Showing posts with label நபிகள் நாயகம் (ஸல்). Show all posts
Showing posts with label நபிகள் நாயகம் (ஸல்). Show all posts

Monday, July 25, 2011

இஸ்லாம் பார்வையில் "உபரியான வணக்கம்"

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை" என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி அவர்கள் கூறினார்கள். உடனே அவர், அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகின்றார்கள் :
நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி(ரலி) நூல்: தாரமீ

உங்களில் ஒருவர் தன் நற்செயலினால் (மட்டும்) சொர்க்கத்தில் புகமுடியாது' என்றார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா? எனக் கேட்டனர். அதற்கு, ஆம் நானும் தான், என்றாலும் இறைவன் தன் அருளால் என்னை பாதுகாத்துக் கொண்டான். எனவே வணக்கத்தில் பேணுதலாகவும், இரவும் பகலும் நெருங்குங்கள். மேலும், இவற்றில் (வணக்கங்களில்) நடுநிலையை மேற்கொள்ளுங்கள்!. என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: முஸ்லிம், புகாரி

Friday, June 18, 2010

Tuesday, March 3, 2009

இஸ்லாம் பார்வையில் "மறைவான இணைவைப்பு" الرياء

மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள். 'நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித்தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டபோது, அவர்கள் 'ாியா" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்காித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ாியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக" என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி

அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
'ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தொிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்." ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.

'இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்" நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்

மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்...

'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ் சொல்கிறான் 'பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை என்னுடைய அங்கியாகவும் உள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுகிறானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன்" நூல்கள்: அபுதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்

இந்த வகையான ாியாவைப் பற்றி அண்ணல் நபி அவர்கள் குறிப்பிடும் போது, 'மனிதர்களே, மறைவான இணைவைப்பு குறித்து எச்சாிக்கையாக இருங்கள்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள், நாயகம் அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே! மறைவான இணைவைப்பு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அண்ணல் நபி அவர்கள் 'ஒருமனிதர் தொழுகைக்காக எழுந்து நிற்கிறார். மக்கள் அவரை உற்று நோக்குவதைக் கண்டவுடன் தனது தொழுகையை அவர் அலங்காித்துக் கொள்கிறார். இது தான் மறைவான இணைவைப்பு" என்று நபி விளக்கம் அளித்தார்கள். ஆதாரம்: இப்னு குஸைமா மற்றும் சுனன் இப்னு மாஜா

அபூ மூஸா அல் அஷ்அாி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, அவர்கள் 'மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்கு புலப்படாத வகையில் அமைந்துள்ளது" என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (எழுந்து) 'அல்லாஹ்வின் தூதரே, எறும்பு ஊர்ந்து செல்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்?" என்று வினவினார்கள். அப்போது அண்ணல் நபி அவர்கள்...

'அல்லாஹ்வே! நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்து உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று (பிரார்த்தனை செய் என்று) சொன்னார்கள். நூல்: அஹ்மத்

Sunday, March 1, 2009

இஸ்லாம் பார்வையில் "சபை ஒழுங்கு"

ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் 'அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்' என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்

நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ

முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர். அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் 'நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்' என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ

உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

"ஒருவர் சபையிலுருந்து ஒரு வேலையாக எழுந்து சென்று பின்னர் திரும்பி வருவாரானால் அவரே அவ்விடத்திற்கு மிகவும் உரிமையுடையவராவார்" என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)வின் மகனார் வஹ்பு நூல்: திர்மிதீ

நபி அவர்களிடம் நாங்கள் சென்றால் எங்களில் ஒவ்வொருவருக்கும் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு நாங்கள் அமர்ந்து விடுவோம். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: அபூதாவூத்

"இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றிப் பிறர் அமர்வது கூடாது" என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐப் நூல்: அபூதாவூத், திர்மிதீ

பள்ளிவாயிலுக்குள் வந்த நபி அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி "உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணுகிறேன் என்று வினவினர். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

Saturday, February 28, 2009

இஸ்லாம் பார்வையில் "மனைவி"

