Showing posts with label இயேசு. Show all posts
Showing posts with label இயேசு. Show all posts

Tuesday, July 26, 2011

இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து

ஓரிறையின் நற்பெயரால்...
   குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா...? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான். சுருக்கமாக கூறினால் "ஒன்று" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் "இல்லை" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை.

 இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.

 34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
 35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.                                
                                                                                     (மத்தேயூ அதிகாரம்:10)
 17.பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;
 18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; (மாற்கு அதிகாரம்:10)

 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
 51.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 52.எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
 53.தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.   (லூக்கா அதிகாரம்:12)

34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.  (மாற்கு அதிகாரம்:15)

 19.அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
 20.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
                                                                                        ( மத்தேயூ அதிகாரம்:8)

                   இவ்வாறு கடவுள் ஸ்தானத்திற்கு அல்லது கடவுளின் மகனாக மகிமைப்படுத்தி கூறப்படும் இயேசு கிறித்துவை பற்றிதான் மேலுள்ள வாக்கியங்களும் உள்ளன.அவ்வாறு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ கருதப்படுபவர் குறித்து சராசரி மனித பண்புகளோடு அல்லது அதற்கு கீழாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு பைபிள் குறித்து நான் விமர்ச்சிக்க வரவில்லை. மாறாக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி? 
     ஆனால் இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.இங்கு ஒரு தெளிவு "பைபிளும், குர்-ஆனும் முன்மொழியும் அந்த இறைத்தூதரை "இயேசு கிறித்து" என்ற பெயரில் உச்சரிக்கும் பொழுது சிலுவையில் அறையப்பட்டு,கை,கால்களில் ஆணிகள் ஊடுருவப்பட்ட நிலையில், முள் கீரிடம் சுமந்தவராக, செங்குருதி வடிந்தவராக மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இடதுபுறம் தலைச்சாய்த்த முகம் தான் ஏனோ...ஞாபகம் வருகிறது.கடவுளின் மகன்(?) என கூறப்படும் அந்த தூயவருக்கு கொடுக்கும் கண்ணியமா இது? அதே நேரத்தில் திருக்குர்-ஆன் கூறும் நபி ஈஸா (அலை) அவர்கள் பெயரை உச்சரிக்கும் பொழுது எந்தவித எண்ணத்தோன்றங்களும் எழாது என்பதால் இனி அந்த தூய இறைத்தூதரை "ஈஸா (அலை) என்ற பதத்திலே இங்கு பெரும்பாலும் பயன்படுத்துகின்றேன். அல்லாஹ் அவன் திருத்தூதரை குறித்து சொல்வதை கேளுங்கள்.,

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.  (3:45)

     "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."  (3:46)


"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!  (3:55)

 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;... (2:253 ன் சுருக்கம்) 


மேலும் பார்க்க நபி ஈஸா அலை குறித்து :    (2-87, 3-45>59, 4-157,171, 
5-17,72,75,78,110>120, 9-30, 19-16>34, 23-50, 42-13, 43-57,61,63, 61-6, 3-52, 57-27, 61-14)  

    மேற்குறிப்பிடப்பட்ட அல்லது குர்-ஆன் முழுவதும் நபி ஈஸா அலை அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.

  நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))
'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள். (புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி)
.
 இவ்வாறு இறைவனும் அவனது இறுதித்தூதரும் நபி ஈஸா (அலை) அவர்ககளை கண்ணியப்படுத்தி கூற என்ன காரணம்? ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா? இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா?
  நன்றாக சிந்தியுங்கள் கிறித்துவ சகோதரங்களே., இஸ்லாமியர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புனித வேதமாக வர்ணிக்கப்படும் பைபிள் குறித்தும் அது கடவுளின் மகனாக உருவப்படுத்தும் இயேசு குறித்தும் தான்.மாறாக  கிறித்துவ சமுகத்திற்கு உண்மையாக அனுப்பப்பட்ட இஞ்ஜில் வேதங்குறித்தோ அல்லது உண்மைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் குறித்தோ அல்ல.,
   ஏனெனில் உண்மையான இயேசுவை விமர்சிப்பவன் தூய முஸ்லிமாக இருக்க முடியாது., தூய இயேசுவை பின்பற்றாதவன் உண்மை கிறித்துவனாக இருக்க முடியாது.ஆக அந்த தூய இறைத்தூதர் ஈஸா(அலை)அவர்கள் சொன்னது என்ன? செய்ய சொன்னது என்ன ? என்பதை அறிய முற்படுங்கள்., நீங்கள் உண்மை தேடுதலில் விருப்பம் உடையவராக இருந்தால் இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

    பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.  (திருக்குர்-ஆன் 57:27)

                                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Sunday, March 27, 2011

இயேசு கூறியது என்ன?


இயேசு என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் இஸ்ராயீல் சமூகத்திற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதராக இருந்தார். அவரது தூதுத்துவத்தை ஏற்க மறுத்த யூதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொலை செய்வதற்கு முடிவு செய்தனர். "மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்" என்கிறது பழய ஏற்பாடு. (உபாகமம் 21:23) இந்த தத்துவத்தின் அடிப்படையில் அவரை உலக மக்களுக்கு முன் சபிக்கப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்த வேண்டும் என்பது யூதர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் வல்லமை மிக்க அல்லாஹ் அவனது பேராற்றலால் அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து தனது நேசத்திற்குரிய தூதரைக் காப்பாற்றினான்!  இதோ அல்லாஹ் கூறுகிறான்:

"(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவனாவான். ஈஸாவே நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும, என்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும், நிராகரிப்பவர்களை விட்டும் உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை,நிராகரித்தோரை விட மறுமை நாள் வரை உயர்வாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். பின்னப் உங்களுடைய மீளுதல் என்னிடமேயாகும். அப்போது நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன் என அல்லாஹ் கூறியதை(எண்ணிப் பாருங்கள்) (அல்குர்ஆன் 3: 54,55)

ஈஸா (அலை) அவர்களைக் கொல்வதற்கோ, சிலுவையில் அறைவதற்கோ யூதர்களால் இயலவில்லை! இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதற்கான தெளிவான சான்று எதுவம் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை! அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர்! இதுவே மேற்கண்ட வசனம் சொல்லும் சுருக்கமான செய்தி!

யூதர்க்ள இயேசுவை ஒரு விபச்சார சந்ததி என்று தூற்றினர். அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்றும் கூறினர். அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம் என்றும் பெருமை பேசினர். தாங்கள் வீரம் மிக்க பாரம்பர்யத்தை உடையவர்கள் என்பதற்கு இதுஒர் அடையாளம் என்று பெருமை பேசினர்!

 இதில் வியப்பு என்னவெனில் யூதர்களின் இந்த நம்பிக்கைக்கையையும் அவர்களின் இறுமாப்பையும் சரிகாணும் வகையிலேயே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கிறது!

இயேசுவை யூதர்கள் கடுமையாகத் துன்புறுத்தி , முட்கிரீடத்தை அவர் தலையில் வைத்து மரச்சிலுவையில் அறைந்தும்  ஈட்டியால் குத்தியும் கொலை செய்தார்கள் என்பதுவே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆதம் (விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் மூலம்) செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இதை இயேசு ஏற்றுக்கொண்டார் என்ற  நம்பிக்கையில் அவர்கள் ஆனந்தமடைகின்றனர்.

ஆதிபாவமும் சிலுவை சித்தாந்தமும்!

மனிதர்கள் அனைவரும் பிறவியிலேயே பாவிகளாகப் பிறக்கின்றார்கள் என்றும்,  பாவத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே கடவுள் இயேசுவாக அவதாரம் எடுத்து சிலுவையில் மரித்தார் என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்! இதைத்தான் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாக பவுல் அறிமுகம் செய்துள்ளார்!  பவுலின் கூற்றுக்களைப் பார்ப்போம்:

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்"  (1 கொரிந்தியர் 15:14)

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்"  (1 கொரிந்தியர் 15:17)

இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது! அறையப்பட்டது இயேசுவே என்று கிறிஸ்தவம் நம்புகிறது! இவ்வாறு முற்றிலும் முரண்பட்ட இரண்டு நம்பிக்கைகளுக்கிடையில் எது உண்மை?என்பதை சற்று ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

ஆதிபாவமும் பைபிளும்!

ஆதாம் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்!  இதனால் அவர் பாவியானார்! இந்த பாவம் தலைமுறை தலைமுறையாக மனிதனை வந்தடைகிறது. இதன் காரணமாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்தில் பிறக்கிறது. இந்த பாவம் இயேசுவின் சிலுவை  மரணத்தால் நீக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

பைபிளில் இயேசுவின் உபதேசங்களுக்கு கிறிஸ்தவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள் எனில்... இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை இயேசு எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? அவரது உபதேசங்களாகக் காணப்படும் பைபிளில் உள்ள ஏதேனும் வசனங்களில் இதை வலியுறுத்தி உபதேசித்திருக்கிறாரா? என்பதை சிந்திக்க வேண்டும். பைபிளில் எங்குமே இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை இயேசு சொன்னதாகக் காண முடியவில்லை.  இயேசுவுக்கு முன்னர் வாழ்ந்த எத்தனையோ தீர்க்கதரிசிகள், அவர்களின் உபதேசங்கள் ஏராளமாக பைபிளில் காணப்படுகின்றன. அவர்கள் எவருமே இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை அறிமுகப் படுத்தவில்லை.

