Monday, June 18, 2012

ரத்த நாளங்களில் ஷைத்தான்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலில் (இஃதிகாப்) தங்கியிருப்பார்கள். நான் அவர்களைச் சந்திக்கச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பேன். 


(ஒரு நாள் அவர்களை சந்தித்துவிட்டு) நான் புறப்பட எழுந்த போது என்னை வழியனுப்புவதற்காக பள்ளியின் வாசல்வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தனர். அப்போது மதீனாவாசிகளான இருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு கடந்து சென்றனர். அவர்களிருவரிடமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அப்படியே நில்லுங்கள்’ என்று கூறிவிட்டு ‘இவர் (எனது மனைவியாகிய) ஸஃபிய்யா ஆவார்’ என்று கூறினார்கள். அதைக்கேட்ட இருவரும் கவலையடைந்தனர். ஆச்சரியத்துடன் ‘அல்லாஹ்வின் தூதரே!’ என்றனர். 


அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான். எனவே அவன் உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடுவானோ என்று நான் அஞ்சுகிறேன்’ எனக் கூறினார்கள்.

Monday, June 11, 2012

இசையும்,இஸ்லாமும்

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இந்த நாதம் இருவகைப்படும் 1) ஆகத நாதம், 2) அனாகத நாதம்.

ஆகத நாதம்

மனிதனது முயற்சியால் வேண்டுமென்றே உருவாக்கப் படுவதற்கு *ஆகத நாதம்* என்று பொருள் இவை இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதை குறிக்கும்.

அனாகத நாதம்

மனிதனது முயற்சியில்லாமல் இயற்கையாக கேட்கப்படும் நாதம் அனாகத நாதம் என்று கூறுவர் அதாவது கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை போன்றவற்றை கருதலாம்.



இசையால் நமக்கு நன்மை-தீமை என்ன ?

நன்மை :

1. இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறது.

2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறது.

3. புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. நேரம் போவது தெரியாது – டைம் பாஷ்.


தீமை :

1. மனிதன் இசையை கேட்கும் போது அவனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். இறை சிந்தனை மறந்து போகிறது

2. இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர் களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றிவிடுகிறது அந்த அளவுக்கு அது மனிதனை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கிறது

3. இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசைதானே! அந்த இசையைக் கொண்டுதானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.


4. இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல் தூக்கமின்மை அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.


5. செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.


6. ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இஸ்லாம் என்ன சொல்கிறது இசையை பற்றி :

1.இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறதா..?

இதைப்பற்றி அறிய திருமறையை புரட்டிப்பார்த்தால் கீழ்கண்ட இறைவசனமே நம் முன் வருகிறது! இசையால் உள்ளம் அமைதி பெறும் என்று கூறுவோரின் வாதம் அல்லாஹ்வின் திருமறைக்கு மாற்றமாக உள்ளது!


நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)

இதனால் முதல் வாதம் பொய்யாகிறது.


2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறதா..?


இசையை வைத்து மருத்துவம் செய்யலாம் ( மன ரீதியான, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ) என்பது உண்மையான ஒன்றுதான் . இது இன்னும் பரவலாக வரவில்லை என்பது வேறு விஷயம் .

ஆனால் இதை வைத்துகொண்டு இசை கேட்கலாம் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாது. ஏன் என்றால் இசை கேட்பது வேறு இசையால் மருத்துவம் செய்வது வேறு ,உதரணமாக சொல்லவேண்டும் என்றால்

மதுவில் இருக்கும் alcohal என்னும் பொருள் நம் உடல்நலத்தை கெடுக்கிறது தெரிந்த விஷயம்

ஆனால் அதே மது நாம் குடிக்கும் இருமல் மருந்தில் சிறிதளவு கலக்க பட்டுள்ளது. இதை மருத்துவத்திற்காக நாம் ஏற்றுகொள்கிறோம். இதை வைத்து கொண்டு மது அருந்துவது கூடும் என்போமா ? என்று சிந்தித்தால் நமக்கு விளங்கிவிடும்.