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள். அறிவிப்பாளர்: முஆவியா (ரலி) நூல்: அஹ்மத் 19160

பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக் கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2913

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல்: புகாரி 56

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல்: புகாரி 5204

ஒரு மனிதர் நபியவர்களிடம் ''மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?'' என்று கேட்டார் அதற்கு நபி அவர்கள், ''நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மதி 1082

''தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்'' என்று நபியவர்கள் சொன்னார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ) நூல்: அபூதாவூத் 1442

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ) நூல்: புகாரீ 5200

நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ) நூல்: புகாரீ 2481

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911

Thursday, February 26, 2009

இஸ்லாம் பார்வையில் "தர்மம்"

உங்களில் ஒருவர் பேரிச்சம் பழத்தின் ஒரு துண்டையாவது (தர்மம்) செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியுமாயின் அதை அவர் செய்துக் கொள்ளட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதியீஇப்னு ஹாதம்(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஒவ்வொரு முஸ்லிம் மீதும் தர்மம் செய்வது அவசியமாகிறது என்று நபி அவர்கள் குறிப்பிட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவர் (தர்மம் செய்ய எப்பொருளையும்) காணவில்லையாயின் என்று வினவ ''அவர் தன் கரங்களால் உழைத்து அதில் தானும் பலன் அடைந்து மேலும் தர்மம் செய்யட்டும்'' என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழாகள் 'அவர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ அவர் நன்மையை (பிறருக்கு) ஏவட்டும் என்று நபி அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் அம்மனிதர் அதற்கும் இயலாவிடின் என்று வினவ ''அவர் (பிறருக்கு) தீமை செய்வதை விட்டு தவிர்த்து கொள்ளட்டும். அதுவே தர்மமாகும் என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரி(ரலி)நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ

நபி அவர்கள் என்னிடம் கூறினார்கள். ''நான் உமக்கு நன்மையானவற்றின் வாயில்களை அறிவிக்கட்டுமா? நோன்பு கேடயமாகும் மேலும் தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழித்துவிடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஅத் இப்னு ஜபல்(ரலி)நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்

உங்களில் யார் இன்று நோன்பு நோற்றிருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று ஜனாஸாவைப் பின் தொடர்ந்திருக்கிறார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள். உங்களில் யார் இன்று மிஸ்கீனுக்கு உணவு அளித்திருக்கின்றார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் உங்களில் யார் இன்று நோயாளியை சந்தித்தார் என்று நபி அவர்கள் குறிப்பிட அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்று கூறினார்கள் இவையனைத்தும் ஒரு மனிதர் விஷயத்தில் ஒன்றுபட்டிருக்குமானால் அவர் சொர்க்கத்தில் புகுவார் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், நஸயி

தர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை மன்னிப்பதன் மூலம் அல்லாஹ் மதிப்பை உயர்த்தாமாலிருப்பதில்லை. அல்லாஹ்வுக்காக யாரேனும் பணிவுடன் நடந்தால் அவரை அல்லாஹ் உயர்த்தாமலிருப்பதில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

ஒரு மனிதன் இறந்துவிட்டால் மூன்று செயல்களைத்தவிர மற்றவை அவனை விட்டு அறுந்துவிடுகின்றன. நிலையான தர்மம் ,பிறருக்கு பயன்தரக்கூடிய கல்வி, தன் தந்தைக்காக பிரார்த்திக்கும் நற்பிள்ளை. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, திர்மிதி

விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்

ஒருவர் நபி அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

தர்மத்தில் சிறந்தது எது? என்று மக்கள் நபி அவர்களிடம் கேட்டதற்கு குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத்

உபரியான தான தர்மங்களை அது செல்வமாகவோ அல்லது தானிய வர்க்கமாகவோ அல்லது அசைவற்ற பொருளாகவோ இருந்தால் முதலில் மனைவி, மக்கள் உறவினர், அண்டைவீட்டார் என ஆரம்பித்து தான தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

ஒரு மனிதர் நபி அவர்களிடம் ''என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே) முடிந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டார். நபி அவர்கள் ''ஆம்'' சார்பாக தர்மம் செய்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா

Tuesday, February 24, 2009

முஸ்லிம் சகோதரன்!!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) கூறினார்கள்: ""ஒருவர் தனது சகோதரரை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அந்தச் சகோதரரின் இரத்தத்தை சிந்தியவர் போலாவார். (அதாவது இச்செயல் கொலைக்கு ஒப்பானதாகும்).'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை எவியவாறு சகோதரர்களாக இருங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மன்னிக்கப்படமாட்டான். அப்போது சொல்லப்படும் "இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூ தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நோன்பு நோற்பதை விட, தர்மம் செய்வதை விட சிறந்தவொரு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை எற்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக் கூடியதாகும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரு நண்பர்களில் ஒருவரின் தவறு, அவ்விருவருக்குமிடையே பிரிவினையை எற்படுத்தி விட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்க்கத்திற்காகநேசித்தவராக மாட்டார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

"ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாங்கும் நோக்கமில்லாமல் பிறரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விலையை அதிகப்படுத்தாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவரது வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக, சகோதரர்களாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். மோசடி செய்யமாட்டார். அவரை அற்பமாகக் கருதமாட்டார். இறையச்சம் என்பது இந்த இடத்தில் என்று தனது நெஞ்சின் பக்கம் மூன்று முறை சைக்கினை செய்தார்கள் ஒருவர் தமது சகோதரரை இழிவாகக் கருதுவது அவரது கெடுதிக்குப் போதுமானதாயிருக்கும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம், அவரது சொத்து, அவரது கெªரவம் ஹராமாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

Monday, February 23, 2009

பள்ளியில் பெண்கள்

நபி அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி

உமர்(ரலி) அவர்களின் மனைவி (ஆதிகா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் அவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள். அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்து இருப்பார்கள். பெண்கள் ஆண்களை சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகிறார். நூல்:புகாரி

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

நபி அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி

"உங்களில் ஒரு பென் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்" என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்

நபி அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி

Friday, February 20, 2009

இஸ்லாம் பார்வையில் "வணிகம்"

அறிவிப்பாளர் : ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றுள்ளார்கள்: “கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும் நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக!” (புகாாி)

அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் அருளினார்கள்: “உண்மை பேசி, நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்.” (திர்மிதி)


அறிவிப்பாளர் : அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் (வணிகர்களுக்கு எச்சாிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்: “உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர்: அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: “மூன்று வகையினாிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மையாக்கி சுவனத்தில் நுழையவிக்க மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையே தருவான்.” அபூதர் கிஃபாாி رَضِيَ اللَّهُ عَنْهُ வினவினார்கள்: “அல்லாஹ்வின் தூதரவர்களே! தோல்வியுற்றும் நற்பேறற்றும் போன இவர்கள் யார்?” அதற்குப் நபிصلى الله عليه وسلم அவர்கள், “பெருமை கொண்டு தம் ஆடையைக் கணுக்காலுக்குக் கீழ்வரை தொங்கவிட்டுத் திாிபவன், உதவி செய்வதைச் சொல்லிக் காண்பிப்பவன், பொய் சத்தியத்தின் மூலம் தனது வாணிபப் பொருளைப் பெருக்கிக் கொள்பவன் ஆகியோர்தாம்” என்று மறுமொழி பகர்ந்தார்கள். (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : கைஸ் அபூகர்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் வியாபாாிகளான நாங்கள் “ஸமாஸிரா” (புரோக்கர்கள்) என்று அழைக்கப்பட்டு வந்தோம். ஒரு சமயம் நபிகள் நாயகம்صلى الله عليه وسلم அவர்கள் எங்களுக்கு அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் இந்தப் பெயரைவிட சிறந்த பெயரை எங்களுக்குத் தந்தார்கள். அண்ணலார் கூறினார்கள்: “வணிக்க கூட்டத்தாரே! சரக்கை விற்பதில் வீண்பேச்சுக்களைப் பேசுவதற்கும் பொய் சத்தியம் செய்வதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது, எனவே நீங்கள் உங்கள் வியாபாரத்தில் தர்மத்தையும் கலந்து விடுங்கள்!” (அபூதாவூத்)