மாறாக, பைபிளில் இது யாருடைய உபதேசமாகக் காணப்படுகிறது? இயேசுவின் சீடர்களைக் கடுமையாகத் துன்புறுத்தி இடையூறு செய்து வந்த சவுல் என்ற பவுல்! திடீரென ஒரு நாள் இயேசு இவருக்கு வெளிப்பட்டு  அருளுரை பாலித்ததாகவும் அன்று முதல் தான் திருந்தி விட்டதாகவும் அறிக்கையிடும் பவுலின் உபதேசங்களில்தான் இத்தகைய பாவ சித்தாந்தம் காணப்படுகிறது.  பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ஒரே ஒரு மனிதன் வழியாகப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது, அந்தப் பாவத்தின் வழியாகச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. (உரோமையர் 5:12)

சிலுவையில் மரித்ததன் மூலம் இயேசு மனிதர்களைப் பாவத்திலிருந்து விடுவித்தார் என்றும் பவுல் கூறுகிறார்.

"மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்" (1 கொரிந்தியர் 15:3,4)

"நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார், நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்." (உரோமையர் 4:25)

"நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடி, நம்முடைய பழய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?" (உரோமையர் 6:6,7)

இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அதனை நம்புவதன் மூலம் எல்லா மனிதர்களும் பாவங்களிலிருந்து விடுபடுவர் என்றும், அதன் காரணமாக இனி நியாயப் பிரமாணத்தின் ஏவல் விலக்கல்ககளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும்தான் பவுலுடைய வாதம்! நியாயப் பிரமணனங்களின் விதிகளைக் கடைபிடிக்கவேண்டியதில்லை என்று உபதேசிக்கும் பவுலின் கூற்றுகள்:

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில்,விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசவாசத்திற்குரியதல்ல. அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். ரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி,நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக மீட்டுக்கொண்டார்.(பார்க்க கலாத்தியர் 3:10-14)

இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க,நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது,அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே, விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமேஇல்லை. (ரோமயர் 3:20-22) 

நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே>ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?

அதெப்படியென்றால்> புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்> புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.

ஆகையால்> புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்> புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால்> வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.

அப்படிப்போல> என் சகோதரரே> நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி> தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். (ரோமர் 7:1-4)

இயேசுவின் சிலுவை மரணத்தில் நம்பிக்கை கொண்டால் எல்லா பாவங்களும் மாய்ந்து போகும். அப்படி நம்பிய பிறகு நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. விசுவாசம் மட்டும் போதும். எத்தனை பெரிய பாவங்கள் செய்தாலும் சிலுவை மரணத்தை நம்புவதன் மூலம் எல்லாப் பாவங்களிலிருநதும் தூய்மையடைந்து வெற்றி பெற்று விடலாம் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைத்தான் மேற்கண்ட பைபிள் வசனங்கள் எடுத்துக் கூறுகின்றன!

பவுலின் கொள்கைகள் - ஒர் மறுபரிசீலனை!
இயேசு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் விரோதியாகச் செயல்பட்டவர் பவுல்! இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் ஒரு நாளில் திடீரென்று தனக்கு வெளிப்பாடு ஏற்பட்டது என்று அறிக்கை விட்டார்! அவ்வாறு அறிவித்த விட்டு அவர் செய்த உபதேசங்கள் இயேசுவின் உபதேசத்துக்கு முரண் இல்லாமல் இருந்தாலாவது அவரது உபதேசங்களை ஒரளவுக்கு நியாயப் படுத்தலாம். ஆனால் அவை அத்தனையும் இயேசு எதனை சமுதாயத்திற்கு உபதேசித்தாரோ> எதை வலியுறுத்தினாரோ அதற்கு முற்றிலும் முரணாக உள்ளதைப் பார்க்கிறோம். இயேசு எதைக் கடைபிடிக்கச் சொல்கிறாரோ அதைக் கடைபிடிக்க வேண்டாம் என்கிறது பவுலின் உபதேசங்கள். இந்த இடத்தில் தான் சற்று நிதானமாக சிந்தித்து இதில் நடுநிலையான ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டியிருக்கிறது.

நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிப்பதைக் குறித்து இயேசு கூறியது என்ன?

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.  வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆகையால் இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான் இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோபரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். (மத்தேயு 5: 17- 19 )

மேற்கண்ட பைபிளின் வசனங்களை சற்று நடுநிலையுடன் சிந்தித்துப் பாருங்கள்!

நியாயப் பிரமாணங்கள் எக்காலத்திலும் மாற்றப்படாது என்று இயேசு கூறுகிறார்!   அது மாற்றப்பட்டது என்று உபதேசிப்பவன் பரலோகத்தில் சிறுமைப் படுத்தப்படுவான் என்றும் எச்சரித்துள்ளார்!   ஆனால் இதற்கு முரணாக நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பவுல்! இதில் எதை ஏற்றுக் கொள்வது?

நியாயப் பிரமாணத்தைக் கடைபிடித்தல் என்ற ஒழுங்கு முறை இயேசுவின் மரணத்திற்குப் பின் மாற்றப்பட்டது என்றால் இவ்வாறு மாற்றப்படும் என்பதைப் பற்றி இயேசு ஏன் ஒரு வார்த்தை கூட முன்னறிவிப்பு செய்யவில்லை? வானம் பூமி ஒழிந்து போனாலும் நியாயப் பிரமாணத்தின் ஓர் எழுத்தோ அல்லது ஓர் எழுத்தின் ஒரு பகுதியோ மாற்றப்படக் கூடாது என்று உபதேசிக்க வேண்டிய அவசியம் என்ன? நியாயப் பிரமாணம் மாற்றப்படும் என்ற பேருண்மையை இயேசு மறைத்து சமுதாயத்திற்கு மோசடி செய்து விட்டார் என்று கிறிஸ்தவர்கள் கூறப்போகிறார்களா?

ஓர் இறைதூதர் தன் சமூகத்திற்கு மோசடி செய்வதை விட்டும் பரிசுத்தமானவர் என்றே நாம் நம்புகிறோம். பைபிளின் பழய ஏற்பாட்டையும் ஒருமுறை படிப்பவர்கள் இவ்விஷயத்தில் இயேசுவின் உபதேசங்களாகக் காணப்படுபவை முந்தைய தீர்க்கதரிசிகளின் உபதேசத்திற்கு சற்றும் முரண் இல்லாமல் உள்ளதையும் பவுலின் உபதேசங்களாகக் காணப்படுபவற்றில் உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்!

ஆதிபாவமும் பழய ஏற்பாடும்!

ஆதாம் செய்த பாவத்தினிமித்தம் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் பாவிகளாகப் பிறக்கின்றன என்ற புதிக கிறிஸ்தவ சித்தாந்தம் பைபிளின் முந்தைய தீர்க்கதரிசிகளின் உபதேசங்களில் இல்லை! இயேசுவும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. பிற்காலத்தில் பவுல் உருவாக்கிய பாவக் கொள்கைக்கு எதிராகவே பைபிளின் பழய ஏற்பாட்டின் வசனங்கள் உள்ளன. அவற்றில் சில:

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்.  (உபாகமம் - 24:16)

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை,நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.  (எசேக்கியேல் 18:20)

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான், எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.(எரேமியா 31:30)

ஆதிபாவமும் இயேசுவின் கூற்றுக்களும்!

பிள்ளைகளை ஒருபாவமும் அறியாதவர்கள் என்று நாம் கூறுவதுண்டு. பாவத்திலிருந்து தன்னைப் பரிசுத்தப் படுத்திக்கொள்ள விரும்புபவர்களை குழந்தைகளுக்கு ஒப்பாக இயேசு உவமிக்கின்றார். பிறக்கும் குழந்தைகள் பாவிகளாகப் பிறப்பதில்லை என்ற உண்மையை இயேசு தெளிவு படுத்துகிறார்.

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்,பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு: 18:3)

இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்,அவர்களைத் தடைபண்ணாதிருங்கள், பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மத்தேயு: 19:14)


இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்,தேவனுடைய  ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. (மாற்கு 10:14)

பாவ சித்தாந்தமும் இறை வேதமும்!

