Showing posts with label இன இழிவு. Show all posts
Showing posts with label இன இழிவு. Show all posts

Tuesday, July 20, 2010

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்?

சமீபத்தில் பெரியார்தாசன் ‘அப்துல்லாஹ்’ ஆக இஸ்லாத்தில் இணைந்த செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.           தமிழகத்தில் ஓசைப்படாமலேயே இஸ்லாத்தை உணர்ந்து இணையும் நிகழ்வுகள் ஆங்காங்கே அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்தவர் சு. ராஜேஸ்வரன்.

திருச்சி தேசிய கல்லூரியில் M.Sc., (Geology) பயின்று சுய தொழிலாக மெடிகல் ஷாப் வைத்துச் சமூக சேவை ஆற்றி வருபவர். இவரது பெற்றோர் சுப்புசாமி – அழகம்மாள் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த விவசாயக் கூலிகள் ஆவர். தீவிர அம்பேத்கர் இயக்கத் தவராகத் திகழ்ந்த சு. ராஜேஸ்வரன் மொழி, இனம், பொதுவுடைமை, கம்யூனிசம் எனும் இவையெல்லாம் சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க இயலாதவை; உண்மையான சமத்துவத்தை ஏற்படுத்த இயலாதவை என்பதைத் தெளிந்து, ஏகத்துவத்தை ஏற்று அதன் வழிதான் சமூக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட முடியுமென்பதை உணர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார். சு. ராஜேஸ்வரன் இப்போது சு. ராஷித் அலியாகவும் இவரது மனைவி சாந்தி இப்போது சாரா பீவியாகவும் சமுதாயச் சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.

இஸ்லாத்தில் இணைவதற்குத் தனக்கு அடிப்படைச் சிந்தனையாக அமைந்தது எது என்பதை இதோ அவர் விளக்குகிறார். மொழியாலோ, இனத்தாலோ, பொதுவுடைமையாலோ, கடவுள் மறுப்பாலோ சமூகத்தில் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் ஒரு சமுதாயம் உருவாக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் சாதிய கட்டமைப்பு ஒழிக்கப்படாதவரை அது ஓர் உண்மையான நிலையான சமத்துவமிக்க சமுதாயமாக இருக்க சாத்தியமே இல்லை என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியலை மையமாக கொண்டதே எனது கருத்தியல்.

மொழி, இனம், பொதுவுடைமை, கடவுள் மறுப்பு என்கிற கருத்து நிலைகளை மையமாக வைத்துக் கொண்டு சதுரங்கம் விளையாடுகிற அலங்காரமான அரசியல்வாதிகளை அல்லது சீர்திருத்தவாதிகளைக் கடந்த காலங்களிலும் சமகாலத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்களெல்லாம் சமத்துவத்தை உருவாக்க கூடிய மூல செயல் வடிவமான சாதி ஒழிப்பை மட்டும் லாவகமாகத் தவிர்த்துவிட்டே வந்திருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது. சாதி ஒழிப்பைக் கூர்மைப்படுத்தினால் இந்துத்துவம் உடைந்து சுக்கு நூறாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும்… என்பதை இவர்களெல்லாம் அறியாதவர்கள் அல்ல.

இவர்களை பொறுத்தவரை முதலில் இந்துத்துவத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டுதான் மற்ற எல்லா வகையான சீர்திருத்தத்தையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் என்ன வென்றால் அடிமைகள் இருந்தால்தானே தனக்கான தளம் இருக்கும். அப்படிப்பட்ட தளம் இருந்தால்தானே அதன் மேலே வலுவாக நின்று கொண்டு தொடர்ந்து கூச்சல் போட முடியும். அப்படி கூச்சல் போட்டால் தானே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு தனது பிழைப்பை நடத்த முடியும் என்கிற தீர்க்கமான முற்போக்கான அறிவாளிகள்தாம் இந்த தேசம் முழுக்கப் பரவிக் கிடக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துநிலை சீர்திருத்தங்கள் எல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுகள் தாம் அவற்றால் விளிம்பு நிலை மனிதர்களுக்கு எவ்விதமான சமூக விடுதலையையும் ஏற்படுத்தித் தரமுடியாது என்பதையும் உணர முடிந்தது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான தீர்வு சமூக சீர்திருத்தமா? அல்லது சமூக விடுதலையா? என்கிற கேள்வி வருகிறபோது சமூக விடுதலைதான் என்கிற புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தான் நிரந்தரமானது என்கிற உண்மையை அறிவுத் தளத்தில் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஆனால், தனது அற்ப பிழைப்பு வாதத்துக்காக விளிம்பு நிலை மக்களின் சமூக விடுதலையை விட்டு விட்டு வெறும் சீர்திருத்தநோக்கிலேயே செயல்பட்டு வரும் இவர்களை எண்ணி நெஞ்சம் ரணமாகிறது.

மொழியால், இனத்தால், பொதுவுடைமையால் கடவுள் மறுப்பால் மக்களை ஒன்று சேர்ப்பதாகவும் அதன் மூலம் சமத்துவம் உருவாகும் என்றும் சொல்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுகிறது. மொழியாலும் அந்த மொழி பேசுகிற இனத்தாலும் ஒன்றுபடலாம் என்பதில் மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஊரை உருவாக்கும்போதே சேரியை உருவாக்கி அந்த மக்களைத் தீண்டதகாதவர்களாக்கிப் பொதுப் பாதை, பொதுக்குளம், பொதுக்கோயில் இப்படி அனைவருக்கும் பொதுவான அனைத்து வகையான இடத்திலிருந்தும் தள்ளிவைத்து அவர்கள் வாழும் சேரி, குடிசைகளைக் கொளுத்திக் கொலை வெறித் தாண்டவம் ஆடியது யார்? ஜெர்மானியமொழி பேசுகிற ஜெர்மானியர்களா? அல்லது சீனமொழி பேசுகிற சீனர்களா? இல்லையே விளிம்பு நிலை மனிதர்கள் தாய்மொழியாக கொண்ட அதே தமிழ் மொழி பேசுகிற தமிழ் இனம்தானே.

