Sunday, March 27, 2011

இயேசு கூறியது என்ன?


இயேசு என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் இஸ்ராயீல் சமூகத்திற்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதராக இருந்தார். அவரது தூதுத்துவத்தை ஏற்க மறுத்த யூதர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொலை செய்வதற்கு முடிவு செய்தனர். "மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்" என்கிறது பழய ஏற்பாடு. (உபாகமம் 21:23) இந்த தத்துவத்தின் அடிப்படையில் அவரை உலக மக்களுக்கு முன் சபிக்கப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்த வேண்டும் என்பது யூதர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் வல்லமை மிக்க அல்லாஹ் அவனது பேராற்றலால் அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து தனது நேசத்திற்குரிய தூதரைக் காப்பாற்றினான்!  இதோ அல்லாஹ் கூறுகிறான்:

"(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவனாவான். ஈஸாவே நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவுமஎன்னளவில் உம்மை உயர்த்துபவனாகவும்நிராகரிப்பவர்களை விட்டும் உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை,நிராகரித்தோரை விட மறுமை நாள் வரை உயர்வாக ஆக்குபவனாகவும் இருக்கின்றேன். பின்னப் உங்களுடைய மீளுதல் என்னிடமேயாகும். அப்போது நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன் என அல்லாஹ் கூறியதை(எண்ணிப் பாருங்கள்) (அல்குர்ஆன் 3: 54,55)

ஈஸா (அலை) அவர்களைக் கொல்வதற்கோசிலுவையில் அறைவதற்கோ யூதர்களால் இயலவில்லை! இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதற்கான தெளிவான சான்று எதுவம் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை! அவர்கள் வெறும் யூகத்தையே பின்பற்றுகின்றனர்! இதுவே மேற்கண்ட வசனம் சொல்லும் சுருக்கமான செய்தி!

யூதர்க்ள இயேசுவை ஒரு விபச்சார சந்ததி என்று தூற்றினர். அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்றும் கூறினர். அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விட்டோம் என்றும் பெருமை பேசினர். தாங்கள் வீரம் மிக்க பாரம்பர்யத்தை உடையவர்கள் என்பதற்கு இதுஒர் அடையாளம் என்று பெருமை பேசினர்!

 இதில் வியப்பு என்னவெனில் யூதர்களின் இந்த நம்பிக்கைக்கையையும் அவர்களின் இறுமாப்பையும் சரிகாணும் வகையிலேயே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கிறது!

இயேசுவை யூதர்கள் கடுமையாகத் துன்புறுத்தி முட்கிரீடத்தை அவர் தலையில் வைத்து மரச்சிலுவையில் அறைந்தும்  ஈட்டியால் குத்தியும் கொலை செய்தார்கள் என்பதுவே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

ஆதம் (விலக்கப்பட்ட கனியைப் புசித்ததன் மூலம்) செய்த பாவத்திற்குப் பரிகாரமாக இதை இயேசு ஏற்றுக்கொண்டார் என்ற  நம்பிக்கையில் அவர்கள் ஆனந்தமடைகின்றனர்.

ஆதிபாவமும் சிலுவை சித்தாந்தமும்!

மனிதர்கள் அனைவரும் பிறவியிலேயே பாவிகளாகப் பிறக்கின்றார்கள் என்றும்,  பாவத்திலிருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே கடவுள் இயேசுவாக அவதாரம் எடுத்து சிலுவையில் மரித்தார் என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும்! இதைத்தான் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாக பவுல் அறிமுகம் செய்துள்ளார்!  பவுலின் கூற்றுக்களைப் பார்ப்போம்:

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்"  (1 கொரிந்தியர் 15:14)

"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்"  (1 கொரிந்தியர் 15:17)

இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை என்று இஸ்லாம் கூறுகிறது! அறையப்பட்டது இயேசுவே என்று கிறிஸ்தவம் நம்புகிறது! இவ்வாறு முற்றிலும் முரண்பட்ட இரண்டு நம்பிக்கைகளுக்கிடையில் எது உண்மை?என்பதை சற்று ஆய்வுக்கு உட்படுத்துவோம்.

