மே 1 முதல் நடைபெற இருக்கும் சாதி,மத,வகுப்புவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் சரியான தகவல்களை அளிப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி , பதிவுகள் ஏதாவது ஏற்பாடு செய்தால் நல்லது.
பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களை அதிகாரிகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விடுகின்றனர். குடும்ப அட்டைக்கு (ரேஷன் கார்டு) பதிவு செய்வதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வேறுபாடு உள்ளது. முன்னது உணவுப் பொருள் விநியோகத்திற்காக கணக்கிடப்படுகிறது. அதில் வெளிநாட்டில் வசிப்பவர்களை சேர்க்காவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. பின்னது அரசு நலத்திட்டங்கள் இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கிறது.
கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் எழுத்துப்பூர்வமாக இல்லாமல் நேரடியாக கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்படுகின்றன..எனவே இக்கணக்கெடுப்பில் அதிரையில் பிறந்த அணைவரையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இந்த விஷயத்தில் அசிரத்தையாக இருந்து விடக்கூடாது.
- வழிகாட்டி பதிவுகளை அணைத்து அதிரை வலைப்பக்கங்களிலும் பதிவது.
- அதிரையின் சமுதாய அரசியல் இயக்கங்கள், மற்றும் சங்கங்கள் இவ்விஷயத்தை வீடுகளில் வலியுறுத்துதல்
- பதிவு செய்ய வரும் அதிகாரிகளுடன் தெருவாரியாக தன்னார்வலர்களை உடன் அனுப்புதல்
- கவுன்சிலர்கள் உடனிருப்பதும் அவசியம்.
மிகச்சிரமமான பணியான இந்த கணக்கெடுப்பு அடிக்கடியோ ஆண்டுதோறுமோ ஐந்தாண்டுகளிளோ எடுக்கப்படுவதில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் எடுக்கப்படுகிறது. எப்படியும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசு திட்டங்களும் ஒதுக்கீடுகளும் இருக்கும். நாளேடுகளில் இதர சாதி சங்கங்களின் அறிக்கைகளை படித்து பார்த்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteபல நாட்களாக எனது எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்த ஒரு விஷயத்தை சகோ அப்துல் லத்திப் பதிவுக்கு கொண்டு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
அரசு சம்ந்தப்பட்டவர்கள் இது போன்ற விசயங்களுக்காக வீடுகளுக்கு வரும்போது.விவரம் தெரியாத நம் பெண்மணிகள் சரினா முறையில் பதில் கொடுப்பதில்லை. எனவே அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் கணக்கு எடுக்க வரும் அதிகாரிகள் கூட சென்றால் நலமாக இருக்கும்.
பெயர்கள் பதிவது பெரிது அல்ல.ஆண்களுக்கு பதிலாக பெண்கள் பெயரும் பெண்களுக்கு பதிலாக ஆண்கள் பெயரும்.எழுத்து பிழைகள் இல்லாமல் பதிகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்.