Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Wednesday, September 21, 2011

பல குண்டு வெடிப்புக்களுக்கு, இந்து தீவிரவாதிகளே காரணம்!அமெரிக்கா


Congressional Research Service(CRS) : இது அமெரிக்க அரசால் நியமிக்கப்பட்ட வெளிநாடுகளில் உளவு பார்த்து அறிக்கை தரும் ஓர் அமைப்பு எனலாம். சுமார் 900 ஊழியர்கள் பணியாற்றும் இந்த அமைப்பு ஆண்டுதோறும் பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் விழுங்கித்தான் இந்த வேலையை பார்க்கிறது. இதன் அறிக்கை ரகசியமாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் மட்டுமே தரப்படும். இது அமெரிக்க அரசு தன் அயலுறவு கொள்கையை முடிவு செய்யும்போது இதனையும் ஒரு பொருட்டாக பார்க்குமாம். அதில் முக்கியத்துவம் இருக்குமாயின் அறிக்கை இரகசியமாக வைக்கப்படும். இல்லையேல், உறுப்பினர்களால் மக்களுக்கு அவ்வப்போது இவ்வறிக்கைகள் 'லீக்' செய்யப்படுவதும் உண்டு. காரணம், 'இது போன்ற அதிரடி வேலைகளை எல்லாம் அமெரிக்கா செய்கிறது' என்று பிறரிடம் பறைசாற்றிக் கொள்ளவும், செலவு கணக்கு காட்டவும்தான். 

முதலில், "நம்மைப்பற்றி இது போன்ற அறிக்கைகளை இங்கே வந்து ஆய்வு செய்து சமர்ப்பிக்க இவர்கள் யார்" என்று தம்மை 'தேசபக்தர்கள்' என கூறிக்கொள்ளும் போலிகள் எவருமே இப்போது வாயை திறந்து கேட்க காணோம். வேண்டுமானால், இதேபோல இந்தியா அமெரிக்காவில் வேவு பார்த்து ஒரு அறிக்கையை இந்திய பாராளுமன்றத்துக்கு பகிரங்கமாக சமர்ப்பிக்கட்டுமே, பார்க்கலாம்..! விடுவார்களா..? இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த அறிக்கை பற்றி 'ஆஹா ஓஹோ' என்று நியூஸ் போடுபவர்கள் எல்லாருமே இரண்டு விஷயத்தில் ஒத்துப்போகின்றனர். ஒன்று அமெரிக்க ஆதரவு. மற்றொன்று ஹிந்துத்துவா ஆதரவு.

இந்த  CRS அறிக்கையில், 'ஏதோ மோடியை பற்றியும் குஜராத் பற்றியும்  புகழ்மாலை சூட்டினார்கள்' என்றுதானே ஊடகங்கள் கூத்தாடுகின்றன..? அப்படியொரு 'செய்தி' என்ற பெயரில் 'காதுக்கு பூ' விற்றவர்கள் எவருமே ரொம்ம்ம்ப ஜாக்கிரதையாக இந்த அறிக்கையை காண சுட்டியை மட்டும் கொடுக்கவே இல்லை..! ஏன்..? காரணம், 'ஆங்கிலம் படிக்கத்தெரிந்த மக்கள் இதனை படித்து உண்மையை அறிந்து கொண்டால்...?' என்ற பயமா..?

ஆனால், சமீபத்தில் 'லீக்' ஆக்கப்பட்ட இந்த 'அறிக்கை'  தற்போது இந்த தளத்தின்-இந்த பக்கத்தில் தரவேற்றம் செய்யப்பட்டு எவர் வேண்டுமானாலும் இப்போது தரவிறக்கம் செய்துகொள்ளும் படியும் ஆன்லைனில் படிக்கவும் வெட்டவெளிச்சமாக உள்ளது. (இதனை எனக்கு அறியத்தந்த சகோ.முஹம்மத் ரஃபீக் பாபுக்கு மிக்க நன்றி..!)


இந்த அறிக்கை மோடி பற்றியதா..? இல்லை..!
குஜராத் பற்றியதா..? இல்லை..!
அப்புறம் அது எதைப்பற்றியது..?

அந்த அறிக்கை...  இந்திய உள்நாட்டு பிரச்சினைகள், மைய அரசின் தந்திர இயங்குவியல், அமெரிக்காவுடனான நல்லுறவு ஆகிய இவற்றை பற்றியது..! 

இந்தியாவை பற்றி 'ஆராய்ச்சி செய்து' அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட இம்மாதம் அனுப்பப்பட்டஇந்த CRS அறிக்கை மொத்தம் 98 பக்கம் கொண்டது.   


அதில் "மோடி" என்ற பெயர் 5 பக்கங்களில் வந்துள்ளது. அவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 13 தடவை மோடி பெயர் வந்துள்ளது.  

தனை தயாரித்தவர்கள் விபரம் :-

CRS Report for Congress  
Prepared for Members and Committees of Congress 

India: Domestic Issues, Strategic Dynamics and U.S. Relations 

K. Alan Kronstadt, Coordinator Specialist in South Asian Affairs 

Paul K. Kerr Analyst in Nonproliferation 

Michael F. Martin Specialist in Asian Affairs 

Bruce Vaughn Specialist in Asian Affairs

இவர்கள் மோடி பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள்..?

முதலில் மோடி பெயர் அடிபடும் பக்கம் 41. அதில், பாஜக கட்சி பற்றி ஒரு அறிக்கை. இதில் காமடி என்னவென்றால், இந்த அறிக்கையை திரட்டியது எங்கிருந்து என்றால்... www.bjp.org அவர்கள் மோடி பற்றி சொன்ன கருத்தை போட்டிருக்கிறார்கள்.
.
// Gujarat Chief Minister Narendra 1-Modi, who has overseen impressive development successes in his state // 

---என்று இப்படி போட்டுவிட்டு, தங்கள் கருத்தை அடைப்பில் அதனை தொடர்ந்து... 

// but who is also dogged by controversy over his alleged complicity in lethal anti-Muslim rioting there in 2002 (2-Modi has in the past been denied a U.S. visa under an American law barring entry for foreign government officials found to be complicit in severe violations of religious freedom) // 

----என்றும் சொன்னதை ஏனோ காவி ஊடகங்கள் நம்மிடமிருந்து ஒளித்து விட்டன. மேலும்.... அவ்வறிக்கையில்...

