Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Tuesday, April 15, 2014

முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர்.மமக,ததஜ,SDPI ஆதரவில் திமுக கூட்டணி.கலங்கும் ஜெயலலிதா!

முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர்.மமக,ததஜ,SDPI ஆதரவில் திமுக கூட்டணி.கலங்கும் ஜெயலலிதா!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சியில் கூடி தங்கள் முடிவை அறிவித்தார்கள்.அதன்படி,பா ஜ க வை பற்றி கண்டு கொள்ளாத அதிமுகவிற்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெற்று,திமுக,சிறுத்தைகள்,3 இடங்களில் காங்கிரஸ்,புதிய தமிழகம் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளத்தோடு,ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள தமுமுக,sdpi போன்ற அமைப்புக்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவும் இருப்பதால்,வலுவான கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

இத் தேர்தலில் எல்லா முஸ்லிம் அமைப்புக்களும் ஒருமித்து முடிவெடுத்து இருப்பதால்,தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது,இன்ஷா அல்லாஹ்.

Monday, August 1, 2011

மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்


மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.
கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.
இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உறுவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபாண்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன.
கலவரங்களை விசாரிக்க நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுவக்காப்பட்டது தான் இந்த ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம்”.
மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைபடி தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் கூறியிருப்பது ஏற்கதக்க வகையில் இல்லை.
மனித உயிர்களைவிட மாநில உரிமை பெரிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும், எனவே தமிழக முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுகொள்கின்றது,
இந்தியாவில் கலவரங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், சட்டம் இயற்றிய மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டுகின்றது
இப்படிக்கு
P. ஜெய்னுல் ஆபிதீன்
மாநில தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

Saturday, April 2, 2011

தேர்தல் கல கல,

ஒரு ஊர்ல ஒரு விஷமம் புடிச்சவன் இருந்தானாம்.அவனோட வேலை எல்லாரையும் வம்பிக்கிழுத்து சண்ட மூட்டிவிட்டு பிரச்சனை உண்டு பண்ணுவதுதான்.அந்த நேரத்துலஅந்த விஷமம் புடிச்சவன் நைசா நழுவிடுவான்.


அப்பிடித்தான் ஒரு நாலு,இன்னிக்கி என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்குட்டு இருந்தப்போ இப்பிடி ஒரு யோசனை தோணிச்சு.

உடனே மக்கள் நெறஞ்ச மார்கெட்டுக்கு போயி,ஒரு மிட்டாய் வாங்கினான்.அந்த மிட்டாயில பாதியை தின்னுட்டு,ஒரு கண்ணாடி கோப்பைகள்,கண்ணாடி பீங்கான்கள் விக்கிற கடைக்கு 
போயி சாதூர்யமான முறையில அந்த மிச்சம் இருந்த மிட்டாயை ஒரு கண்ணாடி கோப்பையில ஓட்டிவிட்டு,கொஞ்ச தூர போயி நின்னு என்னதான் நடக்குதுன்னு நோட்டமிட்டுக்குட்டு இருந்தான்.

இந்த நேரத்துல அந்த கண்ணாடிக் கடையில இருக்குற மிட்டாயை திங்க ஒரு ஈ வந்துது.அந்த மிட்டாய் மேல உக்காந்து தின்ன ஆரம்பிச்சது.அப்போ ஒரு பல்லி இந்த ஈய பாத்துட்டு - மெது மெதுவா நகர்ந்து வர,இப்போ ஈ பல்லிக்கு போக்கு காட்ட,இப்பிடியே போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு பூனை அந்த பக்கம் வர,அது பல்லியை பாத்துட்டு - ஆஹா நல்ல சந்தர்ப்பம் டோயின்னு ஒரே தாவு தாவ -பல்லி லபக்குன்னு காணாம போக - அந்த பூனை அங்கன இருந்த கண்ணாடி பாத்திரங்களைஎல்லாம் உடைக்க - பூனையோட மொதலாளி எங்க நம்ம பூனையாரை காணோம்னு அந்தக்கடைக்கு வர,இத பார்த்த - கண்ணாடி கடை மொதலாளிக்கு அட இவன் பூனைதான் இதுன்னு தெரிய - கோபம் தலைக்கு ஏறி - இப்போ ரெண்டு பேருக்கும் குடுமிப்பிடி சண்டை.

இதுல மிச்சம் இருந்த கண்ணாடியும் உடைஞ்சு போயி,பூனையோட மொதலாளியோட பல்லும் உடைஞ்சு -கிளைமாக்ஸா போலிசு வந்து- அப்பப்பா இனியும் சொல்லனுமா?

அந்த விஷமக்கார நம்மாளு ,ரகசியமா - சிரிச்சுக்குட்டு இருந்தான்,முழு திருப்தியோட.

அப்பாடா,இந்த தேர்தல பத்தி - அவிங்க தேர்தல் அறிக்கை பத்தி - பிரச்சாரம் பத்தி படிக்கும்போது எனக்கு மேற்கண்ட கற்பனை வந்துது,கொட்டிபுட்டேன்,அவ்வளவுதான்.(நீங்க அந்த விஷமக்கார ஆளு யாருன்னு கருணாநிதி,ஜெயலலிதா,இப்பிடி இன்னும் யாரைப்பத்தியும் கற்பனை பண்ணாலும் நான் பொறுப்பல்ல)

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!