Friday, April 1, 2011

அழகிய அணிகலன்கள் பகுதி - 2



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ், 

மிகுந்த இடைவேளைக்கு பிறகே எழுத முடிந்தது. சகோதர சகோதரிகள் மன்னிக்கவும். :) நேரே இப்பகுதிக்கு செல்வோம்.
முதலில் இந்த து’ஆ ஓதுவதை வழக்கமாக்கிக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ். 

"அல்லாஹும்ம கமா ஹஸ்ஸன்த கல்ஃகி ஃப ஹஸ்ஸின் க்ஹுலுக்கி"
(Allahumma kamaa hassantha khalki fa hassin khuluqi)

"யா அல்லாஹ் எவ்வாறு என்னுடைய வெளித்தோற்றத்தை அழகுபடுத்தினாயோ அதே போல் என்னுடைய செயல்களையும் / உட் தோற்றத்தையும் / இதயத்தையும் / எண்ணங்களையும் அழகுபடுத்துவாயாக.”

ஆமீன், ஆமீன், ஸும்ம ஆமீன்.

இந்த பகுதியை தொடர்வதற்கு முன் ஒரு சின்ன விண்ணப்பம். எந்த ஒரு ஆயாத் / ஹதீத் / து’ஆ / ஸீறா படிக்கும்போது அதை நடைமுறையிலும் கொண்டு வரவேண்டும். அமலில் வராத இல்ம்’ஆல் பயன் பூஜ்ஜியமே. இனி, உங்களின் முடிவில் உங்கள் ’ஏடு’!!

இன்றைய பகுதியானது ‘மென்மை’யைப்பற்றியது. நல் அமல்கள் என்பது நல் இதயத்தை குறிக்கும், நற்பண்பை குறிக்கும், நல்லெண்ணங்களையும் இன்னும் நல்மனிதத்தையும் குறிக்கும், எனினும் ’மென்மை’ என்னும் குணமானது இவை எல்லாவற்றையும் விட நல்லமல்களில் சிறந்ததாய் நிற்கிறது. ‘மென்மை’ என்பது அரபியில் ‘அர் ரிஃப்ஃக்’( RIFQ - Ra Fa Qaaf) என்னும் சொல்லிலிருந்து வருகிறது. றஃபஃக் என்னும் சொல் உதவி / யாருக்கேனும் உதவி செய்தல் / லாபமளிப்பது. பின் ரிஃப்ஃக் என்னும் சொல், ’மென்மை’, ‘எளிதான’ மற்றும் ‘கருணைக்கண் கொண்டு’ செயல்படும் விதத்தை குறிக்கிறது. இதே போல் இந்த வார்த்தை உதவி பெறும் / இலாபம் பெறும் விதத்தையும் குறிக்கிறது. ’ரிஃப்க்கா’ என்னும் சொல் நண்பர்கள் கூட்டாக அமைவதை குறிக்கிறது. நண்பர்களிடையே மென்மை இல்லாவிட்டால் நட்பாய் இருப்பதில் அர்த்தமில்லைதானே??

’றஃபீக்’ என்னும் பெயரையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது நண்பனைக் குறிப்பதாகும். நண்பன் எனப்படுபவன் அன்பானவனாய் கருணையுள்ளவனாய் இருப்பவன் என்றுதானே பொருள்?? திருக்குர்’ஆனில் ‘முர்தஃபக்கா’ (murthafaq) என்னும் வார்த்தையையும் படித்திருப்பீர்கள். அது ஜன்னத்தையும் குறிக்கிறது, ஜஹன்னத்தையும் குறிக்கிறது. ஜன்னத்தை ‘ஹஸுனத் முர்தஃபக்கா’ என்றும் ஜஹன்னத்தை ‘ஸா’அத் முர்தஃபஃக்கா’ என்றும் குறிப்பிடுகிறது. ஹஸுனத் முர்தஃபக்கா என்பதாவது மென்மையான / உயர்வான / மேன்மையான இடம் என்னும் பொருள் கொள்கிறது. ஜன்னத்தை வந்தடைபவர்களும் அப்படியே!!

மனிதர்களுக்குள் மென்மை இல்லாமல் போகும்போது இவ்வுலகமே ’ஸா’அத் முர்தஃபக்கா’வாக / ஜஹன்னமாக மாறிப்போவதில் ஆச்சரியமில்லை. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொலவடையிலும், ‘இந்த உலகமே உன்னால் ஜஹன்னமாகிப் போனது’ என்பது மிக சாதாரணமாகி விட்டது. ஏன், கூடி வசிப்போருடன் / கூடி வேலை செய்பவருடன் / கூடி வாழ்பவருடன் மென்மை இல்லாது போன காரணத்தால்..!


புகாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் ஒரு ஹதீத் வருகிறது, அதில் முஸ்லிமான ஆண்/பெண்ணை ஒரு நாணல் போன்ற செடியுடன் உவமைப்படுத்தப்படுகிறது. அந்த செடியை காற்றின் ஒரு வீச்சு கீழே சாய்த்தும்விடும், மறுதரம் கீழேயிருந்து மேலே நிமிர்த்தியும் விடும். சூறாவளியிலும் புயலிலும் எவ்வகையான செடிகள் தாக்குப்பிடிக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள், நாணல் போன்ற இளகிய செடிகளே. புயல் ஓய்ந்ததும் அது மீண்டும் நிமிர்ந்து விடுகிறது. அது போலவே ஒரு முஃமினும் ஏச்சுபேச்சுக்கள் / பொய்கள் / வன்சொல் வரும்போது பேசாமடந்தையாய் பொறுமை காக்கிறான். பின் புயல்போன்ற வேளை கடந்ததும் தன் நிலைக்கு வருகிறான். வாழ்வில் என்நேரமும் ஒரே நிலையை எண்ணுவது சரியில்லையே?? ஆனால் நம்முடைய எண்ணங்களை / நம்முடைய செயல்களை / குணங்களை மாற்ற முடியும், காலத்திற்கு ஏற்றமாதிரி பொறுமையுடன் வாழ முடியும். எனவே இந்த ஹதீத் மூலம் நமக்கு தெரிய வருவது என்ன? ஒரு முஃமினானவன் தற்பெருமை கொண்டவனாக / வீம்பு பிடித்தவனாக / பிடிவாதக்காரனாக இருக்க மாட்டான். பொறுமையற்றவனாக இருக்க மாட்டான். தற்பெருமை என்பது ஈமானின் எதிரி ஆகும்.

எந்த ஒரு பொருளிலும் 'Stiffness' என்பது அந்த பொருளை உடைப்பதற்காகவே /  உடைபடுவதற்காகவே. ஆனால் ’Flexibility'  என்பது அந்த பொருளை வாழக்கூடியதாக / உபயோகப்படுத்தக்கூடியதாக மாற்றித்தருகிறது. இன்னும் சொல்லப்போனால் புல்லின் மென்மையே, அது காற்றில் ஆடும்போது புல்லின் அழகைக் கூட்டுகிறது.

எனவே நினைவில் நிறுத்துங்கள். மனிதனிடத்தில் வீம்பு /பிடிவாதம் /
முரட்டுத்தன்மை அதிகமாக இருந்தால் வாழ்வில் மாறி மாறி வரும் சூழ்நிலைகள் அவன் வாழ்வை முடித்து விடும்.

கண்டிப்புடனும், வீம்புடனும் வாழலாம். எப்பொழுது??? உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும். ஜமா'அத் தொழுகையை எக்காரணம் கொண்டும் விடம்மாட்டேன் அல்லது தஹஜ்ஜுத் நேரம் விடிகாலை 3:30 மணிதான், அதை மாற்ற மாட்டேன், ஹிஜாபில்லாமல் திண்ணை வரைக்கும் கூட வரமாட்டேன்...என இது போன்ற தனி மனித வாழ்வின் ஒழுக்கங்களில் கண்டிப்புடனும், பிடிவாதத்துடனும் இருங்கள் ஆனால் மக்களுடன் வாழும்போது (கணவன் / மனைவி ஆயினும் கூட) விட்டுக்கொடுத்து வாழகற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாஞ்சையுடன் மக்களை அணுகுங்கள். மென்மையுடனும், அன்புடனும் நடந்துகொள்ளுங்கள்.
சுயமதிப்பு / சுய கௌரவமானது ஈகோவை வளர்க்கவிடாதீர்கள். அப்படிப் பார்த்தால் ஒரு மனிதன் எப்பொழுது 'தான்' என்னும் வலையில் சிக்குகிறான்??? தான் ஒரு, அல்லாஹ்வின்  அடிமை என்பதை மறக்கும்போது, தன்னை மிஞ்சி எவரும் இல்லை என்ற நினைப்பில் வாழும்போது!!!

(இன்னும் வரும், இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே!!!)

வாஹிர்தவானில் ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்!!
( விளக்க உரையின் மூலம்:டாக்டர். ஃபர்ஹாத் ஹாஷ்மியின் உரை )

3 comments:

  1. மிக நல்ல பகிர்வு,அருமை,தொடர்ந்து படைப்புக்களை வெளியிடுங்க,விவாதமில்லாமல் சமாதானமாக இந்த ட்ரெயின் செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! ஆமின் ...

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ),

    எந்த ஒரு மூலத்திலிருந்தும் மொழிப்பெயர்க்கும் போதும் அதோட சாராம்சம் ஒரு சிலருக்கே மிகச்சரியாக பொருந்தி வரும் .. இதிலும் அழகாக உவமையுடன் சொல்லிய விதம் அருமையாக இருக்கிறது .

    ஜஸாக்குமுல்லாஹ் க்கைர் .. தொடருங்கள்

    ReplyDelete
  3. @asiyakka,
    @jeylani bhai,

    iruvarukkum en salaamum, manthaarntha nanrigalum, :)

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!