Showing posts with label அமைதி. Show all posts
Showing posts with label அமைதி. Show all posts

Wednesday, September 22, 2010

அமைதி காப்போம்

பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி அலஹபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.


 வதந்திகள், உணர்ச்சியை தூண்டக்கூடிய பொய்ப்பிரச்சாரங்கள் முதலியவற்றிற்கு பதிலளிக்கவோ எதிர்வினைகளில் ஈடுபடவோ வேண்டாம். இதுபோன்ற விஷமிகளின் வன்முறையை தூண்டும் முயற்சிகளுக்கு நாம் பலியாகிவிட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு ஏற்படும் எனவே இவர்களின் இம்முயற்சிகளுக்கு அடிபணிந்து விட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நாம் முயற்ச்சிகளை மேற்கொள்வோம் இன்ஷா அல்லா.

எனவே பொதுமக்கள் கீழ்காணும் வழிமுறையை கடைபிடித்து பொறுமையுடன் அமைதி காப்போம்

  1. வதந்திகளுக்கு செவிசாய்க்க, பரப்புவதற்கு உதவ வேண்டாம்
  2. மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய SMS அனுப்ப வேண்டாம் அது பிரார்தனையாகவோ செய்தியாகவோ அல்லது நீதிமன்ற தீர்ப்பாக இருந்தாலும் சரியே
  3. முஹல்லா அல்லது ஏரியா சமுதாய தலைவர்கள் காவல்துறையினரின் தொடர்பில் இருக்கவேண்டும்
  4. ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக தெரிந்தால் உடனேயே அதனை காவல்துறையினரிடம் தெரியப்படுத்திவிடவேண்டும்
  5. இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம், எனவே தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும்
  6. நீதித்துறையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கவேண்டும் எனவே நீதிமன்ற தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் . அதில் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்கும் வழிவகை உள்ளது
அமைதிக்காகவும் சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து சமுதாய மக்களும் இணைந்து பாடுபட வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அனைத்து தரப்பு மக்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .

எதிர்காலத்தில் உலகளாவிய தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில் உள்ளதால் முழு உலகமே இந்தியாவை உற்று நோக்கிக்கொண்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்

Sunday, May 23, 2010

இலங்கை செல்கிறார் நாயக்

சர்வதேச  இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஸாகீர் நாயிக் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜம் இய்யதுஷ் ஷபாபின் ஏற்பாட்டில் கொழும்பு சுகதாச வெளியரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ள மார்க்க சொற்பொழிவில் இவர் உரையாற்றவுள்ளார்.  

மத ஒப்பீட்டுத்துறை ஆய்வுத்துறை நிபுணரான  டாக்டர் ஸாகீர் நாயிக் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

கடந்த வருடம் இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 2009ஆம் ஆண்டில் மிகவும் சக்திவாய்ந்த 100 இந்தியர்கள் என்ற பட்டியலில் 82ஆவது இடத்தை இவர் பெற்றிருக்கிறார்.


இதேபோன்று, இந்தியாவின் தலைசிறந்த 10 மார்க்க அறிஞர்களின் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்திலுள்ளார்
.


அவருடைய இணைய தள முகவரி 

http://irf.net/




Wednesday, March 17, 2010

துபையில் (Peace) அமைதி மாநாடு

இஸ்லாம் என்றால் பயங்கரவாதம், தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக் கருத்துருவாக்கம் உலகெங்கும் வலிந்து திணிக்கப்படும் இக்காலச் சூழலில், அதைத் தவிடுபொடியாகச் செய்யும் "அமைதி மார்க்கத்தின் அழைப்பு" மாநாடுகள் நடத்தப் படுவது காலத்தின் கட்டாயமாகும். அவ்வரிசையில் துபையில் இன்ஷா அல்லாஹ் நாளை 18.03.2010இல் தொடங்கி மூன்றுநாட்கள்  நடைபெறவிருக்கும் மாநாட்டில் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடைய சத்தியமார்க்கம்.காம் அன்புடன் வேண்டி, இதை அறிவிக்கின்றது.


