட்டாளர்களுக்கு மன நிறைவாக இருந்தது .






இப்தார் நிகழ்சியை அதிரையை சேர்ந்த அஷ்ரப்,அமீன்,இம்ரான்,அப்துல் லத்தீப்,ஜாபர் சாதிக் ,பைசல் ,பரங்கிபேட்டை ஷாகுல்,அப்துல் ரஹிம்,மீமிசல் இப்ராஹீம்,கமுதி கணபதி ,நீடூர் ஆசிப் ஆகியோர் செய்திருந்தனர் .

Tuesday, May 16, 2017

Sahar - food on the road

வருகிற ரமலானை முன்னிட்டு இரவு நேர பயணத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்காக...
     திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை (தொழுதூர் அருகே) உள்ள டோல்வேயில் இரவு 1 முதல் 3.30 மணி வரை சஹர் உணவு வழங்க இருக்கிறோம்.
     தேவை உடையோர் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்.

     செல்: 9585358565

News forwarded by Mohamed, Dammam 

Tuesday, May 9, 2017

free sahar food in Chennai

சென்னைக்கு நோன்பு காலங்களில் வேலையாக செல்லக்கூடிய சகோதரர்கள் சஹர் உணவிற்கு எவ்வித சிரமும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
இறைவனின் மாபெரும் கிருபையினால் சென்னை தி நகரில் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள விருதுநகர் ஹலால் ஹோட்டலில் இலவச சஹர் உணவு வழங்கப்படுகிறது. கடந்த வருடங்களிலும் இதேப்போன்று இலவசமாக சஹர் உணவு வழங்கப்பட்டுள்ளது. நோன்பு காலங்களில் 30 நாட்களுக்கும் அதிகாலை 3:30 முதல் நோன்பாளிகளுக்கு சுவையான தரமிக்க அசைவ சாப்பாடு வழங்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 250 முதல் 300 நபர்கள் வரை ஏழை பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி சஹர் உணவு சாப்பிட்டு செல்கிறார்கள்.
இது தொடர்பாக உரிமையாளரிடத்தில் இத்தனை பேருக்கு அதுவும் இலவசமாக மாதம் முழுவதும் எப்படி சேவை செய்கிறீர்கள் என்று விசாரித்தபோது….
இந்த சென்னைக்கு சாதாரண ஹோட்டல் வைத்து பிழைக்க ஊரிலிருந்து வந்தோம்…
அல்லாஹ்வுடைய மிகப்பெரிய கருணையால் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம் என்ற ஒரே வார்த்தையோடு நிறுத்திக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்…
அல்லாஹ் அவருக்கு தம்முடைய அருளை மென்மேலும் வாரி வழங்குவானாக….
(அதிகப்படியாக Share செய்து நோன்பாளிகளுக்கு பயனுள்ளதாக ஆக்குங்கள்…)
Courtesy: adirai pirai 

Wednesday, April 19, 2017

பாபர் மசூதி வழக்கு: அத்வானி மீதான விசாரணையின் பின்னணியில் மோடி; லாலு பரபரப்பு

பாபர மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் உயிர்ப்பளித்துள்ள நிலையில் இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் தந்திர அரசியல் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

அதாவது, குடியரசுத்தலைவர் பதவிப் போட்டிக்கு அத்வானி பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடியின் ‘நன்கு சிந்தித்த தந்திர அரசியல்’ இது என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் இருந்து வருகிறது சிபிஐ. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் நின்று அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை உயிர்ப்பித்துள்ளது.

பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அத்வானி அடுத்த குடியரசுத் தலைவராகலாம் என்ற செய்திகள் எழுந்த நிலையில் மோடியின் தந்திர அரசியல் இந்த வழக்கின் பின்ணணியில் உள்ளது. 

அரசு என்ன விரும்புகிறதோ அதைச் செய்வதுதானே சிபிஐ வேலை. 

தனக்கு எதிரி யார் என்றாலும் சரி அவரை எதிர்கொள்ள அபாயகரமான அரசியலில் ஈடுபடுவதில் பாஜக-வுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை” என்று கூறிய லாலு, பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏன் உடல் நலமின்றிப் போனார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இன்னொரு குண்டைத் தூக்கி போட்டார். 

“ஒரு புறம் காந்தியின் சிலைக்கு மாலையிடுவார்கள், மறுபுறம் அவரைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கு சல்யூட் அடிப்பார்கள், இதுதான் பாஜக.” என்றார் லாலு பிரசாத் யாதவ்.

http://m.tamil.thehindu.com/india/பாபர்-மசூதி-வழக்கு-அத்வானி-மீதான-விசாரணையின்-பின்னணியில்-மோடி-லாலு-பரபரப்பு/article9649759.ece

Monday, April 17, 2017

An accident in California,for adirai boy!

அமெரிக்காவில் விடுமுறை நாளான நேற்று ஏப்ரல் 16 2017 அன்று பொது மக்கள் பலர் சுற்றுலா செல்வது வழக்கம்.
இதே போன்று கலிபோர்னியா மாநிலம் பேர்பீல்டு என்ற ஊரிலிருந்து தமிழ் நாட்டை சேர்ந்த சில குடும்பங்களை சேர்ந்தவர்கள் Lake Tahoe என்ற பனிச் சுற்றுலா தளத்துக்கு சென்றனர்.

இதனிடையே அவ்விடத்துக்கு சற்று முன்னர் கார்களை நிறுத்தி ஆசுவாசப் படுத்தி செல்ல முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் , திடீரென வந்த கார் மூலம் விபத்து ஏற்பட்டுள்ளது.அந்தப் பையனுக்கு வயது 15 ஆகும். தந்தை பெயர் அஹ்மத் அமீன்.அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.உடனடியாக வந்த ஹெலிகாப்டர் மூலம் Roseville அவசர பிரிவு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது.
தற்போதைய செய்திப்படி . அந்த பையனுடைய உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது .
அல்ஹம்து லில்லாஹ்.

பூரண நலம் பெற,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துவா செய்யுமாறு வேண்டுகிறோம் .

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!