Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Saturday, October 25, 2014

(கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ...


170. மனிதர்களே! இத்தூதர் (முஹம்மத்) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார். எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்தால் வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

171. வேதமுடையோரே!27 உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ்92 அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார்.90 எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்!459விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன்.10 வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.


172. மஸீஹும்,92 நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள்.459 அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.


173. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை அவர்களுக்கு (இறைவன்) முழுமையாக வழங்குவான். தனது அருளை அதிகமாக அளிப்பான். (அடிமைத் தனத்திலிருந்து) விலகிப் பெருமையடிப்போரைத் துன்புறுத்தும் வகையில் தண்டிப்பான். அல்லாஹ்வையன்றி தங்களுக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவர்கள் காண மாட்டார்கள்.


174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று வந்துள்ளது. உங்களிடம் தெளிவான ஒளியையும் அருளியுள்ளோம்.


175. அல்லாஹ்வை நம்பி அவனைப் பற்றிப் பிடித்துக் கொண்டோரைத் தனது அன்பிலும், அருளிலும் அவன் நுழையச் செய்வான். அவர்களுக்கு தன்னை நோக்கி நேரான வழியையும் காட்டுவான்.


Friday, June 24, 2011

கடவுள் இருந்தால்.!

 ஓரிறையின் நற்பெயரால்...
      கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு ரீதியான தவறுகளை முன்னிருத்தி தான் கடவுள் மறுப்பதற்கு ஏதோதோ காரணங்கள் என்று சொல்ல முடிகிறதே தவிர கடவுள் இல்லை என்பதற்கு எந்தவித செயல்பாட்டு காரணங்களையும் கடவுளை நிரகரிப்போர் முன்னிருத்தவில்லை.எனினும் கடவுளை நம்பாமல் இருப்பதால் -கடவுளை நம்புதால் மனித சமுதாயம் பெறும் பயன்பாடு குறித்து இந்த சிறியவனின் பார்வையில்..
 எப்போதுமே., ஒன்றை ஏற்பதால் ஏற்படும் பயன் அதனை ஏற்காமல் இருக்கும்போதும் குறைவாகவோ., அல்லது முழுவதும் இல்லாமலோ இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர்களுக்கு ஏற்படும் அனேக இழப்புகள் கடவுளை நம்புவர்களுக்கும் ஏற்படுவதை காண்கிறோம்.இதை மையமாக வைத்து நாத்திக சிந்தனை கடவுள் இல்லை என நிறுவ முயல்கிறது. நாம் முன்னரே சொன்னதுப்போல் கடவுளின் பெயரால் அல்லது கடவுளுக்காக என அறிவற்ற மனிதர்கள் செய்யும் தேவையற்ற வணக்கங்களையும் போலி பூஜை புனஷ்காரங்களையும் காரணம் காட்டியே... கடவுளை மறுக்கிறார்களே., தவிர இதுவல்லாத வேறு எந்த செயல் ரீதியான காரணங்களும் இல்லை.
           முதலில் ஒன்றை விமர்சிப்பதாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை வெளிபடுத்த வேண்டும் பின்பு அதன் பாதிப்பை நிவர்த்தி செய்யும் ஒரு மாற்று தீர்வை அல்லது மாற்று வழியை கொண்டுவர வேண்டும்... என்ற அடிப்படையில் கடவுளை ஏற்போர் அடையும் துன்பங்களுக்கு ஒரு தெளிவான மாற்று தீர்வை கடவுளை மறுப்போர் தெரிவித்தாக வேண்டும் ஆனால் மாறாக அஃது ஏற்போர் அடையும் அனேக துன்பங்கள் கடவுளை நிரகரிப்போரும் அடைகின்றனர். உதாரணமாக பசி, குடும்பத்தில் பிரச்சனை,மோசடி ,வறுமை, திருட்டு, கொள்ளை, கொலை, ஏமாற்றம், இன்னும் இதைப்போன்ற தனிமனித மற்றும் சமுக ரீதியான இழப்புகள். ஆக இதைப்போன்ற இழப்புகள் இரு சாராருக்கும் பொதுவாக ஏற்படுகிறது என்பது தெளிவு. எனவே இதற்கு "கடவுளை ஏற்பது மறுப்பது " என்ற நிலை தாண்டி ஒரு மூன்றாம் காரணம் இருக்கிறது என்பது விளங்குகிறது அதாவது சுய நலம்,விட்டுக்கொடுக்கும் மனபான்மையின்மை, போட்டியும் பொறாமையும் கொண்ட கெட்ட மனித மனங்களே இதற்கு காரணம்
         இதை கடவுளை ஏற்போர் மொழியில் சொல்வதாக இருந்தால் கடவுள் கூறும் போதனைகளை ஏற்காமல் தன் மன இச்சையின் படி செயல்படும் மனிதர்களின் செயல் பாடே இதைப்போன்ற அனேக இழப்புகளுக்கு வழி வகுக்கிறது,
        சரி., அப்படியானால் சுய நல மில்லாத மனிதர்களாக வாழ்(இரு)ந்தாலே இவ்வுலகில் நன்மையே மேற்கொள்ள போதுமானது எனும் போது "கடவுளை ஏற்றுத்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழலாம்...


      தாராளமாக நல்லெண்ணமிக்க மனிதர்களால் பிறருக்கு எந்த வித கேடுகளையும் தாராமல் இருக்க முடியும். எனினும் சமுகத்தில் உலவும் கெட்ட மனிதர்களால் சமுகத்திற்கு ஆபத்து தானே.... மேலும் நல்ல மனிதர்களின் மனச்சாட்சியும் எப்போதும் நிலையாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது
   ஆனால்.,  கடவுளை ஏற்கும் போது எந்த செயலின் விளையும் நமது மனதிற்கு நன்மையோ தீமையோ ஏற்படுத்துவதாக இருந்தாலும் அஃது கடவுளுக்கு பயந்து நடு நிலையோடு செயல் பட தூண்டும் மேலும் இஸ்லாத்தை பொறுத்தவரை கடவுளுக்கு செய்யும் வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவிற்கு சக மனிதர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுக்காப்பு கொடுப்பதை ஒரு கடமையாகவே பணிக்கிறது
 ..."நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)   
   தனி மனிதனின் உயிருக்கு இதை விட உயரிய வரையறையே வேறு எந்த சட்டத்தால் தரமுடியும்..?
 மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் தனி மனித வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விளக்குகிறது அதிலும் குறிப்பாக அவர்களின் இறுதி பேருரையில்
 மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: "பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. 
"ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
  ஆக "படைப்புகள் மீது இரக்கம் காட்டாதவன் மீது படைப்பாளன் இரக்கம் காட்டுவதில்லை போன்ற பொன்மொழிகளும் தனி மனிதனுக்கு அவனது உயிர் மற்றும் உடமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது
   இவ்வாறு பிறருக்கு உதவுவதை பிறர் நலன் பேணுவதை ஒரு கடமையாக இஸ்லாம் பணிக்கும் போது இதை ஒரு செயலாக மட்டுமே செய்யாமல் இதற்கும் நாளை நம் இறைவனிடம் வெகுமதி உண்டு என்ற எண்ணத்தில் இதைப்போன்ற நன்மையாக காரியங்களை அதிகமாக செய்வதற்கு "கடவுள்" என்ற சொல் நமக்கு அவசியமாகிறது. எனவே கடவுள் இல்லை என்பதை விட கடவுள் இருக்கிறார் என்ற நிலையில் நாம் பிறருக்கு அதிக நன்மை செய்வதற்கு இயல்பாக மனம் நாடுகிறது. இதே எண்ணத்தின் அடிப்படையிலும் பிறரின் நலன் கெடுப்பதற்கும் கடவுள் தண்டனை தருவார் எனும் போது அதிலிருந்து விலகவே மனம் விரும்புகிறது.
 இந்த நேரத்தில் என் நாத்திக சகோதர்களே., ஒன்றை சிந்தியுங்கள் இஸ்லாம் ஓரே கடவுளை மட்டுமே வணங்குங்கள் என்று சொல்வதோடு சக மனிதர்களுக்கு நன்மை செய்து வாழுங்கள் என்றே சொல்கிறது. இதில் என்ன முரண்பாடு அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத வாதத்தை கண்டு விட்டீர்கள்...?
இறுதியாக., உங்கள் எண்ணத்தைப் போன்று இறப்பிற்கு பிறகு ஒரு வாழ்க்கை இல்லையென்றால் அஃது அது உண்மையென்றாலும் அதனால் கடவுளை நம்பியதால் அவனை வழிப்பட்டதால் எங்களை போன்றோர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை... ஆனால் நாங்கள் சொல்வதுப்போல இறப்பிறகு பிறகு ஒரு வாழ்விருந்து கடவுளை வணங்காமல் காலம் முழுவதும் வாழ்வை கழித்து அவனது முன் நிற்கும் பொழுது உங்களது நிலைமை....?
           எங்களுக்கு நூறு சதவிகித நம்பிக்கை இருக்கிறது இறப்பிற்கு பின் உள்ள வாழ்வில் உங்களது நம்பிக்கையே பரிசிலனை செய்ய நீங்களும் மேற்கண்ட பத்தியை மறுமுறையும் வாசியுங்கள்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். (அல்குர்-ஆன் 2:21)

                                                              அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Saturday, October 2, 2010

கடவுளில்லா உலகம்...?

