Thursday, June 2, 2016

குரல் வலையை நெறிக்கும் நாடு

சில பல நேரங்களில் எனக்கு கிடைத்த-கிடைக்கும் ஒரு சிறு அனுபவமே இது.இதே போல உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

நான் செல் போன்,கண்ணாடி போன்ற கடைகளில் - இங்கு கலிபோர்னியாவில் வேலை செய்யும் போது,.கிடைத்த அனுபவம் .

பலர் வருவர்,விலை கேட்டு,பிடித்து விட்டால் உடன் வாங்கி சென்று விடுவார்கள்.பொதுவாக யாரும் பிசுவுவது கிடையாது.ஆனால் மெக்சிகன் நாட்டவர் பிசுவினாலும் வாங்கி விடுவார்கள்.

சிலர்,இது எந்த நாட்டு தயாரிப்பு எனக் கேட்பர்,நான் அந்த நாட்டை சொல்வேன். சீனா என்று தனியாக சொல்லவும் வேண்டுமோ.?அண்டா,குண்டா முதல் அனைத்தும் சீனாதானே.

உடனே,எனக்கு சீனா என்றால் வேண்டாம்.என்பர்.

நான் சொல்வேன்,சார் அல்லது மேடம்,சைனா பொருட்கள்தானே உலக முழுக்க,ஏன் அமெரிக்காவிலும் கூட  குவிந்து இருக்கிறது.மற்ற நாடுகளின் பொருட்கள் வருவதில்லை,வந்தாலும் பரவலாகக் கிடைப்பதில்லை,கிடைத்தாலும் நீங்கள் அதிகம் செலவழிக்க வேண்டிவரும் என்பேன்.

அதற்கு,சொல்லி வைத்தாற்போல் அனைவரும் சொல்லும் பதில் இதுதான்.

"நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால்,அது மனித நேயத்துக்கு எதிரான,மக்களின் கருத்துக்களுக்கு எதிரான,அவர்களின் குரல் வலையை நெறிக்கும் நாடு என்பதால்தான்"

கள்ளங் கபடமில்லாத அமெரிக்கர்களின் கூற்று சரிதானே!

Wednesday, May 25, 2016

ஹிந்தி படிப்போம்



முப்பது நாளில் ஹிந்தி படிக்கலாம் என்ற விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். அதற்கான புத்தகங்களும் இருக்கின்றன. ஆனால், "ஹிந்தி எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள, இருபது மணி நேரமே போதும்" என்கிறார் மதுரையைச் சேர்ந்த விஸ்வநாதன் தம்பியண்ணா என்ற ஹிந்தி ஆசிரியர்.

இவர் ஏதேனும் மாயாஜாலம் செய்கிறாரோ என்று யோசித்தபடியே மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள விஸ்வநாதன் தம்பியண்ணாவைச் சந்தித்தோம்.
 ''யார் வேண்டுமானாலும் எளிதில் ஹிந்தி பேச எழுதக் கற்றுக்கொள்ளலாம். என்ன கற்கிறோம் என்பதை விட எந்த பாடத்தை, எப்படி கற்கப்போகிறோம் என்பதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது" என்று சொல்லும் தம்பியண்ணா,  அதற்கான சாத்தியத்தையும் விளக்குகிறார்.

“ஹிந்தியின் வாக்கிய அமைப்புகள் 70% சதவீதம் தமிழ் போன்றும், 25 சதவீதம் ஆங்கிலம் போன்றும் இருக்கும். ஆக, 95 சதவீத வாக்கிய அமைப்புகள் நமக்குத் தெரிந்த மொழிகளிலேயே இருக்கிறது. அதனால் தமிழ் வழி ஹிந்தியையும், அதனை பின்பற்றி ஆங்கிலமும் சொல்லிக்கொடுப்பதால் மாணவர்கள் விரைவாக கற்றுகொள்கின்றனர். அதற்காக ஒரு அகராதியை நானே தயாரித்துள்ளேன். இந்த புத்தகம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க உதவுகிறது" என்று கூறும் விஸ்வநாதன் தம்பியண்ணா, "மாணவர்களுக்கு நகைச்சுவை மற்றும் கதை வழியாக ஹிந்தி சொல்லிக்கொடுப்பதால், மாணவர்கள் உற்சாகமாக கற்றுக் கொள்கின்றனர்" என்கிறார்.