பிற்காலத்தில் மனித சிந்தனையில் உதயமான ஆதிபாவம் என்ற கொள்கையை முந்தைய தீர்க்கதரிசிகளோ அவர்கள் கொண்டுவந்ததை எடுத்துபதேசித்த இயேசுவோ சொல்லியிருக்கவில்லை என்பதைப் பார்த்தோம். முந்தைய வேதற்களை உண்மைப் படுத்தி நிலைநாட்டக் கூடிய இறுதி வேதம் குர்ஆனில் இது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

"எந்தவேர் ஆத்மாவும் மற்றதன் பாவச்சுமையைச் சுமக்காது!" (53:38)

"அல்லாஹ் அல்லாதவனையா இரட்சகனாக நான் தேடுவேன்? அவனே அனைத்துப் பொருட்களினதும் இரட்சகனாக இருக்கிறான் என (நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொரு ஆன்மாவும் (தீமையை) தனக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறது. எந்த ஓர் ஆன்மாவும் மற்றதன் பாவச்சுமையைச் சுமக்காது. பின்னர்  உங்கள் மீளுதல் உங்கள் இரட்சகனிடமே உள்ளது. அப்போது நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்" (6:164)

கருணை மிக்க அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) செய்த தவறை மன்னித்து விட்டதாகத் தன் திருமறையில் பறைசாற்றுகிறான். இது குறித்த வசனத்தைப் பாருங்கள்:

"பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்புக் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்" (2:37)

ஆதமின் மனமுருகிய வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அந்த வேண்டுதல் யுக முடிவு நாள் வரை பாவம் செய்பவர்கள் எவராயினும் மனமுருகி மன்னிப்புக் கோரியவர்களுக்குரிய பிரார்த்தனையாக குர்ஆனில் நிலை பெற்று விட்டது! ஆதம் செய்த பாவத்தின் பரிகாரத்தை எவரும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை! இதுவே இறைவழிகாட்டுதலில் நமக்குக் கிடைத்த செய்திகளாகும்!

பிறக்கும் எந்தக் குழந்தையும் பிறவியில் பாவியாகப் பிறப்பதில்லை. மாறாக தூய்மையான இயற்கையிலேயே பிறக்கின்றன என்ற உண்மையை என்ற உண்மையை இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான (ஃபித்ராவில்) பிறக்கின்றன. பெற்றோர்கள்தான் அதனை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, நெருப்பு வணங்கியாகவோ மாற்றி விடுகின்றனர். ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போல! அவை குறைபாடு உள்ள நிலையில் பிறப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா?" (புகாரி, முஸ்லிம்)

பவுலின் கொள்கைகள் ஏற்படுத்தியிருக்கும் சந்தேகங்கள்:

இயேசு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் விரோதியாக இருந்தவர் பவுல்! இயேசுவின் சீடர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவர் பவுல்! அவர் உருவாக்கிய பாவ சித்தாந்தமும் அதை ஒட்டியுள்ள சிலுவைக் கொள்கையும் இயேசுவின் உபதேசங்களுக்கு முரணாக உள்ளன. இது தனக்கு திடீரென வெளிப்பாடு ஏற்பட்டது என்று கூறும் செய்தியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

சிலுவை மரணம் சாபத்திற்குரியதாக  பழய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததன் மூலம் அவரை உலகுக்கு முன் சபிக்கப்பட்டவராக அடையாளப்படுத்த வேண்டும் என்பது யூதர்களின் ஆசையாக இருந்தது. யூதர்களின் இந்த ஆசையை பவுல் வஞ்சப் புகழ்ச்சியின் மூலம் தன்னுடைய உபதேசங்களாக உள்ளவற்றில் வெளிப்படுத்துவதைப் பாருங்கள்:

"மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி,நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக மீட்டுக்கொண்டார்"  (கலாத்தியர் 3:13)

இறைதூதர்கள் அனைவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! சபிக்கப்பட்டவரை ஒரு வழிகாட்டியாக எவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவரை நோக்கி இவர் சபிக்கப்பட்டவர் என்றால் அவரை வழிகாட்டி என்று  அறிவுடையவர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஷைத்தானை சபிக்கப்பட்டவன் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இந்த பவுலோ இறைவனின் நேசத்திற்குரிய ஓர் அடியாரை சபிக்கப்பட்டவராக அறிமுகப் படுத்துகிறார். பவுலின் வார்த்தைகளில் ஒளிந்துள்ள தந்திரங்களை கிறிஸ்தவர்கள் அறிந்து சத்தியத்தின் பால் தன் கவனத்தைத் திருப்புவது நலம்! 

Wednesday, December 3, 2008

திரை விலகுகிறது! பவுலும் கிறிஸ்தவமும்! பாகம் - 7

பவுல் கூறுகின்றார் :

தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லக்கூடாது. சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? - ரோமர் 3:4-7

பவுல், தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்கைசயாக ஒப்புக்கொள்கின்றாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக புனித வேதமாக இடம்பெற்றுள்ளது.

பவுல் கூறுவதைக் கேளுங்கள் :

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். - 1 கொரிந்தியர் : 9:19-23


தான் ஒரு தந்திரக்காரன் என்று பவுல் ஒப்புக்கொள்வதையும் பாருங்கள் :

அப்படியாகட்டும். நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை. ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். - 2 கொரிந்தியர் 12:16

பைபிள் என்பது மனிதனின் கற்பனையிலும் கட்டுக்கதையிலும் உருவானது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன், வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்று இவ்வளவு தெளிவாகப் பவுலே வாக்குமூலம் தருகின்றார். கிறிஸ்தவ நன்பர்களே மேலே உள்ள பைபிளின் இந்த வாசகத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள். பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்று கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்துவிடுகின்றதல்லவா?

கர்த்தருக்காக பொய்சொல்லலாம் என்றும் கர்த்தருக்காக பச்சோந்திதனமாக எல்லாருக்கும் எல்லாமுமாக நடக்கலாம் என்று சொல்லும் பவுலின் வார்த்தைகள் அனைத்தும் கர்த்தரின் மூலம் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு தான் எழுதப்பட்டது என்று எப்படி நம்ப முடியும்? இந்த புதிய கிறிஸ்தவமதத்திற்கு சொந்தக்காரான பவுல், இயேசுவே சொல்லாத - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான, பழைய ஏற்பாட்டிற்கு எதிரான பல புதிய கொள்கையை இயேசு எனக்கு நேரடியாக போதிக்கின்றார் என்று சொன்ன அனைத்தும் பச்சைப் பொய்தானே?

இயேசு எனக்கு அதியசமான முறையில் காட்டியளித்தார். அதன் மூலம் அவர் என்னை தெரிந்தெடுத்துக்கொண்டார் என்று பவுல், இயேசுவை ஏற்றுக்கொண்டதாக சொன்ன சம்பவத்திலும் அதற்கு பிறகு சீஷர்களை சந்தித்தாக சொல்லப்பட்ட சம்பவத்திலும் எப்படிப்பட்ட பொய்கள் மலிந்து கிடக்கின்றது என்பதை சென்ற பதிவுகளில் நாம் எடுத்துக்காட்டினோம். நாம் எடுத்துக்காட்டிய அத்தனையும் உன்மை என்பது இந்த பவுலின் கூற்றின் மூலம் நிரூபனமாகின்றதல்லவா?

இதன் பிறகும் கூட பைபிளை இறைவேதம் எனவும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு எங்கேனும் இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள் :

என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும் என்னைச் சகித்துமிருககிறீர்களே. - 2 கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம். அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். - 2 கொரிந்தியர் 11:16,17

மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன். நீங்களே இதற்கு என்னைப் பல வந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்பட வேண்டியதாயிருந்ததே. - 2 கொரிந்தியர் 12:11

இவையாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும் பேசுவது ஆண்டவரல்லர், தம் தைரியத்திலேயே பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக்கொள்கிறார் பவுல். அந்த புத்தி கெட்ட உளறல்களும் பிறரது வற்புறுத்தலுக்காகவும் தன் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாகவும் - அது இடம்பெற்ற புத்தகம் இறைவேதமாகவும் இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளது. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிளை இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்? எங்களையும் நம்பச் சொல்கின்றீர்கள்?

மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள் :

மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது - 1 கொரிந்தியர் 7:12

அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். - 1 கொரிந்தியர் 7:25

ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும், தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன். - 1 கொரிந்தியர் 7:40

பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். - பிலமோன் - 1:19

இந்த வாக்கு மூலங்களிலிருந்து தெரிய வருவதென்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டுப் பவுல் என்ற சவுல் தமது சொந்த சரக்குகளைக் கலந்து வேதம் என்று அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்துப் புது மார்க்கம் கண்டார் என்பதை தவிர வேறன்ன?

பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் அந்தத் தடையை இவர் சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவை இவர் செய்தார். இவற்றையெல்லாம் இறைக்கட்டளைப்படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார்.

இப்படியெல்லாம் இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர் அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குகமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர் பலமுறை பல்டியடித்துள்ளதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்:

பின்பு அவர்கள் அவனைநோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாய் கூட்டங்கூடுவார்கள். ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும். அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகெண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும். அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள். விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருங்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும்சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும்வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான். - அப்போஸ்தலர் 21:20-26

பைபிள் என்பது பவுலும் அவரது கூட்டாளிகளின் சொந்தத் தயாரிப்பு என்பதும் அதில் கூறுகின்ற போதனைகளில் அவருக்கே உறுதி இல்லை என்பதும் கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும் மோசேயின் நியாயப்பிரமாணங்களை இவர் அலட்சியப் படுத்தியவர் என்பதும் இதன் மூலம் தெளிவாகின்றதல்லவா?

பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக்கொண்டிருக்கையில் கிறிஸ்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே.