                                                           ஓரிறையின் நற்பெயரால்...
கடவுளை ஏன் பார்க்க முடியவில்லை...?
 இன்று உலகில் கடவுளை ஏற்போர் \ மறுப்போர் உட்பட யாரும் கடவுளை நேரில் பார்த்ததில்லை.கடவுளை காணமுடியாதற்கு காரணம் குறித்துக்காணும்பொழுது இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று சொல்வதாக இருந்தால் அவர் மிகப்பெரிய ஒரு சக்தியாக தான் இருக்கமுடியும்.அவ்வாறு மிகப்பெரும் சக்தி மிகுந்த ஒன்றை அனைத்து படைப்புகளை விடவும் பலவிதமான பலஹீனங்களை தன்னுள் கொண்ட மனிதன் தனது கண்களால் பார்க்க வேண்டும் என நினைப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்? பார்த்து தான் கடவுளை நம்புவேன் என்பது சிந்திக்கக்கூடியவர் ஏற்றுக்கொள்ளும் சீரிய வாதமா? சர்வ வல்லமை படைத்த கடவுளை நம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது என எண்ணுவது அறிவுக்கு உகந்ததா..?

பொதுவாகவே ஒருவர் இறை மறுப்பாளாராக இருக்க இரண்டு அடிப்படை காரணங்களே உள்ளது ஏனெனில் நாத்திகனாக யாரும் உருவாவதில்லை., மாறாக உருவாக்க படுகிறார்கள் .,
<>தனக்கோ தன் குடும்ப,சமுக மக்களுக்கோ மதத்தின் பெயரால் நேரடியவோ,மறைமுகமாகவோ ஏற்படும் பாதிப்பின் விளைவே -கடவுள் மறுப்புக்கு அடிப்படை காரணம்.இதுவே நாத்திக உருவாக்கத்திற்கு முதற்காரணம்
<>நமக்கு ஒரு இக்கட்டான நேரத்தில் ஏற்படும் இல்லாமையோ,அல்லது கோபத்தின் அடிப்படையில் ஏற்படும் இயலாமையோ ஏனைய செயல்பாட்டின் மீது வெறுப்பு கொள்ள வழிவகுக்கிறது., அவ்வெறுப்பின் வெளிப்பாடு நமக்கு எது நமக்கு பலன் தரவில்லை என எண்ணுகிறோமோ அதன் மீது நிலைத்து விடுகிறது. அப்படித்தான், நாத்திகர்களுக்கு கடவுள் குறித்த கோட்பாட்டில் ஏற்பட்ட வெறுப்புகள்.,
மூன்றாவதாய் ஒரு காரணமொன்று இருக்குமேயானால் அது அவர்களின் "பிடிவாதமே" ஆக பாதிப்பு,வெறுப்பு மற்றும் பிடிவாதம் ஆகியவையே பிரதான காரணங்களாகும். கடவுள் மறுப்புக்கு இதை தாண்டி ஆயிரம் காரணங்கள் அவர்கள் மனதில் அடியாளாய் அணிவகுத்து நின்றாலும் இஸ்லாம் என்ற ஒற்றை சொல் குறித்து அவர்களை தெளிவாக அறிய செய்தால் போதும் கடவுள் இல்லை என்றுசொல்வோர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வை தவிர கடவுள் இல்லை என்று.,இன்று இஸ்லாத்தை நோக்கி வரும் ஏனையோர் அதற்கு சான்றாக உள்ளனர். அல்லாஹ் அத்தகையே நல்ல மக்களாக நம்மையும் ஆக்கட்டுமாக!
இன்று கடவுளை நிராகரிப்போர் அல்லது மறுப்போர் அவ்வாறு கடவுள் இல்லை என்று சொல்வதற்கு அறிவியல் ரீதியான காரணமென "பரிணாமவியல் கோட்பாட்டை" தாங்கிப்பிடித்து ஆதாரமாக காட்டுகின்றனர்.ஆனாலும் அதற்கான பதில்கள் மிக நேர்த்தியான முறையில் நம் சகோதர இணையங்களில் அறிவுப்பூர்வமாக தரப்படுகின்றன, மக்களுக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கில்லாமல் படைப்புவாத கொள்கைக்கு மாற்றமாக நாம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இங்கு பரிணாமவியல் கோட்பாட்டை கையிலேடுத்திருக்கிறார்கள் ஏனெனில்,இதுவரை ஏற்பட்ட உயிரின வளர்ச்சிக்கு உண்டான காரணங்களை (அறிவியல் ரீதியாக (?) பதில் என்று) சொல்கிறார்களே தவிர ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து தெளிவான பதில் அவர்களிடம் இன்னமும் இல்லை. மேலும் பரிணமாவியல் விஞ்ஞான அடிப்படையில் முழுக்க முழுக்க நிருப்பிக்கப்பட்ட நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் கோட்பாடல்ல என்பதை அக்கொள்கையே ஆதாரிப்பவர்கள் கூட வேறுவழியின்றி ஒப்புக்கொள்கிறார்கள் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்!
அடுத்து,அவர்கள் கடவுள் இல்லை என்பதை தர்க்க ரீதியாக நிருபிக்கிறோம் என குழம்பி ஸாரி,,, கிளம்பி இரு முக்கிய பதிவுகளை முன் வைக்கின்றனர்
1.கடவுள் பெயரால் மக்கள் மத்தியில் குழப்பங்கள்,கொலைகள் பயங்கரவாதங்கள் ஏற்படுகிறது
2.கடவுள் தன் படைப்பில் மக்களிடையே ஏன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்த வேண்டும்
ஒன்று கடவுளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை மற்றொன்று கடவுள் மக்களுக்கு ஏற்படுத்திய பிரச்சினை- அதுக்குறித்து இனி காண்போம்
கடவுள் பெயரால் மனிதர்களிடையே இனக்கலவரங்கள், சண்டைகள், கலகங்கள், தற்கொலைப்படை தாக்குதல்கள் நடைபெறுவது உண்மைதான்.ஆனால் இதற்கெல்லாம் காரணம் கடவுளா...? அல்லது தன் போக்கில் இச்சைகளை பின்பற்றும் மனித மனங்களா? மனிதன் தனது ஆசை,கோபம்,விரக்தி,பாதிப்பு,அதிகப்படியான தேவை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வாழும் காலசூழலில் தனது எண்ணத்தை ஈடேற்றம் செய்ய நன்மை மற்றும் தீமையான காரியங்களை மேற்கொள்கிறான். அவ்வாறு பேராசை காரணமாக தீமையான காரியங்கள் மேற்கொள்ளப்படும் போது மடமைக்கொண்ட மக்களின் மூலம் மதத்தின் பெயரால் தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறான்.தன் மார்க்கம் குறித்து போதிய அறிவற்ற அறிவிலிகளும் அவனுக்கு தூணை போகின்றனர். ஏனெனில் ஒருவன் மதப்பெயரால் மேற்கொள்ளும் அட்டுழியங்களுக்கு காரணம் தான் சார்ந்த சமுக இன மக்களால் தனக்கு பாதுக்காப்பு கிடைக்க வேண்டும் என்ற சுயநலமே தவிர மாறாக கடவுளோ.கடவுள் கோட்பாடுகளோ சொன்னதாக ஆதாரத்தை முன்னிறுத்தியல்ல.மேலும் சொல்லப்போனால் இஸ்லாம் இத்தகையே மனிதக்குல தாக்குதலை கண்டிப்பதோடு தனியானதொரு மனிதனுக்கு கூட துன்பம் விளைவிக்கக்கூடாது என்கிறது. அல்லாஹ் தன் திருமறையில் சட்டத்திட்டங்கள் குறித்துக்கூறும் பொழுது.,
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)

ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம். (2:178&179)
மேலும் பார்க்க:17:33, 6:140, 4:92, 2:111&217

