மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா?
பாஜகவின் இரண்டாம் நிலையில் உள்ள தலைவர்களோ, தாங்கள் நினைத்ததை எல்லாம் அறிக்கையாக விடும் உரிமை பெற்று விட்டார்கள்; அல்லது திட்டமிட்டபடி உயர்மட்டத் தலைவர்கள் சொல்ல வேண்டியதை இவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஓட்டுப் போட்டவர்கள் ஆவேசம் அடைந்தால் "அவரது சொந்தக் கருத்து" என்ற escape strategy வேறு.
பெரும்பான்மை ஓட்டுக்களின் - நேரடியாகச் சொல்ல வேண்டுமெனில் அப்பாவி இந்துக்களின் ஆதரவை உருவாக்குவதே, பாஜகவின் கடந்த கால மற்றும் நிகழ்கால அணுகுமுறை. இந்த தந்திரம் மூலமாகவே ஆட்சியைப் பிடித்தும் இருக்கிறது பாஜக.
இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவின் வர்ணாசிரமக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர இரவு பகலாக முனைகிறது பாஜக என்கிற உண்மை இந்திய மக்களிடையே உரத்துச் சொல்லப்பட வேண்டும்.
இதே அடிப்படையில்தான் பாஜக, கடந்த பல்லாண்டுகளாக இந்த நாட்டில் செயல்பட்டு வந்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பின் அதே திட்டத்தையும், வழிமுறையையும் புதிய திட்டத்தின்படி செயல்படுத்த ஆரம்பித்து உள்ளது.
நல்லாட்சி புரிந்தால் எல்லாரும் மீண்டும் ஒரு முறை பாஜகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவார்கள். மக்களுக்கும் நலன் விளையும். ஆனால் ஆறு மாத ஆட்சியைக் கண்ட இந்தியர்களின் பார்வையில், ஆள்வோர் நல்லவராய் மாறி விட்டது போல் தெரியவில்லை.
பெரும்பான்மையாக இருப்பதாலேயே "இந்து மதத்தின் நன்மைக்காக போராடும் சேவகர்" என்ற போலி வேஷம் தரித்து தன்னை காட்டிக் கொள்ளவே பாஜக விரும்புகிறது. இதனை எதிர்க்கும் இந்தியர் எவராக இருப்பினும் அவரை அந்நியப்படுத்தி, அப்பாவி இந்து ஓட்டுக்களைத் தொடர்ந்து அபகரிக்கும் அணுகுமுறையை பாஜக தொடரவே விரும்புகிறது.
சரி, பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சியில் அமர்ந்தாகி விட்டது. சொல்லியபடி இந்து மதத்தின் நன்மைக்காகவும் சரி, இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் சரி எதையும் செய்ய முயலவில்லை. இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவின் வர்ணாசிரமக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வர இரவு பகலாக முனைகிறது பாஜக என்கிற உண்மை இந்திய மக்களிடையே உரத்துச் சொல்லப்பட வேண்டும்.
இந்த உண்மையை உணராதவரை அப்பாவி இந்துக்கள், பசுத்தோல் போர்த்தி இருக்கிற ஹிந்துத்துவ விஷ ஜந்துக்களையும் பசுவாகவே எண்ண ஆரம்பிப்பார்கள்.
இந்த அணுகுமுறையின் முதல் கட்டத்தில் (Phase-1) எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது, தன்னுடைய ஆதரவாளர்களாய் ஓட்டு வங்கி இந்துக்களை உருவாக்குவது போன்றவற்றை பாஜக உருவாக்கும்.
இரண்டாம் கட்டத்தில் (Phase-2) தன் சுயரூபத்தை - தற்போதைய இந்து மத நம்பிக்கையாளர்களுக்கே எதிராகவே அது வெளிப்படுத்த ஆரம்பிக்கும். இந்து சகோதரர்களுக்குப் புரியும் படியாக சொல்ல வேண்டுமெனில் phase-2 கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்ற ரீதியில் தான் இருக்கும்.
எனவே, தாமதமின்றி இந்த எதார்த்த உண்மையை அனைவரும் உணரும் வண்ணம், சமூக ஆர்வலர்கள் தங்கள் சொல், செயல், ஆற்றலை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்த வேண்டும்.
மதவெறிச் செயல்களை மேம்போக்காகக் கண்டு உணர்ச்சி வசப்பட்டு, ஆத்திரப்பட்டு, சூழ்ச்சிக்கு பலியாகி வெறும் எதிர்ப்பை மாத்திரமே போகிற போக்கில் கொட்டிச் செல்வோமெனில், அது எந்த மாற்றத்தை பாஜக எதிர்பார்த்து காய் நகர்த்துகிறதோ, அதை நோக்கி தேசத்தை இட்டுச் சென்று விடும் ஆபத்தான சூழலை உண்டாக்கும்.
உதாரணத்திற்கு, கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் ஆக்ராவில் 200 முஸ்லிம்களை இந்துக்களாக மாற்றி விட்டதாக விட்ட அறிக்கை, மறுநாளே புஸ்வாணமாகி ஊர் சிரித்தது. பணத்தையும் பயத்தையும் காட்டி இவர்கள் செய்த செயல், அரசு தரப்பின் அதிகாரப்பூர்வமான "மத மாற்றத் தடைச்சட்டம்" கொண்டு வருவதற்கான டிராமா என்பதை அறியாதவர் இப்போது எவருமிலர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்ற முதுமொழிக்கேற்ப, பாஜக தலைவர்களின் வன்முறையும், வெறிச்செயல்களுக்கும் பின்னணிகள் காய் நகர்த்தல்கள் உண்டு என்பதை அறிந்து கொள்வோம்.
ஆகவே இந்தியாவை நேசிக்கும் அனைவரும், ஆளும் பாஜக அரசின் போக்கு குறித்த உங்கள் கருத்துக்களை விவேகமாக - அறிவுப்பூர்வமாக - பக்குவமாக, ஆக்கப்பூர்வமாக, தீர்க்கமாக வெளிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!
அதை விடுத்து, வெறுமனே உணர்ச்சிவசமும், ஆத்திரமும் பட்டால் மோசமே விளையும்!
- அப்பாஸ் அல் ஆஸாதி M.C.A.,M.Sc.,
http://www.satyamargam.com/articles/readers-page/2479-hindutva-is-against-hindus.html