Thursday, June 11, 2009

இஸ்ரேலிய பெண்ணைக் காப்பாற்றிய பாலஸ்தீனியர்!

இஸ்ரேலிய அரசின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பிரச்சனைகளின் இடையே வாழ்ந்து வரும் பாலஸ்தீனியர்கள், விபத்துக்குள்ளான ஒரு இஸ்ரேலிய தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காத்து மனிதாபிமானத்துக்கு முன்னுதாரணம் ஆகியுள்ளனர்.

மேற்கு கரையிலுள்ள திகுவா நகரத்தில் வேகமாக கார் ஓட்டிச் சென்ற இஸ்ரேலிய பெண்ணின் கார், கட்டுப்பாடு இழந்து கவிழ்ந்தது. காரினுள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண் மற்றும் நான்கு மாதமே ஆன அப்பெண்ணின் குழந்தையைப் பலஸ்தீனியர்கள் உடனடியாக மீட்டெடுத்து மருத்துவமனை சேர்த்தனர். தற்போது அப்பெண்ணும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இச்சம்பவத்தை இஸ்ரேலிய பத்திரிக்கைகளும் ஆச்சரியத்துடன் செய்தியாக்கியுள்ளன. திகுவா, இஸ்ரேல் ஆக்ரமித்து யூதர்களைக் குடியேற்றியுள்ள பிரதேசமாகும். இப்பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் இடையே அவ்வபோது கைகலப்பும் ஏற்படுவதுண்டு. எனவே இப்பகுதியில் வாழும் யூதர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சாலையில் இரும்பு திரை நிர்மாணிக்க இஸ்ரேல் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
**************************************************
"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)



நபி அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள். அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)



நபி அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)



நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)



நபி அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)



நபி அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)



"உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)



அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)



நபி அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)



அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார். நபி அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)



**********************************************

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!