3,4. புத்துணர்ச்சி கிடைக்கிறதா..? நேரம் போவது தெரியாதா..?

இது நிரூபிக்க பட்ட உண்மை அல்ல…, இவர்கள் கூறும் புத்துணர்ச்சிக்கு பின்னாள் மனசோர்வு தான் மிஞ்சும் .. நேரம் வீணடிப்பதை நல்ல விஷயம் என்று சொல்ல முடியாது. வாழ்கையில் பல விஷயங்கள் தெரிந்துகொள்ள அந்த நேரத்தை செலவிடலாம்.

இது போக இசையை ஒரு வரம்புக்கு உட்பட்டு அளவோடு , ஒளி அழவை நிதானமாக கேட்பதனால் ஒன்றுமில்லையே என்று வாதிடுபவர்கள் உண்டு மேலும் மற்றொரு கேள்வி இறை நினைப்பை ஏற்படுத்தும் நல்ல கருத்துள்ள இஸ்லாமிய பாடலை ஏன் கேட்ககூடாது என்பது….

இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு விஷத்தை தடுக்க வேண்டும் என்றால் அதன் ஆரம்ப நிலையை தகர்க்கும் ,அப்போது தான் ஒரு தீமை முழுவதுமாக தடுக்க படுகிறது என்று பொருள். வளர்ந்து வரும் தீமைக்கு தடை போட்டால் அவை உண்மையான தடையாக இருக்காது..

இஸ்லாத்தில் இசை பற்றிய டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கண்ணோட்டம்:தமிழாக்கம்


பல்வேறு ஆதாரப்புர்வ ஹதீதுகளில் இசைக்கு தடைகள் உள்ளன:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :



(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள்.ஆதன் உண்மையான

பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக்கருவிகளை இசைத்தும் பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும் பன்றிகளாகவும் மாற்றி விடுவான்.

(இப்னு மாஜா – கிதாபுல் ஃபிதன்)



நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில

கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் பட்டு,மது,இசைக்

கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில

கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகைள இடையன்

(காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான்.

அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான்.(எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். நூல்: புகாரி 5590



ஆனால் சில ஹதீதுகளில் ”தஃப் (கொட்டு)” இசைப்பதற்கு அனுமதிகப் பட்டுள்ளது போன்று குறிப்புகள் உள்ளன. (அதாவது ஒரு புறம் மூடப்பட்டும் மறுபுறம் திறந்த நிலையிலும் இருக்கும்) தாம்புரைன்.



ஆயிஷா(ரலி) அறிவித்தார்.



என் அருகே இரண்டு சிறுமியர் “ தஃப்”எனும் *கொட்டு அடித்துக்

கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக்

கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும்

விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி அபூ

பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்”என்று

கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.

*(புகாரி 987)



ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்)

அவர்களிடம்) கூறினார்.

எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி(ஸல்) அவர்கள் (எங்கள்

வீட்டுக்கு) வந்தார்கள்.எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று

நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில

(முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு

பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்)பாடிக்

கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி எங்களிடையே

ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள்.உடனே நபி(ஸல்) அவர்கள் ‘(இப்படிச் சொல்லாதே!) இதைவிட்டுவிட்டு

முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!’என்று

கூறினார்கள். (புகாரி 5147)



இதன்மூலம் மேற்கண்ட ஆதாரத்தின்படி தஃப் இசைக்கருவியைத் தவிர மற்ற பொதுவான இசை கருவிகளுக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது போன்ற முடிவு கிடைக்கிறது!



இசை பொதுவாக ஒரு மனிதனை மயக்கி அல்லாஹ்வின் பாதையிலிருந்து விலக்குகிறது. மேலும் இசையானது ஆண் அல்லது பெண்ணுடைய மூளையில் (சிந்திக்கும் ஆற்றல்) இடம் பிடித்து தன்னை படைத்த படைப்பாளனையும் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற நினைவையும் மரக்கடிக்க விடுகிறது.