பொதுவுடையைப் பேசுகிற கம்யூனிசவாதிகளாவது உழைக்கும் வர்க்கமெல்லாம் ஒரே வகைப்பாடுகளில் உள்ளவர்கள், நமக்குள் வர்க்க வேற்றுமைதவிர சாதிய வேற்றுமைகள் எதுவும் கிடையாது. உழைக்கும் வர்க்கம் என்கிற அடிப்படையில் ஒரே இடத்தில் வாழ் விடங்களை அமைத்துக் கொள்வது, சமூக ஒழுங்கிற்கு உட்பட்டு உழைக்கும் வர்க்கத்தாரின் யாருடைய வீட்டிலும் யாரும் திருமண பந்தம் வைத்துக் கொள்வது என்கிற செயலாக்கத்தைக் கொண்டு வந்தார்களா? மாநில அளவில் வேண்டாம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கிராம அளவிலாவது இந்தியாவின் எந்த மூலைப் பகுதியிலேனும் ஒரு புரட்சிகரமான கிராமத்தை அவர்களால் உருவாக்க முடிந்ததா? (சாதிய கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவில் மார்க்சியம் செல்லுபடியாகாது) என்று சொன்ன புரட்சியாளர் அம்பேத்கர் கருத்தியல்தானே இன்று உண்மைக்குச் சாட்சியாக நிற்கிறது.)

கடவுள்தான் சாதிய கட்டமைப்புகளை உருவாக்கி வழிநடத்துகிறது என்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்திற்கும் சாமிதான் காரணம் என்றும் “கடவுளை மற மனிதனை நினை” என்று சொல்லி வந்தார்களே இவர் களாவது சாதி ஒழிப்பை முன்னெடுத்தார்களா? சாதி மறுப்புத் திருமணங்கள், வாழ்விடங்கள் குடியிருப்புகள் என ஒரே இடத்தில் அமைத்துக் கொண்டு வாழ்வது போன்ற அடிப்படையான விஷயங் களில் ஒன்றிணைந்தார்களா? கடவுள் மறுப்பாளர்கள் என்பதால் புரோகிதர் மறுப்பில் கவனம் செலுத்தியவர்களால் பாவம் சாதி மறுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை போலும். (இப்படி கூறுவதனால் பகுத்தறிவாதிகளைக் குற்றம் குறை சொல்லுவதாகவோ அவர்கள் விளிம்புநிலை மக்களுக்காக நடத்திய போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதாகவே எண்ணி மிகுந்த பிணக்கு கொள்வார்கள்.)

மேற்படி கொள்கைவாதிகளிடம் கேட்பதற்கு இன்னும் ஆயிரக் கணக்கான கேள்விகள் உண்டு. இங்கே சொல்லப்பட்டவைகள் அனைத்தும் மிக மிக சாதாரண அடிப்படையானவைகள் மட்டும்தான். இதற்கே இவர்களிடம் பதில் இருக்காது. அவர்களைப் பார்த்து, அம்பேத் கரியம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்; உங்களின் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகளுக்கான கருத்தியலால் சாதி ஒழிக்கப்பட்ட சமத்துவ சமூகத்தை இன்றுவரை ஏன் உருவாக்க முடிய வில்லை. அப்படியானால் “சாதிய கட்டமைப்பை அழித்தொழிக்காமல் எந்த கருத்தியலும் மக்களிடம் புரட்சியை உருவாக்காது. அப்படி ஒரு புரட்சி நடக்காமல் சமத்துவ சமூகத்தைக் கட்டமைக்க முடியாது” என்று கூறிய இருபதாம் நூற்றாண்டின் பேரறிஞர் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னவைதாமே இன்றைக்கும் விளிம்புநிலை மனிதர் களாக, பஞ்சைப் பராரிகளாக குடிசைகளிலே வாழ்க்கை நடத்தும் கடைசி மனிதர்களுக்கு உண்மைகாட்சியாய் நிற்கிறது. அத்தனை பெரிய அறிவு படைத்த மேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1936 ம் ஆண்டில் சாதியை ஒழிக்கும் வழிகளாக (Annihilation Of caste) மிகத் தீர்க்கமான கருத்தியலை முன் வைத்தார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?

தன் வாழ்நாளின் இறுதி மூச்சு நிற்கும் வரை விளிம்பு நிலை மனிதர் களுக்காகவே வாழ்ந்த அந்த மாமனிதர் இறுதியாக தனது நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடும் மிகுந்த ஆதங்கத்தோடும் அதிர்ச்சியோடும் சொன்னார்கள்.

சாதியத்தின் மூலம் இழிவுகளையும் ஏற்றத்தாழ்வு பாகுபாடுகளையும் உருவாக்கியது இந்துத்துவம்தான். இப்படி மனிதனைச் சாதி ரீதியாகக் கொடுமைப்படுத்திய கொடூரம் உலகத்தின் எந்த மூலையிலும் நடத்தப் படவில்லை. ஆகவே இந்திய தேசத்தில் சமத்துவ சமூகத்தை உருவாக்க முனையும் எவராக இருந்தாலும் இந்துத்துவம் என்கின்ற ஒன்று ஒழிக்கப்பட்டால்தான் சமத்துவம் சாத்தியமாக்கப்படும் என்பதையும் இந்துத்துவத்தை ஒழிக்க முனையும் முன்பாக முதலில் தன்னை இந்து அல்லாதவனாக்கிக் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆனாலும் தன்னை ஒரு இந்துவாகவே நிலைப்படுத்திக் கொண்டேதான் இந்துத்துவத்தை வேரறுக்கப் போகிறேன் என்கிறார்கள். இது விந்தையாக இருக்கிறது.

