Showing posts with label முஸ்லிம் பெண். Show all posts
Showing posts with label முஸ்லிம் பெண். Show all posts

Tuesday, August 11, 2015

About இஸ்லாமிய பெண்மணி blog?

முஸ்லிம் பெண்களுக்கான சிறந்த தமிழ் பிளாக்.இஸ்லாத்தின் கொள்கைகள்,விளக்கங்கள்,முஸ்லிம் பெண்களின் ஆக்கங்கள் இன்னும் பல் சுவை கதம்பமாக மிளிர்கிறது,நீங்களும் படியுங்கள்,பிறருக்கும் எத்தி வையுங்கள் .


http://www.islamiyapenmani.com/

Sunday, September 28, 2014

ஆ ஆ ஆடை அவிழ்ப்பு ! படம் இணைப்பு!!




இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என மாற்று மதத்தைச் சேர்ந்த பலரும் விமர்சிப்பதுண்டு.உண்மையில்இஇஸ்லாம் எங்கு?எப்படி? எவ்வாறு? ஒரு பெண்ணை கண்ணியப் படுத்த வேண்டுமோ அங்கு அவ்வாறு அப்படி பெண்ணை கண்ணியப் படுத்துகிறது என்பது தான் உண்மை.

இஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என நிரூபிக்க விளையும் பலர் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்தில் ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.இஸ்லாமிய ஆடையில் பழக்கப்பட்ட ஒரு பெண்ணை இன்னுமொரு ஆடைக் கலாச்சாரத்தை பின்பற்ற அழுத்தம் பிரயோகித்தால் எந்த ஒரு உண்மையான முஸ்லிம் பெண்ணும் விரும்பமாட்டாள்.அது எவ்வாறான சந்தர்ப்பமாக இருந்தாலும் சரியே!

அந்த விரும்பாமையை தெளிவாக உலகமே பார்க்கும் வன்னம் இம்முறை கொரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி வழங்காததால்இ தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறி இருக்கிறது கட்டார் பெண்கள் அணி.
சத்தியத்தின் முன் அசத்தியம் நிற்காது என்பதை இது தெளிவு படுத்துகின்றதல்லவா??


வெளியேறிய அணி உலக மக்களுக்கு விடுக்கும் செய்தி 'நாங்கள் அற்ப விளையாட்டிற்காய் இஸ்லாத்தை பணயம் வைக்க தயாரில்லை என்பதே!இ'
இவ் ஆடைக் கலாச்சாரத்தின் மூலம் விளையாடுபவர்களினது விளையாட்டுத் திறன் அதிகரிக்கவோ எதிரணிகளுக்கு தொந்தரவாகவோ ஒரு போதும் அமையப் போவதில்லை.அப்படி இருக்க இவ் அணியை இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்தை காட்டி ஏன் வெளியேற்ற வேண்டும்?


இத்தடைகள் ஒன்றும் முஸ்லிம் பெண்களுக்குப் புதியது அல்ல.பாடசாலைகளில் பல்கலைக்கழகங்கலில் பொது இடங்களில் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரத்திற்கான தடைகள் வலுப்பது யாவரும் அறிந்ததே.ஏன்?இலங்கையின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் கூட இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்திற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.எனினும் இத் தடைகள் பலதை தகர்த்தெறிந்து சாதனைகள் பலதையும் எம் முஸ்லிம் பெண்கள் தன்னகப்படுதிய பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

இதில் நகைச்சுவை என்ன வென்றால் இத் தடை விதிப்பு முஸ்லிம் பெண்களின் நலனுக்கே என காரணம் காட்டிய சில சந்தர்ப்பங்களும் உள்ளன.
பத்தோடு பதினொன்றாக முஸ்லிம்களும் இருக்க வேண்டும் என்பதே அவர்களினது கொள்கை .வேறு அவர்கள் செய்வது சரியா? பிழையா? என்பதை சிந்தனை கொள்வதை விட்டும் அவர்கள் பின்பற்றும் மதமும் இன்றைய நாகரீகம் என்ற பெயரில் அணியப்படும் ஆடைகளும் தடுக்கின்றன.

எவ்வாறான நாகரீகம் மிகைத்த ஒருவராக இருந்தாலும் சரி இன்று விளையாட்டுக்களின் போது அணியப்படும் ஆடையை சாதாரணமாக அணிந்து கொண்டு உலா வர மாட்டார்கள்.சாதாரணமாக அணிய வெட்கிக்கும் கேவலமாக அணியும் ஆடையை விளையாட்டுக்களின் போது அணிவது மாத்திரம் கேவலம் இல்லையா?? ஏன் சிந்திக்க மறுக்கின்றீர்களோ?