இசையுடன் கூடிய பாடல்களை ரசிக்கும் மக்கள் அதன் மூலம்

உருவாகும் அர்த்தமற்ற, தவறான, மார்க்கத்திற்கு முரணான கருததுக்களையும்

வரவேற்கின்றனர் எனவே இது போன்ற ஆங்கில, இந்தி பாடல் வரிகளையும், கஜல்களையும் ரசிக்கக்கூடியவர் அதில் உள்ள தவறுகளை உணர வேண்டும்.

எனவே தான் இசை ஒரு மனிதனது மூளையை வசப்படுத்தி அவனை நேரான பாதையிலிருந்து தடம்புரளச் செய்கிறது என்பதாக கூறுகிறோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!


Thanks to Mr.Mohamed Niyas,Sri Lanka


மேலும் விபரங்களறிய 
http://www.onlinepj.com/aayvukal/isai_ayvu/ 
என்ற லிங்கை பார்வையிடவும்.

Wednesday, June 6, 2012

ஆட்டு நெஞ்சை பிளந்து "பரண் பூஜை' ?

ஈரோடு மாவட்டம்பெருந்துறைஓலப்பாளையம் கருப்பராயன் கோவில் திருவிழாவில்ஆட்டின் நெஞ்சைப் பிளந்து மாமிசம் உண்ணும், "பரண் பூஜைவிழா நடந்தது. இக்கோவில் வைகாசி திருவிழாமே 22ம் தேதிபூச்சாட்டுடன் துவங்கியது. ஜூன் 5ம் தேதி மாலை மணிக்கு கரகம்,படைக்கலம் கோவில் புறப்படுதல்மாலை மணிக்கு அம்மை அழைத்தல்இரவு மணிக்கு பெரியநாயகி அம்மன்செங்காளி அம்மன் அழைப்பு நடந்தது.
நேற்று காலை மணிக்கு கன்னிமார் பொங்கல் வைத்தலும், 6 மணிக்கு கரகம் ஆடுதலும், 7மணிக்கு கிளிவேட்டைக்கு செல்லுதலும் நடந்தன. தொடர்ந்துவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான,ஆகாச கருப்பனுக்கு பரண் பூஜையும்செங்காமுனிக்கு கரும்பு குடித்தலும் நடந்தன. ஆவேசமாக நடந்த திருவிழாவில்கோவில் பூசாரிகளானகாவேரி மணிராஜு,பொன்னுசாமி ஆகியோர்ஆக்ரோஷமாக சாமியாடினர். பின்பரண் மேல் வைக்கப்பட்டிருந்த ஆட்டின் நெஞ்சை பிளந்துஅதற்குள் உரித்த வாழைப் பழங்களைப் போட்டுப் பிசைந்துபூசாரி மணிஆவேசமாக சாப்பிட்டார். பூசாரி ராஜுஆட்டின் ரத்தத்தைக் குடித்தார். ரத்தத்தில் பிசைந்த பழங்களைபக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினர்.
---------------------------------------------------------

மனிதன் உணவுக்காக இஸ்லாம் உயிரினங்களைக் கொல்லச் சொல்கிறது. இதன் மூலம் ஜீவ காருண்யத்துக்கு எதிராக இஸ்லாத்தின் நடவடிக்கைகள் உள்ளன. இஸ்லாத்திற்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் முக்கியமானதாகும்.

மனிதன் தனது உணவுக்காக சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான்இதை இஸ்லாம் அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளனஅந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் இந்தக் குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.
  
மனிதன் தனது நன்மைக்காக உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பது போலித்தனமான வாதமாகும்ஏனெனில் உயிரினங்களைக் கொல்லாமல் மனிதன் வாழ முடியாதுஉயிர்வதை கூடாது என்று கூறக் கூடியவர்கள் கூட அவ்வாறு வாழ்வது கிடையாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவை தண்ணீர்தண்ணீர் அருந்தாமல் எவரும் இவ்வுலகில் வாழ முடியாது.

