Monday, June 29, 2009

இரத்த உறவுகளை துண்டிக்காதீர்கள்!

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

Wednesday, June 24, 2009

பீஸ் டீவி (Peace TV)யின் இலவச உருது மொழிச் சேவை தொடக்கம்


மனிதகுல அமைதிக்கு இஸ்லாம் கூறும் இணக்கமான கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காணும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 1.1.2006 முதல் பீஸ் டீவி (Peace TV)யில் 24 மணிநேர ஆங்கில ஒளிபரப்புச் சேவை தொடங்கப் பட்டது.

கடந்த மூன்றாண்டு காலம் தன் குறிக்கோளை இலக்காகக் கொண்டு இயங்கிய பீஸ் டீவி (Peace TV)யின் ஆங்கில ஒளிபரப்புச் சேவைக்கு உலகெங்கும் வாழும் முஸ்லிம்களும் பிறமதச் சகோதரர்களும் வழங்கிய அமோக ஆதரவுவைத் தொடர்ந்து, பீஸ் டீவி உர்து (PEACE TV URDU) எனும் தனது புதுச் சேவையைக் கடந்த 1.6.2009இல் சோதனை ஒளிபரப்பு மூலம் பீஸ் டீவி (Peace TV) தொடங்கியது.

உருது ஒளிபரப்பின் சோதனை ஓட்டமும் பெருவரவேற்பைப் பெற்றதால், கடந்த 19.6.2009 முதல் முழுமையான 24 மணி நேரச் சேவையாக பீஸ் டீவி உர்து (PEACE TV URDU) செயல்படத் தொடங்கி விட்டது, அல்ஹம்து லில்லாஹ்!

பிற தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் பல்வேறு மூடநம்பிக்கைக் கற்பனைக் கதைகள், நாடகங்கள், வன்முறைகள், ஆடல்-பாடல் ஆபாசங்கள் போன்ற நிகழ்சிகளில் சிக்கியிருந்த மக்களுக்கு "மனித குல அமைதிக்குத் தீர்வு" எனும் தலைப்போடு ஒளிபரப்பப்படும் தூய்மையான இந்நிகழ்சிகள் ஒரு சிறந்த மாற்று வழியாகவும் அறிவொளியாகவும் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

கடந்த வாரம்வரை உர்து நிகழ்சிகள் PEACE TVயின் ஆங்கில நிகழ்சிகளுடன் ஒளி பரப்பப்பட்டன. அந்த ஒளிபரப்பில் 66% முதல் 75% ஆங்கில நிகழ்சிகளும் 25% முதல் 33% வரை உர்து நிகழ்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இனி இரண்டு அலைவரிசைகளும் 100% ஆங்கிலம் மற்றும் உர்து நிகழ்சிகளை ஒளிபரப்பக் கூடிய, இரண்டு 24 மணி நேர அலைவரிசைகளாக இயங்கும்.

மிகவும் வித்தியாசமான முறையில் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்சிகள் டாக்டர் ஜாகீர் நாயக், அஹ்மத் தீதாத், பிலால் பிலிப்ஸ், அப்துல் ரஹீம் கிரீன், யூசூஃப் எஸ்டேஸ், யாஸர் ஃபஜாகா, டாக்டர் ஜமால் அல்-பதவீ போன்ற பல உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், பத்திரிகையாளர்கள் கேள்வி-பதில் நிகழ்சிகள், ஆகிய ஆன்மீக, உலகப் பிரச்சினைகளுக்கு இஸ்லாம் கூறும் அமைதியான முறையில் தீர்வுகள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கபடுகின்றன என்பது குறிப்பாக இளம் அறிவு ஜீவிகளை கவர்கின்றது.


அதே போல் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பீஸ் மாநாட்டு நிகழ்சிகள், மும்பை இஸ்லாமிக் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் (IRF ISLAMIC RESEARCH FOUNDATION) [ஐ ஆர் எஃப்]அரங்க நிகழ்சிகள், கேள்வி-பதில்கள், டாக்டர் வில்லியம் கேம்ப் பெல், டாக்டர் ருக்னுத்தீன், குரு ரவி ஷங்கர், போன்றவர்களுடன் நடைபெற்ற மத ஒப்பாய்வு விவாதங்கள் மிகவும் பிரபலமானவை.

மேலும் பொருளாதார, விஞ்ஞான, கல்வி போன்ற இதர வாழ்வியல் துறையின் புகழ்பெற்ற நிபுணர்கள் நேர்காணல்கள், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் மும்பையில் நடத்தும் ISLAMIC INTERNATIONAL SCHOOL சிறுவர்கள், மாணவர்கள் நிகழ்சிகள் என்று எல்லா வர்க்கத்தினரையும் கவரும் சேனலாக இது செயல்படுகிறது.