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் அளந்தும், நிறுத்தும் வணிகம் செய்யும் வியாபாாிகளை நோக்கி “நீங்கள் எத்தகைய இரு பணிகளுக்குப் பொறுப்பாளர்களாய் ஆக்கப்பட்டுருக்கிறீர்களெனில், அவற்றின் காரணமாக உங்களுக்கு முன் சென்றுபோன சமூகங்கள் அழிந்து விட்டிருக்கின்றன” என்றார்கள். (திர்மிதி)


அறிவிப்பாளர் : உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ
“தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உாிய நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உாித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றைப் பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்குாியவனாவான்.”(இப்னு மாஜா)

அறிவிப்பாளர் : வாயிலா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஒருவன் ஒரு பொருளை விற்கின்றான். ஆனால் அதிலுள்ள குறையை அவன் சுட்டிக் காட்டவில்லையென்றால் அது அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல, ஒருவன் பொருளிலுள்ள குறையை அறிகின்றான். ஆனால் அதனைத் தெளிவாக எடுத்துரைக்கவில்லையென்றால் அதுவும் அனுமதிக்கப்பட்ட செயல் அல்ல.” (முன்தகா)

Wednesday, February 18, 2009

இஸ்லாம் பார்வையில் "திருமணம்"

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
“இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகின்றது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கின்றது. (பார்வை இங்கும் அங்கும் அலைபாய்வதை விட்டும் காம இச்சையினால் சுகந்திரமாகத் திரிவதை விட்டும் பாதுகாக்கிறது) திருமணத்தின் பொறுப்பை சுமக்கச் சக்தியற்றவர் இச்சையின் வேகத்தைத் தணித்திட அவ்வப்போது நோன்பு வைத்துக் கொள்ளட்டும்.” (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் மொழிந்தார்கள்: “எவருடைய மார்க்கப் பக்தியையும் நற்குணத்தையும் நீங்கள் விரும்புகின்றீர்களோ அத்தகைய மனிதர் உங்களிடம் திருமணம் கேட்டு வந்தால் அவருக்கு மணமுடித்துக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இப்படிச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் தீமையும் விளைந்துவிடும்.” (திர்மிதி)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ
எங்களுக்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் தொழுகையில் ஓதும் தஷஹ்ஹுதை ஓதிக் காட்டியபின், “இது திருமணத்தின்போது ஓதக்கூடிய தஷஹ்ஹுது” எனச் சொல்லி அதனையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பொருள்:

நன்றியும் புகழும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானவை. நாங்கள் அவனிடமே உதவி தேடுகின்றோம். அவனிடத்திலேயே மன்னிப்புக் கோருகின்றோம். எங்கள் மனத்தின் தீமைகளுக்கெதிராக எங்களை நாங்களே அல்லாஹ்விடம் தஞ்சம்தேடி ஒப்படைத்து விடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் நேர்வழி அளிக்கின்றானோ அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. அவன் எவனை வழி தவறச்செய்து விடுகின்றானோ அவனுக்கு யாரும் நேர்வழி அளிக்க முடியாது. மேலும் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் எவரும் இலர் என நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடைய திருத்தூதர் என்றும் சான்று பகருகின்றேன்.

பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மூன்று இறைவசனங்களை ஓதிக் காண்பித்தார்கள்.

1. இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)

2. மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.(4:1)

3. இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் இருங்கள். மேலும் சொல்வதைத் தெளிவாக, நேரடியாகச் சொல்லுங்கள். இப்படிச் செய்தால் அல்லாஹ் உங்கள் செயல்களைச் சீர்திருத்துவான். பாவங்களை மன்னித்து விடுவான். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடிபணிந்து நடப்பவர்கள் பெரும் வெற்றியை அடைவார்கள். (33:70-71) (திர்மிதி)

Sunday, February 15, 2009

இஸ்லாம் பார்வையில் "பொய்"

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை (இருக்க இயலாது) என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஅத்தா

