Showing posts with label பள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி. Show all posts
Showing posts with label பள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி. Show all posts

Friday, September 2, 2011

பள்ளிவாசலை இடிக்க இந்து முன்னணி சதி,அரசு உதவி


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட வாழையடி எனும் ஊரில் நம்முடைய முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்கள் 1820  முதல் 1910 வரை வாழ்ந்து வந்தார்கள் . பின்னர் ஊரில் ஏற்பட்ட காலரா நோயின் பீதியால் மேலும் வெள்ளப் பெருக்கத்தின் காரணமாகவும் இந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து பக்கத்து ஊர்களான இரகுநாதபுரம் , ஆழ்வார் திருநகரி, காயல்பட்டணம் ஆகிய ஊர்களுக்கு சென்றனர். இவ்வாறு இடம் பெயர்ந்ததன் காரணமாக 120 வருட பழமையான பள்ளிவாசல் அதன் பின் இறைப்பணி இன்றி கைவிடப்பட்டது . பின்னர் முஸ்லிம்களுக்கு சொந்தமான வஃக்பு சொத்துக்கள் சில கயவர்களால் கையகப்படுத்த பட்டது . 

மேலும் காயல்பட்டினத்தை சேர்ந்த ஜெனாப் ஜாபர் சாதிக் மற்றும் வேறு சில சகோதரர்களுடைய முயற்சியினாலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு மீண்டும் இமாம் தலைமையில் தொழுகை மற்றும் ஏனைய இறை பணிகள் தொடங்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு உட்பட்ட காலிமனைகளை சில விசமிகள் அபகரித்து வைத்துள்ளனர். கடந்த 05-08-2011 சில இந்துத்துவ வாதிகள் பள்ளிவளாகத்திற்குள் அத்து மீறி நுழைந்து நீர்மாலை என்கிற இந்துக்களின் சடங்கை வேண்டும் என்றே செய்து பிரச்சினைகள் செய்தனர். இந்நிலையில் தேசிய சமாதான கூட்டமைப்பு 22-08-2011 அன்று திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து ஒரு சமாதான அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

 ரமலான் மாதத்தின் காரணமாக முஸ்லிம்களால் கலந்து கொள்ளமுடியவில்லை . இதை காரணமாக காட்டி ஒரு தலை பட்சமாக நாசரேத் பஞ்சாயத் நமது மஸ்ஜிதுல் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு 22-08-2011 அன்று ஒரு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதில் 02-09-2011 - ற்குள் அத்துமீறி கட்டப்பட்ட பள்ளிவாசல் கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாத பட்சத்தில் காவல்துறை முன்னிலையில் தாசில்தார் தலைமையில் 02-09-2011 எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பள்ளிவாசல் இடித்து அப்புறப்படுத்த படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.26-08-2011 அன்று E.B. அலுவலகத்தில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கடிதம் வந்தது .

 உலக வரலாற்றில் பள்ளி வாசலை இடிப்பதற்கு ஒரு அரசாங்கம் இவ்வளவு துரிதமாக முன்னின்று செயல்படுவது தமிழ்நாட்டில்தான் . இந்த சதியின் பின்னணியில் இந்து முன்னணியும் , சில அரசியல் கயவர்களும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் . 1992 - ல் இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதின் வேதனைகள் நெஞ்சை விட்டு விலகுமுன் முஸ்லிம்களுக்கு மீண்டும் ஒரு கருப்பு நாளை உருவாக்க பாசிச காவல்துறையும் , இந்துத்துவ தீவிரவாதிகளும் செயல்பட்டு வருகிறார்கள் . அல்லாஹ்வுடைய இறை இல்லம் பாதுகாக்க பட முஸ்லிம் சமுதாயமே விழித்தெழு ! மேலும் பஞ்சாயத்து நமக்கு அனுப்பிய நோட்டிசும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கு :

காயல் சாதிக் :                         9786736167            
ஜாபர் சாதிக் :                         9894684850            
அலி மஹ்ளரி :                         8056333137      

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!