//Despite his clear political and economic successes in Gujarat—in his ten years as Chief Minister the state has led thecountry on many development indicators—3-Modi continues to be haunted by the 2002 Ahmadabad riots, a topic he hasnever fully addressed in public. Although he is a safe bet to win a third term in 2012 state elections, his aspirations to be the BJP’s prime ministerial candidate face significant obstacles, not least the likelihood that Muslims and liberal-minded Hindus would represent an anti-4-Modi bloc at the national level, and the BJP’s key ally in Bihar, Nitish Kumar’s Janata Dal (United), could be expected to abandon the alliance in protest (Geeta Anand, “Give Us Your Account, Mr.5-Modi” (op-ed), Wall Street Journal, February 23, 2011; Karan Shah,” Narendra 6-Modi, Prime Minister?” (op-ed),Outlook (Delhi), April 5, 2011) // 

---என்று 'அவுட்லுக்' பத்திரிக்கையின் காரசாரமான கட்டுரையைத்தான் பக்கம் 42-இல் இணைத்துள்ளனர்..! நம் காவி ஊடகங்கள் இதில் முதல் வரிக்கு மேல் படிக்க விரும்பவில்லை.

அடுத்து...  பக்கம் 47 இல் "Notable State-Level Developments" என்ற தலைப்பின் கீழே பல மாநிலங்களை பற்றி அறிக்கை கொடுத்துள்ளனர். ஆனால், குஜராத் பற்றி அமெரிக்காவின் wall street journal கட்டுரையை எடுத்து போட்டு இருக்கிறார்கள்.
.
// Perhaps India’s best example of effective governance and impressive development is found in Gujarat (pop. 60 million), where controversial Chief Minister Narendra 7-Modi has streamlined economic processes, removing red tape and curtailing corruption in ways that have made the state a key driver of national economic growth. Seeking to overcome the taint of his alleged complicity in deadly 2002 anti-Muslim riots, 8-Modi has overseen heavy investment in modern roads and power infrastructure, and annual growth of more than 11% in recent years. The state has attracted major international investors such as General Motors and Mitsubishi and, with only 5% of the country’s population, Gujarat now accounts for more than one-fifth of India’s exports. //

---இது மோடி அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு எப்படி நம் நாட்டு வளங்களை வாரி வழங்குகிறார் என்று பறை சாற்றும். 'எதனால்... அந்த அமெரிக்க பங்கு மார்க்கெட் பத்திரிகையில் மோடியை இப்படி புகழ்கிறார்கள்' என்று கடைசி வரி கட்டியம் கூறுகிறது..! இந்த வரியை ரொம்ப லாவகமாக நம் காவி ஊடகங்கள் மறைத்து விட்டன. 'இப்படியெல்லாம் அமெரிக்க பன்னாட்டு நிருவனங்களுக்கு  அடிமையாக சேவகம் செய்தால் அமெரிக்கா தன் மீதான விசா தடையை நீக்கி விடும்' என்று அலைகிறார் போலும் இந்த கேடி... ஸாரி... மோடி..!

இந்த செய்தி உண்மையா..? "India’s best example" என்று சொல்வது உண்மையா..? குஜராத்தான் மெய்யாலுமே முதலில் இருக்கிறதா..?

இது பொய்..! இங்கே சென்று அட்டவணையில் உண்மை விபரம் அறிந்து கொள்ளுங்கள்..!

மோடி ஒரு ஊழலற்ற சிறந்த ஆட்சியாளரா..? இல்லை..! மோடியின் ஊழல் பற்றியும் அவரின் ஆட்சியின் சீர்கேடு பற்றியும் அவருடைய 'கூட்டாளி' அண்ணா ஹாசரேவே புட்டு புட்டு வைத்திருப்பதை இங்கே சென்று படியுங்கள்..!

அடுத்து பக்கம் 48. இது “Highway in India Offers New Solution to Land Fights,”  New York Times , February 22, 2011. -இல் வந்த ஒரு பத்திரிக்கை செய்தியாளரின் கிளிப்பிங்..! 

// The examples set in by Chief Ministers 9-Modi and Kumar may have inspired the popular leader of India’s most populous state, Uttar Pradesh (pop. 200 million). Chief Minister Mayawati, ... ... focus much more toward infrastructure projects such as road-building and improving the state’s poor energy grid.// 

(இதெல்லாம்... ரோடு போடும் காண்ராக்டையும்... மின்சார கிரிட்கட்டும் காண்ட்ராக்டையும் உ.பி.யில் நழுவ விடாதீர்கள் என்ற அறிவுரையே அன்றி வேறென்ன..?)

ஆனால், மோடி பெயரை பார்த்தவுடன் பூத்துக்குளுங்கிய ஊடகமனம்... நிதிஷ் குமார் பற்றியும் மாயாவதியை பற்றியும் கூறப்பட்டிருக்கிறதே..? ஏன் மவுனம் காக்கின்றன இந்த காவி ஊடகங்கள்..? 

கடைசியாக... பக்கம் 70-இல் தான் மோடிக்கு இறங்குகிறது அதிரடி ஆப்பு..! அடுத்து வரக்கூடிய வரிகள் ஒவ்வொன்றும் பயங்கரவாதி மோடியின் மண்டையில் விழும் சம்மட்டி அடி என்றால் மிகை அல்ல..!

The U.S. State Department and human rights groups have been critical of New Delhi’s largely ineffectual efforts to bring those responsible for the post-Godhra rioting and murders to justice; some of these criticisms were echoed by the Indian Supreme Court in 2003. 

In 2005, the State Department made a controversial decision to deny a U.S. visa to Gujarat Chief Minster Narendra 10-Modi under a U.S. law barring entry for foreign government officials found to be complicit in-severe violations of religious freedom. The decision was strongly criticized in India. 

In 2008, a Gujarat state government commission exonerated 11-Modi, claiming to have found “absolutely no evidence” that he or his ministers had acted improperly. More than nine years after the Gujarat riots, international human rights groups express concerns about obstacles faced by victims seeking justice, the continuing internal displacement of thousands of families who lack basic necessities, and large numbers of un investigated related criminal cases (despite the IndianSupreme Court’s 2004 order to reopen nearly 1,600 such cases). 

Human Rights Watch called on the Indian government to launch an investigation of 12-Modi after he made statements apparently endorsing the extrajudicial execution of a terrorism suspect by police. 

In 2008, 27 Members of the U.S. Congress joined the U.S. Commission on International Religious Freedom in urging the State Department to reaffirm its past decision to block 13-Modi’s entry to the United States ( “India: Gujarat Chief Minister Endorses Unlawful Killings,”  Human Rights Watch release, December 7, 2007).

இதெல்லாம் உங்கள் கண்ணில் அகப்படாமல் எங்கே போச்சு ஊடகமே..? எதற்கு இந்த மாய்மாலம்..? எதற்கு இந்த செய்தியியல் ஊழல்..? 

இதெல்லாம் விட பெரிய ஆப்பு ஒன்று இருக்கிறது..!
.
அது... அடுத்த 71-ம் பக்கத்தில்...!!   "உள்நாட்டு இந்து பயங்கரவாதம்"...!!!  