கலந்து கொண்டு சிறப்பிப்போர்:
Sheikh Abdur Rahman Al Sudais (Expected)
Imam Masjed Al-Haram (Al-Kaba) – Saudi Arabia
Dr. அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸ் - ஸஊதி அரபியா
ஈர்த்திழுக்கும் இவரது மறையோதல் உலகப் புகழ் பெற்றது. 1961ஆம் ஆண்டு பிறந்த ஷேக் அப்துர் ரஹ்மான், தமது 12ஆவது வயதில் இறைமறையை முழுமையாக மனனம் செய்தவர். ஹிஜ்ரீ 1399ஆம் ஆண்டு ரியாத் மருத்துவக் கழகத்தின் மிகச் சிறந்த மாணவராகப் பட்டம் பெற்ற மருத்துவர். ஷேக் அப்துர் ரஹ்மான் அவர்கள், தமது 'இஸ்லாமிய அடிப்படை நெறிமுறை' (ஷரீஆ) இளங்கலைப் பட்டத்தை ரியாத் பல்கலைக் கழகத்தில் 1983இல் நிறைவு செய்தார். பின்னர், இமாம் முஹம்மது இபுனு ஸஊத் இஸ்லாமியப் பலகலைக் கழகத்தில் தமது முதுநிலைக் கல்வியை 1987இலும் இஸ்லாமிய நெறிமுறை (ஷரீஆ) ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் 1995இலும் நிறைவு செய்தார். ஹிஜ்ரீ 1404 ஷஅபான் மாதம் 22ஆம் நாள்முதல் கஅபாவின் இமாமாகப் பணியாற்றுகிறார். அன்னார், சிறுவயது முதல் தம் நல்லொழுக்கத்தாலும் இப்போதும் பின்பற்றும் எளிமையாலும் அனவரையும் கவர்ந்தவர்.
Sheikh Mishary Rashid Al Effasy - Kuwait
ஷேக் மிஷாரீ ராஷித் அல் இஃபாஸி - குவைத்