மேற்கூறிய திருவசனங்கள் தேவையில்லாமல் ஒருவனை கொலை செய்யக்கூடாது என்று சொல்வதோடு நின்றுவிடாமல்,அவ்வாறு ஒருவனை கொன்றால் அஃது அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான் என்ற எச்சரிக்கையும் விடுக்கிறது. இதை விட தனி மனித பாதுக்காப்புக்கு ஓர் உயர் வரையறை அளவுகோலை யாராலும் நிர்ணையிக்க முடியுமா?
ஆக,மனிதன் தனது சுயநலத்தின் மூலம் ஆதாயம் பெற வேண்டும் என்ற அடிப்படையே எந்த ஒரு கொலைக்கும்,கொள்ளைக்கும்,ஏனைய கலவரங்களுக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணமே தவிர கடவுளோ.அவரது கோட்பாடுகளோ அல்ல, தன் மார்க்கம் கூறும் ஒரு செயல்பாடு குறித்த காரணத்தை சரிவர புரிந்துக்கொள்ளாததும் மதத்துவேசத்துக்கு ஒரு காரணம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.இதையும் தாண்டி தனி மனித உயிர் இழப்புக்கும் ஏனைய சமுக நல பாதிப்புக்களுக்கும் மதம் தான் காரணம் என உச்சாணி கொம்பில் ஒய்யரமாய் அமர்ந்து உச்சஸ்தாயில் உரக்க கத்துவோர் கீழ்காணும் கேள்விக்களுக்கு காரணம் சொல்லட்டும்...
<> ஒரே குடும்பத்தில் பிறந்து ஒன்றாய் வாழும் அண்ணன் தம்பிக்குள் வயல்வெளி,வாய்க்கால்,வரப்பு தகராறில் ஒருவரை ஒருவர் வெட்டிச்சாய்த்து கொள்கிறார்களே அதற்கு எந்த மதம் காரணம்...?
<>பூர்விக சொத்தை அடைவதில் தகப்பன்,மகனுக்கு இடையில் ஏற்படும் போட்டி பொறாமைகளில் ஏற்படும் உயிர் இழப்பிற்கு யாரின் மதம் காரணம்..?
<>அடுத்தவன் மனைவியே அடைவதற்கு அவளின் கணவனையே கொல்வதற்கு மேற்கொள்ளும் மட்டரகமான செயல்களுக்கு எவர்களின் மதம் காரணம்...?
<> உதாரணத்திற்கு தான் மேற்குறிப்பிட்ட செய்திகள் எல்லாம். இன்னும் எத்தனையோ மோசங்கள்,அசிங்கங்கள்,குற்றங்கள் ஆயிரமாயிரம் உள்ளன.இந்நிகழ்வுகள் யாவும் அங்கொன்றும்,இங்கொன்றுமாய் நடக்கவில்லை,மாறாக செய்திதாள்களிலும் ஏனைய ஊடங்கள் வாயிலாகவும் நாம் அன்றாடம் காணும் அவலங்கள் தான்! இதன் மூலம் தனி மனித கொடுமைகளுக்கும்,சமுக நல கெடுதிக்கும் காரணம் சுயநலம் என்பது தெளிவு.,
அடுத்து இரண்டாவது கேள்விக்கு வருவோம்,கடவுள் ஏன் ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களை படைத்தார் என பார்ப்பதற்கு முன்பு, ஒருவேளை உலகிலுள்ள அனைத்து மனிதர்களையும் சம்மாய்,அதாவது அவர்கள் வாழ தேவையான வாழ்வாதார வசதிகளுடனும் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டதுப்போலவே உயரம்,நிறம்,பருமன், ஏனைய உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மற்ற மனிதர்கள் யாவருக்கும் அதே அளவில் வழங்கப்பட்டால் தான் உலக மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லா நிலை ஏற்படும்.இப்படி ஒரு நிலையில் உலகம் இயங்குவதாக கொண்டால், உலகில் பொருளாதார விசயங்களில் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் வராது சரிதான்.,ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே முகச்சாயலுடனும்.அதேப்போல அனைத்து பெண்களும் ஒரே முகச்சாயலுடனும் தான் இருப்பார்கள்.அப்படி இருந்தால்தான் கடவுள் மனிதர்கள் மத்தியில் அணு அளவிற்கு கூட ஏற்றத்தாழ்வை உண்டாக்கவில்லை என்று சொல்ல முடியும். கற்பனை செய்துப்பாருங்கள்... தாயிக்கும்,தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆண்களும், தந்தைக்கும்,கணவனுக்கும்.பிள்ளைக்கும்,வித்தியாசம் தெரியாமல் பெண்களும் எவ்வளவு சிரமப்படுவார்கள், பாதிப்படைவார்கள்.,இப்படிப்பட்ட நிலையில் உலகம் சமச்சீராய் இயங்குமா? ஆக உலகம் சீராய் இயங்குவதற்கு மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு வேண்டும் என்பதை கடவுள் மறுப்போர் கூட உடன்பட்டோ,முரண்பட்டோ ஏற்றுத்தான் ஆக வேண்டும் இல்லை...இல்லை.. உருவத்தில் வேண்டாம் உலகளவில் மட்டும் கடவுள் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க செய்யலாமே என பாதி சமச்சீர் நிலைக்கு பலத்த ஆதரவு தெரிவிப்போர் <a href="http://iraiadimai.blogspot.com/2010/06/blog-post_15.html">இங்கே</a> பார்வையிடவும்.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மக்கள் மத்தியில் இருந்தால் தான் உலகில் அனைத்து செயல்களும் தொடர்ந்து இயங்க முடியும்.
சொல்லப்போனால் கடவுள் மறுப்போர் உலகம் இவ்வாறு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதற்கு காரணம் என்னவென்று சொல்ல முடியுமா...?உருவ மாறுப்பாட்டிற்கு வேண்டுமானால் வாழும் கால சூழல்,தட்ப வெப்ப நிலை காரணம் என்று பதில் சொல்லலாம். பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு என்ன காரணம் கூறுவார்கள்? ஏனெனில் ஒருசெல் உயிரி உட்பட அனைத்து உயிரினங்களும் தனக்கு உடல் மட்டும் ஏனைய செயல்களுக்கு தேவையானவைகளை தானாகவே பிறர் தயவின்றி பெறும் போது அனைத்து உயிரினத்தின் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டு உருவாகும் மனிதன் தனது அடிப்படை தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்து வாழ்வதேன்?
விடை தருமா கடவுளில்லா உலகம் செய்ய விரும்பும் பகுத்தறிவாளர்களின் (?) பரிணாம்...?

                                           அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Tuesday, July 20, 2010

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.           தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன்.

திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார். மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது. மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்.

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

நன்றி : இனிய திசைகள்.(ஏப்ரல் 2010)

Wednesday, September 30, 2009

இவ்வுலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமா?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத - கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.

இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.

மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?

சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?

பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை - பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.

இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே - புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?

கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!

பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?

இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?

பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக - பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. - திருக்குர்ஆன் - 112:1-4


நன்றி: Readislam.net


அபூ பாத்திமா

Thursday, November 13, 2008

பைபிள் வசனம் - போப் மறுப்பு!!!

இயேசு காட்டிய நேர்வழியில் மக்கள் நடக்காமல் இருப்பது தான் வரலாற்றின் சோகமான உண்மை. இறையருளால் சில சீடர்கள் தான் அவரை ஆதரித்து அவரது வழியில் நடந்தனர். இதைவிடவும் நம்பிக்கையற்ற சிலர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் முஹம்மது நபியைக் கொல்ல முயற்சி செய்தது போலவே இயேசுவையும் கொல்ல முயற்சி செய்தனர்.

ஆனால் இறைவன் அந்த சதிகாரர்களின் செயல் அறிந்து அதை விட உயர்ந்த திட்டம் வைத்திருந்தான். இயேசுவுக்காகவும் அவரது சீடர்களுக்காகவும் இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களை விளக்குகிறது.

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது; ''அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?'' என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாதிய்யூன். ''நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்'' எனக் கூறினர். ''எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!'' (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். ''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன். பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:53-56)

மேற்கூறிய வசனங்கள் குறித்துக் காட்டுவது போல் இயேசு தனது மரணத்திற்கு முன்பே வானத்தில் உயர்த்தப்பட்டார். இதன் பொருள் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! இதைத் திருக்குர்ஆன் எடுத்தோதுகிறது. இயேசுவின் எதிரிகள் அவரை சிலுவையில் கொல்லப் பார்த்தனர். ஆனால் இறைவன் இயேசுவைக் காப்பாற்றினார். யாரோ ஒருவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையும் இந்த சதியும் மர்யம் (மேரியை) பற்றிய அவதூறும் நம்பிக்கையற்ற யூதர்களால் செய்யப்பட்டது என்று திருக்குர்ஆனின் கருத்து. இது பற்றிய திருக்குர்ஆனின் வசனம் வருமாறு :

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிப்பட்டனர்). இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:156-159)

அப்படியானால் இயேசுவுக்குப் பதிலாக அறையப்பட்ட மனிதன் யார்? இதைப்பற்றி திருக்குர்ஆன் விளக்கவில்லை. இந்தக் கேள்விக்குரிய பதிலையும் கூறவில்லை!

திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை எழுதியவர்கள் சில பெயர்களைக் குறித்து காட்டியுள்ளனர். திருக்குர்ஆனோ நபிகள் நாயகத்தின் அறிவுரை - விளக்கவுரைகளோ இவர்களுடைய யூகங்களுக்கு ஆதரவாக இல்லை.