Maoist Rebellion, Other Insurgencies, and Communalism என்ற பகுதியில்... "Indigenous Hindu Terrorism" --- என்று ஒரு உள் தலைப்பு இட்டு இதை தனியே கூறுகிறது CRS அறிக்கை..!  
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பலருடன் பயங்கரவாதி பிரக்யா சிங் சாத்வீ
கார்கிலுக்கு அனுப்ப சொல்லி கொடுத்தால்... மாலேகானுக்கு RDX வெடிகுண்டு சப்ளை செய்தாராம் இந்த இந்திய ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீக்காந்த் ப்ரசாத் ப்ரோஹித்


Indigenous Hindu Terrorism.

Even more recent are overt signs that India is home to militant Hindu nationalist groups intent on launching domesticterrorist attacks.
.
In September 2008, seven people were killed by two bomb blasts in the Maharashtran city of Malegaon, a hotbed of Hindu-Muslim communal strife. By year’s end, police had arrested nine members of a “Hindu terrorist cell” in connection with the bombing, including an active army lieutenant colonel and a Hindu nun with links to the main opposition BJP.

Thus did “Hindu terrorism” become a new and highly controversial phrase in India’s national dialogue. Never before in the country’s history had the phrase been so widely used, and the development had major and continuing effects on India’s national psyche. Many Indian observers warned of the danger of a “militant majoritarianism”among Hindu nationalists that threatens to rend the secular fabric of the nation.

 In late 2010, Hindutva extremist Swami Aseemanand confessed to involvement in a number of terrorist attacks previously blamed on Islamist militants, including the 2006 bombing of a Muslim cemetery in Malegaon that killed 37 people and the 2007 bombing of the trans-border Samjhauta Express, a train linking Delhi and Lahore, Pakistan, that killed 68 people, most of them Pakistani civilians. 

Aseemanand confessions were an embarrassment for law enforcement agencies that had arrested Muslim suspects, and gave credibility to analysts who identify Hindu militancy as a threat to India’s security.

மேற்படி செய்திகளும் CRS-ன் சொந்த சரக்கு அல்ல. அப்புறம் எங்கிருந்து காபி & பேஸ்ட் பண்ணப்பட்டனவாம்..?

“Indian Muslims Blamed for ‘Saffron Terror’ Want Justice,” BBC News , January 27, 2011; 
“Swami’s Confession,”  Frontline (Chennai), February 11, 2011.
“‘Hindu Terrorism’ Debate Grips India,”  BBC News, November 21, 2008; 
Praful Bidwai, “Saffron Terror” (op-ed),  Frontline (Chennai), November 21, 2008; 
“The True Face of the BJP” (op-ed), Outlook  (Delhi), October 29, 2008. 
“The Rise of Hindutva Terrorism,” Outlook India (Delhi) May 11, 2010.
“India Police Say They Hold 9 From Hindu Terrorist Cell,” New York Times, November 12, 2008.

மோடி பற்றி COPY & PASTE பண்ணப்பட்ட சில வரிகளை... அவை 'பொய் என்றாலும்பரவாயில்லை' என பெருமையாய் பீற்றிக்கொண்டோர் யாருமே பாஜகவின் பயங்கரவாத குண்டுவெடிப்புகள் தொடர்பு பற்றியான இவ்விஷயத்தை உண்மை என்றாலும் ஏன் வெளியே சொல்லவில்லை..?  
.
அதனாலென்ன..! நாம் சொல்லுவோம் என்றுதான் இந்த பதிவு..!

ஆக... இந்த நான்கு அமெரிக்கர்களும் நன்றாக சம்பளம் வாங்கிக்கொண்டு இந்தியாவில் ஏதோ ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுக்கொண்டு ஜாலியாக சாப்பிட்டு என்ஜாய் பண்ணிக்கொண்டே அவ்வப்போது... கூகுள் உதவியுடன் 'பொட்டிதட்டி' பல பத்திரிக்கை கட்டுரைகளை தேடித்தேடி கட் & பேஸ்ட் பண்ணி உள்ளனர் என்றுதான் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. புதிய தகவல்கள் ஒன்றும் இல்லை..! ஹூம்...! இதெல்லாம் ஒரு அறிக்கை..! இதெல்லாம் ஒரு உழைப்பு..! இதுக்கெல்லாம் முக்கியத்துவம்... ஒரு மதிப்பு... மரியாதை..! ச்சே..!

இதைவிட சிறப்பான ஆதாரங்களுடன் INVESTIGATIVE JOURNALISM REPORTS மற்றும் தரமான சிந்திக்க வைக்கும் ஆய்வுக்கட்டுரைகளை நம் பதிவுலக சகோஸ் ஏராளமாகவே தருகின்றனர்..!

இந்த CRS அறிக்கையில் பல விஷயங்கள் விஷமத்தனமானவை..! எதிர்க்கப்பட வேண்டியவை. ஆனால்... ஓர் எதிர்ப்பையும் காணோம்..!

சில கார்ப்பரேட் ஊடகங்கள்தாம் மோடியை பிரதமராக்குவதற்கான 'பொறுப்பை' ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை தேசிய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை பார்த்தாலே நமக்கு புரியும். அவைகள்தாம் அமெரிக்காவின் CRS அறிக்கையில் மோடிக்குறித்த கட் & பேஸ்ட் பொய்யான வரிகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன.  

இந்தியாவில்  காணப்படும் பல குறைகளை சுட்டிக்காட்டி நேர்மையாக விமர்சித்து இருந்தாலும்... பல உள்குத்துகள் இருக்கின்றன.

மொத்தமாக படித்துவிட்டு நிமிர்ந்தால்... இந்தியா அமெரிக்காவின் காலணியாதிக்கத்திற்கு மறைமுகமாக அடிபணிந்து விட்டது என்பதைத்தான் உண்மையில் CRS-ஸின் அறிக்கை நமக்கு சொல்கிறது. பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான உறுதியான அமெரிக்க அடியாளாக இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதன் விபரங்கள் CRS-ஸின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 

உலகிலேயே அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியதிலும், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தின் நிரந்தரமான இருப்பிற்கு இந்தியாவின் மவுன ஒத்துழைப்பதற்கும் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது இவ்வறிக்கை. 

"அணிசேரா கொள்கை"யிலிருந்து அமெரிக்க சேவை நாடாக இந்தியா மாறிவிட்டது என்பதற்கும், இந்தியாவை ஆட்சி புரிவது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் அமெரிக்காவின் விருப்பங்கள் பாதுகாக்கப்படும் என்பதற்கும் உறுதியான ஆவணம்தான் CRS அறிக்கை.  