ஒரு மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அந்த மரத்தை ஆணி வேரோடு சாய்க்கமுடியாது என்பது எந்த அளவிற்கு அறிவுப்பூர்வமான உண்மையோ அதைப் போன்றுதான் மேற்படியாளர்களின் இந்துத்துவ ஒழிப்பு என்பதும் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர், நம்மை சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளிக் கடைசி மனிதனாகக் குடிசையிலே உட்காரவைத்து சமூகத்தில் உள்ள அனைத்துக் கொடூரங் களையும் செய்து வருகின்ற இந்து சமூகத்தில் இருந்து நம்மை நாமே வெளியேற்றிக்கொண்டு தான் நம்மீது திணிக்கபட்டுள்ள சாதிய இழிவைத் துடைக்க முடியுமே ஒழிய வேறு எத்தகைய தீர்வும் சாத்தியமானது அல்ல என்று உறுதிபட கூறினார்.

அதனடிப்படையிலேயே மொழியும் இனமும் எம்மைசமமாகப் பார்க்க வில்லை. பொதுவுடைமையும் கம்யூனிசமும் எமது இழிந்த நிலையை ஒழிக்கவில்லை, ஆகவே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதிய சகதியில் உழலுவதைவிட இறைவனை ஏற்று கொண்டாவது சாதியத்தை ஒழிப்பதுதான் எமக்கான சமூக விடுதலை என்று உறுதியாக எண்ணியே “லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸுலுல்லாஹ்” என்கிற உயிர்ப்பான வரிகளை நெஞ்சம் நிறையச் சொல்லி இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்”

நன்றி : இனிய திசைகள்.(ஏப்ரல் 2010)

Monday, November 24, 2008

சூத்திரனின் நாக்கை சூடு போடு???

இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களிலும் சாதிகளும் அதனால் சச்சரவுக்களும் ஏற்றத்தாழ்வுகளும் புரையோடிப்போய் காணப்படுகின்றன.ஆனால் சில விவரங்கெட்ட கூழ்முட்டைகள் இஸ்லாத்திலும் சாதிப்ப்ரச்சனைகள் இருப்பதுபோல் பேசுவதும் எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்க்கு அவர்கள் சில விவரங்கெட்ட விஷயங்களைக் கூறி மக்களை குழப்ப பார்க்கின்றனர்.உதாரணமாக,மரைக்காயர்,லெப்பை,ராவுத்தர் இப்படி முஸ்லிம்கள் பிரயோகிப்பதை வைத்து தவறாக எண்ணி சாதி பேதம் இஸ்லாத்திலும் உண்டு என மாயையை ஏற்படுத்த முயல்கின்றனர்.

ஆனால் அது உண்மை அல்ல என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.உதாரணமாக மரைக்காயர் என்பது வணிகம் செய்து வந்தவர்களை குறிக்கும் ஒரு வழக்காகும்.மடைக்கல ஆயர் என்பது மருவி மரைக்காயர் ஆனது.இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்?அதே போன்று குதிரை வியாபாரம் செய்து வந்தவர்களை ராவுத்தர் என அழைக்கலாயினர்.இதில் சாதி எங்கே இருக்கிறது?மார்க்க சேவை செய்வோர் லெப்பை என அழைக்கப்படலாயினர்.இதில் சாதி எங்கே உள்ளது.

மரைக்காயரும்,லெப்பை,ராவுத்தரும் ஒரே வரிசையில் நின்று தொழுவதும்,ஒரே தட்டில் உணவருந்துவதும்,சம்பந்தம் செய்து வாழ்க்கை பந்தத்தில் இணைவதும் இதற்க்கு உதாரணம்.

ஆனால்,இந்து மத சாதி பாகுபாடுதான் மக்களை இழிவு படுத்தக்கூடியது.ஆண்டான் அடிமை பேதம் காட்டக் கூடியது.பிராமணன் தலையில் பிறந்தவன்,சூத்திரன் காலில் பிறந்தவன் என சொல்லி அவனை தாழ்ந்தவன் என எட்டி மிதிக்கக் கூடியது. இந்து மத காயத்ரி மந்திரத்தை சூத்திரன் சொன்னால் ,அந்த சூத்திரனின் நாக்கை சூடு போடு,சூத்திரன் பிராமின் உடைய அடிமை என்றெல்லாம் சொல்லி பேதம் காட்டக் கூடியது.

அதே நிலையே கிறிஸ்தவத்திலும்.இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவம் நோக்கி செல்லும் மக்களிடமும் இந்து மதத்தில் என்ன சாதியில் இருந்தார்களோ அதே சாதி பெயர்தான் கிறிஸ்தவம் சென்றாலும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.உதாரணம்,வன்னிய கிறிஸ்தவர்கள்,நாடார் கிறிஸ்தவர்கள்,தலித் கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொண்டு போகலாம்.மேலும் சில மாதங்கள் முன்பு நெல்லை,தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் நடந்த கிறிஸ்தவ சாதி சண்டைகளை சொல்லலாம்.

ஆகவே இஸ்லாத்தில் எள்ளளவும் அதன் முனை அளவும் சாதி இல்லை பாகுபாடு இல்லை.அப்படி இருப்பதாக கூப்பாடு போடுபவர்கள் கடைந்தெடுத்த பொய்யையும் கற்பனையையுமே பரப்பி தங்கள் மேலேயே சேரை அள்ளி பூசிக் கொள்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

அதற்கெல்லாம் அப்பாற்பட்டு உலகளாவிய அளவில் இஸ்லாம் மக்களை அரவணைத்து,படு வேகமாக பரவி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

''அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ''(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டொியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)31:21.