ஆதிபாவமும் பைபிளும்!

ஆதாம் விலக்கப்பட்ட கனியைப் புசித்தார்!  இதனால் அவர் பாவியானார்! இந்த பாவம் தலைமுறை தலைமுறையாக மனிதனை வந்தடைகிறது. இதன் காரணமாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாவத்தில் பிறக்கிறது. இந்த பாவம் இயேசுவின் சிலுவை  மரணத்தால் நீக்கப்படுகிறது. இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

பைபிளில் இயேசுவின் உபதேசங்களுக்கு கிறிஸ்தவர்கள் முன்னுரிமை அளிப்பார்கள் எனில்... இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை இயேசு எப்போதாவது சொல்லியிருக்கிறாராஅவரது உபதேசங்களாகக் காணப்படும் பைபிளில் உள்ள ஏதேனும் வசனங்களில் இதை வலியுறுத்தி உபதேசித்திருக்கிறாராஎன்பதை சிந்திக்க வேண்டும். பைபிளில் எங்குமே இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை இயேசு சொன்னதாகக் காண முடியவில்லை.  இயேசுவுக்கு முன்னர் வாழ்ந்த எத்தனையோ தீர்க்கதரிசிகள்அவர்களின் உபதேசங்கள் ஏராளமாக பைபிளில் காணப்படுகின்றன. அவர்கள் எவருமே இப்படி ஒரு பாவ சித்தாந்தத்தை அறிமுகப் படுத்தவில்லை.

மாறாகபைபிளில் இது யாருடைய உபதேசமாகக் காணப்படுகிறதுஇயேசுவின் சீடர்களைக் கடுமையாகத் துன்புறுத்தி இடையூறு செய்து வந்த சவுல் என்ற பவுல்! திடீரென ஒரு நாள் இயேசு இவருக்கு வெளிப்பட்டு  அருளுரை பாலித்ததாகவும் அன்று முதல் தான் திருந்தி விட்டதாகவும் அறிக்கையிடும் பவுலின் உபதேசங்களில்தான் இத்தகைய பாவ சித்தாந்தம் காணப்படுகிறது.  பவுல் இவ்வாறு எழுதுகிறார்:

ஒரே ஒரு மனிதன் வழியாகப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்ததுஅந்தப் பாவத்தின் வழியாகச் சாவு வந்தது. அதுபோலவேஎல்லா மனிதரும் பாவம் செய்ததால்எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. (உரோமையர் 5:12)

சிலுவையில் மரித்ததன் மூலம் இயேசு மனிதர்களைப் பாவத்திலிருந்து விடுவித்தார் என்றும் பவுல் கூறுகிறார்.

"மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்" (1 கொரிந்தியர் 15:3,4)

"நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச் செய்தார்." (உரோமையர் 4:25)

"நாம் இனிமேல் பாவத்துக்கு அடிமைகளாய் இராதபடிநம்முடைய பழய மனித இயல்பு அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. இவ்வாறு பாவத்துக்கு உட்பட்டிருந்த நம் இயல்பு அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?" (உரோமையர் 6:6,7)

இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் அதனை நம்புவதன் மூலம் எல்லா மனிதர்களும் பாவங்களிலிருந்து விடுபடுவர் என்றும்அதன் காரணமாக இனி நியாயப் பிரமாணத்தின் ஏவல் விலக்கல்ககளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும்தான் பவுலுடைய வாதம்! நியாயப் பிரமணனங்களின் விதிகளைக் கடைபிடிக்கவேண்டியதில்லை என்று உபதேசிக்கும் பவுலின் கூற்றுகள்:

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில்,விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. நியாயப்பிரமாணமோ விசவாசத்திற்குரியதல்ல. அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். ரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடிகிறிஸ்து நமக்காகச் சாபமாகி,நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக மீட்டுக்கொண்டார்.(பார்க்க கலாத்தியர் 3:10-14)

இப்படியிருக்கபாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால்எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க,நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது,அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது.அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியேவிசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும்வித்தியாசமேஇல்லை. (ரோமயர் 3:20-22) 

நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே>ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?