தண்ணீரில் கிருமி எனும் இலட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளனதண்ணீரை அருந்தும் போது இலட்சக்கணக்கான உயிர்களையும் சேர்த்துத் தான் அருந்துகிறோம்தண்ணீரைக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் அந்த உயிரினங்களை வேக வைத்துச் சாப்பிடுகிறோம்.

அந்த உயிர்களுக்கு மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற எல்லா உறுப்புகளும் உள்ளனமற்ற உயிர்களைப் போலவே இயங்குகின்றனமற்ற உயிர்களைப் போலவே இனவிருத்தியும் செய்கின்றன.

நமது சாதாரண கண்களுக்கு அவை தென்படாவிட்டாலும் அதற்குறிய கண்ணாடிகள் மூலம் அவற்றைப் பார்க்க முடியும்.
உயிர் வதை கூடாது என்பதில் உறுதியான நம்பிக்கையுடையவர்கள் தண்ணீரைக் கூட அருந்தாமல் தவிர்க்க வேண்டும்அவ்வாறு தவிர்க்க முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மனிதன் உயிர்களைக் கொல்லாமல் வாழவே முடியாது என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

அது மட்டுமின்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் உயிரினங்களில் பல வகைகள் உள்ளன.

மனிதன் பகுத்தறிவுடன் இடம் விட்டு இடம் செல்லக்கூடிய உயிரினமாக இருக்கிறான்ஏனைய நடப்பனஊர்வனபறப்பன யாவும் பகுத்தறிவு இல்லாமல் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்களாக உள்ளனஇவ்விரண்டை மட்டும் தான் நாம் உயிரினம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இடம் விட்டு இடம் பெயராமல் சுயமாக வளர்ச்சி பெறக் கூடிய இனவிருத்தி செய்யக்கூடியவையும் உயிரினங்கள் தான் என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

மரம்செடிகொடிகள் போன்றவற்றுக்கு உயிர் இருப்பதால் தான் அவை வளர்கின்றனபல்வேறு பருவங்களை அடைகின்றன.அவற்றில் ஆண்பெண் வேறுபாடு உள்ளதுஇனப் பெருக்கமும் செய்கின்றன.

உயிரினங்களை வதை செய்யக் கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பழங்கள்காய்கறிகள்கீரைகள் போன்றவற்றையும் உணவாக உட்கொள்ளக் கூடாதுஅவ்வாறு உட்கொண்டால் அவர்கள் உயிரினங்களைக் கொன்றவர்களாகத் தான் ஆவார்கள்.

மனிதனும் ஆடு மாடுகளும் உயிரினங்கள் என்றாலும் இரண்டு உயிர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளனஅது போலவே தான் ஆடுமாடுகளுக்கும்தாவரங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளனவித்தியாசம் இருக்கிறது என்பதற்காக அவற்றுக்கு உயிர் இல்லை என்று கூறக் கூடாது.
மனிதனுக்குக் கேடு விளைவிக்கிறது என்பதற்காக எத்தனையோ உயிர்களை அனைவரும் கொல்கின்றனர் 

கொசுஎலிகரப்பான்பல்லி போன்றவற்றை விஷ மருந்துகளைப் பயன்படுத்திக் கொலை செய்கின்றனர்மனிதனின் நன்மைக்காக இவற்றைக் கொல்வதை அங்கீகரிப்பவர்கள் உண்பதற்காக சில உயிரினங்களைக் கொன்றால் மட்டும் உயிர்வதை என்கின்றனர்.

மனிதனுக்குத் தேவையான புரதச் சத்துக்கள் பல அசைவ உணவில் இருக்கின்றனவிஞ்ஞானிகள் இதை நிரூபித்துள்னர்.மருத்துவர்களும் பல சமயங்களில் அசைவ உணவைப் பரிந்துரைக்கின்றனர்உயிர் வதை கூடாது என்ற பெயரில் மாமிசத்தைத் தவிர்ப்பவர்களில் கனிசமானோர் புரதச்சத்து குறைவுடையவர்களாக ஆகின்றனர்.