Wednesday, October 22, 2008

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!!

ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!! என்ற தெளிவான ஏகத்துவ கொள்கையிலிருந்த நம் தமிழகம், ஆரியர்களின் படயெடுப்பிற்குப் பின்னர் ஜாதி அடிப்படையிலான மனு தர்ம கொள்கைக்கு அடிமைப்பட்டது. அதன் காரணமாக ஒருதாய் மக்கள் பல ஜாதிகளாகப் பிளவு படுத்தப்பட்டனர்.

வேதம் ஓதுவோர் பிரம்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதியாகவும், ஆட்சி புரிவோர் பிரம்மாவின் தோளிலிருந்து பிறந்த அடுத்த ஜாதியாகவும், வியாபாரம் செய்வோர் பிரம்மாவின் இடுப்பிலிருந்து பிறந்த மூன்றாம் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த நாலாம் இழி ஜாதியாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அதற்கு மேலும் இந்த நாலாம் ஜாதியினர் பள்ளர், பறையர் சக்கிலியர் என மேலும் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மக்களை தீண்டத்தகாத மக்களாகக் கற்பனை செய்து ஒவ்வொரு ஊரிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் சேரிகளில் வாழ நிர்ப்பந்த்திக்கப்படுகின்றனர். உயர்ஜாதி மக்கள் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்துவரும் இன்னல்களும் கொடுமைகளும் ஏட்டில் அடங்கா.

செத்த மாட்டின் தோலை உரித்து எடுத்த குற்றத்திற்காக அடித்தே கொல்லப்பட்டனர் சிலர். மனித மலத்தை தின்க வைக்கப்பட்டனர் சிலர். மனித சிறு நீரை குடிக்க வைக்கப்பட்டனர் சிலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்களை சதி செய்து கொள்ளப்படும் பல நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு 27 சதவிகிதம் கொடுக்கப்படுவதை எதிர்த்து மேல் ஜாதியினர் செய்த வேலை நிறுத்தம், பந்த், சாலை மறியல் நோயாளிகளின் உயிரோடு விளையாடிய உயர் ஜாதி டாக்டர்களின் வன் செயல்கள் இவை அனைத்தும் கீழ் சாதி மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை படம் பிடித்துக் காட்டுகின்றன. அதுவும் 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தில், நாகரீகத்தில் முன்னேறி இருக்கும் இக்காலத்தில் மனிதனுக்கு சக மனிதனே ஜாதியின் பெயரால் இழைக்கும் வன் கொடுமைகள் வளர்ந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இத்தகைய கொடுமைகளைக் கண்டு கண்ணீர் சிந்தாத மக்களும் இல்லாமல் இல்லை. இக்கொடுமைகளை அகற்ற அறிவுப்புரட்சியை, சிந்தனைப் புரட்சியை தங்கள் பேச்சுக்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் நீண்ட நெடுங்காலம் செய்து வந்தாலும் இவற்றில் சில மாற்றங்கள் தென்பட்டாலும் இன இழிவு நீங்கியதாகத் தெரியவில்லை. இன இழிவைப் போக்க இந்த அறிவு ஜீவிகளின் முயற்சிகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து நடந்துதான் வருகின்றன. ஆனால் பலன்தான் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் தன் பங்கிற்கு இன இழிவைப் போக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனித்தொகுதிகள் சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. படிப்பில் அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த மக்களில் இன இழிவு நீங்கியதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
டாக்டர் பாப சாஹிப் அம்பேத்கார் படித்து பல பட்டங்களை பெற்று அரசு பதவிகள் பல வகித்து அரசியல் சாசனத்தையே அமைத்துக் கொடுக்கும் உன்னத பதவிக்கு தகுதி பெற்றார். ஆனால் அவரது இன இழிவு நீங்கி மனிதராக மதிக்கப்பட்டாரா? அப்படி மதிக்கப்பெற்றிருந்தால் பெளத்த மதத்திற்கு போயிருப்பாரா? அங்கேயாவது அவருக்கும் அவருடன் பெளத்த மதத்தை தழுவியவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைத்ததா? இல்லையே! நியோ புத்திஸ்ட் என்ற பெயராலேயே அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அங்கும் அவர்களது இன இழிவு நீங்கியபாடில்லை.

அரசியலில் முழு மூச்சாக ஈடுபட்டு சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் திறமையான அரசியவ்வாதியாக திகழ்ந்து பல மந்திரி பதவிகளை வகித்து நாட்டின் துணைப் பிரதமர் வரை உயர்ந்த மறைந்த திரு ஜக ஜீவன்ராமை தொற்றிக்கொண்டிருந்த இன இழிவு நீங்கியதா? அவர் திறந்து வைத்த சிலை தீட்டுப்பட்டு விட்டதாக உயர் ஜாதியினர் அச்சிலையை கழுவிச் சடங்குகள் செய்து அதைப்புனித? படுத்தியக் கொடுமையை நாடே அறியும். MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, மத்திய மந்திரி, ஜனாதிபதி இவைபோல் எண்ணற்ற உயர் பதவிகள் வகித்து திறமை மிக்க சேவயாளர்கள் என போற்றப்பட்டாலும் பல கோடி பொருளீட்டும் செல்வந்தர்களானாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இன இழிவு தொலைந்த பாடில்லை.

