Showing posts with label இந்தக் கொலைகாரன் திருமணமானவன். Show all posts
Showing posts with label இந்தக் கொலைகாரன் திருமணமானவன். Show all posts

Thursday, April 10, 2014

இந்தக் கொலைகாரன் திருமணமானவன்

மோடி தமக்கு திருமணமானதை ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் வழக்கு போட்டு தன்னை அசிங்கப்படுத்துவார் என பயந்து நரேந்திர மோடி திடீரென ஒப்புக் கொண்டார்.


பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தன்னை திருமணமானர்.. தனது மனைவி பெயர் ஜஷோட பென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித்துள்ளார். 


ஆம் ஆத்மி கட்சியினர் வழக்கு போட்டு உண்மையை உலகுக்கு சொல்ல வைத்துவிடுவார்களோ என்று பயந்துபோய்தான் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமக்கு திருமணமானதை பகிரங்கமாக இம்முறை ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் தமது திருமணம் குறித்த இடத்தில் எதுவும் குறிப்பிடாமல்தான் தாக்கல் செய்து வந்தார் நரேந்திர மோடி. அவர் பொதுக்கூட்டங்களில் பேசும் போது கூட, தமக்கு குடும்பம் எதுவும் இல்லை.. நான் ஏன் ஊழல் செய்ய வேண்டும் என்பதுதான் பேச்சாக இருக்கும்.
இதற்கு பதிலளித்து ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் பேசுகையில், என் மனைவியைத் தவிர என்னை யார் பார்த்துக் கொள்ள முடியும். நான் ஏதாவது தவறு செய்தால் என் மனைவிதான் தடுக்க முடியும் என்றும் கூறி வந்தார். 
அத்துடன் ஆம் ஆத்மிதான் மோடிக்கு திருமணமான விவகாரத்தை அம்பலப்படுத்தி வந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் கூட தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
 http://www.adiraixpress.in/2014/04/blog-post_9900.html#.U0bhsaLbVMg

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!