ஆனால், இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இரண்டு வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் மோடியைக் குறித்த கட் & பேஸ்ட் வருடல்களை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் தேசிய ஊடகங்கள் "யாருக்காகவோ" தங்களை பிரதிநிதிகளாக மாற்றி வருகின்றார்கள் என்பதை மட்டுமல்ல இந்திய தேசத்தை அமெரிக்க ஆக்டோபஸ்களின் கரங்களில் ஒப்படைக்க தயாராகி வருகிறார்கள் என்பதை சாதாரண அறிவுடையவர்களும் நன்கு விளங்கிக்கொள்ளலாம்.

இந்த 'கட்&பேஸ்ட் அறிக்கையை(?)' தூக்கி ஓரமாய் வைத்து விட்டு, இங்கே... என்னுடைய  முக்கியமான கேள்வி ஒன்று என்னவென்றால்... 

இந்த அறிக்கையில் மோடி பற்றிய சார்பு செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை தலைப்புச்செய்தியாக்கி ஆட்டம் போட்டு குதூகளித்தீர்களே... ஓ... காவி ஊடகங்களே..! மரணஅடி கொடுத்து ஆப்பு வைத்த மற்ற செய்திகளை எல்லாம் ஏனய்யா... ஒதுக்கி மறைத்தீர்கள்..? இதுதான் நீங்கள் ஊடகவியலில் கற்ற நேர்மையா..? இதுதான் ஊடக தர்மமா..? இதுதான் நீங்கள் எங்களுக்கு செய்தி சொல்லும் லட்சணமா..?

ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்..! எப்போது ஊடகங்களில் செய்தி சொல்வதில் ஊழலும், சார்பும், பொய்யும், ஆதாயமும், சமூக அக்கறையின்மையும் வந்துவிட்டதோ... அப்போதே ஒட்டுமொத்த சமூகமும் அதே பாதையில்தான் பயணிக்கும்..! விதிப்படி நம் நாடு செத்து அழிவதும்... உயிர் பிழைப்பதும்.. அரசியல்வாதிகளிடமோ, நீதிபதிகளிடமோ, சினிமாவிடமோ, கிரிக்கேட்டிடமோ அல்ல..; ஊடகத்துறையின் சிறப்பான செயல்பாட்டில்தான் உள்ளது... என அறியலாம்..!

Thursday, March 10, 2011

அமெரிக்காவில் இஸ்லாம்! முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள்-அமெரிக்கா அறிவிப்பு !!தொடர் 4


 தீவிரவாதிகளின் செயல்களை ஒடுக்குவதில் அமெரிக்க முஸ்லிம்களின் பங்கு நமக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது என்று வெள்ளை மாளிகை செய்திகள் கூறியுள்ளன.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில் அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதத்துக்கு எதிரான தீர்வுக்கு வழி காண்பதில், நமக்கு உதவுவோராக உள்ளனர். எனவே அவர்களால் பிரச்னை இல்லை' என, வெள்ளை மாளிகை பத்திரிகை செயலர் ஜெய் கார்னே கூறியுள்ளார்.
அமெரிக்காவில் முஸ்லிம்களின் தீவிரவாத கருத்துக்கள் தொடர்பாக, கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை காங்கிரஸ் சபை துவக்கியுள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ஜெய் கார்னே கூறியதாவது:அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களாக உள்ளனர். அதனால், அவர்களின் உதவியுடன் நாம் தீவிரவாத பிரச்னையை எளிதில் களைய முடியும். .தீவிரவாத பிரச்னையில் காங்கிரஸ் சபை அக்கறை காட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம். இது முக்கியமான பிரச்னை என்றும் நம்புகிறோம் என்று ஜெய் கார்னே கூறினார்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், அமெரிக்க முஸ்லிம்கள் உட்பட  ஏராளமானோர் பங்கேற்று தீவிரவாதத்துக்கெதிரான தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Tuesday, January 25, 2011

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம்


குடியுரிமை மோசடி விவகாரத்தால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வலுக்கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதில் பெரும்பாலான மாணவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் மிக அதிக அளவில் குடியுரிமை மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் சோதனை நடத்தியதில் பெருமளவிலான மோசடி அம்பலமானது. இதைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள இந்த பல்கலைக் கழகம் விசா அனுமதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது. அது தவிர அன்னியச் செலாவணி பணப்பரிவர்த்தனை விவகாரத்திலும் இந்த பல்கலைக்கழகம்  ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்தே கடந்த வாரம் இந்த பல்கலைக்கழகத்தில் போலீஸôரும், குடியேற்ற அதிகாரிகளும் சோதனை நடத்தி பல்கலைக் கழகத்துக்கு சீல் வைத்தனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 1,555 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்களாவர்.
இந்த பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் உறைவிட கல்லூரி, ஆன்லைன் பயிற்சிகள் அளிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. கலிஃபோர்னியாவில் இருப்பதாக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தாலும் மாணவர்கள் மேரிலாண்ட், வர்ஜீனியா, பென்சில்வேனியா, டெக்ஸôஸ் ஆகிய பகுதிகளில் பணி புரிவது கண்டுபிடிக்கப்பட்டது. ஷாம் பல்கலை என்ற பெயரில் இந்த கல்வி மையம் இயங்கி வந்ததாகத் தெரிகிறது. இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் கலிபோர்னியா மாகாணம் சன்னிவேல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் உறைவிடப் பள்ளியில் தங்கியிருப்பதாக இந்த பல்கலைக் கழகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்கி பணிபுரிவதோ கலிபோர்னியாவில். பொதுவாக அமெரிக்க குடியுரிமை பெற வேண்டுமெனில் மாணவர்கள் கல்லூரியில் பயில்வதற்கான அடையாளத்தை  நிரூபிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை கல்லூரிக்கு வருகை தந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இப்போது அமெரிக்க புலனாய்வு போலீஸôர் ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் விரிவாக விசாரித்து வருகின்றனர். இதில் சில மாணவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாக அதிகமானோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த பல்கலைக் கழகத்தில் அடுத்த செமஸ்டர் தேர்வு எழுத முடிவு செய்திருந்தனர். தங்களிடம் விசாரணை நடத்தும் முன்பாகவே அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதில் சில மாணவர்கள் தீவிரமாக உள்ளனர்.
ஏனெனில் இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு கட்டாயமாக நாட்டை விட்டு அவரவர் நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பல்கலைக் கழகம் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட எப்-1 விசா காலம் முடிவடைந்துவிடும். குறித்த காலத்துக்குப் பிறகு அவர்களால் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது.

Saturday, September 11, 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா கேள்வி?தொடர் 3

ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு [^] தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் [^] சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது...

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா [^]. 

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா

Saturday, July 17, 2010

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன்,மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார்.அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும்,இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன். "இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்."ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத். மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க நாம் பிரார்த்திப்போம்.