''எலி குடும்பம் ஒன்று சுற்றுலா புறப்படுகிறது. அதில் ஒரு சிறு எலியானது வழியில் பூனையை வழிமறிக்கிறது. அதற்குப் பெரிய எலியானது, அனைவரையும் அருகிலுள்ள மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளச் சொல்லிவிட்டு ஒரு கல்லை, அருகில் இருக்கும் தகரத்தின் மீது எறிகிறது. அந்தச் சத்தம் கேட்டு நாய் குரைத்ததும் பூனை ஓடிவிடுகிறது. எலிக் குடும்பம் பயணத்தைத் தொடர்கிறது.

இது வெறும் கதை போலத் தோன்றலாம். ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் தன்னை அறிதல், மற்றவர்களைப் புரிந்துகொள்ளுதல், தொடர்பாற்றல், உறவு பேணுதல், ஆழ்ந்து சிந்தித்தல், ஆக்க சிந்தனை, முடிவெடுத்தல், சிக்கல் தீர்த்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல், உணர்ச்சிகளைக் கையாளுதல் ஆகிய பத்து வாழ்க்கைத் திறன்களும் இந்த எலிக் கதைக்குள் இருக்கிறது.

பெரிய எலி, தன்னை அறிவதுடன் மற்றவர்களை பற்றியும் தெரிந்துவைத் திருந்ததால், மரத்தின் பின்னால் ஒளியச் சொல்லி, தனது தொடர்பாற்றலை வெளிப்படுத்தி, உறவைப் பேணுகிறது. அடுத்ததாக, பிரச்னையை சமாளிக்க ஆழ்ந்து சிந்தித்து, ஆக்கத்துடன் ஒரு முடிவை எடுத்து,  பிரச்னையை சிக்கலின்றி தீர்க்கிறது.

தனக்கிருந்த மன அழுத்தத்தைத் தனக்குள்ளேயே கையாண்டதுடன் ‘என்னால்தான் பிழைத்தீர்கள்’ என்று உணர்ச்சிவசப்படாமல் ‘நாயின் மொழியும் தெரிந்திருந்ததால் தப்பித்தோம்’என்கிறது பெரிய எலி. ஆகவே, இன்னொரு மொழியும் தெரிந்திருந்தால் அது நமது வாழ்க்கைக்கு நிச்சயம் பயன்படும். இந்த கதையை ஒவ்வொரு பயிற்சியின் போதும் தவறாமல் சொல்லி வருகிறேன்.
யாராவது ஹிந்தி படிக்க விரும்பினால், அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று, அவர்களுக்கு இருபது நிமிடங்கள் டெமோ கிளாஸ் எடுப்போம். அந்த நேரத்திலேயே ஹிந்தி கற்கவேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும். பொதுவாக ஹிந்தி ஆசிரியர் என்றாலே பலருக்கு எரிச்சல் ஏற்படும். அதை சமாளிக்க, ஹிந்திக்கு நடுவே, வாழ்வியல் பயிற்சி, வாழும் திறன் ஆகியவையும் சொல்லித்தரப்படுவதால், மாணவர்கள், வகுப்புகளை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள்.

கடந்த முப்பது ஆண்டுகளில் லட்சம் பேருக்கு இந்தி கற்றுத்தந்திருக்கிறேன்.  ஹிந்தி மட்டும் அல்ல, எந்த மொழியை கற்கும்போதும் கேள்வி-பதில் அடிப்படையில் படித்தால் அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளமுடியும்” என்கிறார் தம்பியண்ணா.

-சே.சின்னதுரை

ஆனந்த விகடன் 

Saturday, May 14, 2016

தமிழக தேர்தல் : இழுபறி ஆட்சிக்கு வாய்ப்புக்கள்

கருத்துக் கணிப்பு இது , ஆனால்,அல்லாஹ் நாடுவதே நடக்கும்.
அதிமுக 95
திமுக கூட்டணி 84
ம ந கூ 51
எஸ் டி பி ஐ 1
நாம் தமிழர் 1
பா ஜ க 1
பா ம க 1

மொத்தம் 234

அல்லாஹ் மிக அறிந்தவன்


 (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன்: 3:26)

Sunday, March 6, 2016

நல்லதை நாடி,அல்லதை சாடி !

ஒரு செய்தியை சொல்ல எத்தனையோ வழி முறைகள் இப்போது .ஆனால்,ஆதிக் காலம் தொட்டு,பல வித முறைகள் மாறிக் கொண்டே வருகின்றன.