இதன் பொருள் நீதித் தீர்ப்ப நாளுக்கு முன்னர் இயேசு மீண்டும் பூவுலகிற்கு வருவார் என்பதையே காட்டுகிறது. எனினும், திருக்குர்ஆன், விரிவுரையாளர்கள் மேற்சொன்ன வசனத்தின் கடைசிச் சொற்றொடர்களை வைத்து விளக்கம் தந்துள்ளனர்.

இயேசு மீண்டும் வருவார். அப்போது கிறிஸ்துவர்களும், யூதர்களும் இயேசு இறப்பதற்கு முன் அவரை நம்புவார்கள் என்று தெளிவுரையாளர்கள் கூறுவதற்கு நபிகள் நாயகத்தின் அருள்வாக்குகள் ஆதாரம் தருகின்றன.

கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்

இந்தக் கருத்துக்களைப் படித்தவுடனேயே கிறிஸ்துவாகள் கூறக் கூடும், பாருங்கள், இது தான் முஸ்லிம்கள். இயேசுவைப் பற்றி இவர்கள் இப்படிக் கூறுவதால் தான் இவர்கள் மறுப்பாளர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர்! என்பர்.

இவர்கள் இப்படிக் கூறினாலும் திருக்குர்ஆனின் கருத்துக்கள் கூர்மையான ஆராய்ச்சிக்கு உரியதாக இருக்கிறது. யார் உள்ளபடியே இறை நம்பிக்கையையும் கிறிஸ்துவ மார்க்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றார்ளோ அவர்கள் கீழக்காணும் காரணங்களை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

1. திருக்குர்ஆன் என்பது இறைவன் இறுதியாக அருளிச் செய்த வேதம். அந்த வேதத்தில் சொல்லப்பட்டது அனைத்தும் முழுமையான உண்மை. இதை நம்பாதவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் பெரிதாகத் தென்படாது. ஆனால் திருக்குர்ஆன் பற்றிய வரிக்கு வரியான திறனாய்வும், விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சியும் அந்த வேதத்தினலுள்ளது அனைத்தும் உண்மைதான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குர்ஆன் என்பது முஹம்மத் நபி (ஸல்) அவர் கூறப்பட்டது என்று சிலர் கூறுவர். கிறிஸ்தவ யூத வேதங்களைக் காப்பி அடித்தது என்றும் கூறுவர். அவர்களுக்கு உலக வரலாறும் தெரியாது. குர்ஆனும் புரியாது. நபிகள் நாயகம் பற்றியும் அறிந்திருக்கவில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தான் அரபி மொழியில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.

அது தவிர நபிநாதர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பதையும், அவர் வாழ்ந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மத வேதங்கள் என்பன தேவாலயங்கள் சர்ச்சுகள் தவிர வெளியுலகில் புழக்கத்தில் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்.. மேற்சொன்ன குற்றச்சாட்டிலுள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.

2. இறைவனின் செய்தியிலுள்ள ஓரிறைத் தன்மையையும் உலகளாவிய வாக்கையும் புரிந்து கொண்டால் இறைத்தூதர்களை மக்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இறைத்தூதரில் ஒருவரை நிராகரித்தாலும் அது அனைத்து இறைத்தூதர்களையும் நிராகரிப்பதற்குச் சமம். யூதர்கள் இயேசுவின் இறைத்தூதையும் நபிகள் நாயகம் அவர்களின் இறைத்தூதையும் நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறைத்தூதை நிராகரிக்கிறார்கள். முஸ்லிம்களோ அனைத்து இறைத்தூதையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதிலுள்ள தவறான சரித்திரத் திரிபுகளையும் - மனிதன் நுழைத்த கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள்.

3. திருக்குர்ஆன் கூறுவது காரணமாகவே முஸ்லிம்கள் தங்களது நபிநாதரை நேசிப்பது போலவே இயேசுவையும் நேசிக்கிறார்கள். மேலும் கிறிஸ்துவர்களின் புதிய ஏற்பாட்டில் கூறப்படாத இயேசுவின் அற்புதங்கள் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக இயேசு தொட்டிலிலிருந்து பேசுகிறார். மக்கள் எதை உண்கிறார்கள், எதைத் தங்களது களஞ்சியத்தில் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் (திருக்குர்ஆன் வசனங்களின்படி)

4. இயேசு ஒரு தெய்வம் என்ற கருத்து புனிதபால் மற்றும் அவரது சீடர்களால் கிறிஸ்து மார்க்கத்தில் நுழைக்கப்பட்டது. இதை எதிர்த்த பல லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களின் சவங்களின் மீது இந்தக் கருத்து நிலைநாட்டப்பட்டது. இதைப் பற்றி காஸ்டிலோ என்பவர், ஒரு மனிதனை நெருப்பில் எரிப்பது ஒரு கொள்கையை நிலைநாட்டியது ஆகாது என்றார்.

5. சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் என்பவரின், தலைமையில் நடந்த கிறிஸ்துவ மாநாட்டில் தான் தற்போதுள்ள கிறிஸ்துவர்களின் நான்கு புதிய ஏற்பாடுகள் அங்கீகாரம் பெற்றன. இதுவும் அந்தப் பேரரசரின் அரசியில் லாபங்களுக்காகச் செய்யப்பட்டன.

ஏராளமான பைபிள் புத்தகங்களும் ஏற்பாடுகளும் மதக் கிரந்தங்களும் தள்ளுபடி ஆகமம், என்ற பெயர் இடப்பட்டன. இதில் பல புத்தகங்கள் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டவையாகும். இவற்றில் பர்னபாஸ் ஆகமம் - ஹெர்மாசின் மேய்ப்பன் போன்ற பைபிள் புத்தகங்கள் திருக்குர்ஆனோடு ஒத்துப் போகின்றன.

6. இயேசுவின் ஓரிறைக் கொள்கையும், மனிதக் கருணைக் கொள்கையும் முஸ்லிம்களால் மட்டும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. யூதர்களாலும், பழைய காலத்துக் கிறிஸ்தவர்களான எபியோனியர்கள் - செரிந்தியர்கள், பாசிலிடியன்கள், காபோகிரேடியன்கள், ஹைபிஸ்சிஸ்டிரியன்கள் போன்றவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

அரியன்கள், பாசிலியன்கள், கோத்துகள் போன்றவர்களாலும் இறைத்தூதர் தான் இயேசு என்பதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போதும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள ஓரிறை சர்ச்சுகளும், ஜெஹோவா காட்சியாளர்களும் இயேசுவைக் கடவுள் என வணங்குவதில்லை.

7. கூர்மையான பைபிள் ஆராய்ச்சி - இயேசுவும், அவரது சரிதம் எழுதியவர்களும் சொல்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

இது பற்றி ஹெய்னிஸ் ஜாஹ்ர்ன்ட் என்பவர், இயேசு பேசாத சொற்களை அவரது வாயிதழில் வைத்தனர். அவர் நடத்தாத அற்புதங்களை அவர் நடத்தியதாகக் கூறினர் என்றார். இது போலவே பல முடிவுகளை தேவாலய ஆயர்கள் அறிந்திருந்த போதிலும் அவற்றை ரகசியமாக வைத்திருந்தனர். ஆராய்ச்சி நிபுணர்களுக்கு மட்டும் அறிவித்தனர். சர்ச்சுகள் இயேசுவைப் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று மனித குமாரன் இயேசு என்ற நூலில் ரூடால்ஃப் அகஸ்டீன் எழுதியுள்ளார். (ஜெர்மனிய மொழியில் இந்தப் புத்தகம் 1972 ல் வந்தது. 1977 ல் மொழி பெயர்க்கப்பட்டது).

8. இயேசுவின் இயற்கைக் குணம் - இறைத்தூது - சிலுவை மரணம் - விண்ணேற்றம் இவை பற்றிய தவறான எண்ணங்களில் இருப்பது தான் கிறிஸ்துவ மார்க்கத்தில் இன்றுள்ள பிரச்சினை. இதைப் பலரும் அறை கூவி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இங்கிலாந்திலுள்ள பல அறிஞர்கள் எழுதி ஜான் ஹிக் என்பவரால் ஒழுங்கு செய்யப்பட்டு, கடவுள் அவதாரப் புராணம் என்ற நூல் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அந்த அறிஞர்கள் இயேசு என்ற மனிதர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவர், தெய்வீக நோக்கத்துக்காக அவர் செயல்பட்டார். பிற்காலத்தில் அவரே கடவுள் அவதாரம் என்று கூறப்பட்டது. இது புராண பாணியில் கவிதையின் உயர்வு நவிற்சி முறையில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக நமக்குக் கூறப்பட்டது தான் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆனால் ஜார்ஜ் கேரிப் என்பவர் இந்தப் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் போது இயேசுவைக் கடவுள் அவதாரம் என்று ஒப்புக் கொள்ளவில்லை எனில் இயேசுவின் இறைத்தூதை முழுமையாக உணர முடியாது. மக்களை வழிநடத்தும் ஆளுமையை விளக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால் உறுதியாக இது பலவீனமான வாதம் ஆகும். ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மத் நபி (ஸல்) போன்ற மிகப் பெரிய தூதர்கள் தங்களது மக்களின் மீது அளப்பரிய வழி நடத்தும் ஆளுமையை பெற்றிருக்கிறார்கள். இவர்களில் யாரும் தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ கூறிக் கொள்ளவில்லை.