இந்த நிலையில் டாக்டர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் கலாம் என சட்ட சபையில் சட்டம் இயற்றி இருக்கிறார். அதனால் பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி விட்டோம் என சந்தோசப்படுகின்றனர் பெரியாரின் அபிமானிகள். ஆட்சிப் பொறுப்புகளில் அமர்வதன் மூலம், பெரும் செல்வந்தர்களாவது மூலம் அவர்களை விட்டு நீங்காத இன இழிவு கோவில்களில் அர்ச்சகர் ஆவதன் மூலம் அகன்று விடும் என்று நம்புகின்றனரா? இல்லவே இல்லை. இது இன இழிவை அகற்றும் மருந்து அல்ல; இன இழிவை நிலைக்கச் செய்யும் நோய்க்கிருமி.

ஆதி காலத்தில் தமிழக மக்கள் "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற ஏகத்துவ அடிப்படையில் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் ஒரே உண்மையான இறைவனை மட்டும் நம்பிச் செயல்பட்டு வந்தனர்; வணங்கி வந்தனர். ஆரியரின் படயெடுப்பிற்குப் பின்னரே விதவிதமான கற்பனை பொய்க் கடவுளர்களும், அவர்களுக்கென விதவிதமான கோவில்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டன. இன்று ஆங்காங்கே கற்பனை தர்கா - சமாதிகளை உருவாக்கி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருவது போல் இந்த சமாதிக் கடவுளர்களின் பரிணாம வளார்ச்சிதான் சிலை வடிவிலான பொய்க்கடவுள்கள்.

இந்த ஆரியப் புரோகிதர்களின் கற்பனையில் உருவான பொய்க்கடவுளர்களின் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் அவர்களுக்கென்ன இலாபம்! இன இழிவு நீங்கி விடுமா? அல்லது அதற்கு மாறாக இன இழிவு மேலும் வலுப்படுமா? அறிவு ஜீவிகள் பகுத்தறிவுக்கொண்டு சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். மக்களை கடவுளின் பெயரால் ஏமாற்றி மனுதர்மத்தை நிலை நாட்டி ஜாதிகளாகப் பிரித்து மக்களில் பெருந்தொகையினரை அடிமைகளாக்கி அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களாக இழி ஜாதியினராகக் கற்பித்து, அதன் மூலம் ஆதாயம் அடையத்தான், ஆரியர்கள் பொய்க்கடவுள்களை கற்பனை செய்து அந்தப் பொய்க்கடவுள்களுக்காக கோவில்களை இந்த தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டே கட்ட வைத்தனர். அந்த கற்பனைக் கோவில்களில் இந்த தாழ்த்தப்பட்ட மக்களாக சிறுமைப்படுத்தப்பட்ட மக்கள் அர்ச்சகர் ஆவதால் இன இழிவு மேலும் வலுப்படுத்துவதாக ஆகுமா? அல்லது இந்த இன இழிவு போக்க வழிவகுக்குமா?

அன்று இந்த ஆரியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக்கொண்டே பொய்க்கடவுளர்களின் கோவில்களைக் கட்ட வைத்ததற்கும் இன்று தமிழக அரசு அதே தாழ்த்தப்பட்ட மக்களை கோவில்களில் அர்ச்சகர்கள் ஆக்குவதற்கும் வேறுபாடு உண்டா? ஏக இறைவனை மறுக்கும் டாக்டர் கலைஞர், கி.வீரமணி போன்றோர் இந்தப் பொய்க் கடவுள்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகர்கள் ஆக்குவது கொண்டு எங்கனம் நியாயம்? பொய்க்கடவுள்களை உண்மைக் கடவுள்களாக நம்பி மக்கள் மேலும் வழிகேட்டிலும் அடிமைத்தனத்திலும் சிக்குவது ஆகாதா? அவர்களின் பகுத்தறிவு வாதத்திற்கே முறனாக தெரியவில்லையா? நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இன இழிவு நீங்கி ஜாதிகள் ஒழிந்து மீண்டும் தமிழக மக்கள் ஒருதாய் மக்களாக ஆக வேண்டுமென்றால் அதற்குறிய ஒரே வழி அது அவர்களின் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற ஆதி மார்க்கமான சாந்தி வழியை இஸ்லாத்தைத் தழுவுவது மட்டுமே ஒரே வழியாகும். இன இழிவு நீங்க இதல்லாத வேறு வழியே இல்லை. இதை நாம் சொல்லவில்லை, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், கி.வீரமணி மற்றும் தமிழகத்தின் பெரும்பான்மையினர் மதித்துப் போற்றும் ஈ.வெ.ரா பெரியாரே 18.03.1947ல் திருச்சியில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில் அப்பட்டமாக அறிவித்துள்ளார். இதை 1947ல் குடி அரசு பதிப்பகம். ஈரோடு பதிப்பகத்திலிருந்து, ஈரோடு தமிழன் பிரஸில் அச்சிட்டு 2 அணாவுக்கு விறபனையான "இன இழிவு இஸ்லாமே நன் மருந்து" ஏன் இஸ்லாத்தில் சேரவேண்டும்? சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன் (பெரியார் ஈ.வெ.ரா) என்ற நூலில் அப்பட்டமாகக் கூறி இருக்கிறார். பெரியாரின் இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக எதித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அன்றும் இன்றும் முஸ்லிம்களும் சமாதிகள் - தர்காக்கள் என்று என்று வழிபடுவதும் முஸ்லிம்களின் முடச்சடங்கு சம்பிரதாயங்களையும் மற்றும் பல மூட நம்பிக்கைளையும் எடுத்துக்காட்டியதின் மூலம் அன்று பெரியார் முஸ்லிமாவது தடைப்பட்டது. 1919லிருந்து பெரியாரின் நெஞ்சில் ஆழமாக தைத்த முள் இன்றளவும் அகற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.

