அன்புக்குரிய சகோதர,சகோதரிகளுக்கு,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக.
அதிரையை சேர்ந்த சகோ நெய்னா முஹம்மது அவர்கள் சில நாட்கள் முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டு,உடனடியாக கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.அங்கு தீவிர சிகிச்சைக்குப்பின் இருதய ஆபரேஷன் செய்து கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
எனவே,அவர்களுக்கு நல்ல முறையில் ஆபரேஷன் செய்து,பூரண உடல் சுகமுடன் வீடு திரும்ப,எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரங்கள் ஏந்தி துவா செய்யும் படி வேண்டுகிறோம்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்,பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
“நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறுவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர் மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தயமான வழியைக் கடைப்பிடிப்பீராக.
“அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
சகோதரர் ஆப்ரேஷன் நல்ல முறையில் நடந்து பூரண உடல் நலம் பெற என் பிரார்த்தனைகளும் தெரிவிச்சுக்கரேன்.
ReplyDeleteشفاه الله
ReplyDeleteassalamu alaikum,
ReplyDeleteNalla muraiil nalam pera piraarthanaigal.