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் உமைஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப் பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு (அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார்கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் ‘எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்துகொண்ட அண்ணலார், ‘நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!’ என்று கூறினார்கள். (தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்)

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’ (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ
ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள். (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : பஹ்ஸ் பின் ஹகீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: ‘மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.’ (திர்மிதி)

அறிவிப்பாளர் : அபூஉமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.’ (அபூதாவூத்)

அறிவிப்பவர்: அஸ்மாஃபின்து யஜீது رَضِيَ اللَّهُ ஆதாரம்: திர்மிதீ
'மக்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது: 1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல். 2) போரில் ஒருவர் பொய் கூறுதல். 3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்' என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்رَضِيَ اللَّهُ ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ''
நான்கு செயல்கள் இருக்கின்றன. அவை எவனிடம் குடிகொண்டிருக்கின்றனவோ அவன் கலப்பற்ற நயவஞ்சகனேயாவான். அன்றி அவற்றில் ஒரு செயல் எவரிடம் இருக்கிறதோ அவர் அதனைக் கைவிடாதவரை அவரிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டிருக்கிறது. அவை: 1) பேசினால் பொய் பேசுவது. 2) அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதனை மோசம் செய்வது. 3) வாக்குறுதி அளித்துவிட்டு அதை மீறுவது. 4) (வாய்ச்) சண்டையிட்டால் ஒருவர் மீது அநியாயமாக பழிசுமத்தி அவதூறு கூறுவதுமாகும்' என்று அண்ணல் நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.''

Thursday, February 12, 2009

இஸ்லாம் பார்வையில் "தூய எண்ணம்"

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ, அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

(உதாரணமாக) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும். அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் رَضِيَ اللَّهُ عَنْهُ (புகாரி, முஸ்லிம்)

நபியவர்கள் கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ (முஸ்லிம்)

அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன். மறுமைநாளில் அனைவர்க்கும் முதலில் இறைவனின் பாதையில் வீரமரணம் அடைந்தவனுக்கு எதிராகாத் தீர்ப்பளிக்கப்படும். அம்மனிதன் இறைவனின் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவான். பிறகு, இறைவன் அவனுக்குத் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் நினைவவூட்டுவான் அப்போது அவனுக்கு தான் பெற்றிருந்த அருட்கொடைகள் அனைத்தும் நினைவுக்கு வரும். இறைவன் அம்மனிதனிடம் வினவுவான்: நீ என் அருட்கொடைகளைப் பெற்று என்னென்ன பணியாற்றினாய்?

அம்மனிதன் கூறுவான்: நான் உன் உவப்புக்காக (உன் மார்க்கத்தை எதிர்த்துப் போரிடுவோருக்கு எதிராக) போரிட்டேன். இறுதியாக என் உயிரையும் கொடுத்து விட்டேன். இதை கேட்ட இறைவன் அவனிடம் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். மக்கள் உன்னை வீரன், துணிவு மிக்கவன் எனப் புகழ வேண்டும் என்பதற்காகத்தான் நீ போரிட்டாய்! (வீரத்தை வெளிக்காட்டினாய்!) அதற்கான புகழுரையும் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது! என்பான். பின்னர், இறைவன் அந்த உயிர்த் தியாகியைத் தலைகீழாக இழுத்துச்சென்று நரகத்தில் எறியும்படி கட்டளையிடுவான். அந்த மனிதன் நரகத்தில் எறியப்படுவான்.

பிறகு, மார்க்க அறிஞராயும், போதகராயும் இருந்த இன்னொரு மனிதன் இறை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவன் குர்ஆனைக் கற்றுத் தெளிந்த காரியாகவும் இருப்பான். அவனுக்கு இறைவன் தான் அளித்த அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவனுக்கு அருள் நலங்கள் அனைத்தும் நினைவுக்கு வரும். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: இந்த அருட்கொடைகளைப் பெற்ற நீ என்ன நற்செயல் புரிந்தாய்?

