Showing posts with label புத்த பிக்குகள். Show all posts
Showing posts with label புத்த பிக்குகள். Show all posts

Monday, April 23, 2012

தம்புள்ள பள்ளிவாசல்,இந்துக் கோயிலை இடிக்க தீர்மானம்,புத்த பிக்குகள் சண்டித்தனம்


சில நாட்களுக்கு முன்பு தம்புள்ள என்ற இடத்தில் இருந்த பள்ளிவாசல் உடைக்கபட்டு,மீண்டும் மீண்டும் வம்பு செய்யும் நோக்கில் அங்குள்ள புத்த பிக்குகள் ஈடுபட்டுவருகின்றனர்.முஸ்லிம் பொது மக்களையும்,வியாபாரிகளையும் மிரட்டி வருகின்றனர்.இதற்கு அரசின் சில அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களும் உடந்தையாக உள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையாகும்.


மேலும்,இந்திய முஸ்லிம் மக்களாகிய நாம் இதற்கு என்ன செய்யப் போகிறோம்?நாம் ஏற்கனவே சங்கபரிவார கும்பல்களால் தகர்க்கப்பட பாபர் மஸ்ஜிதை இழந்து நிற்கிறோம்,அதற்கு இன்றுவரை போராடுகிறோம்.இன்ஷா அல்லாஹ்,அது விரைவில் நமக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இப்போது,இந்த அச்சுறுத்தல் நம் அண்டை நாடான இலங்கையில் நம் மஸ்ஜித் ஒன்றுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையே இப்படி ஒரு செய்தி,நமக்கு கிட்டியுள்ளது.
தம்புள்ளயிலுள்ள பள்ளிவாயல் ஆறு மாத காலத்திற்குள் அகற்றப்படல் வேண்டுமென இன்று தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று தம்புள்ள பள்ளிவாயல் விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டமொன்று தம்புள்ள பிரதேச செயலக கட்டிடத்தில் நடைபெற்ற போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட தேரோக்கள் கலந்து கொண்ட போதிலும் இக் கூட்டத்தில் எந்த முஸ்லிம் முக்கியஸ்த்ர்களோ  பள்ளிவாயல் நிருவாகிகளோ கலந்து கொள்ளவில்லையெனவும் தெரிய வருகின்றது.
தம்புள்ளையில் புனித பிரதேச மெனக் கூறப்படும் இடத்திற்குள் 72 சட்டவிரோத கட்டிடங்கள் இருப்பதால் அதை அகற்றிவிடுவதென இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த 72 கட்டிடங்களுக்குள் தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் தம்புள்ள இந்து காளிகோயில் என்பனவும் வருவதாகவும் இதை உடைக்கவேண்டுமெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் ரங்கிரிய பௌத்த விகாரையின் விகாராதிபதி உட்பட பல தேரோக்கள் கலந்து கொண்டுள்ளனர்,என்பதே அந்த செய்தியாகும்.

எனவே,இந்தப் பூமியில் எங்கு பள்ளிவாசலுக்கு எதிரான வன்முறை வெடிக்கிறதோ,அதற்கு நாம் பலியாகிவிடாமல்,பொறுமையுடன்,வேகத்துடன் கூடிய விவேகத்துடன் கூடிய ஆக்கபப் பூர்வ காரியம் செய்யவேண்டும்,இப்போதைக்கு எல்லா முஸ்லிம் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்தியாவின் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு,நம் எதிர்ப்பைக்காட்ட வேண்டும்.

முதலில் இதிலிருந்து ஆரம்பிப்போம்,இன்ஷா அல்லாஹ்.
(மேலும் பல விவரங்களுக்கு இந்த லிங்கில் கிளிக்கவும் )


பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!