இவ்வாறான ஆடைக்குறைவுக் கலாச்சாரம் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை இவ்வாறானவர்கள் சிந்திக்கவோஇஏற்கவோ தயாரில்லை?இஸ்லாம் காட்டிய ஒரு வழி முறையை புறக்கணித்தால் ஒரு போதும் அதற்கு மாற்று வழிகள் தீர்வாகப் போவதில்லை.மாறாக பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வரலாற்றுச் சான்றுகள் பல எமக்கு நிரூபணம் செய்கிறது.

அண்மையில் உலக அரங்கில் பிரபலமான ஒரு செய்திதான் இங்கிலாந்து இளவரசியின் குட்டைப் பாவாடை நிகழ்வொன்றின் போது பறந்து பர பரப்பை ஏற்படுத்தி இருந்தது.இதன் பின்னர் இங்கிலாந்து ராணி எலிஸபத் வில்லியம் இன் மனைவி கேட் மேட்டில்டன் இற்கு நீளமான பாவாடைகள் அணியும் பணி அறிவுறுத்தி இருந்தமை இங்கே கோடிட்டு காட்ட வேண்டிய மேலுமொரு விடயமாகும்.

இஸ்லாமிய வழி முறையை இவ் இளவரசி பின்பற்றி இருந்தால் இவ் அவமரியாதை இவ் இளவரசிக்கு ஏற்பட்டிருக்குமா?

சீனா இங்கிலாந்து சுவிஸ்சிலாந்து உகண்டா ஆகிய நாடுகளில் விபச்சாரம் அநாச்சாரம் கலாச்சார சீர்கேடுகள் போன்றவை நடப்பதை தடுக்க குட்டைப் பாவாடையை தடை செய்துள்ளார்கள்.

நாம் எமது உடலை மறைப்பதன் மூலம் எமது மானம் காக்கப்படுவது மாத்திரமின்றி அதன் மூலம் விளைவாக்கப்படும் அனாச்சாரங்களும் தடுக்கப்படுகின்றன.அவ்வாறான ஆடைக் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுவதன் மூலம் மானம் காக்கப் படும் அளவு அளவு மாறுபடுவது நகைப்பிற்கு உரியது.


வெற்றிக்காய் மானத்தை சிறிது இழப்பதில் தவறில்லை என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் மானத்தை பணத்திற்காய் விற்கும் வேசிக்கும் இவர்களுக்கும் என்ன தான் வேறு பாடு உள்ளது?


ஆக்கம்:
துறையூர்.ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்


Tuesday, August 2, 2011

முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்து ! தேவை எச்சரிக்கை


அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்
அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சில தினங்களுக்கு முன் ஒரு நாள்.   நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை
என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.
இருவரும் சம வயது உடையவர்கள்.   சுமார் 25 வயது இருக்கும்.   அவர்களுள் ஒருவர்
உடல் சுகவீனமானவர்.   இன்னொரு பெண்மணி அவரது தோழி.   அந்த நோயாளிப் பெண்
அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல்
பரிசோதனை செய்து கொண்டுமருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம்.
அதுபோலத்தான் அன்றும் நடந்தது.

இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு
மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது.
உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்
கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை
பழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற
பரபரப்பில் இருந்தனர்.  

 அப்போதுதான்தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது
போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.  அந்த ஆட்டோவில் ஏற்கனவே
ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர்.   இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும்.
கணவன் மனைவி போலத் தோன்றியது.   ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக
இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக்
கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து "நீங்கள்
எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்கஅதற்கு அவர்கள் "பழைய பேருந்து நிலையம்
செல்ல வேண்டும்" என்று சொன்னவுடன், "சரி ஏறுங்கள்" என்று ஓட்டுனர் சொல்ல,
ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த
முஸ்லிம் பெண்களைப் பார்த்து "வாங்கவாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்"
என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க,
அடுத்த சில வினாடிகளில்  தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி
உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும்
உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென
அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர்.   ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது.

மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல
நிமிடம் கூட ஆகாது.   ஆனால்அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும்
நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும்பேருந்து நிலையம் செல்லாமல் வேறு
எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில்
சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகு
தூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது.   என்ன
செய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!"
என்று கதறியழ ஆரம்பித்தனர்.   உடனேஉள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில்
மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில்
வைத்து "சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்" என்று
மிரட்டஅவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக்
கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள்.  முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க
முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே,  முஸ்லிம் பெண் நிலை குலைந்து
போனாள்.   உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும்
செய்ன்கள்தோடுகள்வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு,  இருவரையும்
ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர்.   