இதில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்றைக்கு கிறிஸ்தவர்களில் பலர் நாங்கள் பரிசுத்த ஆவியின் உதவியால் நொண்டியை குணமாக்குகின்றோம், குருடர்களை பார்வையுடையவனாக்குகின்றோம், நோயை குணப்படுத்துகின்றோம் என்று பச்சையாக பொய் சொல்லி பல அப்பாவிகளை தங்கள் வழிக்குக் கொண்டுவருவதையும் அன்றாடம் பார்க்கின்றோம். இன்னும் சில போதகர்கள் தன்னை இயேசு ஒரு பெரிய கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கச் சொல்லியுள்ளார் என்றும் வேறு ஒருவர் இயேசு தன்னை டிவி சேனல் தொடங்க சொல்லியுள்ளார் என்றெல்லாம் புளுகுவதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய் சொல்வது தவறல்ல, அது நன்மையான ஒன்றே என்ற பவுலின் மேற்கூறப்பட்ட வசனங்களை வைத்தே அவர்கள் இப்படியெல்லாம் பொய்சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

ஒரு குருடனையே நொண்டியையோ அதிசயம் செய்து குணமாக்குகின்றேன் என்று ஒருபுறம் மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபுறம் இதே கிறிஸ்தவர்கள் மதமாற்றத்திற்காக மருத்துவமணைகளை நடத்துவது ஏன்? மக்களை ஏமாற்றத்தானே? அப்படி குருடணை குணமாக்குகின்றேன் - நொண்டியை நடக்க வைக்கின்றேன் என்று சொல்லக்கூடியவர்கள் தாங்கள் செட்டப்செய்து வைத்துள்ளவர்களைத்தான் குணமாக்குவதாக தங்களது நிகழ்ச்சிகளில் காட்டுவார்களே யொழிய நாம் ஒருவரைக் கொடுத்து இந்த நொண்டியை குணமாக்குங்கள், இந்த பார்வையுடையவனை பார்வடையச் செய்யுங்கள் என்று சொன்னால் அவர்களால் முடியுமா? (இதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களிடமும் சவாலாகவே கேட்கின்றோம்) ஆனால், முடியாது! காரணம் அவை அனைத்து மக்களை ஏமாற்றுவதற்காக அவர்களால் சொல்லப்படும் பச்சைப் பொய்! இதை மறுக்க முடியுமா? அப்படி முடியும் என்றால் பிறகு எதற்கு MBBS, MD, மருத்துவ கல்லூரி, மருத்துவ படிப்பு? இவற்றை எல்லாம் விட்டு விட்டு கிறிஸ்தவ போதகராக மாறி இந்த வேலையை செய்யத் தொடங்கி விடலாமே!

உன்மை இவ்வாறிருக்க இதையும் மீறி இன்றும் இவற்றை இவர்கள் சொல்லிக்கொண்டிருப்பதற்கு காரணம் கடவுளின் பெயரால் பொய்சொல்லி மக்களை ஏமாற்றி கிறிஸ்தவத்தின் பக்கம் எப்படியாவது அழைத்தால் அது தவறல்ல என்று பவுல் சொன்ன மேற்கூறப்பட்ட வசனங்கள் தானே அடிப்படை?

அது மட்டுமல்ல பல முஸ்லீம்கள் கிறிஸ்தவராக மாறினர், முஸ்லீம் போதகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார், ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து அதிசயமாக சந்தித்து அவருக்கு நீங்காத நோயை நீக்கினார், அதனால் அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டார் என்று இன்றைய கிறிஸ்தவர்கள் தங்கள் தளங்களில் எதையாவது எழுதிவைப்பதற்குக் காரணம் கர்த்தருக்காக பொய்சொல்லி கிறிஸ்தவத்திற்கு மகிமை ஏற்படுத்தலாம் என்ற பவுலின் இந்த வசனங்கள் தானே?

மொத்தத்தில் கிறிஸ்தவ மிஷி'நரி'களின் இந்த எல்லாவிதமான ஏமாற்று செயல்கள் அனைத்திற்கும் காரணம் கர்த்தருக்காக பொய்சொல்லலாம் -அதனால் நாம் பாவி என்று தீர்க்கப்படமாட்டோம் - இது போல் நான் பலருக்கும் அவர்கள் போலவே வேடமிட்டு நடித்துள்ளேன் - நானே நம்பாவதவற்றை நான் நம்பியது போல் அவர்களை ஏமாற்றினேன் - என்னை நீங்களும் பின்பற்றுங்கள் - என்று இன்றைய கிறிஸ்தவமதத்தின் சொந்தக்காரரான பவுல் சொன்ன இந்த தவறான உபதேசங்கள் தானே?

இவற்றைத்தான் பவுல் மற்றொரு வசனத்தில் மிகத் தெளிவாக சொல்லுகின்றார் :

இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோப்படுகிறேன், இன்னமும் சந்தோப்படுவேன். பிலிப்பியர் : 1:18

இப்பொழுது உன்மை புரிகின்றதா? எப்படியாவது - பொய்யைச் சொல்லியாவது - வஞ்சகம் செய்தாவது - கிறிஸ்தவத்தைப் பரப்பியாக வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறுகின்றார் என்றால் என்ன அர்த்தம்? சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!

இப்படி புதுமார்க்கம் கண்ட பவுலை எப்படி பரிசுத்த ஆவியால் பேசக்கூடியவர் என்றும், அவர் எழுதியதெல்லாம் புனித புத்தகம் என்றும் நம்ப முடியும்? யோசிக்க வேண்டாமா கிறிஸ்தவர்களே! இந்த பவுல் சொன்ன புதிய மார்க்கத்தை - பொய்யான போலியான மார்க்கத்தை விட்டு வெளியேறி சத்திய இஸ்லாத்தின் கருத்துக்களை சற்று ஆய்வு செய்யுங்கள்! சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

Sunday, November 30, 2008

திரை விலகுகிறது! பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 6

விருத்தசேதனம் - பைபிள் சொல்வது என்ன?

விருத்தசேதனம் (சுன்னத்) என்பது எந்த அளவுக்கு பாதுகாப்பு நிறைந்த, பல பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து மனிதனைத் பாதுகாக்கக்கூடிய ஒரு சிறந்த முறை என்பது பலரும் அறிந்ததே. விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்திலும் இதை யாராலும் மறுக்க முடியாது என்பதோடு இதை அனைவரும் செய்ய வேண்டும் என்றே மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

விருத்தசேதனம் என்ற முறை முதன் முதலில் கர்த்தரால், ஆபிரகாம் மூலம் அவர் காலம் முதல் இனி பிறக்கும் ஆண்மக்கள் அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்டது என்று பைபிள் கூறுகின்றது. அதை பழைய ஏற்பாட்டு வசனங்கள் பின்வருமாறு உறுதிபடுத்துகின்றது:

'உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். - ஆதியாகமம் 17: 6

நான் உனக்கும் எனக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனது சந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கைத் தொடரும். நான் உனக்கும் உனது சந்ததிக்கும் தேவன் - ஆதியாகமம் 17:7 (WBTC தமிழ் மொழிப்பெயர்ப்பு)

எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். - ஆதியாகமம் 17:10-11

உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணவேண்டியது அவசியம். இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. - ஆதியாகமம் 17:13

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். - ஆதியாகமம் 21:4

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். - லூக்கா 2:21

விருத்தசேதனம் என்பது கர்த்தரால், முடிவில்லாத - நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்ட - கண்டிப்பாக அனைவரும் செய்யவேண்டும் - என்று வலியுறுத்தப்பட்ட ஒரு சட்டம் என்பது மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தப்படுகின்றது.

ஆனால், இயேசுவை அதிசயமாக தரிசித்ததாக (?) ஒரு பொய்யைச்சொல்லி தன்னை கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்று சொல்லிக்கொண்ட பவுல், நியாயப்பிரமாணங்களை - மோசேயின் சட்டங்களை பின்பற்றுவது தனது புதிய கொள்கையின் படி தேவையற்றது என்று போதித்ததுடன் அதை பின்பற்றுபவன் இரட்சிப்பை பெற முடியாது என்றும் கூறினார் என்பதை சென்ற பதிவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மக்களை இயேசு போதித்த கொள்கையிலிருந்து வழிகெடுக்க பவுல் கையில் எடுத்த மிக முக்கியமான நடைமுறை, கர்த்தரால் அனைத்து ஆண்மக்களுக்கும் செய்யப்படவேண்டிய நித்திய உடன்படிக்கை என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட விருத்தசேதனம் என்ற முறையையே! காரணம் அன்றைய கால மக்கள் எந்த சட்டத்தை பின்பற்றினார்களோ இல்லையோ அனைத்து ஆண்மக்களுக்கும் கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று கர்த்தரால் வலியுறுத்தப்பட்ட விருத்தசேதன முறையை மிக அவசியமானது என்றென்னி செய்துவந்தனர். காரணம் அதை விடுபவன் 'ஜனத்தில் இராதபடிக்கு அருப்புண்டு போவான்' என்று கர்த்தர் இட்ட சாபமே என்பதை பைபிளின் மூலம் தெரியப்படுத்தப் படுகின்றது :

நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். - ஆதியாகமம் 17:14

இந்த அளவுக்கு வலியுறுத்திச் சொல்லப்பட்ட, கர்த்தரின் இந்த நித்திய உடன்படிக்கையை விட்டும் மக்களை திசைத்திருப்பி விட்டால் தனது தவறான கொள்கைகளை இலகுவாக திணித்துவிடலாம் என்ற எண்ணத்துடன், தனது புதிய கொள்கையின் மூலம் இதை தேவையற்ற ஒன்று - இதை செய்வதால் எந்த ஒரு பலனும் இல்லை என்று போதிக்கத் தொடங்கினார் பவுல். அதுவும் இந்த தவறான கொள்கையை காத்தரின் பெயராலும், பழைய ஏற்பாட்டை தானும் பின்பற்றியதுடன் மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்திச் சொன்ன இயேசுவின் பெயராலும் போதிக்கத் தொடங்கினார் :

இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒருபிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். - காலத்தியர் : 5: 2

கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். - காலத்தியர் : 5: 6

பவுல் சொல்வது போன்று விருத்தசேதனம் செய்வதால் கிறிஸ்துவினால் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது என்றால் அதை பவுலின் காலத்திலேயே வாழ்ந்த இயேசு கிறிஸ்துவே போதித்து விட்டு சென்றிருப்பாரே? அவர் யாரையும் செய்யாதீர் அதனால் எந்த ஒரு பலனும் - புண்ணியமும் இல்லை என்று கூறியிருப்பாரே? ஏன் அப்படி கூறவில்லை. மாறாக, நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட சட்டங்களை செய்யாதே என்று போதிப்பவன் வழிகேடன் - எனது கொள்கைக்கு மாற்றமானவன் என்று தானே போதித்தார் என்பதை எல்லாம் கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

நித்திய உடன்படிக்கை என்றால் என்ன?

அது மட்டுமல்ல மேலே நாம் எடுத்துக்காட்டிய ஆதியாகமம் வசனங்களில் இந்த விருத்தசேதன முறையை கர்த்தர் மனிதனுக்கு ஏற்படுத்திய நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படி என்றால் என்ன?

'இனி மாற்றப்படவே முடியாத நிலையான ஒன்று' அல்லது 'முடிவில்லாத ஒன்று' என்றும் அர்த்தம் வரும். இது ஏதோ சக மனிதர்களுக்குள் செய்துக்கொண்ட ஒப்பந்தமாக பைபிள் சொல்லவில்லை. மாறாக கடவுள் ஆபிரகாமுக்கு செய் என்று கட்டளை இட்டதுடன் இதை அனைவரும் செய்தே ஆகவேண்டும் என்றும் இது நித்திய உடன்படிக்கை - இதை செயல்படுத்தாதவன் 'அறுப்புண்டு போவான்' என்று வலியுறுத்தவும் செய்கின்றார். இதை இயேசுவும் செய்திருக்கின்றார். (பைபிளின் படி) அனைவரும் நியாயப்பிரமானங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசு வலியுறுத்தியிருக்கின்றார். அதை நானும் பின்பற்றத்தான்வந்துள்ளேன், நீங்களும் பின்பற்றுங்கள் என்றும் சொல்லியிருக்கின்றர். ஆனால் இவற்றுக்கெல்லாம் மாற்றமாக, அதே இயேசுவின் பெயராலேயே கர்த்தரின் மாற்றப்படமுடியாத நித்திய உடன்படிக்கையை எதிர்த்து தனது தவறான கொள்கையை போதிக்கின்றார் பவுல். இவரின் இந்த தவறான வழிகாட்டுதலைத் தான் இன்றைய கிறிஸ்தவர்களும் பின்பற்றிக்கொண்டிருக்கின்றனர்.

சரி இவரின் இந்த கூற்றிலாவது உறுதியாக இருந்தாரா? என்றால் அதுவும் கிடையாது. இவர் விருத்தசேதனம் தேவையில்லை என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலத்திலேயே, வேறு ஒருவருக்கு இவரே விருத்தசேதனம் செய்துவிட்டதாக அப்போஸ்தலருடைய நடபடிகள் கூறுகின்றது:

'அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.' - அப்போஸ்தலர் 16 : 3

கடவுலின் பெயரால் போதிக்கக்கூடியவர் - உன்மையில் அது தான் சரியானதாக இருந்தால் அதை யாருக்கும் அஞ்சாமல் நெஞ்சுறுதியுடனல்லவா போதித்திருக்க வேண்டும்? இவர் சாதாரனமான பாமரனாக இருந்தால் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால், பரிசுத்த ஆவி என்ற 'பவர் ஃபுல் சக்தி' தனக்கு வழிகாட்டுகிறது(?) - அது தன்னைப் பாதுகாக்கின்றது(?) என்று சொல்லிக்கொண்டவர், அதன் மூலம் பல அதிசயங்களை செய்தவர்(?) மற்றவனுக்கு பயந்து செயல்படவேண்டிய அவசியம் என்ன? இந்த பொய்யான நயவஞ்சகத்தனமான வேலை எதற்கு? விருத்தசேதனம் தேவையற்றது என்றால் அதை ஏன் அடுத்தவனுக்கு செய்து விடவேண்டும்? தனது கொள்கை உன்மையானதாக இருந்தால் அதையாருக்கும் அஞ்சாமல் உரத்து சொல்லவேண்டியது தானே? இதன் மூலமே பவுல் எப்படிப்பட்டவர் என்பது புரிகின்றதல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே!(பவுல் எப்படிப்பட்டவர் என்பதற்கு அடுத்த கட்டுரைகளில் விரிவான விளக்கம் வருகின்றது இறைவன் நாடினால்...)

இவரைப் போன்றவர்களைக் குறித்து தான் இயேசு கூறினார் :

ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். - மத்தேயு 5:19

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. - மத்தேயு 23:23

இந்த இயேசுவின் போதனைகள் அனைத்தும் (பரிசேயரைச் சேர்ந்த ) இந்த பொய்யர் பவுலுக்குப் பொருந்துகின்றதா இல்லையா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே! நீங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுகின்றோம் என்றப்பெயரில் இயேசுவைப் பின்பற்றுகின்றீர்களா அல்லது பவுலைப் பின்பற்றுகின்றீர்கள் சிந்தியுங்கள் சகோதரர்களே!


மீண்டும் நினைவுட்டுகின்றோம். இந்த விருத்தசேதனம் :

கர்த்தரால் சொல்லப்பட்ட கட்டாயம் செய்யபட வேண்டிய நித்திய உடன் படிக்கை என்று பைபிள் கூறுகின்றது. இந்த உடன்படிக்கையில் மாற்றமோ - முடிவோ ஏற்படாதவகையில் இருக்கவேண்டும் என்பதற்காக இது முடிவில்லாத - நித்திய - உடன்படிக்கை என்று கார்த்தரால் சொல்லப்பட்டது. 'இந்த உடன்படிக்கை உனக்கு மட்டுமல்லாமல் உனதுசந்ததிக்கும் உரியதாகும். என்றென்றைக்கும் இந்த உடன்படிக்கைத் தொடரும். (ஆதியாகமம் 17:7 (WBTC மொழிப்பெயர்ப்பு))

விருத்தசேதனம், இயேசுவால் செயல்படுத்தப்பட்டதுடன், (விருத்தசேதன சட்டம் இடம்பெற்றுள்ள) நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டவைகளை அனைவரும் செயல்படுத்த வேண்டும் என்றும், அவைகளில் சொல்லப்பட்டவைகளை செய்யாதவனும், தானும் பின்பற்றாததுடன் மற்றவர்களை பின்பற்றவேண்டாம் என்று சொல்பவனும் வழிகேடன் என்றும் சொல்லப்பட்டது.

மட்டுமல்ல, மருத்துவ ரீதியாக இது மனிதனுக்கு பயனள்ள முறை என்பதும், பாலியல் ரீதியான பல பிரச்சனைகளிலிருந்து மனிதனைப் பாதுகாக்கக்கூடிய மிக சிறந்த வழிமுறை என்றும் மருத்துவர்களால் வலியுறுத்தப்படுகின்றது.

இவற்றில் எந்த ஒன்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான சம்பவத்தின் மூலம் இயேசுவை தரிசித்தேன் என்று சொல்லிக்கொண்ட பவுலின் தவறான கொள்கையையே தற்போது பின்பற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே!

கார்த்தரின் உடன்படிக்கை என்ற வகையிலாவது அல்லது இயேசுவின் போதனை என்ற வகையிலாவது, அல்லது மருத்துவரீதியிலாவது - எப்படிப் பார்த்தாலும் எல்லாவகையிலும் நன்மை பெற்றுத்தரக்கூடிய இந்த முறையை - செயல்படுத்தவேண்டிய இந்த சட்டத்தை - பவுல் சொன்னார் என்பதற்காக உங்களின் அறியாமையால் நன்மையை இழந்துக்கொண்டிருக்கின்றீர்கள் சகோதரர்களே!

இப்படி நீங்கள் பவுலை பின்பற்றுவதால் (இயேசுவின் போதனைப்படி) மரணத்திற்குப் பிறகு வரும் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பதும் அரிது, விஞ்ஞானிகள் சொல்வது போல் இந்த முறையை கைவிடுவதால் இவ்வுலக வாழ்விலும் பல சிரமங்கள்... இது தேவையா? சிந்தியுங்கள் சகோதரர்களே!.

இயேசுவின் பெயரால் அவருக்கு எதிராக இன்னும் எத்தனை எத்தனை குளறுபடிகளை பவுல் செய்துள்ளார் என்பதை அடுத்தடுத்து பதிவுகளில் பார்ப்போம்.