அதெப்படியென்றால்புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.

ஆகையால்புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால்வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.

அப்படிப்போலஎன் சகோதரரேநீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகிதேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். (ரோமர் 7:1-4)

இயேசுவின் சிலுவை மரணத்தில் நம்பிக்கை கொண்டால் எல்லா பாவங்களும் மாய்ந்து போகும். அப்படி நம்பிய பிறகு நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. விசுவாசம் மட்டும் போதும். எத்தனை பெரிய பாவங்கள் செய்தாலும் சிலுவை மரணத்தை நம்புவதன் மூலம் எல்லாப் பாவங்களிலிருநதும் தூய்மையடைந்து வெற்றி பெற்று விடலாம் என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைத்தான் மேற்கண்ட பைபிள் வசனங்கள் எடுத்துக் கூறுகின்றன!

பவுலின் கொள்கைகள் - ஒர் மறுபரிசீலனை!
இயேசு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் விரோதியாகச் செயல்பட்டவர் பவுல்! இயேசுவின் மரணத்திற்குப் பின்னர் ஒரு நாளில் திடீரென்று தனக்கு வெளிப்பாடு ஏற்பட்டது என்று அறிக்கை விட்டார்! அவ்வாறு அறிவித்த விட்டு அவர் செய்த உபதேசங்கள் இயேசுவின் உபதேசத்துக்கு முரண் இல்லாமல் இருந்தாலாவது அவரது உபதேசங்களை ஒரளவுக்கு நியாயப் படுத்தலாம். ஆனால் அவை அத்தனையும் இயேசு எதனை சமுதாயத்திற்கு உபதேசித்தாரோஎதை வலியுறுத்தினாரோ அதற்கு முற்றிலும் முரணாக உள்ளதைப் பார்க்கிறோம். இயேசு எதைக் கடைபிடிக்கச் சொல்கிறாரோ அதைக் கடைபிடிக்க வேண்டாம் என்கிறது பவுலின் உபதேசங்கள். இந்த இடத்தில் தான் சற்று நிதானமாக சிந்தித்து இதில் நடுநிலையான ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டியிருக்கிறது.

நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிப்பதைக் குறித்து இயேசு கூறியது என்ன?

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள் அழிக்கிறதற்கு அல்ல நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.  வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.  ஆகையால் இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான் இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோபரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். (மத்தேயு 5: 17- 19 )

மேற்கண்ட பைபிளின் வசனங்களை சற்று நடுநிலையுடன் சிந்தித்துப் பாருங்கள்!

நியாயப் பிரமாணங்கள் எக்காலத்திலும் மாற்றப்படாது என்று இயேசு கூறுகிறார்!   அது மாற்றப்பட்டது என்று உபதேசிப்பவன் பரலோகத்தில் சிறுமைப் படுத்தப்படுவான் என்றும் எச்சரித்துள்ளார்!   ஆனால் இதற்கு முரணாக நியாயப் பிரமாணத்தைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பவுல்! இதில் எதை ஏற்றுக் கொள்வது?

நியாயப் பிரமாணத்தைக் கடைபிடித்தல் என்ற ஒழுங்கு முறை இயேசுவின் மரணத்திற்குப் பின் மாற்றப்பட்டது என்றால் இவ்வாறு மாற்றப்படும் என்பதைப் பற்றி இயேசு ஏன் ஒரு வார்த்தை கூட முன்னறிவிப்பு செய்யவில்லைவானம் பூமி ஒழிந்து போனாலும் நியாயப் பிரமாணத்தின் ஓர் எழுத்தோ அல்லது ஓர் எழுத்தின் ஒரு பகுதியோ மாற்றப்படக் கூடாது என்று உபதேசிக்க வேண்டிய அவசியம் என்னநியாயப் பிரமாணம் மாற்றப்படும் என்ற பேருண்மையை இயேசு மறைத்து சமுதாயத்திற்கு மோசடி செய்து விட்டார் என்று கிறிஸ்தவர்கள் கூறப்போகிறார்களா?