9. பிதா மகன் பரிசுத்த ஆவி என்ற திரியேகத்தத்துக் கொள்கை இன்றிருக்கும் பைபிளில் கூடக் காண முடியாது. நமது இறைவனான கர்த்தர் ஒரே ஒருவர் தான் (மத்தேயு) என்று இருக்கிறது. திரியேகத்துவத்தை மறுக்கிறது. சுவிசேஷக்காரர்கள் பலரும் இது போல் எழுதியுள்ளனர்.

10. தான் ஒரு தெய்வம் என்று இயேசு கூறியதாக இப்போது இருக்கிற பைபிளில் கூடக் கூற முடியாது. கடவுளின் குமாரன் நான் என்ற சொல் இயேசுவின் வாயிலிருந்து வந்ததாகவும் பைபளில் கூற முடியாது.

பைபிள் அகராதி என்ற நூல் ஹேஸ்டிங்கினர் கூறுகிறார். தன்னைக் கடவுள் என்று இயேசு கூறினாரா என்பது சந்தேகத்திற்குரியது. எனது பைபிள் ஆராய்ச்சியில் கடவுளின் குமாரன் என்ற சொற்களை யோவான் சுவிசேஷத்தில் 5-7 ஆகிய அத்தியாயங்களில் காண முடிகிறது. பிறர் தான் அந்தச் சொற்களை சில இடங்களில் கூறுகிறார்கள். கடவுளின் குமாரன் என்று இயேசுவே கூறியிருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கீழ்க்கண்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Þ அந்தக் குமாரன் எனும் சொல் ஹெலெனிஸ்டிக் என்ற மொழி வகையைச் சார்ந்தது. இயேசுவும் அவரது சீடர்களும் புழங்கிய மொழி வகை அது. செமிடிக் மொழியில் நிச்சயமாக அந்தப் பொருள் வராது.

Þ கிரேக்க மொழியிலுள்ள பைபிள் குமாரன் என்ற சொல்லுக்கு பியாஸ் - பியாடா எனும் சொற்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் இதற்கு ஊழியன் - ஊழிய மகன் என்பதே! இது வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இயேசுவுக்கு மகன் என்ற சொல்லையும் மற்றவர்களுக்கு ஊழியர் என்ற சொல்லையும் பயன்படுத்தினர்.

Þ மனித குமாரன் என்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட சொல் சுவிசேஷங்களில் 81 முறை வருகிறது. இது இயேசு தன்னுடைய மனித நிலைமையைக் குறித்து அறிவார்ந்த முறையில் கூறியதாகும். இந்த இலக்கியப் பூர்வமான சொல் இயேசுவின் மனிதப் பாத்திரத்தைப் புற்றிய அழுத்தமான வெளிப்பாடாகும். இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?

பைபிள் வசனம் - போப் மறுப்பு

யூதத் தலைமைப் பூசாரியாலும், யூத மூப்பர்களாலும் திட்டமிடப்பட்டு – உத்தரவிடப்பட்டது தான் இயேசு கைது செய்யப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டார் என்பது பரம்பரையான பைபிள் கூறும் கதை.

1960 ஆம் ஆண்டுகளில் இந்தக் கதை கிறிஸ்துவர்களின் மிக உயரிய அதிபதியான போப்பாண்டவரால் மறுக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பில்லை எனக் கூறினார். இக் கூற்று பைபிள் கதையையே மறுப்பதாகும்.

இது (இஸ்ரேல் நாட்டுக்காகச் செய்யப்பட்ட) அரசியல் ரீதியான அறிவிப்பு என நீங்கள் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்து கூறி வருகின்ற ஒரு உண்மையை இந்த அறிவிப்பு நிலைநாட்டுகிறது.

கிறிஸ்துவ மார்க்கத்திற்குள் தேவாலய நிர்வாகங்கள் பல செய்திகளைப் புகுத்திக் கொண்டிருந்தன. இதனால் பல நம்பிக்கைகள் மாறியது மட்டுமல்லாமல் - கிறிஸ்தவ மார்க்கத்தின் பழைய உருவத்தையே மாற்றி முரண்படுகிறது.

கடவுள், பைபிள், இறைவனுடன் மனிதனின் உறவு நிலை பற்றிய தேவாலயங்கள் மதக்கருத்துக்கள் மக்களை துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியது.

இதனால் ஒருவர் விஞ்ஞானியாக - படிப்பாளியாக இருந்து கொண்டு கிறிஸ்துவராகவும் இருக்க முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது.

மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்க்க முடியாது என்ற கருத்தை தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் மற்றும் பெரும்பாலான மக்களிடையே தோற்றுவித்தது.

இதன் தாக்கம் பிற மதங்களின் மீதும் ஏற்பட்டது. இயேசுவின் போதனைகளைச் சீர்குலைக்காமலும் - திரிபு செய்யாமலும் இருந்திருந்தால் இது நடந்திருக்காது.

இதனால் தான் இஸ்லாம் இதைப்பற்றிக் கூறும் போது மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கம் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறது.

விஞ்ஞான உண்மைகள் - இறைவனைப் பற்றிய ஞானத்தை அறிய ஒரு வழி தான். வெளிப்பாடுகள் என்ற முன்னுரைப்புகள் இயேசுவின் போதனைகளிலும் குர்ஆனிலும் உள்ளன. உண்மையான விஞ்ஞான அறிவும் மதமும் - கடவுள் எனும் மூல ஊற்றிலிருந்தே வருகின்றன. ஏனெனில் கடவுள் தனக்கு முரணானதைக் கூற மாட்டார்.

கிறிஸ்துவச் சரித்திரத்திலுள்ள திரிபுகளான - திரியேகத்துவம் கடவுளின் குமாரன், ஜென்மப் பாவம், பாவமன்னிப்பு என்பவை மக்களை மத்த்திலிருந்து விரட்டியுள்ளன. ஆனால் இஸ்லாம் மார்கத்திற்கு இது போன்ற பிரச்சினைகள் இல்லை. இருப்பினும் இஸ்லாமையும் ஒரு மதம் என்றே மேற்கத்திய பாணியில் ஒரு குறிப்பிட்ட வளையத்தில் - பொருளில் நிலை நிறுத்தியுள்ளதால் கிறிஸ்துவ மதம் போலவே இஸ்லாத்தையும் எண்ணிக் கொண்டனர். ஆனால் ஒரு சிலர் தான் இந்த யூகத்திலுள்ள பொய்யைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர்.

குர்ஆனின் வசனங்களுக்கு ஆதாரம்

இயேசுவைப் பற்றிய குர்ஆனின் கண்ணோட்டத்தைத் தயக்கத்தோடும் விருப்பமில்லாமலும் பலர் பார்ப்பதற்கு மேற்கூறிய யூகங்கள் காரணமாகின்றன. ஆனால்சரித்தித உண்மைகளும் சில இருக்கவே செய்கின்றன.

Þ இயேசுவின் மறைவுக்குப் பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவம் என்பது யூத மார்கக்த்தின் ஒரு பகுதி என்றே நினைத்து வந்தனர்.

Þ கிறிஸ்துவ சரித்திரம் முழுவதும் கிறிஸ்துவர்கள் மற்றும் யூதக் கல்வியாளர்களின் பண்பாடு ஒரே மாதிரியாகவே இருந்தது.

Þ பைபிள் ஆராய்ச்சிகளும் விஞ்ஞான ஆய்வுகளும் பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

Þ கிறிஸ்துவர்களில் சிலர் ஒரு தெய்வத்தை ஒப்புக் கொண்டனர். இயேசுவைக் கடவுளாகவோ - கடவுளின் குமாரராகவோ ஒப்புக் கொள்ளவில்லை.

இன்றைக்கு ஆய்வாளர்களும், பிறரும் கண்டுபிடித்துள்ள இயேசுவின் நிலையைப் பற்றி ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் குர்ஆன் கூறியது. அதிலிருந்து எந்த மாற்றத்தையும் குர்ஆன் செய்து கொள்ளவில்லை.

இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடமிருந்து மறைத்தல்

குர்ஆன் கூறியவற்றை மக்களிடமிருந்து மறைத்து - அதை நிராகரிக்கம் போக்குக்குக் காரணங்கள் சில உண்டு.

1. நீண்ட நெடிய காலததிற்கான வெறுப்பு இஸ்லாம் மீது ஏற்பட்டது (ஜெருஸலம் நகர் யாருக்குச் சொந்தம் என்பதற்காக முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களுக்குள்ளே நடந்த) சிலுவை யுத்தம். அடுத்தது அரபு - இஸ்ரேல் மோதல்.

2. சிலர் கிறிஸ்துவத்தை ஒப்புக் கொள்வதில்லை. அதே நேரத்தில் உண்மை எது என்பதும் புரிவதில்லை.