ஷேக் மிஷாரீ அவர்கள் 1976இல் குவைத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த ஓதுவார் (காரீ அல் குர்ஆன்). மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் அல் குர்ஆனையும் இஸ்லாமியக் கல்வியையும் பயின்றவர். மறையோதுதலின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்த ஷேக் மிஷாரீ, குவைத்தின் பெரிய பள்ளிவாயிலின் இமாமாகப் பணியாற்றுகிறார். இவரது குரலில் அல் குர்ஆன்  யூ-ட்யூபில் கேட்கக் கிடைக்கிறது.
Dr. Hussain Hamed Hassan - Egypt
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் - எகிப்து
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் அவர்கள் இஸ்லாமியப் பொருளாதாரத் துறையில் சமகாலத்தவரின் தந்தை எனப் பேசப் படுகிறார். கைரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் தமது முனைவர் பட்டத்தைக் கடந்த 1965இல் பெற்றவர். கூடுதலாக, ந்யூயார்க் பலகலைக் கழகத்தின் 'உலகளாவிய ஒப்பீட்டுச் சட்டப் பயிற்சி' மையத்திலிருந்து இரு பட்டங்களைப் பெற்றிருக்கிறார். எகிப்து அரசின் தலைமை வழக்கறிஞராக 1969-1970 பணியாற்றியுள்ளார். தற்போது மத்தியக் கிழக்கின் பல இஸ்லாமிய வங்கிகளுக்கு மட்டுமின்றி,  பொருளாதாரக் கல்விப் பயிலகங்களின் நெறிமுறைக் கண்காணிப்புக் குழுமத்தின் தலைவராகவும் மத்தியக் கிழக்கின் அரசாங்கங்கள் சிலவற்றுக்குப்  பொருளாதார ஆலோசகராகவும் திகழ்கிறார்.
Yasir Qadhi - USA
ஷேக் யாஸிர் காழி - அமெரிக்கா
ஷேக் யாஸிர் காழி அவர்கள் அமெரிக்காவின் டெக்ஸஸில் உள்ள ஹ்யூஸ்டனில் பிறந்தவர். மேனிலைப் பள்ளிப் படிப்பை ஸஊதியில் உள்ள ஜித்தாவிலும் இஸ்லாமியக் கல்வியை மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். தமது இஸ்லாமியக் கல்வி ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழத்தில் அண்மையில் பெற்றார் ஷேக் யாஸிர். மிகச் சிறந்த பேச்சாளரும் இஸ்லாமிய அழைப்பாளருமான ஷேக் யாஸிரின் அழைப்புப் பிரச்சாரங்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்துள்ளன. ப்பீஸ், இஸ்லாம்(இங்கிலாந்து), அல்-ஹுதா(ஸஊதி அரேபியா), அல்-ஃபஜ்ரு(எகிப்து) ஆகிய தொலைக்காட்சிகளிலும் இவரது இஸ்லாமியப் பிரச்சாரம் ஒளிபரப்பப் படுகிறது.
Yusuf Estes - USA
ஷேக் யூஸுஃப் எஸ்ட்ஸ் - அமெரிக்கா
"விளையாட்டுப் பிள்ளை" என்று கேள்விப் பட்டிருக்கிறோமில்லையா? போலவே, அமெரிக்காவின் யூஸுஃப் எஸ்ட்ஸ் அவர்கள், குழந்தைகள்முதல் பெரியவர்வரை அனைவரின் உள்ளங்களையும் தம் விளையாட்டுப் பேச்சினால் கொள்ளை கொண்ட இந்த "விளையாட்டு ஷேக்" ஒரு முன்னாள் கிருஸ்துவப் பாதிரியாவார். ஐ.நா.வின் மத அமைதி-நல்லிணக்கத் தலைவர்களில் அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். எகிப்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமைக் கிருஸ்துவத்துக்கு மதமாற்ற முயன்றபோது இஸ்லாத்தின் வலையில் தாமாகவே வந்து 'வீழ்ந்துபட' நேந்ததை விளையாட்டாக  எளிமையான ஆங்கிலத்தில் அவர் விவரிக்கும்போது சிரிப்பும் அழுகையும் கலந்த அனுபவம் உண்டாகும். வெகு எளிமையான ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாகப் பேசியே பலரை இஸ்லாத்தின் பக்கம் அழத்து வந்திருக்கிறார். இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காகவே பல இணைய தளங்களை நடத்திவருகிறர். அவரது சொந்தப் பெயரிலும் (www.YusufEstes.com) பிற பெயர்களிலும் இயங்கும் இணைய தளங்களுள் குறிப்பிடத் தக்கவை : (www.BibleIslam.com), (www.ShareIslam.com).
Abdur Raheem Green - UK
ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் - இங்கிலாந்து
ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் ஆங்கிலேய முடியாட்சியின் கீழ் இராணுவப்படை நிர்வாகியாத் திகழ்ந்த தந்தைக்கு, தான்ஸானியாவின் தலைநகரான தாருஸ்ஸலாமில் பிறந்தவர். குடும்பம் முழுதும் இங்லாந்துக்கு மீண்டு, லண்டன் கிருஸ்துவப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றவர். மாணவப் பருவத்திலேயே வாழ்வின் பொருளைத்தேடி, தம் உள்ளம் அலைபாய்வதை உணர்ந்தவர். தம் கலாச்சாரத்தை, வாழும்வழியைப் பல்வேறு வகையில் தன்னுள் கேள்விக்குட்படுத்தியவர். பிறகென்ன? தேடிக் கொண்டே இருப்பவர்களை இறுதியாக எதிர்கொள்வது அல்லாஹ்வின் வேதம்தானே! அது 1987இல் அவர் கைக்குக் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனப் பிறருக்கு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் சிறந்த அழைப்பாளர்களுள் ஒருவராக மாறிவிட்டார் ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன். அவரது இணையதளம் www.IslamsGreen.org
Sheikh Hussain Yee - Malaysia
ஷேக் ஹுஸைன் யீ - மலேஷியா