மாடுகளில் பால் கறந்து அருந்துவதை ஜீவகாருண்யம் பேசுவோர் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கிறோம்இது ஏன் உயிர்வதையாகத் தெரியவில்லைமாடு அசைவ உணவு என்றால் அதன் மாமிசம்எலும்புகுடல்இரத்தம் ஆகியவை அசைவமாக உள்ளது போல் அதிலிருந்து பெறப்படும் பாலும் அசைவமாகத் தான் கருதப்பட வேண்டும்.

மேலும் மாடுகளுக்குச் சுரக்கக்கூடிய பால் அதன் கன்றுக்காகவே சுரக்கின்றதுமுழுமையாக கன்றுக்கே பால் சொந்தமாக வேண்டும்.தாய்ப்பாலுக்கு நிகரானது ஏதுமில்லை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லஏனைய உயிரினங்களுக்கும் அவற்றின் தாய்ப்பால் தான் சிறந்ததாகும்.
கன்றுக்குச் சேர வேண்டிய பாலை மனிதன் பயன்படுத்தும் போது கன்றுகள் வதைக்கப்படுகின்றனஅவை ஏமாற்றப்படுகின்றன

வை வதை எனத் தெரிந்தாலும் அதனால் மனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

காளைமாடுகள் ஏர்களில் பூட்டப்படுகின்றனவண்டிகளில் பூட்டப்படுகின்றனகடுமையான வேலைகள் அவற்றிடம் வாங்கப்படுகின்றன.ஒரேடியாகக் கொல்வதை விட இந்தச் சித்ரவதை கொடுமையானதுகோடூரமானது ஆனாலும் மனிதன் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறோம்.

அப்படியானால் மனிதன் உணவுத் தேவைக்காக அவற்றைக் கொல்வதை மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?
உயிர்வதை கூடாது என்பது இவர்களின் வாதமாஉண்ணக் கூடாது என்பது இவர்களின் வாதமாஎன்பதையும் சிந்திக்க வேண்டும்.உயிர்வதை கூடாது என்பது தான் வாதம் என்றால் மேற்கண்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எலிபாம்புபல்லிதேள்கொசு போன்றவற்றைக் கொல்கிறோம்நமக்குத் தீங்கிழைக்கிறது என்பதற்காக இவற்றைக் கொல்வதை அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம்இவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் நன்மைக்காக மற்ற உயிர்களை உணவுக்காக கொல்லலாம் என்பதையும் நம்மையுமறியாமல் ஏற்றுக் கொள்கிறோம்.

உயிர்வதைஜீவன்களின் மீது காருண்யம் என்றெல்லாம் கூறுபவர்கள் அவற்றில் உண்மையாளர்களாக இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் போது அனைவரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டால் விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிடும்ஏழைகள் எந்த உணவையும் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்அசைவ உணவு உட்கொள்பவர் பலர் உள்ளதால் தான் தட்டுப்பாடின்றி சைவ உணவு கிடைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் துருவப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு மீனைத் தவிர வேறு எந்த உணவும் கிடைக்காது.

உயிர்களைக் கொல்லக் கூடாது என்று அவர்களுக்குப் போதனை செய்தால் அவர்கள் செத்து மடிந்து விடுவார்கள்கடுமையான குளிர்ப் பிரதேசங்களில் குளிரைத் தாங்கும் வலிமையை அசைவ உணவு தான் அளிக்க முடியும்.

இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தாமாக இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்கள் சாக பட்சிணிமாமிச பட்சிணி என இரு வகைகளாக உள்ளன.