3. மிகப் பலர் இஸ்லாமை ஒப்புக் கொண்டால் பிறர் கேலி பேசுவார்களே, சுற்றத்தாரிடமிருந்து பிரிந்து போய் விடுவோமே - கிறிஸ்துவ மார்க்கத்தை வெளிப்படையாக கைவிட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றால் மோதல் ஏற்படுமே என்று தான் நினைக்கின்றனர்.

4. கல்வித் துறையில் குறிப்பாகக் கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாம் மற்றும் குர்ஆன் பற்றி எழுதினால் யாரும் அதைத் திறனாய்வு செய்வதில்லை. அதிலிருந்து மேற்கோள் காட்டுவதில்லை. அதை ஒரு அறிவார்ந்த பணி என்று கூட ஒப்புக் கொள்வதில்லை.

இதை விடப் பெரிய துயரம் - இதனால் சிலர் பதவியையும் இழந்து விடுகின்றனர். 1978 ஜனவரி 3 ஆம் நாளைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைச் செய்திப்படி ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் அலெய் தனது மத ஆராய்ச்சித் துறை பதவியை இழந்தார்.

இயேசு ஒரு போதும் தன்னை கடவுளின் குமாரர் எனக் கூறவில்லை என்ற கருத்தை ஆதரித்தார் அவர் என்பதே காரணம்.

பழம்பெரும் பைபிள்களை ஆராய்ந்து டாக்டர் அலெய் எழுதினார்.

இயேசு தன்னைக் கடவுளின் குமாரர் எனப் பேசிய வ சனங்கள் பிற்காலத்தில் பைபிளில் சேர்க்கப்பட்டவையே. தேவாலயங்கள் கூறுவது போல் அவர் பேசவில்லை. இயேசுவின் முழு வாழ்வு முறையைப் பார்த்தாலும் இத்தகைய தெய்வத்தன்மை இருந்ததாகக் கொள்ள முடியாது. இயேசு இறந்த பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவத் தேவாலயம் - யூதத் தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இயேசுவுக்கு தெய்வத்தன்மை இருந்தது எனக் கூறுவது அவர்களின் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகும்.

இயற்கை அமைப்பு

இதைத் தவிர இன்னும் ஏராளமான பேர் இயேசு பற்றிய உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் இஸ்லாம் என்பது வேகமாக வளர்கிற மார்க்கமாக உலகில் இருக்கிறது. மிகுந்த விசுவாசம் கொண்ட கிறிஸ்துவர்களாய் உள்ளவர்கள் கூட கீழ்க்காணும் உண்மைகளை உணர்ந்தவர்களாக உள்ளனர்.

1. இயேசுவை இஸ்லாம் நிரகரிக்கவில்லை. மனித குலத்திற்கு இறைச் செய்தியைக் கூறிய மாமனிதர்களின் வரிசையில் அவரை வைக்கிறது. இறைவன் நபித்துவம், இறைச்செய்தி ஆகியவற்றில் புதிய எழுச்சியை இஸ்லாம் தோற்றுவிக்கிறது.

2. கிறிஸ்துவம், யூத மதம் அல்லது வேறு எந்த மதமானலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடு பார்க்குமானால் ஓரிறைவனையும் அவன் மனித குலத்திற்கு இட்டிருக்கும் கட்டளைகளை உணர்ந்தவர்களாகவும் மிக மிகப் பொருத்தம் உடையவர்களாகவும் இருப்பார்கள். சில பிரச்சினைகளில் ஏன் பைபிள் குளறுபடிகளுடனும் குறைவிடுதல்களோடும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

3. இறைச் செய்தி வெளிப்பாட்டின் மிகப் பெரிய சங்கிலித் தொடரின் கடைசித் தொடராகத் தான் இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. தனக்கு முன்னுள்ள நம்பிக்கையாளர்கள் இஸ்லாம் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் மிகப் பெரிய இறை அருள் கிடைக்கும் என்று இஸ்லாம் வாக்குறுதி தருகிறது. யார் தனது மதத்தில் நம்பிக்கை கொள்வதோடு என்னையும் நம்பி - எனக்கு இறைச் செய்தி அளிக்கப்பட்டதாக நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு இரு பரிசு இறைவனால் அருளப்படும் எனக் கூறியுள்ளார் நபி. ஒரு பரிசு தனது மதத்தை நம்புவதற்கு! இன்னொன்று உண்மையை அங்கீகரிப்பதற்கும் - இஸ்லாத்தை நம்புவதற்கும்!

இறுதியாக இயேசுவை இறைவனின் மிகப் பெரிய தூதுவர்களில் ஒருவராகக இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் செய்தியே ஓரிறைவன் பற்றிப் போதிப்பதும் - அந்த இறைவனிடம் மனித குலத்தை அழைத்துச் செல்வதுமாகும்!

இயேசு தன்னை இறைவனின் அடியார் - நற்செய்தி கொண்டு வந்த தூதுவர் என்பதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவரது வாழ்வு - இறைச் செய்தி பற்றி குர்ஆன் ஏராளமான ஆதாரங்களுடன் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள், காத்திருக்கிறார்கள்.

இயேசு இரண்டாம் வருகை தரும் போது கிறிஸ்துவர் அல்லாதவர்கள் மீது தீர்ப்புத் தருகிற கடவுளாக வருவதில்லை. இறைத்தூதுவர் இயேசு என்ற அளவில் தான் வருவார்.

தவறாக கருத்துக்களைத் திருத்தவே இயேசு வருவார்!

தன்னைப் பற்றியும் தனது இறைத்தூது பற்றியும் ஏற்கனவே தவறான கருத்துக்களை கொண்டிருந்தவர்களைத் திருத்தவே அவர் வருவார்.

நபிநாதர் வாக்குப்படி இரண்டாம் வருகை தருகின்ற இயேசு நாற்பதாண்டுகள் இவ்வுலகில் தங்குவார். அப்போது உலக வாழ்வே அனைவருக்கும் மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும். அப்போது உலகிலுள்ள ஒவ்வொருவரும் அவரை இறைத்தூதுவர் என்றே நம்புவார்கள் - கடவுளின் குமாரர் அவர் என்று நம்ப மாட்டார்கள்.

இயேசு இரண்டாம் வருகை நிகழ்கிற போது உயிருடன் இல்லாதிருந்தால் அவரைப் பற்றித் தவறான கருத்துக் கொண்டிருந்தோர் என்ன செய்வது?

இப்போதே - இன்றே - சரியான கருத்தை.. .. சத்தியத்தை நம்பிப் பின்பற்ற வேண்டியது தான்!

சத்தியத்தில் விழித்துக் கொண்ட இதயம்!

(இக்கடிதம் பற்றி குறிப்பு இறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது)

அன்புள்ள ஐயா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

தாங்கள் தொலைக்காட்சியில் விவாதித்த விவரம் குறித்து மதக் கல்வி மாணவியாக இருந்போதும் அதற்குப் பிறகு உலகத்தின் பல பாகங்களிலும் நான் விவாதித்திருக்கிறேன்.

ஆங்கில நாட்டைச் சேர்ந்த புதிய முஸ்லிம் பெண்ணாகிய நான் இப்போது சௌதி அரேபியாவில் உள்ளேன். உங்களது விவாதம் கூர்மையான வேறுபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சில விஷயங்களில் சிந்தனையையும் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

இயேசுவைப் பற்றியும் மேரியைப் பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டிருப்பதும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பதும் எதிர் எதிராக கண்ணோட்டங்களாகும்.

கிறிஸ்துவ நம்பிக்கை இயேசு என்பவர் கடவுளின் குமாரர் என்பதாகும். குர்ஆன் இதை நிராகரிக்கிறது. இயேசு தன்னைப் பற்றி கடவுளின் குமாரர் எனக் கூறாத போது ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? என்று கேள்வி கேட்க வேண்டியது அவசியமாகிறது.

இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய்ந்தால் இதற்குரிய பதில் வெளியாகும். முஸ்லிம்களாகிய நாம் இறைவன் ஒருவன் மீது தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். வசனங்களைக் கொண்டே குர்ஆன் மீதும் விசுவாசம் கொண்டுள்ளோம்.

அது போலவே இறைவனின் தூதவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உண்மையான தூதுவர் - இறைவனின் அடியார். இறைவனுக்கு உண்மையானவர் - கீழ்படிதலுள்ளவர் நீடித்த - முழுக்க முழுக்க, ஒரு மனிதர் - இறைவனின் நல்வழியில் அவனிடம் மக்களை அழைத்துச் செல்லும் இறைக்காரணத்திற்கு ஒரு கருவியாக இருந்தவர் - என்று நம்புகிறோம்.

இப்போது கிறிஸ்து மார்க்கத்தைப் பார்போம். அந்த மார்க்கம் இறைவனை அடிப்படையாக வைத்து எழுப்பப்படவில்லை. வேதப்புத்தகம் என்பது கூட இயேசு இறந்த பின்னர் 150 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டதாகும்.