ஓர் இறைதூதர் தன் சமூகத்திற்கு மோசடி செய்வதை விட்டும் பரிசுத்தமானவர் என்றே நாம் நம்புகிறோம். பைபிளின் பழய ஏற்பாட்டையும் ஒருமுறை படிப்பவர்கள் இவ்விஷயத்தில் இயேசுவின் உபதேசங்களாகக் காணப்படுபவை முந்தைய தீர்க்கதரிசிகளின் உபதேசத்திற்கு சற்றும் முரண் இல்லாமல் உள்ளதையும் பவுலின் உபதேசங்களாகக் காணப்படுபவற்றில் உள்ள குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்!

ஆதிபாவமும் பழய ஏற்பாடும்!

ஆதாம் செய்த பாவத்தினிமித்தம் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் பாவிகளாகப் பிறக்கின்றன என்ற புதிக கிறிஸ்தவ சித்தாந்தம் பைபிளின் முந்தைய தீர்க்கதரிசிகளின் உபதேசங்களில் இல்லை! இயேசுவும் அவ்வாறு கூறியிருக்கவில்லை. பிற்காலத்தில் பவுல் உருவாக்கிய பாவக் கொள்கைக்கு எதிராகவே பைபிளின் பழய ஏற்பாட்டின் வசனங்கள் உள்ளன. அவற்றில் சில:

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும்பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும்.  (உபாகமம் - 24:16)

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லைதகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை,நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும்துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்.  (எசேக்கியேல் 18:20)

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.(எரேமியா 31:30)

ஆதிபாவமும் இயேசுவின் கூற்றுக்களும்!

பிள்ளைகளை ஒருபாவமும் அறியாதவர்கள் என்று நாம் கூறுவதுண்டு. பாவத்திலிருந்து தன்னைப் பரிசுத்தப் படுத்திக்கொள்ள விரும்புபவர்களை குழந்தைகளுக்கு ஒப்பாக இயேசு உவமிக்கின்றார். பிறக்கும் குழந்தைகள் பாவிகளாகப் பிறப்பதில்லை என்ற உண்மையை இயேசு தெளிவு படுத்துகிறார்.

நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்,பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு: 18:3)

இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்,அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது (மத்தேயு: 19:14)


இயேசு அதைக் கண்டுவிசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்,தேவனுடைய  ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. (மாற்கு 10:14)

பாவ சித்தாந்தமும் இறை வேதமும்!

பிற்காலத்தில் மனித சிந்தனையில் உதயமான ஆதிபாவம் என்ற கொள்கையை முந்தைய தீர்க்கதரிசிகளோ அவர்கள் கொண்டுவந்ததை எடுத்துபதேசித்த இயேசுவோ சொல்லியிருக்கவில்லை என்பதைப் பார்த்தோம். முந்தைய வேதற்களை உண்மைப் படுத்தி நிலைநாட்டக் கூடிய இறுதி வேதம் குர்ஆனில் இது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.

"எந்தவேர் ஆத்மாவும் மற்றதன் பாவச்சுமையைச் சுமக்காது!" (53:38)

"அல்லாஹ் அல்லாதவனையா இரட்சகனாக நான் தேடுவேன்அவனே அனைத்துப் பொருட்களினதும் இரட்சகனாக இருக்கிறான் என (நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொரு ஆன்மாவும் (தீமையை) தனக்கு எதிராகவே சம்பாதித்துக் கொள்கிறது. எந்த ஓர் ஆன்மாவும் மற்றதன் பாவச்சுமையைச் சுமக்காது. பின்னர்  உங்கள் மீளுதல் உங்கள் இரட்சகனிடமே உள்ளது. அப்போது நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்" (6:164)