மாமிசத்தை உணவாக உட்கொள்ளக் கூடிய உயிரினங்களின் குடல் அமைப்பும் பல் அமைப்பும் அவ்வுணவை அரைக்கவும் ஜீரணிக்கவும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

அது போல் சாக பட்சிணிகளின் குடல் அமைப்பும் பல் அமைப்பும் சைவ உணவை மட்டும் ஜீரணிக்க ஏற்றதாக அமைந்துள்ளனசாக பட்சிணியாக உள்ள பிராணிகள் மாமிசத்தை உட்கொண்டால் அவ்வுணவை ஜீரணிக்க முடியாமல் செத்துப் போய்விடும்.

ஆனால் மனிதனின் பற்களும் குடல் அமைப்பும் எவ்வாறு அமைந்துள்ளனநாமே ஆச்சரியப்படும் படி இரு வகை உணவுகளையும் சரியாக ஜீரணிக்க ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளனஇரண்டு வகை உணவுகளில் எதை உட்கொண்டாலும் மனிதனின் உடல் அதை அரைத்து சக்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

நமது உடல் அமைப்பு இரண்டு வகையான உணவுகளையும் ஏற்றுக் கொள்ளும் முறையில் இருப்பதால் அதுவே இயற்கை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும்ஜீவகாருண்யம் என்று கூறுவோர் இந்துக்களில் ஒரு சாரார் மட்டுமேஆயினும் இந்து மதத்தின் ஆதாரங்களிலிருந்து இவர்களின் வாதத்திற்கு ஆதாரம் காட்ட இயலாது.

இந்து மன்னர்களும்அவதார புருஷர்களும்கடவுளர்களும் உயிரினங்களை வேட்டையாடியதை புராண இதிகாசங்கள் கூறுகின்றன.யாகங்கள் என்ற பெயரால் குதிரைகள்மாடுகள் கொல்லப்பட்டுள்ளனஇந்து மதத்தில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இன்றைக்கும் கூட முஸ்லிம்களை விட இந்துக்களே அதிக அளவில் அசைவ உணவு உட்கொள்கின்றனர். 500 கோடி மக்களில் மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தாம் அசைவ உணவைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொள்கின்றனர்இதிலிருந்து முழுச் சைவம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதை அறியலாம்.

மேலும் ஒருவருக்கு அசைவ உணவில் விருப்பமில்லாவிட்டால் அதைத் தவிர்த்துக் கொள்வதற்கு இஸ்லாம் தடையாக இல்லை.அசைவ உணவை உட்கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது தானே தவிர அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றல்ல என்பதையும் உணர வேண்டும்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோஅல்லது கழுத்தை நெறித்தோ,தடியால் அடித்தோஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளில் பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறதுபிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்திமூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றதுஇதனால் அப்பிராணிகளால் வலியைஉணர முடியாதுஇரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறதுவேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள்தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம் 
.
முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன 
.
அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையை தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள்பொருத்தப்பட்டன 
.
உணர்வு திரும்பியதும்முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன 
.
அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன 
.
மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன 
.
பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G. மற்றும் ..பதிவு செய்யப்பட்டனஅதாவது E.E.G.மூளையின் நிலையையும், E.E.G. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின 
.
இப்போது மேற்கண்ட பரிசோத னையின் முடிவுகளையும்அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:
1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போதுமுதல் மூன்று வினாடிகளுக்கு E.E.G.ல் எந்த மாற்றமும் தென்படவில்லை.அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்ததுவிலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால்துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது 
.
2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றனஎன்பதை E.E.G.பதிவு காட்டியதுஅந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது 
.
3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.Gபூஜ்ய நிலையைப் பதிவு செய்ததுஅறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும்ஆளாகவில்லை என்பதை இது காட்டியது 
.
4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும்இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும்வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறதுஅதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையைஅடைகிறது 
.
முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை :
1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன 
.
2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G.பதிவு காட்டியது 
.
3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்றுவிடுகிறதுஅதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறதுரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையைஅடையவில்லை .

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறைஎன்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

எனவே இஸ்லாம் ஜீவகாருண்யமில்லாத மார்க்கம் என்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்பதில் ஐயமில்லை



பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!