இறைவா! நான் உனக்காக உனது தீனைக் கற்றேன். உனக்காகவே அதனைப் பிறர்க்கு கற்பித்தேன். உனக்காகத்தான் குர்ஆனை ஓதினேன் என்று அம்மனிதன் கூறுவான். இதைக் கேட்ட இறைவன் பின்வருமாறு கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய்! மக்கள் உன்னை அறிஞர் எனக் கூறவேண்டும் என்பதற்காக கல்வி கற்றாய்! குர்ஆனை நன்கறிந்தவர் என மக்கள் உன்னை புகழ வேண்டும் என்பதற்காகத்தான் குர்ஆனை ஓதினாய்! அதற்கான வெகுமதி உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, அவனை முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் எறியுங்கள் எனக் கட்டளையிடப்படும். அவ்வாறே அவன் நரகில் எறியப்படுவான்.

உலகில் வசதி வாய்ப்புக்கள் பலவும் அளிக்கப்பட்டிருந்த மூன்றாவது மனிதன் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவான். அவனுக்கு எல்லாவகைச் செல்வங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இறைவன் அம்மனிதனிடம் தான் அளித்த அருட்கொடைகள் அனைத்தையும் எடுத்துக் கூறுவான்.

அப்போது அவன், ஆம்! இந்த அருட்கொடைகள் அனைத்தும் எனக்கு அளிக்கப்பட்டிருந்+தன என ஒப்புக்கொள்வான். அப்போது இறைவன் அவனிடம் கேட்பான்: என் அருட்கொடைகளைப் பெற்று நீ என்ன நல்வினை புரிந்தாய்? அம்மனிதன் சொல்வான்: உன் உவப்பைப் பெற எந்தெந்த வழிகளில் செலவழிப்பது உனக்கு விருப்பமானதோ, அவ்வழிகளில் எல்லாம் நான் செலவு செய்தேன்

இறைவன் கூறுவான்: நீ பொய்யுரைக்கின்றாய். நீ இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மக்கள் உன்னை வள்ளல் எனப்புகழ்ந்து போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் வாரி இறைத்தாய்! அந்த வள்ளல் பட்டம் உலகிலேயே உனக்குக் கிடைத்துவிட்டது. பிறகு, இவனை முகம் குப்புற இழத்துச் சென்று நரகில் வீசி விடுங்கள் எனக் ஆனையிடப்படும். அவ்வாறே அவன் இழுத்துச் செல்லப்பட்டு நரகில் எறியப்படுவான். அறிவிப்பாளர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்

Wednesday, February 11, 2009

இஸ்லாம் பார்வையில் "பெரும் பாவங்கள்"

பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ

பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்' என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் 'நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

'ஒருவன் தனது பெற்றோர்களை ஏசுவதும் நிச்சயமாகப் பெரும் பாவங்களைச் சேர்ந்ததேயாகும்' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அப்பொழுது) மனிதன் தன் பெற்றோர்களையும் ஏசுவதுண்டா? என்று நாங்கள் வினவினோம். ஆம்! இவன் மற்றவனின் தந்தையை ஏசுகிறான். அவன் இவனுடைய தந்தையை (பதிலுக்கு) ஏசி விடுகிறான். இவன் மற்றவனின் தாயை ஏசி விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

Monday, February 9, 2009

இஸ்லாம் பார்வையில் "நோயாளியை நலம் விசாரித்தல்"

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள், ''முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து'' என கூறியபோது நபி அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி அவர்கள் கூறினார்கள், ''அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)

''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ''நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான்.

''ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை'' என்று கூறுவான். அம்மனிதன் ''எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ''எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்'' என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.'' (ஸ¤னனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் 'நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்' என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ''நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!'' என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி அவர்கள், ''இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்'' என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ''உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ''யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.'' (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ''கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)


நபி அவர்கள் கூறினார்கள்: ''பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.'' (ஸஹீஹ¤ல் புகாரி)

Sunday, February 8, 2009

இஸ்லாம் பார்வையில் "உபரியான வணக்கம்"

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை" என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி அவர்கள் கூறினார்கள். உடனே அவர், அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகின்றார்கள் :
நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி(ரலி) நூல்: தாரமீ