அந்த
அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழஉடன்
சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள்.
அல்ஹம்துலில்லாஹ்.  பின்புஇருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை
அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு
ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்லஅந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர்
அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்திதைரியமூட்டிகுளிர்பானம் வாங்கிக் கொடுத்து
அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார்.
மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்
கொண்டது.  அதில் சில ஆயிரம் ரூபாய்களும்செல்போனும்ஏடிஎம் கார்டும் இருந்தன.
நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள்.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

  ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

 வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்
பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.

 தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்
  
 ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின்
எண்ணை குறித்து வைத்துக் கொள்ள  மறவாதீர்கள்.

 அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள்.  அவர்களைக்
கொஞ்சம்  சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.

   பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள்
கை வசம் வைத்துக் கொள்ளவும்.   

அன்புடன்,

அ.பஷீர் அஹமது,
ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி இஞ்சினீயர்,
மஞ்சக்கொல்லை.
செல்: 9442014288.



Saturday, October 17, 2009

முஸ்லிம் பெண் தொழிலதிபர் அக்தர் நவாஸ்



"தொழிலில் "ரிஸ்க்' எடுத்தால் சாதிக்க முடியும்,'' என பெண் தொழிலதிபர் அக்தர் நவாஸ் கூறினார். மதுரை நாராயணபுரம் பாங்க் காலனியை சேர்ந்தவர் நிஜாம் அலிகான். இவரது மனைவி அக்தர் நவாஸ் (46). பி.காம்.,படித்துள்ளார். "எம்.என்.ஏ.ஹெர்பல் ரெமடீஸ்' நிறுவன உரிமையாளர்.

மடீட்சியா- சக்தி மசாலாவின் "சிறந்த பெண் தொழில் முனைவோர்' விருது பெற்றுள்ளார். அக்தர் நவாஸ் கூறியதாவது: நாங்கள் முதலில் போட்டோ ஸ்டுடியோ மற்றும் பியூட்டி பார்லர் நடத்தினோம். இதில் வருவாய் குறைந்ததால் மாற்றுத் தொழில் பற்றி சிந்தித்தோம். நெல்லிக்காய் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும். இளமையை பாதுகாக்கும். எனவே இதிலிருந்து பொருட்கள் தயாரித்தால் என்ன? என எண்ணினோம். சமூக நலத்துறை சார்பில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி நடந்தது. இதில் நான் நெல்லிக்காய் ஜூஸ் பயிற்சி பெற்றேன்.

பின் நெல்லிக்காய் ஜூஸ் தயாரிப்பு சுய தொழில் துவங்கினேன். அதை முதலில் கடைகளில் வாங்க தயங்கினர். மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உழவர் சந்தைகளில் வரவேற்பு இருந்தது. பின் கடைகளில் ஆர்டர் குவிந்தது.தற்போது எங்களின் நெல்லிக்காய் ஜூஸ், ஸ்வாகுவாஷ், நெல்லி மிட்டாய், ஊறுகாய், லேகியத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கணவர் "மார்க்கெட்டிங்'கை கவனித்துக்கொள்கிறார்.

பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். உசிலம்பட்டி, அழகர்கோவில், பிள்ளையார் பட்டி பகுதிகளிலிருந்து தேவையான நெல்லிக்காய்களை கொள்முதல் செய்கிறோம்.மதுரை விவசாயக் கல்லூரி மற்றும் மனையியல் கல்லூரி மாணவர்களுக்கு "அக்ரோ இண்டஸ்ட்ரியல் டை- அப்' மூலம் மூன்று ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறோம். விரைவில் மாதுளை, வில்வம்பழ ஜூஸ் தயாரிக்க உள்ளோம்.

பெண்கள் சுய தேவையை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். யாரையும் எதிர்பார்க்கக்கூடாது. முயற்சி, தன்னம்பிக்கையுடன் "ரிஸ்க்' எடுத்தால் சாதிக்கலாம். பெண்கள் வழக்கம்போல் வத்தல், மிளகாய், வடகம், ஊறுகாய் தயாரிப்பு தொழில் ஈடுபட்டால் வருவாய் குறைவாகத்தான் கிடைக்கும். எந்த தொழில் செய்தால் விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கும் என ஆராய்ந்து ஈடுபட்டால் வெற்றி நிச்சயம், என்றார். இவரை 93603 82611 ல் தொடர்பு கொள்ளலாம்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!