Egathuvam

Friday, November 28, 2008

திரை விலகுகிறது!பவுலும் கிறிஸ்தவமும் - பாகம் 5

நியாயப்பிரமாணத்தை பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டுமா?
___________________________________________________________
நியாயப்பிரமாணங்களை கர்த்தரின் கற்பனைகளை - பின்பற்றுவது தேவையற்றது என்று போதித்தால் தான் அதற்கு மாற்றமான தனது புதிய கொள்கைகளைப் திணிக்க முடியும் என்பதற்காக, அவை அனைத்தும் ஏட்டளவில் தானேயொழிய செயலளவில் தேவை இல்லை, அவை பலவீனமாகிவிட்டது, பயணற்று போய்விட்டது, அதைப் பின்பற்றுபவன் இரட்சிப்பைப் பெறமுடியாது, இயேசு தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக்கொடுத்ததன் மூலம் நம்மை நியாயப்பிரமானத்தை விட்டும் நீங்களாக்கினார் என்று தனது புதிய கண்டுபிடிப்பை - தனது துர் போதனைகளை போதிக்க தொடங்கினார் பவுல். இவை தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகவும் இருக்கின்றது. இன்றைய சர்ச்சுகள் போதிப்பதும், இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதும் பவுலின் இந்த சொந்தக்கற்பனையையே அன்றி இயேசுவின் கொள்கைகளையோ அல்லது இயேசு போதித்த கோட்பாடுகளையோ அல்ல. உன்மையில் சொல்லப்போனால் இயேசுவுக்கும் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றிக்கொண்டிருக்கும் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

பவுலின் இந்த புதிய கொள்கை என்பது முழுக்க முழுக்க இயேசுவின் கொள்கைக்கு மாற்றமானதும் அவரின் போதனைகளுக்கு எதிரானதுமாகும் என்பதை இன்றைய பைபிளே தெளிவுபடுத்துகின்றது. உன்மையில் நியாயப்பிரமானங்கள் குறித்தும், கர்த்தரின் கற்பனைகள் குறித்தும் இயேசுவின் போதனை தான் என்ன?

நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல. நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதையெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிரா விட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-20)

இந்த வசனங்களின் மூலம் நியாயப்பிரமாணம் மற்றும் பழைய ஏற்பாட்டைப் பற்றிய இயேசுவின் நிலைபாடு என்ன வென்று தெளிவாக புரிந்திருக்கும்.

இயேசு இந்த வசனங்களின் மூலம் நியாயப்பிரமானத்தை தான் அழிக்கவரவில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதோடு, அதை நிறைவேற்றவே - அதை செயல்படுத்தவே - வந்தேன் என்பதையும் உறுதிப்படுத்துகின்றார். அது மட்டுமல்ல நியாயப்பிரமானத்தை கைக்கொள்ளுவதன் மூலமே ஒருவன் பரலோக இராஜ்ஜியத்தில் பெரியவன் என்பபடுவான் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளவைகளை மீறி செயல்படுவதுடன், அதையே மற்றவர்களுக்கும் போதிப்பவன் பரரோக இராஜ்ஜியத்தில் சிறியவன் எனப்படுவான் - அவன் வழிகேடன் - என்றும் போதிக்கின்றார். இது பற்றி இயேசு சொன்ன வார்த்தைகளை நன்கு கவனிக்க வேண்டும்:

இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.

இந்த வசனங்களை WBTC பைபிளின் மொழிபெயர்ப்பில் இன்னும் தெளிவாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்:

... ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக் கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதை கடைப்பிடிக்க வேண்டாமென்று கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால் கட்டளைகளை கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்க சொல்லுகிறவன் பரலோக இரஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பிடிப்பான் - மத்தேயு 5:19

இப்படிப்பட்ட இயேசுவின் எச்சரிக்கைளுக்கு மாற்றமாக - அவரின் இந்த வார்த்தைகளுக்கு நேர் முரணாக - இயேசுவை அதிசயமான முறையில் தரிசித்ததாக ஒரு பொய்யை சொல்லி தனக்கு இயேசுவே நேரடியாக போதிக்கின்றார் என்று சொன்ன பவுல், எப்படிப்பட்ட ஒரு தவறான கொள்கையை - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான ஒரு கொள்கையை - போதிக்கின்றார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நியாயப்பிரமானத்தை பின்பற்றாதே என்று சொல்பவன் வழிகேடன், அப்படிப்பட்டவன் இரட்சிப்பை பெறமுடியாது என்று இயேசு தெளிவாக சொல்லியிருக்க அதற்கு மாற்றமாக போதிக்கும் பவுலின் கொள்கை எப்படி பரலோக இராஜ்யத்தைப் பெற்றுத் தரும்? இவரின் கொள்கையைப் பின்பற்றுபவன் எப்படி நித்திய ஜீவனை அடைய முடியும்? என்பதை கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

அது மட்டுமல்ல இயேசு தன் சீடர்கள் உட்பட அனைவரும் யூதர்களைக் காட்டிலும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டதை - நியாயப்பிரமாணத்தை - அதிகம் பின்பற்ற வேண்டும் என்றே வலியுறுத்தினார் என்று பைபிள் கூறுகின்றது :

'பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள். அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.' - மத்தேயு - 23:1-3

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக, மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்திருக்கக்கூடியவர்கள் - நியாயப்பிரமாணத்தை - மோசேயின் சட்டங்களைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்கள் - சொல்வது போன்று நியாயப்பிரமாணங்களை - கர்த்தரின் கற்பனைகளை - நிங்களும் பின்பற்ற வேண்டும் அதன்படி செயல் படவேண்டும் என்று தனது சீஷர்களுக்கும், மக்களுக்கும் உபதேசிக்கின்றார்.

(பைபிளின்படி) தான் மட்டுமல்ல தன்னைப் பின்பற்றும் அனைவரும் நியாயப்பிரமாணத்தை - பழைய ஏற்பாட்டை - பின்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கொள்கை - அவரது நிலைபாடு என்பது மிகத் தெளிவாக மேற்கூறப்பட்ட வசனங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தப் படுகின்றது. இப்படி மக்களுக்கும் தனது சீஷர்களுக்கும் தெளிவாக உபதேசித்திருக்க சில ஆண்டுகளிலேயே அதற்கு மாற்றமாக பவுலுக்கு எப்படி நியாயப்பிரமாணம் தேவையற்றது பலவீனமடைந்துவிட்டது அதை பின்பற்றத் தேவையில்லை என்று இயேசு சொல்லியிருப்பார்? அப்படி நியாயப்பிரமானமும் கர்த்தருடைய கற்பனைகளும் தேவை இல்லை என்றால் அதை அவரே சொல்லியிருக்கலாமே? ஆனால் அதற்கு மாறாக பவுல் போன்று நியாயப்பிரமானம் தேவையற்றது என்று போதிப்பவன் வழிகேடன் - பரோலக இராஜ்யத்தில் சிரியவன் எனப்படுபவன் என்று தானே போதித்தார்!

இதுமட்டுமல்ல ஒருவன் இயேசுவிடம் நித்திய ஜீவனை அடைவதற்கு என்ன செய்யவேண்டும்? எதைப் பின்பற்றவேண்டும் என்று கேட்கின்றான். அதற்கு இயேசு சொன்ன பதிலைப் பாருங்கள் :

அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். - மத்தேயு 16-19

இயேசுவின் போதனைகள் அனைத்தும் இப்படித்தான் இருந்தது. (பைபிளின்படி) இயேசுவைப் பொருத்தவரையிலும் பழைய ஏற்பாட்டைப் பொருத்தவரையிலும் நியாயப்பிரமானத்தைத் உறுதியாகப் பிடித்து அததைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் அதற்கு மாற்றமாக இயேசுவிற்குப் பிறகு ஒரு பொய்யான சம்பவத்தின் மூலம் அவரை தரிசித்ததாக கூறிய பவுல், தனது தவறான கொள்கையை அதே இயேசுவின் பெயராலேயே மக்கள் மத்தியில் திணிக்கின்றார். அதை தனது எபிரேயர் என்ற புத்தகத்தில் பின்வருமாறு தெரியப்படுத்துகின்றார்:

முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை. அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். - எபிரேயர் - 7:18-19

இந்த வசனத்தின் மூலம் இயேசுவுக்கு முன்னும் இயேசுவும் போதித்த அனைத்தும் பவவீனமடைந்து விட்டதாகவும் பயனற்று போய்விட்டதாகவும் அதனால் மாற்றப்பட்டது என்றும் பவுல் கூறுகின்றார். அது மட்டுமல்ல நியாயப்பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை என்றும் அதிக நன்மையான நம்பிக்கையை அது வருவிக்கவில்லை என்றும், எனவே அது மாற்றப்பட்டது என்றும் தன் சுய கருத்தை தினிக்கின்றார்.