முற்றிலும் இலவசமான இந்த ஒளிபரப்பு அலைவரிசைகளை உங்கள் கேபிள் ஆபரேட்டர்களைத் தொடர்பு கொண்டு நிறுவிக் கொள்வதன் மூலம் ஆங்கிலம் மற்றும் உர்து (ஹிந்தி) இரு மொழிகளில் 24 மணி நேரமும் உங்கள் இல்லத்தில் இறை மார்க்கம் இஸ்லாமிய மணம் கமழச் செய்வீர்களாக.

அல்லாஹ்வின் அருளும் கிருபையும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இவ்வழியில் உழைத்து நிலையான மறுமை வாழ்க்கையின் வெற்றி நோக்கத்தில் செயல்படும் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாகட்டுமாக!ஒளிபரப்பு அலை வரிசைகள்:
----------------------------------------

1) INTELSAT 10 ( PAS 10)

Position : 68.5 East Frequency : 4116 Symbol rate : 8145, FEC 3/4

Polarization Vertical.

Reach : Asia, Middle East, Australia & Africa.

2) ARAB SAT : BADR - 4

Position : 26.0 East Frequency : 12169 Symbol rate : 27500, FEC 3/4

Polarization vertical.

Reach : Middle East, Africa & Europe.

Saturday, June 20, 2009

உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்!


நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.

சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் இருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் þருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு 'சமூக விரோதி' புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.

இறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?

இஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.

நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)

இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:195)

உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)

மேலே கண்ட þறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?

மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.
by அப்துஸ்ஸமது சென்னை

Thursday, June 18, 2009

ரியா !மறைவான இணைவைப்பு?" வழிகேட்டை அதிகரிக்கும் " தொடர் 10

ரியாவில் ஈடுபடும் மனிதனின் உள்ளத்தில் நோய் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோயை குணப்படுத்தாவிட்டால், அது மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். திருக்குர்ஆனில் வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(திருக்குர்ஆன் 2:9,10)

அண்ணல் நபி அவர்களின் தோழர்கள் காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்தில் நாம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் காண முடிகிறது.

ஜாபிர் இப்னு சமூரா அறிவிக்கிறார்கள்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது, கூஃபா நகரவாசிகள் சிலர் தங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்ட சஅது இப்னு அபி வக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி புகார் தொிவித்தார்கள். இந்த புகாரைப் பற்றி விசாாிக்க உமர் (ரலி) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இருப்பினும் அவர்கள் தொடந்து உமர் (ரலி) அவர்களிடம் மென்மேலும் புகார்களைக் கூறிய வண்ணம் இருந்தார்கள். சஅத் (ரலி) அவர்களுக்கு சரியாகத் தொழக்கூடத் தொியவில்லை என்றும் கூட அவர்கள் புகார் சொன்னார்கள். இச்சூழலில் உமர் (ரலி) சஅதை அழைத்து அவர்களது தொழுகையைப் பற்றி விசாாித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்.

'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அண்ணல் நபி அவர்கள் எவ்வாறு தொழுதார்களோ அதே முறையில்தான் நான் தொழுதேன். இதில் நான் எந்த வகையிலும் குறை வைக்கவில்லை. இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டியும், பிந்தைய இரண்டு ரக்அத்துகளையும் சுருக்கியும் தொழுவேன்" இப்பதிலைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் 'உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்தது இதனைத் தான்" என்று பதிலளித்தார்கள்.

இதன் பிறகு மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்துவதற்காக பல தூதா;களை உமர் (ரலி) அவர்கள் கூபாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இத்தூதர்கள் சென்ற ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அவர்கள் மக்களிடம் சஅதைப் பற்றி விசாாித்தார்கள். அவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும் சஅதைப் பற்றிய பாராட்டுரைகளைத் தான் மக்களிடமிருந்து கேட்க முடிந்தது. அப்ஸ் கோத்திரத்தாாின் பள்ளிவாசலுக்கு தூதர்கள் சென்ற போது உஸாமா இப்னு கத்தாதா என்றமனிதர் எழுந்து நின்று 'உங்களுக்கு உண்மை தொிய வேண்டுமெனில் நான் சொல்வதைக் கேளுங்கள். படைகளுடன் சேர்ந்து சஅத் போர்புரிவதற்குச் செல்வதில்லை. போாில் கிடைத்த பொருட்களையும், அவர் நியாயமாக பகிர்ந்தளிப்பதில்லை" என்று கூறினார். இதனைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள் 'இறைவா! நான் உன்னிடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறேன். உனது இந்த அடியார் (அதாவது உஸாமா) ஒரு பொய்யராக இருந்தால், ரியாவிற்காக, பிரபலமடைவதற்காக எழுந்து நின்றிருப்பாரேயானால், அவரது வாழ்நாளை நீடிப்பாயாக, அவரது வறுமையை அதிகாிப்பாயாக மேலும் அவரது கண்ணியத்தைக் குலைப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.