Tuesday, May 18, 2010

"இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்".....

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

------------------------------------------------------------------------------------------------------------------------

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.            


"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள் குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது. 

ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,

"நீ பைளிளை படித்திருக்கிறாயா"

எனக்கு ஆச்சர்யம், "அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்"

"இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை"  

நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது.  புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.

அவர் தொடர்ந்தார், "பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை"

அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.  


பிறகு அவர் கூறினார், "நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?"
சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று "Genesis" (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.

அதிர்ச்சிகள் பல காத்திருந்தன...

ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?

உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ............ .....
(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).

இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.

  • நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா? 
  • அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்? 
  • அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்? 

ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே...இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?

புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,

"இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது"...

அதையேத்தான் அவரும் கூறினார். "சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது".

சரியென்று "New Testament" டை படிக்க ஆரம்பித்தேன்.

இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.

ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே "New Testament"ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்...

என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.

"இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்"

பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,

"இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது.  அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)"         

என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?


அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?

என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்?  நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, "நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்" என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.    

கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.



சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.

அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், "உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்".

பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.    

நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய  பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.

நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.

பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.

இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.

பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்"

நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே...

நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், "உன் மூலமாக  கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்"

ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,

"முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற "Moon God" டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்" என்று என்னென்னவோ இருந்தது.                                                  

அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். "நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை"

பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது.
 

ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,

"இஸ்லாமைப் பற்றி தெரியுமா?" என்று கேட்டார்..

"இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்" என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.

"So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்"    

"உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்"  

"நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?"

"ஆம், அதனால் என்ன?" 

"முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே"

"என்ன?" ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.

"இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா" 

"ஜும்மாஹ் என்றால்?"

"ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது" (அரங்கத்தில் சிரிப்பு)

"எங்கே இருக்கிறது மசூதி?"

அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.   

அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.

என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். "என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா  இது அதற்குண்டான செட்அப்பா" ஒருவித பயம்.

பின்னர் குத்பா ஆரம்பித்தது "இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு" என்று ஆரம்பித்தார் இமாம்.  

அவ்வளவுதான் பயம் அதிகரித்தது...

"அட கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது", வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.                                

அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.

இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, "இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர". அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?  

குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.

"என்ன செய்யப் போகிறீர்கள்" என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.

"தொழ போகிறோம்"

"யாரை"

"இறைவனை"

"எந்த இறைவன்?"

"உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை"

என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.
      
தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.

சஜிதா செய்தார்கள். "ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது". முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.

தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.    

தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,

"இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?"

"ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்"

"அதை நான் படிக்கலாமா"

"நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்"

எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.

குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.

முஸ்லிம்கள் என்றால் யார்,  எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.

ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு  வழிகாட்டி.

"இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்" என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.

கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.

அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக்  கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.

ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.

திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...

இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.

என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?

அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பற்றிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.

இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.

தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.              

என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.   

நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.

அல்ஹம்துலில்லாஹ்...இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.

இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்"


அல்ஹம்துலில்லாஹ்...
------------------------------------------------------------------------------------------------------------------

இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம்.  இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக...ஆமின்.

நீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழ கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
 
மேலும் விவரங்களுக்கு சகோதரரின் இணையதளம் சென்று பார்வை இடலாமே!

http://yushaevans.com/

by abu mahathi

Sunday, April 25, 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! முஸ்லிம் தொழிலதிபர்கள் மாநாடுஅதிபர் ஒபாமா ஏற்பாடு !! தொடர் 2

உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த 55 நாடுகளுக்கும் மேற்பட்ட 275 மிகப்பெரிய முஸ்லிம் தொழிலதிபர்கள் பங்கேற்கும் 2 நாள் உலக மாநாட்டை அமெரிக்கா அடுத்த வாரம் நடத்துகிறது. 

அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம்களை மட்டும் அழைத்து நடத்தும் முதல் தொழில் முனைவோர் மாநாடு இதுதான்.

இந்த மாநாட்டை அதிபர் பராக் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கிறார். முஸ்லிம்களுக்கு அமெரிக்க அரசு மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது முதல் நோக்கமாக இருந்தாலும் உலகின் முன்னணி முஸ்லிம் தொழிலதிபர்களுடன் அமெரிக்கா நேரடியாகத் தொடர்பு கொண்டால் அது வாணிபம் பெருக மிகுந்த உதவியாக இருக்கும், அதன் மூலம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பும் வருவாயும் பெருகும் என்பவை பிற நோக்கங்களாகும்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் பேசவிருக்கிறார்கள். அடுத்த முஸ்லிம் தொழிலதிபர்களின் கருத்துகளையும் இருவரும் கேட்பார்கள். ராணுவத் தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் இந்த மாநாட்டு ஏற்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறார். முஸ்லிம் நாடுகளுடன் வலுவான வர்த்தக உறவு அவசியம் என்று அமெரிக்க அரசு கருதுவதாக சர்வதேச வர்த்தகத்துக்கான துணைச் செயலர் பிரான்சிஸ்கோ சாஞ்சஸ் தெரிவிக்கிறார். 

2008-ம் ஆண்டில் முஸ்லிம் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 16 லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் என்று சாஞ்சஸ் தெரிவிக்கிறார். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, சுமுகமான நல்லுறவு ஆகியவற்றுக்கு இந்த மாநாடு பெரிதும் உதவும் என்பதால் அமெரிக்கா இதில் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறது என்பது மாநாட்டுக்கான ஏற்பாடுகளிலிருந்து அறிய முடிகிறது.

இனி--------

இன்ஷா அல்லாஹ்,

அடுத்த பதிவில்.... 

Thursday, April 8, 2010

உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!