அல்லாஹ் தன தூதர்களை ஏகத்துவம் என்ற ஒற்றை செய்தியை கொடுத்து,மக்களிடையே பிரச்சாரம் செய்ய அனுப்பும் போது,அந்த தூதர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே அழைத்தனர்.வேறு சாதனங்கள் இல்லை.வேறு சாதனங்கள் இல்லையென்றாலும் அந்த ஏகத்துவ செய்தியை இறைவன் எவ்வாறு கட்டளை இட்டானோ,அதே மாதிரி,எவ்வித பிசிறும் இல்லாமல் செய்தனர்.தங்கள் பேச்சு மட்டுமே (வாய்)அன்றைய ஒரே மீடியா.

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். 16:125
நபிமார்கள் அனைவருமே,மிக மிக அழகிய முறையில் மக்களை "அல்லாஹ் ஒருவனே" "அவனை மட்டுமே வணங்க வேண்டும்"என்ற உயரிய கொள்கையில் மக்களை அழைத்தனர்.சிலர்  ஏற்றனர்,பலர் பகைத்தனர்.

இருப்பினும்,மனம் தளராமல் - அவர்களின் பணியை செம்மையாய் செய்தனர்.அவர்களின் அன்றைய ஒரே மீடியா தங்களின் வாய்.பிறகு வந்த சஹாபாக்கள்,இமாம்கள்,தாபியீன்கள்,த்பவுத் தாபியீன்கள் போன்ற நல்ல மக்களின் காலங்கள் கூட குரான்,சுன்னாவை மக்களிடையே கொண்டு செல்ல அவர்களின் ஒரே மீடியாவாக இருந்தது அவர்களின் வாய் மட்டுமே.அவர்களும்,ஏகத்துவ செய்திகளை ,அல்லாஹ்வுக்கு பயந்து சொல்லி சென்றனர்.
நாட்கள் செல்ல செல்ல மக்களும் மாறினர்,மீடியாக்களும் மாறிவிட்டன.அதனால் அவதூறு செய்திகளும் பரவ ஆரம்பித்தன.

நவீன கண்டு பிடிப்புக்கள் மூலம் மீடியாக்கள் இன்று பல வகைகளிலும் மேலோங்கி எங்கோ சென்று விட்டது.

வாயின் மூலம் தொடங்கிய மீடியா,நபிமார்கள்,சஹாபாக்கள்,இமாம்கள்,தாபியீன்கள்,த்பவுத் தாபியீன்கள் வரை நன்றாகவே இருந்தது.
வாய் மூலம் தொடங்கப்பட்ட அந்த மீடியா,பிறகு சங்கு ஊதியும்,பறை அடித்தும்,நெருப்பு மூட்டியும்,நகரா அடித்தும் வளர்ந்து,பிரிண்டிங்  முறை தொடங்கப்பட்டு,ஒரு புரட்சி ஏற்படத் தொடங்கியது.

முற்காலத்தில் பலகையிலும் கல்லிலும் தமக்கு வேண்டிய எழுத்துக்களையோ, முத்திரைகளையோ, குறிகளையோ செதுக்கினர். அவற்றின் மீது மையைத் தடவி நகல் எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேடு பள்ளங்களைக் கொண்ட பரப்பு ஒன்றின் மேல் மையைத் தடவிக் காகிதத்திலோ அல்லது வேறு ஒரு பொருளின் மீதோ அழுத்திப் பதிவெடுக்கும் முறை அடுத்துக் கையாளப்பட்டது. களிமண் அல்லது மெழுகில் இவ்வகையான அச்சுப் பதிவுகள் செய்யப்பட்டன.

முத்திரையிடுதலும் இலச்சினையிடுதலும் பாபிலோனியாவிலும், சீனாவிலும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட வரலாறாகும். செதுக்குத் தகடுகளில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டன. அடுத்து, கல்வெட்டுக்களில் மையைத் தடவிப் பதிப்பு எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே மரத்தில் எழுத்துக்களை வடிவமைத்துப் புத்தகங்கள் பதிப்பிக்க முதன்முதலில் அடிப்படையாக அமைந்தது. கல்வெட்டிலிருந்து உண்மை நகல் எடுப்பதற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். கல்வெட்டுத் துறைகளிலிருந்து மர அச்சுப்படி முறையும் அதிலிருந்து நகல் எடுப்பு முறையும் வளர்ச்சியடைந்தன.