இஸ்லாம் முஹம்மது என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட மதமல்ல. என்று மனிதன் படைக்கப்பட்டானோ அந்த முதல் மனிதர் ஆதத்திற்கு ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட தூய வாழ்க்கை நெறி. அந்த தூய வாழ்க்கை நெறி நேர்வழி காலத்திற்கு காலம் வயிறு வளர்க்கும் புரோகிதரர்களால் கோணல் வழிகளாக ஆக்கப்படும்போதெல்லாம் ஏகன் இறைவன் மீண்டும் மீண்டும் இறைத்தூதர்களை அனுப்பி மீண்டும் தூய வாழ்க்கை நெறியை நிலை நாட்டினான். இறுதி இறைத்தூதரான முஹம்மதுக்கு (அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக) அருளப்பட்ட நூல் புரோகிதரர்களால் மாசுபடுத்த முடியாத அளவில் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின்னர் இறைத்தூதரோ வழிகாட்டல் நூலோ வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அறிவு ஜீவிகளே, முற்போக்கு சிந்தனையாளர்களே! உங்கள் உள்ளங்களில் ஏற்கனவே படிந்திருக்கும் சிந்தனையை சிறிது நேரம் தூர எடுத்து வைத்து விட்டு நடுநிலையோடு இப்போது சொல்வதை ஆராய்ந்து பாருங்கள். இன்றைய தமிழக முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களில் 5 சதவிகிதத்தினர் கூட அரபு நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் சந்ததிகளாக இருக்க மாட்டார்கள். எஞ்சிய 95 சதவிகித முஸ்லிம்கள் இந்த நாட்டின் மைந்தர்களே. சில தலைமுறைகளுக்கு முன்னால் பிராமணர்களாக, செட்டியாளர்களாக, முதலியார்களாக, நாயுடுகளாக, தேவர்களாக, நாடார்களாக, கள்ளர்களாக, முத்துராஜாக்களாக, பள்ளர்களாக, பறையர்களாக, சக்கிலியர்களாக இப்படி எண்ணற்ற ஜாதியினர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே! அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்களே! தாங்கள் இருந்து கொண்டிருந்த மதத்தில் தாங்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதில்லை. தாழ்த்தப்பட்டவர்களாக இழிவு படுத்தப்பட்டவர்களாக இருந்த ஒரே காரணத்தால் அதனை வெறுத்து இஸ்லாத்தை தழுவி முஸ்லிம் ஆனவர்களே! ஆயினும் அவர்கள் முழுமையாக இஸ்லாத்தை அறிந்து இஸ்லாத்தினுள் நுழையவில்லை. பெயரளவில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டார்களே அல்லாமல் உண்மையான ஓரிறை விசுவாசிகளாகவில்லை. அவர்களின் பழைய மதத்திலுள்ள ஆச்சாரங்கள், சடங்கு சம்பிரதாயங்களை, பெயர் மாற்றத்தோடு இங்கும் நடைமுறைப்படுத்தினார்கள். அங்கு கோயில்களில் பூஜை புணஸ்காரம், நெய் பால் அபிஷேகம் என சடங்கு செய்தவர்கள், இங்கு தர்கா சமாதிகளில் ஃபாத்திஹா, சந்தனம், பூ, அபிஷேகம் என சடங்கு செய்கிறார்கள். அங்கு கோவில்களில் சடங்குகள் செய்து தேர் இழுத்தார்கள். இங்கு தர்காக்களில் கொடியேற்றி சடங்குகள் செய்து கூடு இழுக்கின்றனர். அங்கு பஜனை பாடியவர்கள் இங்கு மவ்லூது என்ற பஜனை பாடுகிறார்கள். அங்கு திதி கர்மாதி என இறந்தவர்களுக்காக சடங்கு செய்தவர்கள், 3ம்,7ம்,40ம், வருஷ ஃபாத்திஹா என இறந்தவர்களுக்காக சடங்குகள் செய்கிறார்கள். அங்கே கோவில்களில் உண்டியல்கள், இங்கே தர்காக்களில் உண்டியல்கள்; அங்கு வரதட்சனை வாங்குகிறார்கள். இப்படி இங்கும் இந்த இடைத்தரகர்களான மவ்லவிகளின் துணையுடன் அனைத்து மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து வருகின்றனர்.

ஆயினும் பெரியதொரு ஆச்சரியம்; தாழ்த்தப்பட்ட மக்கள் படித்து, பட்டங்கள் பெற்று பல உயர் பதவிகளை அடைந்தும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு உயர்ந்தும், பெரும் பணம் படைத்தவர்களாக ஆகியும் சாதிக்க முடியாததை, பிறப்பால் அவர்களை ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவை அப்பேத்கார், பெரியார், அண்ணா இன்னும் இவர்கள் போல் பலர் பெரும் முயற்சிகள் செய்தும், அறிவார்த்த சோனைகள் செய்தும் சாதிக்க முடியாததை பிறப்பால் ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, இஸ்லாத்தைத் தழுவியதும் இருந்த தெரியாமல் காணாமல் போய்விட்டது. மக்களுக்கு முன்னின்று தொழ வைப்பதிலிருந்து ஒரு பரம்பரை முஸ்லிம் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும், தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து இஸ்லாத்தைத் தழுவிய ஒரு முஸ்லிமுக்கு கிடைத்து விடுகிறது. நாம் முன்னர் விவரித்த 95 சதவிகித முஸ்லிம்களில் யாராவது அவர்களின் முன்னைய ஜாதியை குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றார்களா? ஒரு போதும் இல்லை. அதற்கு மாறாக கிறிஸ்தவ மதத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒட்டிக்கொண்டிருந்த இன இழிவு கிறிஸ்தவனாகியும் தொடர்கிறது. நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்றே அடையாளம் காட்டப்படுகிறார்கள். அம்பேத்கார் தழுவிய பெளத்த புத்த மதத்திலும் (நியோ புத்திஸ்ட்) என அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