கிறிஸ்து மார்க்கம் என்பது இயேசுவின் பாத்திரத்தை வைத்தே தொடங்கப்படுகிறது. இயேசு அதிசய அற்புதங்களைச் செயதவர் - இறந்தவரைப் பிழைக்கச் செய்தவர் - குஷ்டரோகிகளைக் குணப்படுத்தியவர், குருடர்களுக்குக் கண் தந்தவர் என்பது உண்மையே. வியத்தகு மனிதராய் - இறைவனின் அருள் பெற்றுப் பிறந்தவராய் - இறைப்பணி புரிந்தவராய் இருந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு அந்த மந்திர த் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளின் குமாரன் என்ற தத்துவம் உதயமாகி அவரைப் பொருத்தமாக நிலை பெறச் செய்யும் முயற்சிகள் தொடங்கின.

கிரேக்க ரோமன் கடவுள்கள் அற்புத உயர் மனிதர்களாய் மதிக்கப்பட்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்துவக் கல்வியாளர்களும், அது போன்ற கருத்துக்களால் தாக்குதல் பெற்றிருந்தனர்.

கிறிஸ்து மார்க்கத்தில் பின்னர் வந்த பவுல் கூட ஹெலன் இன யூதரே. அவர் இயேசுவைப் பார்த்ததுமில்லை. சந்தித்ததும் இல்லை. ஆனால் அவர் கூறிய - எழுதிய அனைத்தும் அந்தக் காலத்து நம்பிக்கைகளால் தாக்கம் பெற்றவையே ஆகும். வாழ்கின்ற தேவன் இயேசு என்ற கூற்றும் பவுலுடையது தான்.

இயேசுவின் அதி அற்புதமான பிறப்பு- அவர் கடவுளின் குமாரன் என்ற தோற்றத்துக்கு அடிப்படை தருவது போல் தோன்றும். 1101ஸ்ரீ2 இரட்டைப் படைத் தத்துவததைக் கொண்டு இதை நிலை நாட்டுகிறார்கள். கடவுள் மேரியின் கர்ப்பத்தில் ஊதினார். மேரி இயேசுவைப் பெற்றார். எனவே இயேசுவின் தந்தை கடவுள்! இயேசு - கடவுளின் குமாரர் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

குர்ஆனும் கிறிஸ்துவ நூல்களும் மேரி மனதிலும் உடலிலும் விதிவிலக்காக இருக்கின்ற ஒரு பெரும் தூய்மையுடையவராய் இருந்தார் என்றும் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக இந்த உலகில் அவர் அர்ப்பணிக்கப்பட்டார் என்றும் தேவாலயத்திலேயே அவர் கடவுள் பணி ஆற்றினார் என்றும் கூறின.

ஆகவே கடவுளின் சித்தப்படி மேரியே கூட அந்தத் தேவாலயத்தில் அதி அற்புதம் புரியும் தகுதி பெறுகிறார். ஆயினம் இறைவன் மேரியைத் தனது புதிய இறைத்தூதரை உருவாக்கும் கருவியாக ஆக்குகிறார். அவரது கற்பின் தூய்மை பற்றி ஒச்சம் (களங்கம், பங்கம்) வராத அளவுக்கு அந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறார்.

மேரி தனது இறைவனுக்குப் பணி புரிகிறாள். ஆகவேஇறைவன் தனது அளப்பரிய கருணையால் மேரியின் கற்புக்கு மேன்மை தருகிறார்.

ஆகவே இயேசுவின் பிறப்பு என்பதைக் கடவுளின் குமாரர் உற்பத்தியாகக் கொள்ள வேண்டியதில்லை. இயேசுவின் பிறப்பு - இறைவனின் படைப்பாற்றலின் புதிய முறை. மகன் என்பதோ தந்தை என்பதோ இல்லை. இறைவனின் நோக்கமும் அப்படிப்பட்டதாயில்லை.

இயேசுவின் போதனைகள் அவரது காலத்திலும் அவருக்குப் பின்னர் சிலகாலமும் எழுதப்படவில்லை. வாய் மொழியாக வழங்கி வந்த இயேசு போதனைகள் காலப் போக்கில் மூலப் போதனைகளிலிருந்து மாற்றம் அடையத் தொடங்கின. முதலில் எழுதப்பட்டது மத்தேயு-லூக்கா-மாற்கு ஆகியோரின் ஏற்பாடுகளே! (சுவிசேஷங்களே!)

யோவான் அதற்குப் பின்னர் கடைசியாகத் தான் எழுதுகிறார். அவர் எழுதியது மதக் கிரந்தம் போல் இருந்தது.

மத்தேய-லூக்கா-மாற்கு எழுதியவற்றில் இயேசுவைப் பற்றிய சித்தரிப்பு அமைதியான- கம்பீரமான பாத்திரத்தையே உருவாக்கியது.

ஒரு இறைத்தூதுவராயும், இறைவனால் அற்புதனம் செய்தவராயும் மனிதகுலத்தின் அனைத்து மக்களையும் நேசிப்பவராயும் - இறைவனைப் பற்றிய விழிப்புணர்வைத் தோற்றுவிக்க அனுப்பப்பட்டவராயும் அந்த மூன்று ஏற்பாடுகள் (சுவிசேஷங்கள்) கூறின.

மேலும் இயேசு மனிதராகிய நமது கண்களைத் திறப்பவராயும் - இறைவினன் நினைப்பு வாழ்வின் எல்லாச் செயல்களிலும் இருக்க வேண்டும் என்று நினைவூட்டுபவராயும் - செயல் - எண்ணம் ஆகியவற்றில் தன்னலமற்ற போக்கை உண்டாக்குபவராயும் - கடவுள்ள சத்தியம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையை விரிவுபடுத்துபவராகவும் அவர் இருந்தார்.

குழந்தையைப் போன்ற எளிய செயல்பாடும் நம்பிக்கையுமே இறைவனின் விண்ணரசை மண்ணுக்குக் கொண்டு வர முடியும். இந்தக் கருத்து இயேசுவின் போதனைகளில் பல் முறை வலியுறுத்தப்பட்டது.

இயேசு கடவுளை மிக நெருங்கினவராக இருந்ததற்குக் காரணயே அவரது பிரார்த்தனைகளே! அதிலிருந்தே அவர் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றலைப் பெற்றார். அந்த அற்புதங்களை நான் கடவுளின் குமாரர் என்று கூறிக் கொண்டு செய்யவில்லை. இயேசு பயன்படுத்திய மகன் அல்லது குமாரன் எனும் சொல் மக்கள அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.

இங்குள்ள ஆண் பெண் அனைவரையும் இறைவனின் குமாரன் அல்லது குமாரத்திகளாகக் கருதி மக்களை பார்த்து அவர் விண்ணகத்திலிருக்கும் நமது தந்தையிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்.

ஆயினம் புதிய ஏற்பாடுகளிலுள்ள இயேசுவின் சில போதனைகள் நம்பும்படி இல்லை. திரிபோ என ஐயுறும்படி அமைந்திருக்கின்றன. இயேசு பெரும்பாலும் ஏழை – ஒடுக்கப்பட்டோர்- தள்ளி வைக்கப்பட்டோர்- பணியாளர்கள் ஆகியோர் பற்றியே அதிகக் கவலையுற்று இறைப்பணி ஆற்றினார். மதக் கருத்து கலந்த போலியான பக்திச் சாமாச்சாரம் அல்ல.

அவரது அழைப்பு மனித இதயங்களுக்கு விடப்பட்ட அழைப்பு! அவரது கொள்கை – மனித நேயமும் அன்பும்!

இதற்குப் பொருள் தேவாலயங்களை நிறுவுவதா? அவர் தேவாலயம் நிறுவ விரும்பினார். ஆனால் இப்போதிருக்கின்ற தேவாலயங்களைப் போல் அல்ல!

இயேசு ஆன்மீகத்தோடும் இருந்தார். நடைமுறை உலகத்தோடும் இருந்தார். அவர் இறை நம்பிக்கையோடு மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துகின்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பினார்.

இனம் - கொள்கை பாகுபாடற்ற ஒரு குடும்பம் போன்ற அழகிய உறவுடன் - இறைவனின் வழிகாட்டுதலோடு அமைந்த சமூகமே அவர் அமைக்க விரும்பியது. அவரது போதனைகளைக் கூர்ந்து கவனித்தால் இத்தகைய சமூக அமைபில் அவரே முழுக்க முழுக்க தனி ஒளி வீசுபவராக இருக்க வேண்டும் எனக் கருதியதில்லை. இறைவனின் கைகளிலே உள்ள கருவியாக இயேசு தன்னைக் கருதினார்.

ஆனால் இது கடவுளின் சித்தத்திற்கு ஏற்ப டந்த இயேசுவின் எளிய பண்பாடான பாத்திரத்திற்கு முரணானதாகும். மக்களை இறை நம்பிக்கை கொள்ளச் செய்ய இயேசுவுக்கு இறைவன் அளித்த அற்புத சக்தியைத் திசை மாற்றியதுமாகும். இதன் மூலம் கிறிஸ்துவத் தேவாலயங்கள் இயேசுவின் தனித்தன்மையான எளிமையைத் தோற்கடித்து விட்டது ஆகாதா?

