Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts

Sunday, July 17, 2011

முதல் விசாரனை

 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்டகடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)..னால்,இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடையஇடத்திற்கு வந்தார்கள்அவர்கள் தொழுகையைவீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிரஅத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும்அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும்உங்களுடைய மக்களும்அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப்பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன்63:9)
குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில்பின்வருமாறு கூறினார்கள்.
இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல்தன்னுடையகுடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்குஉள்ளானவராவார்.
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: - நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின்அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்கவழிபாடுகளும் சீராகவே அமையும். அதுசீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -
உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: தொழுபவர்களில்நின்றும் நாங்கள் இருக்கவில்லை. அன்றியும்ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன்நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். இந்தநியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: - அல்லாஹ் கூறுகிறான்: -நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாகஇருங்கள்அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்;தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்இன்னும்இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன்30:31)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: -ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும்இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ளஉடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் திர்மிதி)
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)
நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோநிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழாதவர்களின் நோன்புதர்மம் போன்ற நற்செயல்கள்ஏற்றுக்கொள்ளப்படாது: -
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்அவர்கள்அல்லாஹ்வையும்அவன் தூதரையும் நிராகரித்தார்கள்;மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள்வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன்9:54)
யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)
தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: -
அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி)தொழுகையை நிலைநாட்டிஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள்மார்க்கத்தில்உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)
மனிதர்கள்வணக்கத்திற்குத் தகுதியானவன்அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லைமுஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பிதொழுகையை நிலைநிறுத்திஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர்,உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணைஇறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)
கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்
 

Friday, June 18, 2010

Thursday, September 10, 2009

தொழுது கொள்வோம்,நமக்கு தொழுகை வைக்கப்ப்படுமுன்!





அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். 2:110

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!