உங்களில் ஒருவர் தன் நற்செயலினால் (மட்டும்) சொர்க்கத்தில் புகமுடியாது' என்றார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா? எனக் கேட்டனர். அதற்கு, ஆம் நானும் தான், என்றாலும் இறைவன் தன் அருளால் என்னை பாதுகாத்துக் கொண்டான். எனவே வணக்கத்தில் பேணுதலாகவும், இரவும் பகலும் நெருங்குங்கள். மேலும், இவற்றில் (வணக்கங்களில்) நடுநிலையை மேற்கொள்ளுங்கள்!. என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: முஸ்லிம், புகாரி

Friday, February 6, 2009

இஸ்லாம் பார்வையில் "சபித்தல்"

ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்

"அதிகம் சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத்

'அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக் கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

அதிகம் சபிப்பவர்கள் 'மறுமை நாளில்" பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

'ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்" என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ

Thursday, February 5, 2009

இஸ்லாம் பார்வையில் "மென்மை"

நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: "அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், "அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: "எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.'' மற்றோர் அறிவிப்பில்: "ஒரு குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்'' என நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: "ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் எல்லா விஷயங்களிலும் உபகாரத்தை விதித்திருக்கிறான். நீங்கள் கொலைத் தண்டனையை நிறைவேற்றினால் அழகிய முறையில் நிறைவேற்றுங்கள். பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுத்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் கத்தியை நன்கு தீட்டிக் கொள்ளட்டும். அதனால் பிராணிகளுக்கு (சிரமத்தை) இலேசாக்குங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

Wednesday, February 4, 2009

இஸ்லாம் பார்வையில் "பிரார்த்தனை"

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!

பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:
ஃபுளாலத் பின் உபைத்

رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்: திர்மிதீ


அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ

அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்:ஹாகிம்

உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரீ, முஸ்லிம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூத், திர்மிதி)

நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கொடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாாிஸி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத், திர்மிதி)

ஒரு முஸ்லிம், பாவச்செயல் மற்றும் இரத்த பந்த உறவுகளை முறிக்காத எந்தப் பிரார்த்தனையை இறைவனிடம் கேட்டாலும் அதற்கு இறைவன் (மூன்றில்) ஏதேனும் ஒரு விதத்தில் பதில் அளிக்கிறான்.1) அவன் கேட்டதை கொடுத்து விடுகிறான். 2) மறுமைக்காக அதன் நன்மையை சேர்த்து வைக்கிறான். 3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கை போக்கிவிடுகிறான்.

என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது ஒரு நபித்தோழர், அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்களே! நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம் என்றார்கள். அதற்கு நபிصلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ்வும் மிக அதிகமாக்குவான் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஹாகிம்)

இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும் பிரார்த்திக்காதிருக்க வேண்டும். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஹாகிம்)

உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்துவிடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிரான அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் : முஸ்லிம்)


உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை. (அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் : புகாரீ)


நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன், ஆனால் அவன் அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறி அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். (அறிவிப்பவர் : அபூஹரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ, முஸ்லிம்)

Tuesday, February 3, 2009

இஸ்லாம் பார்வையில் "அண்டை வீட்டார்"

முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அண்டை வீட்டுக் காரர் அவரது எல்லையில் ஒரு மரக்குச்சி நடுவதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர் தம் அண்டை வீட்டாரைத் தொல்லை படுத்த வேண்டாம் என்று என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவ்விருவரில் யாருக்கு (முதலில்) அன்பளிப்புக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன், அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த வீட்டின் வாசல் உனக்கு மிக அருகில் உள்ளதோ அந்த வீட்டாருக்கு என்று விடையளித்தார்கள் . ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி

அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அபூதர்! நீ குழம்பு சமைத்தால் (அது குறைவாக இருந்தால்) அதில் தண்னீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். முஸ்லிம்

எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

Monday, February 2, 2009

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம்!!!

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், "இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!'' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

"எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)


இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: "எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.'' பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், "நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: "நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், "(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் அவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)


உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)


அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)


நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.'' (ஸஹீஹுல்புகாரி)

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!