திரியேத்துவத்திலும் (பிதா-மகன்-பரிசுத்த ஆவி) தங்களது மதமே உயர்ந்தது எனக் காட்ட நினைக்கிற முயற்சியாகும். இதன் மூலம் இயேசுவை ஒரு புதிராக்கி அதற்கு விளக்கமும் தரப்படுகிறது.

இறைவனின் ஆன்மீக சக்தி என்பது ஆப்ரஹாம், மோஸே காலத்தில் இருந்தது போன்றே முஹம்மது நபி (ஸல்) காலத்திலும் இருந்தது. ஆனால் இந்த திரியேகத்தும் இவர்களின் மீது தத்துவமாகச் சுமத்தப்படவில்லை.

இஸ்லாம் மார்க்கத்தின் வருகையை கிறிஸ்துவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி அல்லது அந்திக்கிறிஸ்துவின் வருகையாகக் கருதுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

இந்த அந்திக் கிறிஸ்துவக் கதை- யோவானின் வெளிப்பாட்டில் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த நிலை.

ஜெருஸலம் நகருக்காக நடந்த சிலுவைப் போரில் ஒரு ஐரோப்பிய பிரபுவுக்க குர்ஆனில் இயேசு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பாருங்கள் என்று ஒரு மொழி பெயர்ப்புப் புத்தகம் முஸ்லிம்களால் தரப்பட்ட போது அதை அவர் படிக்காமல் தூர வைத்து விட்டார்.

இது இஸ்லாம் பற்றிய கிறிஸ்துவர்களின் நிராகரிப்பைப் புலப்படுத்தியது. இந்தப் போக்கு இன்றைக்கும் இருந்து வருகிறது.

சிலுவைப் போர்களின் நினைவுகளை இன்னும் உயிர் வாழச் செய்வதன் மூலம் முழுமையான ஞான சூன்யத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.

இப்போது முஸ்லிம்களின் கடமை தங்களது ஓரிறை நம்பிக்கையை உறுதி செய்து கொள்வதோடு – உண்மையை அறிய விரும்பும் கிறிஸ்துவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை விளக்கததைக் கூற வேண்டும்.

சத்தியத்தையும் உண்மையையும் தேடி அலையும் ஆன்மாக்களுக்கு இஸ்லாமும் அதனுடைய போதனைகளும் பாலைவனத்தில் வற்றாது பாயும் மலை அருவி போன்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

வஸ்ஸலாம்!

தங்களின் உண்மையுள்ள,

ஜஹ்ரா அஜீஸ்.

மேலே உள்ள கடிதம் பற்றி...

இயேசுவின் இறைப்பணி பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கருத்துக்கள் காரணகாரிய விளக்கத்தோடு இருப்பவை. அவரை மிகப் பெரிய இறைத்தூதராக மதிப்பதாகும்.

துடிப்பான சிந்தனையோடு இருக்கும் மக்கள் இயேசு பற்றி இஸ்லாம் கூறுவதை ஒப்புக் கொள்வர்.

எனினும் இஸ்லாம் நோக்கி வருபவர்கள் திறந்த மனதோடும்- சார்பற்ற தன்மையிலும் வந்தால் இஸ்லாம் கூறுகின்ற வாத நேர்மையையும் ஒப்புக் கொள்ள வைக்கிற தன்மையையும் இயேசுவின் விஷயத்தில் காண்பார்கள். இயேசுவைப் பற்றிய பலவிதமான கிறிஸ்துவத் தத்துவங்களோடு வாதிட்டுப் போராடிப் பார்த்தவர்கள் இஸ்லாமியக் கருத்துக்களை நிச்சயமாக ஒப்புக் கொள்வார்கள்.

சவூதி அரேபியாவிலுள்ள தொலைக்காட்சி இரண்டாவது அலைவரிசையில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பான போது மேலே உள்ள கடிதம் ஒன்று வரப் பெற்றேன். இஸ்லாம் மார்க்கத்தில் இயேசு என்ற நிகழ்ச்சியைக் குறித்தும் இந்தக் கடிதம் வரப் பெற்றது. கீழ்க்காணும் காரணங்களுக்காக அந்தக் கடிதம் இணைக்கபட்டுள்ளது.

Þ இந்தக் கடிதத்தை எழுதியவர் - மதக் கல்வியில் மாணவராகவும் - அதில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார்.

Þ இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்துவர்களின் நம்பிக்கையையும் உணர்ச்சிகளையும் புரிந்தவராக அவர் இருக்கிறார்.

Þ அவர் எப்படி இயேசுவின் போதனைகளிலிருந்தும் இறைச் செய்திகளிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வழிமாறிச் செல்கிறார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் இயேசுவின் மீதான நம்பிக்கையில் தவறாக இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

இந்த வெளியீட்டில் அவரது கடிதத்தையும் இணைக்க அனுமதித்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

- டாக்டர் அல்ஜொஹானி

பொதுச் செயலாளர்

உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை

ரியாத், சவுதி அரேபியா.

(இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்).

Source: http://www.tamilislam.com/TAMIL/OTHERS/truth_about_jesus.HTM

Sunday, October 19, 2008

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் - திரித்துவம் (Trinity)!

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், 'ஒருவர்' தான் என்று உடனே பதில் வரும். சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், 'கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்' (Triune God) என்று கூறுவார்கள்.கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற 'திரித்துவம்' (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும்.

இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.குழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த 'திரித்துவக் கடவுள் கொள்கை' என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே! இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய்! என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.

கடவுள் என்பவர்,- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!

மாறாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா!எனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள்! சிந்தித்து தெளிவு பெறுங்கள்! தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால் நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.திரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -

Q 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும் இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும்.மனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்?

Q 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.இந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்?

Q 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் 'திரித்துவத்திற்கு' உவமைகள் கூற முற்படுவர். சிலர் 'முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.ஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ?

Q 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.ஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது?

Q 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே! அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது?

Q 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா? அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.இந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும்!. அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா?

Q 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components) என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது! ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே! முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit)? ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே! (பார்க்கவும் லூக்கா 24:36-40)லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே?

Q 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் "மகன்" தன்மை உடையவராகவும் "தெய்வீகத்" தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் ?

Q 9. "என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்" (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,"என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை" என்று கூறவில்லையா?

Q 10. இயேசு கிறிஸ்து "தேவகுமாரர்" என்றும் "மேசியா" என்றும் "இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (Saviour) என்று ம் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை "தேவகுமாரர்கள்" என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி "தெய்வ மகன்" அல்லது "தேவகுமாரன்" என்று கூறப்படுவதுண்டு. பார்க்கவும் ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7 மற்றும் ரோமர் 8:14.தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)ஹிப்ரு மொழியில் "மேசியா" என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. "இரட்சகன்" (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்."கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்" (II இராஜாக்கள் 13:5)ஆகையால் "தேவகுமாரர்" (Son of God) அல்லது "இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்" (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் "தேவன்" அல்லது அவர் மட்டும் தான் "தேவனின் உண்மையான குமாரர்" என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?

Q 11. நானும் பிதாவும் 'ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும் தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் 'ஒன்றாயிருக்கிறது' பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் "ஒன்றாயிருக்கிறது" என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற "ஒன்றாயிருக்கிறது" என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

Q 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா? அல்லது ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா?Q 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .இந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட "அவருடைய தேவன் நம்முடைய தேவன்" மற்றும் "அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்" என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா?மேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா?

Q 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்?

Q 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்?அந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.இல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா?மேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா?

Q 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: -பிதாவும் (Father) கடவுள்தேவகுமாரனாகிய இயேசுவும் (Son) கடவுள்பரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்ஆனால்,பிதா என்பவர் தேவகுமாரன் இல்லைதேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லைபரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.எளிமையான கணக்குப்படி,G என்பது தேவனையும் (God)F என்பது பிதாவையும் (Father)S என்பது தேவகுமாரனையும் (Son)H என்பது பரிசுத்த ஆவியையும் (Holy Ghost) குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.இதன் படி,F=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,அதாவதுபிதா என்பவர் தேவன்! (F=G)தேவகுமாரன் என்பவர் தேவன்! (S=G)பரிசுத்த ஆவி என்பது தேவன்! (H=G)என்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.ஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி F ≠ S ≠ Hஅதாவதுபிதா என்பவர் தேவகுமாரன் இல்லை! (F ≠ S)தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை! (S ≠ H)பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை! (H ≠ F)இது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா?

Q 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்?

Q 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து "நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே" என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்?

Q 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு 'திரித்துவம்' மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை?மேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே!

Q 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்?அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)தெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா?

Q 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை?அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)Q 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை?நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.

சிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே!

சுவனத்தென்றல்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!