Wednesday, May 25, 2016

ஹிந்தி படிப்போம்



முப்பது நாளில் ஹிந்தி படிக்கலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். அதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. ஆனால், "ஹிந்தி எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள, இருபது மணி நேரமே போதும்" என்கிறார் மதுரையைச் சேர்ந்த விஸ்வநாதன் தம்பியண்ணா என்ற ஹிந்தி ஆசிரியர்.

இவர் ஏதேனும் மாயாஜாலம் செய்கிறாரோ என்று யோசித்தபடியே மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள விஸ்வநாதன் தம்பியண்ணாவைச் சந்தித்தோம்.
 ''யார் வேண்டுமானாலும் எளிதில் ஹிந்தி பேச எழுதக் கற்றுக்கொள்ளலாம். என்ன கற்கிறோம் என்பதை விட எந்த பாடத்தை, எப்படி கற்கப்போகிறோம் என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது" என்று சொல்லும் தம்பியண்ணா,  அதற்கான சாத்தியத்தையும் விளக்குகிறார்.

“ஹிந்தியின் வாக்கிய அமைப்புகள் 70% சதவீதம் தமிழ் போன்றும், 25 சதவீதம் ஆங்கிலம் போன்றும் இருக்கும். ஆக, 95 சதவீத வாக்கிய அமைப்புகள் நமக்குத் தெரிந்த மொழிகளிலேயே இருக்கிறது. அதனால் தமிழ் வழி ஹிந்தியையும், அதனை பின்பற்றி ஆங்கிலமும் சொல்லிக்கொடுப்பதால் மாணவர்கள் விரைவாக கற்றுகொள்கின்றனர். அதற்காக ஒரு அகராதியை நானே தயாரித்துள்ளேன். இந்த புத்தகம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க உதவுகிறது" என்று கூறும் விஸ்வநாதன் தம்பியண்ணா, "மாணவர்களுக்கு நகைச்சுவை மற்றும் கதை வழியாக ஹிந்தி சொல்லிக்கொடுப்பதால், மாணவர்கள் உற்சாகமாக கற்றுக் கொள்கின்றனர்" என்கிறார்.

''எலி குடும்பம் ஒன்று சுற்றுலா புறப்படுகிறது. அதில் ஒரு சிறு எலியானது வழியில் பூனையை வழிமறிக்கிறது. அதற்குப் பெரிய எலியானது, அனைவரையும் அருகிலுள்ள மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளச் சொல்லிவிட்டு ஒரு கல்லை, அருகில் இருக்கும் தகரத்தின் மீது எறிகிறது. அந்தச் சத்தம் கேட்டு நாய் குரைத்ததும் பூனை ஓடிவிடுகிறது. எலிக் குடும்பம் பயணத்தைத் தொடர்கிறது.

இது வெறும் கதை போலத் தோன்றலாம். ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் தன்னை அறிதல், மற்றவர்களைப் புரிந்துகொள்ளுதல், தொடர்பாற்றல், உறவு பேணுதல், ஆழ்ந்து சிந்தித்தல், ஆக்க சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கல் தீர்த்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல், உணர்ச்சிகளைக் கையாளுதல் ஆகிய பத்து வாழ்க்கைத் திறன்களும் இந்த எலிக் கதைக்குள் இருக்கிறது.

பெரிய எலி, தன்னை அறிவதுடன் மற்றவர்களை பற்றியும் தெரிந்துவைத் திருந்ததால், மரத்தின் பின்னால் ஒளியச் சொல்லி, தனது தொடர்பாற்றலை வெளிப்படுத்தி, உறவைப் பேணுகிறது. அடுத்ததாக, பிரச்னையை சமாளிக்க ஆழ்ந்து சிந்தித்து, ஆக்கத்துடன் ஒரு முடிவை எடுத்து,  பிரச்னையை சிக்கலின்றி தீர்க்கிறது.

தனக்கிருந்த மன அழுத்தத்தைத் தனக்குள்ளேயே கையாண்டதுடன் ‘என்னால்தான் பிழைத்தீர்கள்’ என்று உணர்ச்சிவசப்படாமல் ‘நாயின் மொழியும் தெரிந்திருந்ததால் தப்பித்தோம்’என்கிறது பெரிய எலி. ஆகவே, இன்னொரு மொழியும் தெரிந்திருந்தால் அது நமது வாழ்க்கைக்கு நிச்சயம் பயன்படும். இந்த கதையை ஒவ்வொரு பயிற்சியின் போதும் தவறாமல் சொல்லி வருகிறேன்.
யாராவது ஹிந்தி படிக்க விரும்பினால், அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, அவர்களுக்கு இருபது நிமிடங்கள் டெமோ கிளாஸ் எடுப்போம். அந்த நேரத்திலேயே ஹிந்தி கற்கவேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும். பொதுவாக ஹிந்தி ஆசிரியர் என்றாலே பலருக்கு எரிச்சல் ஏற்படும். அதை சமாளிக்க, ஹிந்திக்கு நடுவே, வாழ்வியல் பயிற்சி, வாழும் திறன் ஆகியவையும் சொல்லித்தரப்படுவதால், மாணவர்கள், வகுப்புகளை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளில் லட்சம் பேருக்கு இந்தி கற்றுத்தந்திருக்கிறேன்.  ஹிந்தி மட்டும் அல்ல, எந்த மொழியை கற்கும்போதும் கேள்வி-பதில் அடிப்படையில் படித்தால் அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளமுடியும்” என்கிறார் தம்பியண்ணா.

-சே.சின்னதுரை

ஆனந்த விகடன் 

Saturday, May 14, 2016

தமிழக தேர்தல் : இழுபறி ஆட்சிக்கு வாய்ப்புக்கள்

கருத்துக் கணிப்பு இது , ஆனால்,அல்லாஹ் நாடுவதே நடக்கும்.
அதிமுக 95
திமுக கூட்டணி 84
ம ந கூ 51
எஸ் டி பி ஐ 1
நாம் தமிழர் 1
பா ஜ க 1
பா ம க 1

மொத்தம் 234

அல்லாஹ் மிக அறிந்தவன்


 (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன்: 3:26)

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!