"சீனஞ் சென்றேனும் ஞானம் தேடு" என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. இந்தச் சீனவழிவந்த "யீ" அவர்களுக்கு ஞானம் பிறந்தது மலேஷியாவில். புத்தமதக் குடும்பத்தில் பிறந்த "யீ", தமது 18ஆவது வயதில் (1978) இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாமியக் கல்வி பயில்வதற்காக அவர் தேர்ந்து கொண்டது மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகம். தேர்ந்தெடுத்த துறை ஹதீஸுக்கலை. பட்டம் பெற்றது 1978இல். மலேஷியாவில் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களுக்கு அடிப்படை போதனைகளையும் வாழும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பதற்குத் தோற்றுவிக்கப்பட்ட 'முஸ்லிம் சமூகநல அமைப்பு (Perkin)'இல் தம்மை இணைத்துக் கொண்டார் ஷேக் ஹுஸைன். பின்னர் ஹாங்காங்கின் இஸ்லாமிய மையத்தின் இயக்குநர் பொறுப்பேற்றார். மலேஷியாவில் "அல்-காதிம்" (தொண்டன்) எனும் அமைப்பை 1984இல் நிறுவி அழைப்புப் பணியைத் தொடர்ந்தார். சமகால ஹதீஸுக்கலை விற்பன்னர்களில் தலையானவரான இமாம் முஹம்மது நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அவர்களின் மாணவராவார் ஷேக் ஹுஸைன்.
M.M Akbar - India
ஷேக் எம். முஹம்மது அக்பர் - இந்தியா
இயற்பியல் பட்டதாரியான எம். முஹம்மது அக்பர், ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும் இஸ்லாமிய அழைப்பாளர். கேரளாவில் பிறந்த ஷேக் அக்பர் இஸ்லாமியப் பிரச்சாரத்திலும் பிறமத நண்பர்களுடன் நடத்தும் நட்புமுறையிலமைந்த விவாதத்திலும் கெட்டிக்காரர். "ஸ்நேகஸம்வாதம்" (Friendly debate) எனும் பெயருடைய மலையாள மாத இதழின் ஆசிரியர். "நிஜம்" எனும் தஃவா அமைப்பின் நிறுவன இயக்குநர். Peace எனும் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். "Bibilinte Daivikatha-Vimarshangal, Vasthuthakal" (Divinity of Bible-Criticisms and Truths), "Haindavatha - Dharmavum Dharshanavum" (Hinduism – Religion and Ideology) ஆகிய நூல்களை எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர்.
Saeed Rageah - Canada
ஷேக் ஸயீத் ராகேஹ் - கனடா
சோமாலியாவில் பிறந்து ஸஊதியில் வளர்ந்து, வட அமெரிக்காவுக்குப் பெயர்ந்து, தற்போது கனடாவின் டோரொண்டோவில் அபூஹுரைரா இஸ்லாமிய மையத்தில் இமாமாகப் பணியாற்றும் ஷேக் ஸயீத், இஸ்லாமியக் கல்வியில் இளங்கலைப் பட்டமும் வெர்ஜினீயாவின் ஃபயர்ஃபாக்ஸில் உள்ள 'இஸ்லாமிய, அரபு அறிவியல் பயிலக Institute of Islamic and Arabic Sciences'த்தில் நெறிமுறை(ஷரீஆ)க் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாவன்மை மிக்கவர். மஸ்ஜிது ஹுதா (மோண்டரல்), மஸ்ஜித் ஆயா (மேரீலாண்ட்) "முஸ்லிம் இளையோர்" இதழ், "அக்ஸாக் கூட்டமைப்பு" ஆகியவற்றின் நிறுவனர் ஆவார் ஷேக் ஸயீத்.
Ahmed Hamed - India
ஷேக் அஹ்மது ஹாமித் - இந்தியா
"அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஆகும்" எனக் கூறும் ஷேக் அஹ்மது ஹாமித், 28 வயது நிரம்பிய இந்திய இளைஞர். வணிகவியலில் முதுநிலைப் பட்டதாரியான அஹ்மது, கடந்த சில ஆண்டுகளாகவே அழைப்புப் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். "இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதலை, குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்த பிரச்சாரம் ஒன்றின் மூலமே களைய முடியும்" எனக் கூறும் அஹ்மது, எவரையும் கவரும் நாவன்மை கொண்டவர். பல்வகைப்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்காற்றியவர். அமீரகங்கள், ஸஊதி அரபியா, இங்கிலாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் அழைப்புப் பணி செய்திருக்கிறார். தாஇகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் ஷேக் அஹ்மது.
Zain Bhikha - South Africa
ஸைன் பிகா - தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியாவில் 1974இல் பிறந்த ஷேக் ஸைன், சிறுவயதில் குரலினிமை கொண்ட சிறந்த பாடகராம். ப்ரிட்டோரியா முஸ்லிம் பள்ளிக்கூடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இஸ்லாத்தை மையப் படுத்தி, "வாழும் வழி - A Way of Life" எனும் ஒரு கவிதைத் தொகுப்பையும் பின்னர் "Praise to the Prophet (SAW)" (1996), "Fortunate is He" (1997) and "The Journey" (1998) ஆகிய தொகுப்புகளையும் ஸைன் வழங்கியுள்ளார்.
நிகழ்ச்சி நிரல்:
வியாழன் 18.03.200
மாலை 5 முதல் இரவு 11:30 வரை : மாநாட்டுத் தொடக்கம், உரைகள், பொருட்காட்சி

வெள்ளி 19.03.2010
காலை 10 முதல் பகல் 1 வரை : உரைகள், ஜும் ஆத் தொழுகை, பொருட்காட்சி
பகல் 2.30 முதல் இரவு 11:30 வரை : உரைகள், கிரா அத், கவிதை, பொருட்காட்சி

சனி 20.03.2010
காலை 10 முதல் பகல் 1 வரை : உரைகள், பொருட்காட்சி
பகல் 2.30 முதல் மாலை 6 வரை : உரைகள், பொருட்காட்சி
மாலை 6.30 முதல் இரவு 11.30 வரை : பொருட்காட்சி, மாநாட்டு நிறைவு

கூடுதல் விபரங்களுக்கு: http://www.peaceconvention.com/

thanks http://www.satyamargam.com/

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!