ஆனால் இஸ்லாத்தை தழுவி யாரும் அவர்களின் முன்னைய இழி நிலையை நினைவுபடுத்தி அடையாளம் காட்டப்படுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்களிலுருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இறுதி வழிகாட்டல் நூலான அல்குர்ஆனின் நேரடி கட்டளைப்படி நடக்காமல் முன்னைய மதத்தில் கடை பிடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய செயல்கள் இபோதும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அதிசயதக்க வகையில் அவர்களின் பிறப்போடு இணைக்கப்பட்டிருந்த இன இழிவு இல்லாமலேயே போய்விட்டது. அவர்கள் பெயர் அளவில் மட்டும் முஸ்லிமாக ஆனவுடன் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்பட்டு விட்டது. அன்று பள்ளரிலிருந்து பறையரிலிருந்து சக்கிலியலிருந்து முஸ்லிமானவர்களை இன்று யாரும் பள்ளவ முஸ்லிம், பறை முஸ்லிம், சக்கிலிய முஸ்லிம் என்று சொல்லுவதே இல்லை. பிராமணரிலிருந்து முஸ்லிமானவரும், பள்ளர் பறையர், சக்கிலியலிருந்து முஸ்லிமானவரும் சரி சமமானவர்களாகவே மதிக்கப்படுகிறார்கள். தோளோடுதான், காலோடுகால் ஒட்டி நின்று ஒரே வரிசையில் இறைவனைத் தொழுகிறார்கள். தகுதி இருந்தால் முன் நின்று இமாமாக தலைவராக நின்று தொழ வைக்கவும் செய்கிறார்கள். இறை மறுப்புக் கொள்கையுடையோரே நீங்கள் அனைவரும் மகத்துவமிக்க ஓரிறைவனுக்கும் மனிதனுக்குமிடையில் புகுந்துக்கொண்டு புரோகிதர்கள் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக கற்பனை செய்துள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்கள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் இவற்றைக் காரணமாக காட்டி, என்றும் நிலைத்திருக்கும் ஓரிறைவனைக் எப்படி மறுக்கத் துணிகிறீர்கள்?

இதற்கு முன்னர் வாழ்ந்து மடிந்த நாஸ்திக சிந்தனையாளர்கள் அண்ணா, பெரியார், ரஸ்ஸல், பெர்னாட்ஷா போன்றோரின் எழுத்துக்களை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் உண்மையான ஓரிறைவனை அவர்கள் மறுத்ததாக இல்லை. அதற்கு மாறாக அனைத்து மதங்களிலுமுள்ள புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பொய்க்கடவுள்களையும், மூடச்சடங்குகளையும், சம்பிராதயங்ளையும், அனாச்சரங்களையும், முன்னோர்கள் பெயரால் இட்டுக்கட்டியுள்ள கற்பனைகளையும் மறுத்துள்ளனரே அல்லாமல், அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் சக்திமிக்க இணையோ, துணையோ, தேவையோ இல்லாத ஓரிறைவனை மறுத்ததாகப் பார்க்க முடியவில்லை. புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ள எண்ணற்ற பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும்தான் கடுமையாகச் சாடியுள்ளனர்.

அல்குர்ஆனை பொறுமையோடு, ஏற்கனவே உள்ளங்களில் பதிந்து போயுள்ள எண்ணங்களை அகற்றிவிட்டு நடுநிலையோடு படித்துப் பார்ப்பீர்களானால் இந்தப் பொய்க்கடவுள்களையும் சமாதிகளையும், மூடநம்பிக்கைகளையும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களையும், அனாச்சாரங்களையும் இவற்றைக் கற்பனை செய்து மக்களை வழிகெடுப்பவர்களான இடைத்தரகர்களான புரோகிதரர்களையும் நீங்கள் அனைவரும் சாடுவதைவிட ஆயிரம மடங்கு அதிகமாகச் சாடியுள்ளதை பார்ப்பீர்கள். இப்படிப் பொய்த் தெய்வங்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் தங்களின் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்புகிறார்கள். என்று இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனில்