கருணை மிக்க அல்லாஹ் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) செய்த தவறை மன்னித்து விட்டதாகத் தன் திருமறையில் பறைசாற்றுகிறான். இது குறித்த வசனத்தைப் பாருங்கள்:

"பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று (அதன் மூலம் மன்னிப்புக் கேட்டு)க் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும்நிகரற்ற அன்புடையவனுமாவான்" (2:37)

ஆதமின் மனமுருகிய வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அந்த வேண்டுதல் யுக முடிவு நாள் வரை பாவம் செய்பவர்கள் எவராயினும் மனமுருகி மன்னிப்புக் கோரியவர்களுக்குரிய பிரார்த்தனையாக குர்ஆனில் நிலை பெற்று விட்டது! ஆதம் செய்த பாவத்தின் பரிகாரத்தை எவரும் ஏற்கவேண்டிய அவசியம் இல்லை! இதுவே இறைவழிகாட்டுதலில் நமக்குக் கிடைத்த செய்திகளாகும்!

பிறக்கும் எந்தக் குழந்தையும் பிறவியில் பாவியாகப் பிறப்பதில்லை. மாறாக தூய்மையான இயற்கையிலேயே பிறக்கின்றன என்ற உண்மையை என்ற உண்மையை இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் நமக்குக் கற்றுத் தருகிறார்கள்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயற்கையான (ஃபித்ராவில்) பிறக்கின்றன. பெற்றோர்கள்தான் அதனை யூதனாகவோகிறிஸ்தவனாகவோநெருப்பு வணங்கியாகவோ மாற்றி விடுகின்றனர். ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போல! அவை குறைபாடு உள்ள நிலையில் பிறப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா?" (புகாரிமுஸ்லிம்)

பவுலின் கொள்கைகள் ஏற்படுத்தியிருக்கும் சந்தேகங்கள்:

இயேசு வாழ்ந்திருக்கும் காலத்தில் அவருக்கும் அவரது சீடர்களுக்கும் விரோதியாக இருந்தவர் பவுல்! இயேசுவின் சீடர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவர் பவுல்! அவர் உருவாக்கிய பாவ சித்தாந்தமும் அதை ஒட்டியுள்ள சிலுவைக் கொள்கையும் இயேசுவின் உபதேசங்களுக்கு முரணாக உள்ளன. இது தனக்கு திடீரென வெளிப்பாடு ஏற்பட்டது என்று கூறும் செய்தியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதை வெளிப்படுத்துகிறது.

சிலுவை மரணம் சாபத்திற்குரியதாக  பழய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததன் மூலம் அவரை உலகுக்கு முன் சபிக்கப்பட்டவராக அடையாளப்படுத்த வேண்டும் என்பது யூதர்களின் ஆசையாக இருந்தது. யூதர்களின் இந்த ஆசையை பவுல் வஞ்சப் புகழ்ச்சியின் மூலம் தன்னுடைய உபதேசங்களாக உள்ளவற்றில் வெளிப்படுத்துவதைப் பாருங்கள்:

"மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடிகிறிஸ்து நமக்காகச் சாபமாகி,நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக மீட்டுக்கொண்டார்"  (கலாத்தியர் 3:13)

இறைதூதர்கள் அனைவரும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! சபிக்கப்பட்டவரை ஒரு வழிகாட்டியாக எவரும் ஏற்றுக் கொள்வதில்லை. ஒருவரை நோக்கி இவர் சபிக்கப்பட்டவர் என்றால் அவரை வழிகாட்டி என்று  அறிவுடையவர் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஷைத்தானை சபிக்கப்பட்டவன் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இந்த பவுலோ இறைவனின் நேசத்திற்குரிய ஓர் அடியாரை சபிக்கப்பட்டவராக அறிமுகப் படுத்துகிறார். பவுலின் வார்த்தைகளில் ஒளிந்துள்ள தந்திரங்களை கிறிஸ்தவர்கள் அறிந்து சத்தியத்தின் பால் தன் கவனத்தைத் திருப்புவது நலம்! 

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!