அடுத்த நிலையில் நெசவுத் துணியில் அச்சிடும் முறை பரவியது. மரத்துண்டுகளில் செதுக்கப்பட்ட விதவிதமான உருவங்களைக் கொண்டு துணியில் அச்சிடுவது இம்முறையாகும்.

இத்தாலி நாட்டில் 15ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அரபுமொழியில் அச்சு வேலைகள் சில நடைபெற்றன. திருக் குரானும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

அச்சுக்கலையில் புதிய முறையைப் புகுத்தச் சீனநாட்டினர் விரும்பினர். 11ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சிபுரிந்த ‘சிங்கிலி’ மன்னன் காலத்தில் ‘பி.செங்’ என்பவர் தனி அச்சை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

‘பி.செங்’ என்பவரே எழுத்துக்களை முதலில் களிமண்ணால் செய்தும் பிறகு தகரத்தால் செய்தும் உருவாக்கினார். தனித்தனி எழுத்துக்களுக்காக மரத்தினால் செய்த எழுத்துகளைப் பயன்படுத்தினார். மங்கோலியர் காலத்திலேயே இந்த அச்சுமுறை வழக்கத்திற்கு வந்தது. இது மற்ற நாடுகளுக்கும் பரவியது.

அடுத்த நிலையில் உலோகத்தால் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன. கொரியா, சீனா ஆகிய நாடுகளில் 18ஆம் நூற்றாண்டு வரை இம்முறை வழக்கில் இருந்தது.

15ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கையால் எழுதப்பட்ட எழுத்துகளையே மாதிரியாகக் கொண்டு அச்சு உருவாக்கி நூல்களை வெளியிட்டனர். இம்முறையால் கையெழுத்திற்கும் அச்சிற்கும் வேறுபாடு காணப்படவில்லை. ஜான் கூட்டன்பர்க் எனும் ஜெர்மானியர் முதன்முதலில் ஐரோப்பாவில் தனித்தனி உலோக எழுத்துகளை 1437இல் உருவாக்கி, அச்சுப்பொறியையும் கண்டுபிடித்தார். இதனால் இவர் ‘அச்சுக்கலையின் தந்தை’ என்று போற்றப்படுகின்றார்.

இன்று அச்சடிக்க பல நவீன முறைகள் வந்துவிட்டன.

அதோடு,இணைய வழி மீடியா ,தொலைக் காட்சி என முன்னேறி - செய்திகள் ஒரே நொடியில் முழு உலகும் சுற்றி வந்து விடுகிறது.நல்ல செய்தியோ,கெட்ட செய்தியோ,உண்மையோ,பொய்யோ - அவதூறோ இப்படி இன்று உலகம் முழுதும் செய்திகள் சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.சில செய்திகள் வெல்லும்,சிலது கொல்லும்.

எனவே,நவீன மீடியாக்களின் உலகத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.எனக்கு   எது சரி என்று படுகிறது,அதையே  பின்பற்றுவேன் என்பதை விட,அல்லாஹ்வுக்கும்,அவனது உண்மைத் தூதர் ,மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு எது சரியோ ,அதையே நானும்,நீங்களும் பின்பற்ற வேண்டும்,இன்ஷா அல்லாஹ் அவ்வாறு பின்பற்ற அல்லாஹ் அருள் செய்வானாக.

நல்லதை நாடி,அல்லதை சாடுவோம்,இன்ஷா அல்லாஹ்.







Friday, March 4, 2016

எத்தகைய சந்தேகமும் இல்லை

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
 
THE QURAN 2:2

Sunday, February 7, 2016

போலித் தொப்பிகள்

போலித் தொப்பிகள்

அது ஒரு இஸ்லாமிய மேடை.தமிழ் இலக்கியம்,மற்றும் முஸ்லிம்களின் தமிழுக்கான தொண்டு பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தனர்.மேடையில் இருந்த எல்லாரும் மற்ற மதங்களின் இதிகாசங்களைப் பற்றி விலா வரியாக அலசிக் கொண்டிருந்தனர்.

இஸ்லாம் பற்றி அல் குரானும்,ஹதீசும் என்ன சொல்கிறது என அவர்கள் பேசவில்லை,அல்லது தெரியவில்லை.மற்றபடி,அவர்கள் தங்களை எல்லாரும் இலக்கியவாதிகள் என பாராட்ட வேண்டும் என்ற நோக்கில்,இப்படி இதிகாசங்களைப் பற்றி பீற்றிக் கொண்டிருந்தனர்.பெயர்கள் எலாம் இஸ்லாமிய பெயர்கள்,ஆனால் பிரசங்கமோ - இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாமல்.