சகோதரர் வால்பையன் அவர்கள்,இஸ்லாமிய பொருளாதாரம் எப்படி இயங்குகிறது,வட்டி இல்லாமல் எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பி இருந்தார்.இக்கட்டுரை மூலம் ஓரளவு புரிந்துகொள்ள முடியும் என எண்ணுகிறேன்,இன்ஷா அல்லாஹ் இது போன்ற இன்னும் பல கட்டுரைகள்,மற்றும் லிங்குகளை சகோதரருக்கு தேடித்தருகிறேன்,நன்றி. 
எல்லாம் வல்ல ஏக இறைவன் நம்மை பொருந்திக்கொண்டு,இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக.
------------------------------------------------------------------------------
சமீப காலமாக, 'பணவீக்கம்’, ‘பொருளாதாரத் தேக்கம்’, ‘பொருளாதார வீழ்ச்சி’ போன்ற சொற்கள் நம் காதுகளில் தினமும் விழும் சொற்களாகி விட்டன. தனிமனிதனிலிருந்து பெரும் அரசுகள் வரை பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. கீழே விழாமல் காலூன்றி நிற்க இடம் கிடைக்குமா என்ற தவிப்பில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.
இவ்வருட ஆரம்பத்தில்கூட செழிப்பான தோற்றம் கொண்டிருந்தது பொருளாதாரம். பங்குகள் விலை ஏறிக்கொண்டே இருந்தன. அதைக் காட்டிலும் அதிகமாக அசையாச்சொத்துகளின் மதிப்புகளும் ஏறிக் கொண்டிருந்தன. சாதாரண வேலை செய்பவர்களுக்குக்கூட அதிக சம்பளம். எங்கும் செழிப்பு, சந்தோஷம். வர்ணஜாலம் காட்டிய நீர்க்குமிழி ஒரே நொடியில் உடைந்தது போல் இன்று உலகம் பொருளாதார நெருக்கடியால் திணறிக் கொண்டிருக்கிறது. பண வீக்கம் இரண்டு இலக்க எண்ணாகி பயமுறுத்துகிறது!
திடீரென்று பொருளாதாரம் வீழ்ச்சியடையக் காரணம் என்ன? செழிப்பு, வளர்ச்சி என்று நம் கண்களுக்குத் தெரிந்தது ஒரு மாயத்தோற்றம். இதைப் எளிமையாகப் புரிந்து கொள்ள வலைதளத்தில் சிக்கிய ஒரு குட்டிக் கதை.
ஒரு தீவு. அதில் புழக்கத்தில் இருந்தது இரண்டு ‘ஒரு ரூபாய்’ நாணயங்கள் மட்டுமே. அதில் குடியிருப்போர் 3 பேர் - முருகன், அனில், மூர்த்தி.
முருகன், அனில் இருவரும் ஆளுக்கு ஒரு ரூபாய் வைத்திருந்தனர். ஆனால் மூர்த்தியிடம் பணம் இல்லை, ஒரு தென்னங்கன்று வளர்த்தான். முருகன் அதை ஒரு பணம் காய்ச்சி மரம் என்று நினைத்து மூர்த்திக்கு ஒரு ரூபாய் கொடுத்து அதை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு 3 ரூபாய். அதாவது மூரத்தி, அனில் இருவரிடமும் ஆளுக்கு ஒரு ரூபாயும் முருகனிடம் இருந்த மரத்தின் மதிப்பு ஒரு ரூபாயும் ஆகும். இதைக்கண்ட அனில் பணங்காய்ச்சி மரம் பிற்காலத்தில் உதவும் என்று மூர்த்தியிடம் ஒரு ரூபாய் கடன் வாங்கி தன் ஒரு ரூபாயையும் சேர்த்து இரண்டு ரூபாய்க்கு மரத்தை வாங்கினான். இப்போது தீவின் மதிப்பு நான்கு ரூபாய். அதாவது மரம் 2 ரூபாய், முருகனிடம் 2 ரூபாய். மரத்தின் விலை ஏறிக்கொண்டே போவதைக் கண்ட மூர்த்தி, அதை விற்றதற்காக வருந்தி முருகனிடம் இருந்த 2 ரூபாயைக் கடனாக வாங்கி அனிலிடம் அவன் (அனில்) ஏற்கனவே பட்டிருந்த ஒரு ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்து மீண்டும் மரத்தை வாங்கினான். இப்போது மரத்தின் மதிப்பு 3 ரூபாய், அனிலிடம் 2 ரூபாய். தீவின் மதிப்பு 5 ரூபாய்.
அட மரத்தின் விலை கூடிக் கொண்டே போகிறதே என்று முருகன் அனிலிடம் 2 ரூபாய் கடன் வாங்கி, மூர்த்தியின் 2 ரூபாய் கடனை தள்ளுபடி செய்து 4 ரூபாய்க்கு மரத்தை கிரயம் செய்தான். இப்போது மூர்த்தியிடம் 2 ரூபாய். தீவின் மதிப்பு 4+2=6 ரூபாய்.
திடீரென்று அனிலுக்கு ஒரு கவலை. மரம் நினைத்தபடி பலன் தராவிட்டால் முருகன் தன் 2 ரூபாய் கடனை எப்படித் திருப்பித் தருவான்? மூர்த்திக்கும் அதே கவலை! அதனால் கையில் பணமிருந்தும் அவன் மரத்தை விலை பேச முன்வரவில்லை. என்னதான் சொன்னாலும் காய்க்காத மரத்தின் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்பதை புரிந்து கொண்டான் அவன். இப்போது மரத்தை வாங்க ஆளில்லை. மூர்த்தியிடம் 2 ரூபாய் இருக்கிறது. முருகனிடன் 4 ரூபாய் மதிப்புள்ள மரம் ஒரு ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. எனவே அவன் அனிலுக்குக் கொடுக்க வேண்டிய 2 ரூபாய் கடனில் ஒரு ரூபாய் மட்டுமே திருப்பித்தர முடியும்.
முருகன் திவாலாகிப் போனான். முருகன் பட்ட கடனை அனில் திரும்பாதக் கடனாகத் தள்ளுபடி செய்தான். 6 ரூபாயாக இருந்த தீவின் மதிப்பு இப்போது மீண்டும் 3 ரூபாய். இழந்த 3 ரூபாய் எங்கே போயிற்று?
இக்கதையின் நீதி:

எளிமை கருதி வர்த்தகம் மூவருக்குள்ளே நடப்பதாக காட்டப்பட்டது. ஆங்கே இன்னுமொரு மரம் இருந்து ரத்தன் என்பவன் சொந்தக்காரனாக இருந்திருந்தால் இன்னும் ருசிகரமான கைமாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ரத்தன் விளையாட்டில் சேராமல் வேடிக்கைப் பார்த்தாலும் அவனுடைய மரத்தின் விலையும் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கும். அதற்குத் தருந்தாற்போல் தீவின் மதிப்பு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்திருக்கும். இதைத் தவிர வெளித் தீவிலிருந்து யாரேனும் முதலீடு செய்ய முற்பட்டிருந்தால் பணப்புழக்கம் அதிகரித்து தீவின் மதிப்பும் காகிதத்தில் உயர்ந்து கொண்டே போகும். புத்திசாலியான வெளியாள் செயற்கையாக விலையை ஏற்றி, மரத்தை சமயம் பார்த்து உள்ளுர்க்காரனுக்கே அதிக விலையில் விற்று, தன் வங்கிக் கணக்குக்குப் பணத்தை மாற்றிக் கொண்டு போய் விடுவான். அப்போது தீவில் உள்ளவர்கள் ஏமாளிகளாக அமர்ந்திருக்க வேண்டியதுதான். பங்குச் சந்தை செய்கிற குளறுபடிகளும் இப்படிப்பட்டதே.