பவுலின் இந்த புதிய கொள்கையின் மூலம் எப்படிப்பட்ட தவறான - இயேசுவின் போதனைகளுக்கு எதிரான ஒரு கொள்கையை போதிக்கின்றார் நாம் கவனிக்க வேண்டும். நியாயப்பிரமாணம் உட்பட முந்தின கட்டளைகள் அனைத்தும் பலவீனம் அடைந்து விட்டதாம். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லையாம். அது அதிக நன்மையையும் நம்பிக்கையையும் வருவிக்கவில்லையாம். அதனால் மாற்றப்பட்டு இவர் புதிய கொள்கையை போதிக்கின்றாராம். இதை எப்பொழுது சொல்லுகின்றார்? இயேசுவிற்குப் பிறகு 1000 ஆண்டுகள் கழித்தா? அல்லது 500 ஆண்டுகள் கழித்தா? அல்லது 200 ஆண்டுகள் கழித்தா? இல்லையே! இயேசுவிற்குப் பிறகு ஒரு சில ஆண்டுகளில் இந்தக் கருத்தை இவர் சொல்கின்றார்? அது உன்மையாக இருந்தால் அதை அதேகாலத்தில் வாழ்ந்த இயேசுவே போதித்துவிட்டுப் போயிருப்பாரே? அப்படி நியாயப்பிரமானம் பலவீனமடைந்துவிட்டது என்றால் அதை இயேசுவும் அறிந்திருப்பாரே? அது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை என்று தன் வாழ்நாளிலேயே சொல்லியிருப்பாரே? அப்படியா சொன்னார்? இல்லையே! மாறாக இயேசு தனது வாழ்நாள் முழுவதும் பல எதிர்ப்புகளையும் மீறி நியாயப்பிரமானத்தை பின்பற்றுங்கள், மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் பின்பற்றுங்கள் என்று தானே போதித்தார். அது மட்டுமல்ல, இந்த நியாயப்பிரமானத்தை தானும் பின்பற்றாததுடன் மற்றவர்களையும் பின்பற்றக்கூடாது என்று சொல்பவன் வழிகேடன் என்றும் போதித்தார்.

அடுத்து பவுலின் இந்தக் தவறான கருத்துக்கு மாற்றமாக உள்ள பைபிளின் மற்ற வசனங்களை பாருங்கள்:

கர்த்தரின் கட்டளைகள் எப்படிப்பட்டது என்பது குறித்து பழைய ஏற்பாடு சங்கீதம் கூறுகின்றது :

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. - சங்கீதம் 19:7,8

உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். சங்கீதம் - 119 : 160

இந்த வசனங்களின் மூலம் கர்த்தரின் வேதம் எவ்வளவு பெரிய பலமிக்கது என்று சொல்வதுடன் ஆத்துமாவை உயிர்பிக்கக்கூடியது, பேதையை ஞானியாக்கும் சக்தி உடையது என்று சொல்லப்பட்டிருக்க அதற்கு மாற்றமாக முந்தைய கட்டளைகள் பலவீனமடைந்துவிட்டதாகவும் பயனற்றுபோய் விட்டதாகவும், நம்பிக்கையை பூரணப்படுத்தவில்லை என்றும் பவுல் சொல்வது அனைத்தும் தனது சுயகருத்து - சாத்தானின் தூண்டுதலால், இயேசுவிற்கு மாற்றமாக சொல்லப்பட்ட கருத்து என்பது தெளிவாகின்றதல்லவா? பவுல் சொல்லுவது சரி என்றால் இந்த சங்கீதம் வசனங்கள் தவறென்றாகிவிடும். காரணம் சங்கீதம் வசனங்கள் கர்த்தருடைய வேதமும் கட்டளைகளும் எப்படிப்பட்ட பலமிக்கதென்று தெளிவாகவே சொல்லுகின்றது.

அது மட்டுமல்ல இது போன்ற பைபிள் வசனங்களுக்கு மாற்றமாக இயேசு போதித்த கொள்கைகளுக்கு மாற்றமாக பவுல் சொல்லும் புதிய கொள்கைகளைப் பாருங்கள் :

நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. - ரோமர் 6:14

நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. - காலத்தியர் 2:16

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். - ரோமர் 7: 4

ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்;;பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. - காலத்தியர் : 5:18

சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து,... - எபேசியர் 2:15

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம். (கலாத்தியர் 3:15)

அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். - ரோமர் 7:4-6

இவை அனைத்தும் இயேசு வலியுறுத்தி சொன்ன கொள்கைளுக்கு மாற்றமாக - பைபிளின் எண்ணற்ற வசனங்களுக்கு மாற்றமாக - இயேசுவிற்குப் பின் சில ஆண்டுகளில் இந்த புதிய கொள்கையை திணிக்கின்றார் பவுல். இயேசுவால் பரலோக இராஜ்யத்தில் சிரியவன் எனப்படுவான் என்று எவர்களைக் குறித்து கூறினாரோ அந்த கொள்கையைத்தான் போதிக்கின்றார் பவுல். பவுலின் இந்த கோட்பாட்டுகளைத் தான் இன்றைய கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றார்களே யொழிய இயேசு போதித்த கொள்கையை அல்ல. இயேசுவை அவர்கள் ஒரு போதும் பின்பற்றவில்லை. இன்னும் சொல்லப்போனால் பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் போதனைகளின் படி பவுல் சொல்வதைப் பின்பற்றுபவன் இரட்சிப்பைப் பெறமுடியாது, அவன் வழிகெட்ட பாதையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றான் என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

அடுத்து இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். இன்றைய கிறிஸ்தவர்கள் பலர் இயேசு சொல்வது போல் நியாயப்பிரமானங்களையும் கர்த்தரின் கற்பனைகளையும் பின்பற்றுவதா அல்லது அவருக்கு மாற்றமாக சில ஆண்டுகள் கழித்து புதிய கருத்துக்களை போதித்த பவுல் சொல்வதைப் பின்பற்றுவதா என்று சரியான ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தங்களுக்குள்ளேயே ஒரு குழப்ப நிலையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. நியாயப்பிரமாணத்தை - பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது கூடாதா? என்று சில கிறிஸ்தவ தளங்களில் விவாதங்கள் வைக்கப்பட்டு - பவுல் சொன்ன புதிய கொள்கையின் படி அந்த நியாயப்பிரமாணத்தையும் பத்துக்கட்டளைகளையும் பின்பற்றுவது தவறு என்று ஒரு சிலரால் வலியுறுத்தப்படுவதுடன் அதற்கு என்ன பதில் சொல்வது என்று திணறும் பல கிறிஸ்தவர்களின் பரிதாப நிலையையும் காண முடிகின்றது. அது மட்டுமல்ல, அந்த பதிவையே சில நாட்களில் வஞ்சகத்தனமாக தளநிர்வாகிகளால் நீக்கப்படும் கொடுமையும் நடக்கின்றது. காரணம் பவுலை பின்பற்றுவதா அல்லது இயேசுவை பின்பற்றுவதா என்ற குழப்பமே. ஏனெனில் பவுலை பின்பற்றினால் இயேசுவை பின்பற்ற முடியாது. இயேசு சொல்வதை பின்பற்றினால் பவுலுக்கு எதிரானதாக அது ஆகிவிடும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இயேசுவின் கொள்கைகளுக்கு எதிரான பவுலுடைய வழிகெட்ட போதனையும் குழப்பமான கருத்தும் பைபிலிலேயே இடம்பெற்றுள்ளதுடன், அந்த பவுல் சொல்லும் அனைத்தும் பரிசுத்த ஆவியின் மூலம் சொல்லப்பட்ட வசனங்களே என்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பதும் தான் கொடுமையிலும் கொடுமை.

பவுல் தனது புதிய கொள்கைகள் மூலம் இயேசு போதித்த அவர் பின்பற்றிய, கர்த்தர் பழைய ஏற்பாட்டு வசனங்களின் மூலம் இனி வரும் அனைவரும் பின்பற்றியே ஆகவேண்டும் என்று வலியுறுத்திய எண்ணற்ற சட்டங்களை தனது மனோ இச்சையின் மூலம் கடவுளின் பெயராலும் இயேசுவின் பெயராலும் மாற்றி அமைக்கின்றார். அவற்றில் சிலவற்றை இனி காண்போம்.....

Thursday, November 27, 2008

பவுலின் காலத்தில் போதிக்கப்பட்ட வேறொரு சுவிஷேஷம் என்றால் என்ன? பாகம் 4

இயேசுவின் மாக்கத்திற்கு பரம எதிரியாக இருந்த பவுல் இயேசுவை திடீரென ஏற்றுக் கொண்டு இயேசு போதித்த அந்த போதனைகளை போதித்தாரா? உண்மைக்காக மதம் மாறியிருந்தால் அவ்வாறு தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்ததோ வேறு. அவரின் பிரச்சாரத்திற்கு கிறிஸ்தவ மத சர்ச்சிலேயே கடும் எதிர்ப்பு. ஏன் இயேசுவின் நேரடி சிஷ்யர்களே கடுமையாக எதிர்க்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமோ பவுலின் வேதத்தை தவிர வேறெதுவுமில்லை.

பவுல் பிரச்சாரம் செய்தது தான் என்ன? அது இயேசுவின் பிரச்சாரத்தோடு ஒத்திருந்ததா? பவுலின் பிச்சாரத்திற்கு எதிர்ப்பு இருந்ததா? அப்படி இருந்திருந்தால் அது எத்தகைய எதிர்ப்பு?

பவுல் பிரச்சாரம் செய்த காலத்திலேயே "வேறொரு சுவிசேஷத்தை", "வேறொரு இயேசுவைப்" பற்றிய பிரச்சாரம் அங்கே இருந்து வந்தது.

உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்க திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிஷேத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான். மேலும் சகோதரரே, என்னால் பிரசங்கிப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். (கலாத்தியர் 1:6-12)

ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்தது போல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் ப்றிற உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாக வெறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக் கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. மாக பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன். (2 கொரிந்தியர் 11:3-6)

இயேசுவின் நேரடி அப்போஸ்தலர்களிமிருந்து கற்றதாக பவுல் ஒரு போதும் சொன்னதில்லை. அது மாத்திரமல்லாமல் அது தேவையுமில்லை என்று அவர் கூறுகின்றார். ஏனெனில், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் எனப் பவுல் கூறுகின்றார்.

பவுலின் இந்தக் கூற்று நன்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவர் பிரச்சாரம் செய்தது இயேசு செய்த அதே பிரச்சாரம்; தான் என்றால் அதற்கு சாட்சியாக இயேசுவின் நேரடி சீடர்களை கோடிட்டு காட்டி என் பிரச்சாரமும் அவர்கள் பிரச்சாரமும் ஒன்று தான் என்று கூறியிருக்க முடியும். இவர் பிரச்சாரம் செய்வது இயேசுவின் நேரடி சீடர்களின் பிரச்சாரத்திற்கு நேர் எதிராக இருந்தால் அவர் நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை. இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவரின் வார்த்தையில் கிறிஸ்துவத்தின் கொள்கை அமைக்கப்பட்டிருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது தான். இவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட கதையும், அவர் இயேசுவோடு உரையாடியாதாக சொல்லப்பட்ட சம்பவகளும் எந்த அளவுக்கு முரண்பாடுகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் மேலே கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

பைபிள் ஆராய்ச்சியாளர்களுக்கு மேற்கண்ட பவுலின் கூற்று பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலில் : உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகின்றேன் என்றால் என்ன?

கிறிஸ்துவின் கிருபையினாலே அழைப்பது என்றால் என்ன எனத் தெரிந்தால் தான் பவுல் அவர்கள் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று சொல்வதன் முழு அர்த்தம் என்ன என்பது தெரிய வரும்.

இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசிகளுக்குக் கீழப்படிந்து நியாயப்பிரமாணங்களில் உள்ளவற்றைப் பின்பற்றி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட வாழ்க்கை வாழும் போது தான் நிலையான பெருவாழ்வை - பரலோக இராஜ்ஜியத்தை - மனிதன் அடைய முடியும் என்பது அனைத்து தீர்க்கதரிசிகளின் போதனையாயிருந்தது.

ஆனால் பவுலோ இதற்கு முற்றிலும் மாற்றமாக பிரச்சாரம் செய்தார். நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுவதெல்லாம் இயேசுவிற்கு முன்பு வரைதான். இயேசு தன்னைத் தானே சிலுவையில் ஒப்புக் கொடுத்து நம்மை கிருபைக்கு உள்ளாக்கி விட்டார். ஆகவே நியாயப் பிரமாணங்களைப் பின்பற்றத் தேவையில்லை. இனி இயேசு நம்மை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கவே தம்மை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார் என்று நம்பினால் போதும். நியாயப்பிரமாணங்களை கைக்கொள்ள வேண்டியதில்லை. இவை எல்லாம் பவுலின் வாதம். அதானல் தான் பவுல் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்கு திரும்புகிறதைப் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன் என்று கூறுகின்றார்.

இதோ நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோசனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும், விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். நியாயப் பிரமாணத்திலினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். (கலாத்தியர் 6:2-4)

அதாவது இவரின் புதிய போதனையின் படி கிறிஸ்துவை நம்பி விட்டால் நியாயப்பிரமாணத்திற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லை. கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையையே உங்களுக்கு நிலையான பெருவாழ்வை அளிக்க போதுமானதாக இருக்கும் போது நியாயப் பிரமாணம் உங்களைக் காப்பாற்றும் என்று நீங்கள் எண்ணினால் அந்த விசுவாசம் உங்களிடம் இல்லை என்று அர்த்தம். இதைத் தான் பவுல் அவர்கள் : நியாயப் பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டுப் பிரிந்த கிருபையினின்று விழுந்தீர்கள் என்று கூறுகின்றார்.

பவுல் மேலும் கூறுகின்றார் : நீதியானது நியாயப்பிரமாணத்தினால் வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே. (கலாத்தியர் 2:21)

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின் மேல் விசுவாசிகளானோம். (கலாத்தியர் 3:15)

இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டால் நீதிமான்களாக்கப்படுவோம் என்று பவுல் சொல்வது என்ன என்பதை வாசகர்கள் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். பவுல் கூறும் விசுவாசம் என்பது இயேசுவை இறைமகன் என்றோ, இறைத்தூதர் என்றோ மாத்திரம் விசுவாசித்து விட்டு நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தால் அந்த விசுவாசம் விசுவாசமே அல்ல. அதனால் பலனும் இல்லை. ஆனால் இயேசுவின் மேலுள்ள விசுவாசம் என்னவெனில், அவர் நம்மை நியாயப்பிரமாணங்களிலிருந்து விடுதலையாக்கும் பொருட்டு தன்னுடைய உயிரைக் கொடுத்து விட்டார் என நம்பி நியாயப்பிரமாணத்தை கைவிட்டு விட வேண்டும். இது தான் பவுல் கூறும் இயேசுவின் மேலுள்ள விசுவாசம். பவுலின் இந்தப் பிரச்சாரம் நன்கு கவனிக்கப்பட வேண்டியதும், ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியதுமாகும்.

பவுலை எதிர்த்து "சுவிசேஷத்தையும்'', ''வேறொரு இயேசுவையும்'', பிரச்சாரம் செய்தவர்கள் இயேசுவின் மீது விசுவாசம் கொள்ளாமல் இருந்தனரா? அவர்கள் இயேசுவின் மீது விசுவாம் கெர்ணடிருந்தனர். ஆனால் அவர்களுக்கும் பவுலிற்கும் இடையே உள்ள கருத்து வேற்றுமை என்ன? அவர்கள் இயேசுவை இறைவனால் அனுப்பப்பட்டவர் என்று ஏற்றுக் கொண்டு இறைவனின் கட்டளைகளை பின்பற்றி அவனுக்குக் கீழ்ப்படிந்தால் தான் இறைவனின் திருப்தியும் நீதியும் கிடைக்கும் என நம்பினர். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? மனிதர்களை பாவங்களிலிருந்தும் நியாயப்பிரமாணங்களிலிருந்தும் விடுவிக்கவே இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கொள்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்.

சகோதரரே..! இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தை பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்ககும் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டு போனால் நலமாயிருக்கும். (கலாத்தியர் 6:11-12)

பிரச்சினை இது தான். சிலுவையிலறையப்பட்டதால், மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட வேண்டியதில்லை என்ற அந்த பவுலின் கொள்கை தான் பிரச்னைக்கு பிரதான காரணமாயிருந்திருக்கிறது.

இயேசுவை ஏற்றுக் கொண்ட மக்கள் மனிதர்களின் பாவத்தை நீக்குவதற்காக இயேசு சிலுவையில் தன்னைத் தானே ஒப்புக் கொடுத்தார் என்பதை மாத்திரம் ஏற்றுக் கொள்ளவில்லை எனில், இயேசு அதைப் போதிக்கவில்லை என்று தான் அர்த்தமாகும். அவர் அதற்காகவும் வரவில்லை. மக்கள் இறைவனிற்கு கீழ்ப்படிந்து நியாயப்பிரமாணங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே வந்தார். ஆனால் பவுல் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் இது அவருடைய சொந்தக் கண்டுபிடிப்புதானே அல்லாமல் அது வேறென்னவாக இருக்க முடியும்?

இது இவ்வாறிருக்க, நியாயப்பிரமாணங்கள் பற்றி இயேசு என்ன கூறுகின்றார்? பவுலின் இந்தப் பிரச்சாரம் இயேசுவின் பிரச்சாரத்திற்கு உகந்ததா? நான் சிலுவையில் அடிக்கப்பட்டு உங்களை நியாயப்பிரமாணத்திலிருந்து விடுவிக்கப் போகின்றேன். ஆகவே நீங்கள் நியாயப்பிரமாணங்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று சொன்னாரா? அல்லது அதற்கு மாற்றமாக சொன்னாரா? பரலோகராஜ்யம் செல்வதற்குரிய வழி என்னவெனில் பிரமாணங்களை கையாளுவதுதான். இதைத் தான் இயேசு தன்னுடைய வாழ்நாளில் பிரச்சாரம் செய்து வந்தார். அதையேதான் அவரது உன்மையான சீடர்களின் போதனையாகவும் இருந்திருக்க வேண்டும்.
இயேசுவின் போதனைகளுக்கும் அவரின் கொள்கைகளுக்கும் மாற்றாக பவுல் எவ்வாறெல்லாம் போதித்தார், எவற்றையெல்லாம் போதித்தார் என்பதை இனி காண்போம்.

நியாயப்பிரமானங்களையும் தீர்க்கதரிசனங்களையும் இயேசு பின்பற்ற சொன்னாரா? அல்லது பின்பற்ற கூடாது என்றாரா?

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!