இதற்குப் பல ஆண்டுகள் கழித்து உஸாமாவிடம் அவரது நிலை எப்படியுள்ளது என்று வினவப்பட்டால்....

'வயது முதிர்ந்த கிழவனாக அலுப்பு தட்டியவனாக சஅதின் பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறேன்" என்று பதிலளிக்கும் நிலையில் இருந்தார். இச்சம்பவத்தை விவாிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறும் போது, 'நான் அவரை (உஸாமாவை) ஒருமுறை பார்த்தேன். வயோதிகத்தின் காரணமாக அவரது புருவங்கள், கண் இமையில் படும் அளவிற்குத் தொங்கியிருந்தது. இருப்பினும் தெருக்களில் இளம் பெண்களைக் கடந்து செல்லும் போது அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நூல்: புகாாி, முஸ்லிம், அபூதாவூத்

Tuesday, June 16, 2009

இணைய வானொலி,அல்-மனார்!


உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு இணைய வானொலி!ஆம், அல்-மனார் எனும் பெயர் கொண்ட இவ்வானொலி இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகிறது.தினமும் அதிகாலை ஸுபுஹு தொழுகையிலிருந்து தொடங்கும் நிகழ்ச்சிகள்,இரவு பதினொன்று மணியுடன் நிறைவு பெறுகிறது.இதில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.உதாரணமாக,வெள்ளிக்கிழமை அன்று ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி நிரல்கள்:

மு.ப. 04.30 பஜ்ருக்கான அதான், துஆ,
திலாவதுல் குர்ஆன் (சூறதுல் பகறா)
மு.ப. 07.00 "ஸபாகுல் ஹைர்"
மு.ப. 08.00 செய்திகள்.
மு.ப. 08.30 நாளும் ஒரு தகவல்.
மு.ப. 09.00 இன்றைய நாளேடுகள்.
மு.ப 09.30 ஸவ்துன் நிஸா (மகளிர் ஓசை)
மு.ப. 10.30 இசையில்லா இனிய கீதம்
பி.ப. 11.00 சொற்பொழிவு.
பி.ப. 12.30 திலாவதுல் குர்ஆன்.
பி.ப. 01.30 செய்திகள்.
பி.ப. 02.00 தர்ஜூமதுல் குர்ஆன்.
பி.ப. 02.30 அல்-குர்ஆனும் நீங்களும் (வினா-விடை நிகழ்ச்சிகள்)
பி.ப. 04.30 பிராந்திய செய்திகள்.
பி.ப. 04.40 சொற்பொழிவு கோவை.எஸ். ஐயூப்.
பி.ப. 06.10 அல்குர்ஆன் விளக்க வகுப்பு
பி.ப. 07.30 செய்திகள்.
பி.ப. 08.00 இஸ்லாமியக் குடும்பவியல் தொடர்...
பி.ப. 09.00 நேயர் நேரம்.
பி.ப. 10.00 சொற்பொழிவு.
பி.ப. 11.00 நிகழ்ச்சி நிறைவு.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை பீஸ் டிரைன் தளம் மூலமாக சென்று,சத்திய உறவுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று,தமிழ் வானொலி மேல் சொடுக்கியும் அல்லது இந்த லிங்க் மூலம் சென்றும் கேட்கலாம்.

http://www.almanarmedia.com/home.html

இணைய ரேடியோ மூலம் மார்க்கப் பணி செய்யும் இந்த சகோதர,சகோதரிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

Saturday, June 13, 2009

நல்ல வீடும்,கெட்ட வீடும்!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எந்த வீட்டில் ஒர் அநாதை இருந்து, அவனுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளப்படுகின்றதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகச் சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஓர் அநாதை இருந்து, அவனுடன் கோபமாக நடந்து கொள்ளப்படுகின்றதோ அந்த வீடுதான் முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகக் கெட்ட வீடாகும். ;(இப்னு மாஜா

Thursday, June 11, 2009

இஸ்ரேலிய பெண்ணைக் காப்பாற்றிய பாலஸ்தீனியர்!