இப்படித்தான் உலகப் பொருளாதாரம் இன்று வீழ்ந்தது. வட்டி அடிப்படையில் கடன் சார்ந்த பொருளாதாரத்தில் என்றும் பொருளாதார உயர்வு இருக்காது. வளர்ச்சிபோல் காட்சியளித்து, நாளடைவில் நசிந்து விடும்.

"யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள், 'நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால் மீண்டும்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்" (2:275).

அமெரிக்க முதலாளித்துவத்துவத்தின் சீர்கேட்டால் இன்று உலகமே பொருளாதார நெருக்கடியில் உள்ளது. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். இது தொழிலகங்களையும் பாதித்து அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் வேலையிழப்பார்கள். இது ஒரு சங்கிலித் தொடர்போல் எல்லாத் தரப்பினரையும் பாதிக்கும்.
முதலாளித்துவத்துவத்தின் நிலை இப்படி என்றால், ரஷ்யா, சீனா போன்ற சமவுடமை நாடுகள் நிலை என்ன? அவை தங்கள் மத்திய திட்டமிடல் பொருளாதாரத்தைக் கைவிட்டு முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு மாறும் செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றன. காரணம் சமவுடைமையிலும் வெற்றி இல்லை.
சரி, இப்படி மனிதனால் ஏற்படுத்தப் பட்ட பொருளாதாரக் கொள்கைகள் வீழ்ச்சியடையும்போது படைத்தவனின் வழிகாட்டல் என்ன என்று பார்ப்போம்!
எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம், முதலீடு செய்யலாம் என்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. வழிபாடு, வாழ்வியல், அரசியல், சமூகவியலில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் சட்ட-திட்டங்களை வகுத்துள்ளான் வல்ல இறைவன். இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை ஒரு நாடு பின்பற்றினால் நிச்சயம் தனிமனித வறுமையை ஒழிக்க முடியும். மைக்கல் ஹார்ட் என்பவர் இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார், "... சிலர் நினைப்பதுபோல் நபி (ஸல்) அவர்களுடைய சாதனைகள் தற்காலிகமானவை அல்ல. திருக்குர் ஆனின் நிரந்தரமான நெறிகளின் அடிப்படையில் அமைந்தவை. மனித சரித்திரத்தில் அவர் ஒரு பெரும்புரட்சியை ஏற்படுத்தினார் - பொருளாதாரம் மற்றும் அரசியலில் கூட!’  - Michael Hart (THE 100, pages 3-10).
நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்குச் சென்ற சில காலத்திலேயே மக்களின் நிதி நிலைமையில் முன்னேற்றம்! உமர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த காலகட்டத்தில் இஸ்லாமியப் பொருளாதார கொள்கைகள் உச்சகட்டத்தை அடைந்தது என்றும் மைக்கல் ஹார்ட் குறிப்பிடுகிறார் - Michael Hart (THE 100, pages 261-265).
இஸ்லாமியப் பொருளாதாரம்

நபி (ஸல்) அவர்களும், நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்களின் ஆட்சியிலும் பின்பற்றப்பட்ட, நாமும் பின்பற்ற வேண்டிய பொருளாதாரக் கொள்கையைப் பார்ப்போம். இஸ்லாமிய அரசின் அடிப்படை வருமானம் ஸகாத், கனிமத், ஜிஸ்யா, மற்றும் ஃகரஜ் இவையே.

ஸகாத் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ‘வளர்ச்சி’ மற்றும் ‘தூய்மை’ என்பதாகும். ஸகாத் வழங்குவது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்று. அதனால் இது இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு (நிஸாபுக்கு) மேல் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம், அசையும் அல்லது அசையாச்சொத்து வைத்திருக்கும் முஸ்லிமுக்குக் கட்டாயக் கடமையாகிறது. இவற்றின் மொத்த மதிப்பில் இரண்டரை சதவீதம் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதும் நபிபொழிகளின் மூலம் தெரிகின்றன. இப்படி வழங்கப்படும் ஸகாத், பொது நிதியில் (பைத்துல் மால்) சேர்க்கப்பட்டு, எட்டு வகையினருக்குப் பங்கிடப் படுகிறது. இதன் மூலம் செல்வம் சிலரிடம் மட்டும் தேங்கிக் கிடக்காமல், ஏழைகளுக்கும் பங்கிடப்படுவதால் வறுமை ஒழிப்பில் ஸகாத் ஒரு பெரும்பங்கு வகிக்கிறது. இதனால் ஸகாத் கொடுப்பவருக்கு என்ன லாபம் என்றால், அவருடைய பொருள் தூய்மையடைவதுடன், இம்மையிலும் மறுமையிலும் நன்மை வளர்ச்சியும் அடைகிறது.
கனிமத் என்பது போரில் கிடைக்கும் செல்வம். இதில் ஐந்தில் ஒரு பங்கு பொது நிதியில் சேர்க்கப்படுகிறது.
ஜிஸ்யா என்பது இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிம் அல்லாதவர்கள் செலுத்த வேண்டிய வரி. பெண்கள், வாலிப வயதை எட்டாத ஆண்பிள்ளைகள், முதியோர் ஆகியோரின் மீது ஜிஸ்யா கடமையல்ல. முஸ்லிம்களுக்கு ராணுவப்பணி கட்டாயமானதாக இருந்தது. ஆனால் முஸ்லிமல்லாதவர்களுக்கு ராணுவப்பணி கட்டாயமானதல்ல. அவர்கள் செலுத்தும் வரியும் முஸ்லிம்கள் செலுத்த வேண்டிய ஸகாத்தை விட மிகக் குறைந்த அளவே நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் இஸ்லாமிய அரசின் முழுப்பாதுகாப்பையும் பெற்றவர்களாக இருப்பார்கள்.
கரஜ் என்பது இஸ்லாமிய நாட்டினால் கைப்பற்றப்பட்ட நாடுகள் செலுத்த வேண்டிய வருடாந்திர வரி (கப்பம்).
மேற்கண்ட விதத்தில் கிடைக்கும் வருமானம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்படும். அதன் பெயர் ‘பைத்துல் மால்’ என்பதாகும். நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பின் ஆண்ட நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் ஆட்சிகளில் பைத்துல் மால் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகித்தது. இந்தப் பொதுநிதியிலிருக்கும் செல்வம் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் தர்மஸ்தாபனங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டன. இதனால் நாளடைவில் ஏழைகள் மிகுந்திருந்த அரபுத் தீபகற்பத்தில் ஏழைகளே இல்லாத அளவிற்குச் செழிப்பு ஏற்பட்டது. இது மந்திரமோ மாயமோ அல்ல. ஈமானும் இறையச்சமும் கொண்ட செல்வந்தர்கள், ஸகாத்தைச் சரியாகக் கணக்கிட்டு உரிய காலத்தில் பைத்துல் மாலில் சேர்ப்பித்ததுடன், இறையருளை நாடி தாராளமாக அதிகப்படியான விருப்ப தர்மமான ஸதகாவையும் அளித்தார்கள். அது மட்டுமல்லாமல் பைத்துல் மாலின் பொறுப்பாளர்கள் இறையச்சத்துடன் அச்செல்வத்தை அமானிதம் என உணர்ந்து கவனமாகக் கையாண்டார்கள். இதனால் இஸ்லாமிய நாடுகளின் செழிப்பும் வாழ்க்கைத் தரமும் வியக்கத்தக்க அளவில் உயர்ந்தன. அது மட்டுமல்ல இந்தப் பொதுநிதி, பள்ளிவாயில்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள் போன்றவற்றை நடத்தவும் உதவியாக இருந்தது.
இப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்தது. செல்வம் ஒரே இடத்தில் தேங்கிக் கிடப்பது தவிர்க்கப்பட்டது. இஸ்லாமியப் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடைப்பட்டது. இவ்விருகொள்கைகளிலும் உள்ள குறைகளை விடுத்து நன்மைகளை மாத்திரம் நடைமுறைச் சாத்தியமாக்கியது.
நேற்று மட்டும் அல்ல இன்றும் என்றும் வெற்றி தரக் கூடியது இஸ்லாமியப் பொருளாதாரமே! இது ஏட்டில் படிப்பதைக் காட்டிலும் செயல்முறைப் படுத்தும்போது அதன் மூலம் எல்லாத்தரப்பினரும் பயனடையலாம்.
க்கம்: Mrs.ஷம்ஷாத்
-------------------------------------------------------------------------------------------------------------------

