Thursday, September 1, 2011

பெண்களை இறக்குமதி செய்ய முடிவு


சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது. எனவே, அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிகின்றனர். பெண் குழந்தையாக இருந்தால் அதை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.  

எனவே, திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் லட்சக்கணக்கான சீன இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இக்குறையை போக்க தங்களது பக்கத்து நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் வடகொரியாவில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது.

முதலில் 36 ஆயிரம் மணப்பெண்கள் பக்கத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் ஆண்களை விட 13 சதவீதம் பெண்கள் குறைவாக உள்ளனர்.
-----------------------------------------------------------------------------------------------------------
 6:137 இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள். எனவே (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்யான கூற்றுக்களையும் விட்டு விலகி விடுவீராக.


6:140எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.

6:151.“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.


No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!