இஸ்ரேலிய அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பிரச்சனைகளின் இடையே வாழ்ந்து வரும் பாலஸ்தீனியர்கள், விபத்துக்குள்ளான ஒரு இஸ்ரேலிய தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காத்து மனிதாபிமானத்துக்கு முன்னுதாரணம் ஆகியுள்ளனர்.

மேற்கு கரையிலுள்ள திகுவா நகரத்தில் வேகமாக கார் ஓட்டிச் சென்ற இஸ்ரேலிய பெண்ணின் கார், கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்தது. காரினுள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண் மற்றும் நான்கு மாதமே ஆன அப்பெண்ணின் குழந்தையைப் பலஸ்தீனியர்கள் உடனடியாக மீட்டெடுத்து மருத்துவமனை சேர்த்தனர். தற்போது அப்பெண்ணும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தை இஸ்ரேலிய பத்திரிக்கைகளும் ஆச்சரியத்துடன் செய்தியாக்கியுள்ளன. திகுவா, இஸ்ரேல் ஆக்ரமித்து யூதர்களைக் குடியேற்றியுள்ள பிரதேசமாகும். இப்பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் இடையே அவ்வபோது கைகலப்பும் ஏற்படுவதுண்டு. எனவே இப்பகுதியில் வாழும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சாலையில் இரும்பு திரை நிர்மாணிக்க இஸ்ரேல் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
**************************************************
"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)



நபி அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள். அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)



நபி அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)



நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)



நபி அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)



நபி அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)



"உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)



அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)



நபி அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)



அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார். நபி அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)



**********************************************

Wednesday, June 3, 2009

சமஸ்கிருதத்தில் திருக்குரான்!

உலகப் பொதுமறை திருக்குர்ஆன் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. பழமையான பாரசீகம், கிரேக்கம், ரோமன், லத்தீன் போன்ற மொழிகளிலிருந்து கடந்த ஆண்டு நேபாள மொழியிலும் அருள்மறை குர்ஆன் மொழிபெயர்க்கப் பட்டது. உலகில் வாழும் மனிதர்கள் பேசும் அனைத்து மொழிகளிலும் சத்தியத் திருமறையாம் திருக்குர்ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களின் இதயங்களை சுத்திகரிக்கிறது.


தற்போது இந்தியாவின் மிகப்பழமை யான மொழிகளில் முக்கியம் இடம் வகிக்கும் வடமொழி என்று வர்ணிக்கப் படும் சமஸ்கிருத மொழியிலும் திருக் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட இருக் கிறது. ஹிந்து மதத்தின் வேத மொழி யாகக் கருதப்படும் சமஸ்கிருதத்தில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு செய்யப் படுவது சமயங்களுக்கிடையே நன்னம் பிக்கை வளர்க்கும் முயற்சியாகும் என சமூகநல ஆர்வலர்கள் திருப்தி தெரிவிக்கிறார்கள்.


இந்த அரிய செயலை செய்ய விருப்பவர் ரஜியா சுல்தானா என்ற 21 வயது இளம்பெண் ஆவார். இவர் பேராசிரியர் முஹம்மது சுலை மானின் பேத்தியாவார். பேராசிரியர் முஹம்மது சுலைமான், திருக்குர்ஆனை ஹிந்தி மொழிக்கு மொழியாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜியா சுல்தானா, சமஸ்கிருத மொழியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, June 1, 2009

எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.




கேரள எழுத்துலகில் தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஆங்கில எழுத்துலகிலும் பிரகாசித்த 75 வயது நிரம்பிய பிரபல மலையாள எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா அவர்கள் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2 மணிக்கு மரணமடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

1934 மார்ச் 31 இல் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நாலப்பாட்டு என்ற பெயர் கொண்ட குடும்பத்தில் பிறந்த சகோதரி கமலா சுரய்யாவின் தாயார் பிரபல பெண்கவிஞர் பாலாமணியம்மா ஆவார். தந்தை வி.எம். நாயர். கணவர் மாதவதாஸ். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர்.

வாழ்வின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் தன் வாழ்நாளில் அனுபவித்து விட்ட சகோதரி சுரய்யா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும் கமலாதாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் பிரபலமாக அறியப்பட்டிருந்தவர். அவரது பல்வேறு நாவல்களும் ஆங்கிலக் கவிதைகளும் கமலா சுரய்யாவுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற வாசகர்களைத் திரட்டித் தந்துள்ளது.

பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக்கால நினைவுகள்), பூதகாலம் (இறந்தகாலம்), பக்ஷியுடைய மரணம் (பறவையின் மரணம், யா அல்லாஹ் போன்றவை சகோதரி சுரய்யாவின் பிரசித்திப்பெற்ற நாவல்களில் சில! கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது போன்ற பல்வேறு எழுத்தாளர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

அன்பைத் தேடி பயணப்பட்ட அவரின் வாழ்வில், அவர் இறுதியாக தேடிய மழை போன்ற அன்பு இருக்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டு கொண்டார். 1999 ஆம் ஆண்டு தன் 65 ஆவது வயதில் அவர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அன்றோடு மாதவிக்குட்டி என்ற தன் இயற்பெயருக்கு விடைகொடுத்து, கமலா சுரய்யா என்றப் பெயருக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தேடியலைந்த நிரந்தர அன்பு பொங்கும் இடமாக இஸ்லாத்தைக் கண்டுகொண்ட நேரத்திலேயே, பிரபலமான நாயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சமூகத்தில் தான் மிகப் பெரிய அந்தஸ்திலும் பெயரிலும் அறியப்பட்டிருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு அவை ஏதும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. அறிந்துக் கொண்ட உண்மையை ஏற்றுக் கொள்வதில் எவ்வித தயக்கமும் காட்டாத அவரது வெளிப்படையான கள்ளம் கபடமற்ற அந்தப் பண்பே பிந்தைய அவரின் வாழ்வில் மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வைத்தது.

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக அதுவரை மிகப் பெரிய அந்தஸ்தில் வைத்துப் போற்றிய சமூகத்திலிருந்து, சங்பரிவார வல்லூறுகள் அவர் மீது பாய்ந்து பிராண்டியன. கூடவே கொலை மிரட்டல்களும் தூற்றல்களும் அவரைத் தொடர்ந்தன!

உடல் தளர்ந்திருந்தாலும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துத் தான் தேடியதைப் பெற்றுக் கொண்ட அவரின் உறுதியான மனம் தளரவில்லை. பிற்காலத்தில் சகோதரி கமலா சுரய்யா அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் திகட்டிப்போய் அதிலிருந்து வெளியேறி விட்டார் என, அவர் சஞ்சரித்திருந்த பத்திரிக்கை உலகினரே எவ்வித வெட்கமும் இன்றி பொய் கதைகளை அவருக்கு எதிராக எழுதி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர் மீதான தங்களின் வெறுப்பைக் கொட்டித் தீர்த்தன.

தொடர்ந்து வந்த வல்லூறுகளின் தூற்றல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவரின் இறுதி காலத்தில் அவர், தான் மிகவும் நேசித்திருந்த பிறந்த மண்ணை விட்டு மும்பை சென்று வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கும் தள்ளப்பட்டார். அவரை மிகவும் நேசித்திருந்த அவரின் இளைய மகன் ஜெயசூர்யாவுடன் தன் கடைசி காலத்தை புனாவில் நிம்மதியுடன் கழித்தார்.

கடந்த ஒன்றரை மாதக்காலமாக சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு, ஜஹாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை 2 மணிக்கு அவர் மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

இன்று அவர் நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றப்பின்னரான அவரின் கடந்த 10 ஆண்டு கால வாழ்வில் அவர் வெளிப்படுத்திய அவரின் மகத்தான எண்ணங்கள், இவ்வுலகை விட்டு நீங்காது!

அவரின் எண்ணங்களில் சில:

"அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!"

"நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை."

"எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது."

"நான் முஸ்லிமாக வாழ்கிறேன்."

"பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, 'கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்' என்று கோஷம் எழுப்புவது அறிவுடைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது. தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன் முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனைகளில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்."

" கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை."

கண்டுகொண்ட உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கும் அதன்படி வாழ்வதற்கு எந்த மிரட்டல், உருட்டல்களுக்கும் அஞ்சாமல் அவர் காட்டிய உறுதியும் எவ்வித அச்சமும் இன்றி அசத்தியங்களுக்கு எதிராக அவர் தைரியமாக வெளியிட்ட எண்ணங்களும் என்றும் நம்மிடையில் அவரை நினைவுகூற வைக்கும்.

சகோதரியின் பிழைகளைப் பொறுத்து, அவர் தேடி அலைந்துப் பெற்ற நிரந்தர அன்பை நிரந்த வாழ்விலும் வழங்க இறைவன் கருணை புரியட்டுமாக! ஆமீன்.

நன்றி: சத்திய மார்க்கம்
by அபு அபீரா

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!