thanks 
http://www.satyamargam.com/1235

Thursday, January 21, 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! எல்லாருக்கும் சம உரிமை!! தொடர் 1



<அமெரிக்காவில் இஸ்லாம் என்று எழுத எண்ணியவுடன் என் நினைவுக்கு வந்தது,கருத்து சுதந்திரம்,பேச்சு சுதந்திரம் மற்றும் அந்த மண்ணில் நுழைந்த எவருக்கும் உள்ள சம உரிமை பற்றியதே.

அமெரிக்காவுக்கும்,இஸ்லாத்துக்கும் அப்படி என்ன தொடர்பு,அங்கு எப்படி மக்கள் நடத்தப்படுகிறார்கள்,முஸ்லிம்களின் வாழ்க்கை முறை,வியாபார தொடர்புகள் மற்றும் பள்ளிவாசல்கள் அதன் தொண்டு இப்படி நிறைய எழுதலாம் என எண்ணுகிறேன்,இன்ஷா அல்லாஹ்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு துணை புரிய வேண்டும்.

அடுத்த பாகம் நுழையுமுன்,ஒன்றை இங்கு பதிய விரும்புகிறேன்.

"எந்த நாட்டிலும் இல்லாத முழு சுதந்திரம், அது எந்த மக்களாக இருந்தாலும்,முஸ்லிம்களாக இருப்பினும் அது இந்த அமெரிக்க மண்ணில் மட்டுமே கிடைக்கும் என்பதே உண்மை"
(அதற்காக வேண்டி,மற்ற நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் அமெரிக்கா கொண்டுள்ள கருத்து பற்றி கூற நான் விழையவில்லை.நம் தலைப்பு பற்றி அலசவே இக்கட்டுரை)

இனி--------

இன்ஷா அல்லாஹ்,

அடுத்த பதிவில்....

Tuesday, January 20, 2009

அமெரிக்க புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்!!!

அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா பதவி ஏற்றுள்ளார்.முதல் கறுப்பின அதிபர் என்பதால் உலகமே வியக்கிறது.இனி வரும் காலங்களில் அவருடைய செயற்பாடுகளை வைத்தே அவரின் ஆட்சி பற்றி கணிக்கமுடியும் என்ற போதிலும்,அவரின் சில நேர்மையான வாதங்கள்,எல்லா மத மக்களின்,எல்லா நாடுகளின் நலன்களுக்கும் குந்தகம் ஏற்படாவண்ணம் செயல்பட உறுதி பூண்டுள்ளமை விளங்குகிறது.

இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒரு கறுப்பின சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாட்டின் அதிபர் ஆவதற்கு இவ்வளவு எதிர்பார்ப்பும்,ஆச்சரியமும்,அதிசயமும் கலந்து நோக்கப்படுகிறது.அதே போன்று தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அதிபர் ஆனபோதும் இவ்வாறே பேசப்பட்டது.இவைகள் நடப்பது இந்த 21ம் நூற்றாண்டில் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால்,சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு,கறுப்பின மக்களை மிக மிக கேவலமாகவும்,அடிமைகளாகவும் நடத்தி வந்த அந்த தருணத்தில்தான்,பிலால் என்ற ஒரு கருப்பரை,அடிமையாக இருந்தவரை,அடிமை தளையிலிருந்து மீட்டு,இஸ்லாத்தின் மிக உயர்ந்த பதவியாக விளங்கும்(மு அத்தின்)தொழுகைக்கு அழைக்கும் ஒரு மிக உயர்ந்த பணியை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அளித்தார்கள்.காட்டு மிராண்டிகள் நிறைந்த அக்காலத்தில் இப்படியானதொரு மாபெரும் புரட்சி நடத்திக்காட்டினார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.இந்த வகையிலும் அது ஒபாமாவானாலும்,நெல்சன் மண்டேலாவானாலும் சரி,நபிகள் நாயகம் அவர்களே முன்மாதிரி.

அந்த மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் இறுதி உரையாக ஆற்றிய அவ்வுரை எல்லா நாட்டு தலைவர்கள்,எல்லா தரப்பு மக்கள் அனைவருக்கும்,எல்லா பெண்கள் சமுதாயத்துக்கும் ஒரு சிறந்த,சம உரிமை பெற்றுத்தரும் அரு மருந்து என்பதில் ஐயமில்லை.

உலகம் போற்றும் அவ்வுரை இதோ..................

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மது அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல் ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து "மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது "கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, "பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

நபி அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது.

கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

தொடக்க துதி மொழிகள்
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

பிரிவின் முன்னறிவிப்பு
ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!
ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓ... குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)

அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.

வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன். அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ... மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செயவதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, ஃபிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒ... மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

பிறகு நபி அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹ்ுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!