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. அல்குர்ஆன் அத்தியாயம் 2:174 ஆயினும் இந்தக் கடுமையான எச்சரிக்கைகளை முதுகுக்குப் பின்னால் எறிந்து புரோகிதரர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வழ்வுக்காகப் பெருங்கொண்ட மக்களை மதத்தின் பெயரால் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள். ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு தன்னை அறுத்துக்கூறு போடும் கசாப்புக்கடைகாரர்களை நம்பும் ஆட்டு மந்தைகள் போல் தங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதப்புரோகிதரர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் மனித மந்தைகளாகவே பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள்.
ஆயினும் எல்லா மதங்களிலுமுள்ள வெகு சொற்பமான மனிதர்கள் தங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும் ஓரளவாவது பயன்படுத்தி இந்த மதப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை விளங்கியதாலும் கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வழிகெடுப்பதாலும், உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் நாஸ்திகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சிந்தனையுடையவர்கள் வெகு சொற்பத் தொகையினராகவே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களே மனிதர்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், ஜாதிப் பிரிவினைகள், இன இழிவு, மனிதனே மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகள் இவற்றைப் பொறுக்க முடியாமல் வெகுண்டெழுந்தாலும் அவற்றை போக்கி சகோதரத்துவ சமத்துவ சமநிலை சமுதாயத்தைச் அமைக்க அவர்களின் பகுத்தறிவில் படும் திட்டங்களைத் தருகின்றனர். தனித்தொகுதிகள், இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் போன்ற திட்டங்கள் அனைத்தும் இத்தரத்தை உடையவையே. இப்படிப்பட்ட மனித பகுத்தறிவுத் திட்டங்களால் ஏழு தலைமுறை என்ன? எழுபது தலைமுறை ஆனாலும் இன இழிவு நீங்காது. சகோதரத்துவ சமத்துவ சமநிலைச் சமுதாயம் அமையாது. அனைத்து மதங்களிலும் புரோகிதர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களைக் கொண்டு எவ்வித சீர்த்திருத்தமும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அனைத்து மதங்களிலும் இந்தப் புரோகிதரகளின் வஸீகரப் உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு சுயமாகச் சிந்திக்கும் மக்களும் இருக்கிறார்கள். எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட சுயசிந்தனையாளர்கள் ஒன்று திரட்டப்பட்டால் அவர்களின் சுய சிந்தனையை ஒழுங்குப்படுத்தி முறையான முழுமையான பகுத்தறிவாளர்களாக அவர்களைச் செம்மைப்படுத்தினால் உலகில் மாபெறும் புரட்சியை ஏற்படுத்தி விட முடியும். இன்று தெளிவான ஆதாரங்களுடைய அதன் பரிசுத்த நிலை இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருந்தும் முஸ்லிம்கள், இறைவன் அல்குர்ஆனில் கூறியிருப்பது போல் என்னுடைய இறைவா நிச்சயமாக என்னுடைய சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டனர். (25:30 அல்குர்ஆன்) என்று இறைத்தூதர் மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கொப்ப இறுதி வழிகாட்டல் நூலைப் புறக்கணித்துவிட்டு முஸ்லிமகளும் மதப்புரோகிதரர்கள் பின்னால் செல்வதால் அவர்களைக் கொண்டு மறுமலர்ச்சி ஏற்படும் வாய்ப்பே இல்லை. எனவே அல்குர்ஆனின் முஹம்மது அத்தியாயம் 47:38ல்

எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள். என்று இறைவன் கூறியிருப்பதை இன்று அனுபவத்திலேயே பார்க்கிறோம். மற்ற மதங்களிலுள்ள சிந்தனையுள்ள சகோதரர்கள் அங்குள்ள மதப்புரோகிதரர்களின் தில்லுமுல்லுகளை விளங்கிச் சுயமாக சிந்திக்க ஆரம்பித்து அதன் விளைவாக நேரடியாக அல்குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து, சிந்தித்து விளங்கி இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அவர்கள் புரோகிதரர்கள் பிடியில் சிக்காமல் சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்கள் இன்றைய பரம்பரை முஸ்லிம்களைவிட மிகச் சிறந்தவர்களாக, சிந்தித்து விளங்கிச் செயல்பட்ட அந்த நபித்தோழர்களைப் போல் பார்க்க முடிகிறது. எனவே பகுத்தறிவு சிந்தனையாளர்களே நீங்கள் அனைவரும் மதப்புரோகிதர்கள் பிடியிலிருந்தும், அவர்களின் கற்பனைகளில் உருவான பொய்க்கடவுளர்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு விட்டீர்கள். மீண்டும் அந்தப் புரோகிதரர்கள் பிடியில் சிக்கப்போவதில்லை. எனவே அதற்கு மேலே ஒரு படி உயர்ந்து இதற்கு முன்னர் பகுத்தறிவு வாதம் புரிந்த அனைத்துப் அறிஞர்களும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டும், நடைமுறைப்படுத்த இயலாமல் தவறிய கொள்கையும், நமது இந்திய மக்களின் ஆதிக் கொள்கையுமான "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற அடிப்படையில் அந்த ஓரிறைவன் மனித இனத்திற்கு வகுத்தளித்த இயற்கை நெறியான வாழ்க்கை நெறியான சாந்தி, அமைதி மயமான இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் சகோதரத்துவ, சமத்துவ சமநிலை சாந்தி சமுதாயம் சமைய ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம், குறைந்த பட்சம் தெய்வமில்லையா? (நாஸ்திகம்) ஒரு தெய்வமா? (ஏகத்துவம்) என்ற அடிப்படையில் முதலில் விதண்டாவாதம் இல்லாமல், அழகிய முறையில் ஊடகங்களில் விவாதித்து உண்மையை கண்டறிய வேண்டுகிறோம். தமிழக மக்களின் அழிந்து மண்ணோடு மண்ணாகிப் போகும் உடல் தேவைகளான உணவு, உடை இருப்பிடம் மற்றும் பொழுது போக்கு இவற்றை மட்டும் நிறைவுபடுத்தி கொடுப்பது மட்டும் சீரீய பணியல்ல. அவர்கள் மனிதர்களாக, மனிதப் புனிதர்களாக நீதி, நேர்மை, தர்மம், மனித நேயம், சத்தியம் நேர்வழி இவற்றையும் சிந்தித்து விளங்கி, திருந்தி செம்மையுற பாடுபடுவதுதான் சிறந்த பணியாக இருக்க முடியும். பெரியாரின் நீண்ட உரைகளால், எழுத்துக்களால் இந்தப் புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டு வந்தவர்களும், அவர்களின் சந்ததிகளும் மீண்டும் அந்தப் புரோகிதரர்களின் பிடியில் போய் சிக்கும் மிகப்பரிதாபமான, அபாயமான நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனின் பகுத்தறிவைக் கொண்டு மட்டும் நாட்டை சீர்படுத்தி விடலாம் என்று முயன்றால் அது ஏழு தலைமுறை என்ன? எழுபது தலை முறை ஆனாலும் சாத்தியப்படாது, இன இழிவு நீங்காது, ஒழியாது என்பதைப் பகுத்தறிவாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!