அந்தக் கூட்டத்தில் இருந்த முபாரக் மட்டும் எரிச்சல் பட்டுக்  கொண்டிருந்தான்.என்னே அறிவீனம்?ஏன் இப்படி செய்கிறார்கள்.இதற்கு இஸ்லாமிய மேடைகள்தான் கிடைத்ததா?இதே போன்றுதான்,சிலர் பிலாகுகளில் இதே போன்று,செய்து கொண்டிருக்கிறார்கள்.அல்லாஹ்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.எடுத்து சொன்னாலும் திருந்துவார் இல்லை. ம்ஹூம்.
இவைகள் எல்லாமே தவறான போக்கு கொண்டவைகள் என சுட்டிக் காட்டினால்,கண்டு கொள்வது கூட இல்லை.மேடை பேச்சாளர்களும் சரி,பிளாக் எழுத்தாளர்களும் சரி,என்ன செய்வது.அவர்களுக்கு அவர்களுடைய மேடைகளும்,இணைய பிலாகுகளும் தான் முக்கியமாகப் போய்விட்டது.

சரி,இந்த முறையும்,மேடை ஏறி,அவருடைய பேச்சு தவறு என சொல்லிப் பார்ப்போம்.

அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.

வ அலைக்கும் சலாம்

என்ன பாய்,நல்லா இருக்கீங்களா?

அல்ஹம்துலில்லாஹ் ,நான் நல்ல இருக்கேன் நீங்க?

இருக்கேன் பாய்,அல்ஹம்துலில்லாஹ்
ஒரு சந்தேகம் பாய்,கேட்கலாமா?

என்ன சந்தேகம்,தாராளமா கேளுங்கோ?


இப்போ நீங்க பேசினீங்களே,இதுக்கும் இஸ்லாத்துக்கும் எதுனா சம்பந்தம் உண்டா?அல்லாஹ்வைப் பத்தி மத்தவங்க உவமானம் சொல்லுவாங்க,அத நம்ம எப்படி சொல்ல முடியும்.
இப்படி பேசுவது மிகப் பெரும் பாவம் இல்லையா?அவங்க இப்படி சொல்வதுக்கும்,இஸ்லாமிய கருத்துக்கும் சம்பந்தமில்லை,இஸ்லாமியக கருத்து என்பது குர் ஆனும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பொன் மொழிகளும் மட்டுமே என்று சொல்லி மக்களுக்கு புரியவைப்பதை விட்டு விட்டு,அந்த இதிகாசங்களைப் பற்றியே பேசுகின்றீர்களே ,இது சரியா?

அது வந்து,நாமெல்லாம்,மதச் சார்பற்ற நாட்டில் இருக்கிறோம்,மேலும் நம் தமிழ் மொழியில் உள்ள இலக்கியத்தில் உள்ளதை சொன்னேன்,அது தப்பா?(அது தப்பு என்றால்,நான் படித்த இலக்கியம் பற்றி மற்றவர்கள்  தெரிந்து கொள்ள வேண்டாமா?).

என்ன பாய்,அப்படி என்றால்,எம் மதமும் சம்மதம் என்கிறீர்களா?இஸ்லாத்தை மட்டுமே அல்லாஹ் அங்கீகரித்துக் கொண்டான் என்று உங்களுக்கு தெரியாதா?தமிழ் தான் பெரிது என்றால்,அது அழிந்து போகக் கூடியது,இறைவனைப் பற்றி,இலக்கியங்கள் தப்பும் தவறுமாக போதிக்கின்றன.ஆனால் அல்லாஹ்,நித்திய ஜீவன்,என்றுமே அழியாதவன்.எனவே,அவனைப் பற்றி குரானும்,ஹதீசும் எப்படி போதிகின்றனவோ ,அப்படி அல்லவா பேசவேண்டும்.

தயவு செய்து,திருக் குரானின்,3:83 திரு வசங்களை புரட்டிப் பாருங்கள்.

இனியாவது ,மேடையில் பேசினாலும்,பிலாகுகளில் எழுதினாலும்,அல்லாஹ் இருக்கிறான் என்பதை மறந்து விடாமல்,பேசுங்கள்,எழுதுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

முபாரக் விறு விறுவென நடந்தான்.இன்ஷா அல்லா,இனி சரியாகிவிடும் என்ற எண்ணத்தில்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!