Friday, January 30, 2009

இஸ்லாம் பார்வையில் "அநாதைகளின் உரிமைகள்"

அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸஅத்َضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் அறிவித்தார்கள்:
“நானும் - அநாதையைப் பராமரிப்பவனும், மற்ற தேவைகள் உடையோரைப் பராமாரிப்பவனும் சுவனத்தில் இப்படி இருப்போம். இதைச் சொல்லிவிட்டு அண்ணலார் நடுவிரலையும், சுட்டுவிரலையும் காட்டினார்கள். இரு விரல்களுக்கிடையேயும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். (புகாரி)


அறிவிப்பாளர் : அபூஹுரைராَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்:
“எந்த வீட்டில் ஒர் அநாதை இருந்து, அவனுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளப்படுகின்றதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகச் சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஓர் அநாதை இருந்து, அவனுடன் கோபமாக நடந்து கொள்ளப்படுகின்றதோ அந்த வீடுதான் முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகக் கெட்ட வீடாகும். (இப்னு மாஜா)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْهُ
ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்கள் தன் கல்நெஞ்சம் பற்றி முறையிட்டார். அண்ணலார், “அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள், ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்!” என்று கூறினார்கள். (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : குவைலித் பின் உமர் َضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் “என் இறைவா! நான் இரு பலவீனர்களின் உரிமையை கண்ணியத்திற்குரியதாய்க் கருதுகின்றேன்: 1. அநாதையின் உரிமை 2. மனைவியின் உரிமை.” (நஸயீ)


அறிவிப்பாளர் : ஜாபிர் َضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினேன் : “என் பராமாரிப்பில் இருக்கும் அநாதையை எந்தெந்த காரணங்களுக்காக நான் அடிக்கலாம்?” அண்ணலார் கூறினார்கள்: “எந்தக் காரணங்களுக்காக உம் சொந்தக் குழந்தைகளை அடிப்பீரோ அந்தக் காரணங்களுக்காக மட்டுமே அவர்களை நீர் அடிக்கலாம். எச்சரிக்கை! உம் செல்வததைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அநாதையின் செல்வத்தை அழிக்கக் கூடாது. அநாதையின் செல்வத்தால் உம் சொத்தைப் பெருக்கிக் கொள்கக்கூடாது.” (முஃஜம் தபரானீ)

Thursday, January 29, 2009

இஸ்லாம் பார்வையில் "பணிவு"

''எவரேனும் அல்லாஹவிற்காகப் பணிந்தால் அவரது அந்தஸ்தை அல்லாஹ உயர்த்தியே தீருவான்.'' (ஸஹீஹ முஸ்லிம்)

''பணிவாக இருங்கள். நீங்கள் ஒருவர் மற்றவர்மீது அகந்தை கொள்ள வேண்டாம், அநியாயம் செய்ய வேண்டாம்'' என அல்லாஹ எனக்கு வஹீ அறிவித்தான். (ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் (ரழி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றால் அவர்களுக்கு ஸலாம் உரைப்பார்கள். மேலும் கூறினார்கள் ''நபி அவர்களும் இவ்வாறுதான் செய்து வந்தார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்களின் பணிவைப் பற்றி அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ''மதீனாவின் அடிமைப் பெண்களில் ஓர் அடிமைப் பெண் நபி அவர்களின் கரம்பற்றி தான் விரும்பிய இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்வாள். நபி அவர்கள் அவளது தேவையை நிறைவேற்றித் தருவார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி)

''நபி அவர்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களைச் சென்றடைந்தேன். 'அல்லாஹவின் தூதரே! மார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாமல் அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக வந்த புதிய மனிதர் (நான்)' என்று கூறினேன். நபி அவர்கள் உடனே என் பக்கம் திரும்பினார்கள். தனது பிரசங்கத்தை விட்டுவிட்டு என்னருகே வந்தார்கள். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதன்மீது அமர்ந்தார்கள். அல்லாஹ அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததை எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். பிறகு பிரசங்கம் செய்யத் தொடங்கி அதைப் பூர்த்தி செய்தார்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள் கூறினார்கள்: ''ஓர் ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதியை விருந்தாக்கி அந்த விருந்துக்கு நான் அழைக்கப் பட்டாலும் நிச்சயம் நான் ஏற்றுக் கொள்வேன். ஆட்டுக் கால் அல்லது அதன் கீழ்ப்பகுதி எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் நிச்சயம் நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.'' (ஸஹீஹுல் புகாரி)

Wednesday, January 28, 2009

இஸ்லாம் பார்வையில் "நற்குணம்"

"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நபி அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள். அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)

நபி அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

"உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார். நபி அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

Tuesday, January 27, 2009

இஸ்லாம் பார்வையில் "அன்பளிப்பு"

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நான் ஓர் அன்பளிப்பைக் கொண்டு சென்றேன். அப்பொழுது அவர்கள் நீர் இஸ்லாத்தைத் தழுவி விட்டீரா? என்று வினவினர். அதற்கு நான் இல்லை என்றேன். அப்பொழுது அவர்கள் நிச்சயமாக நான் இணை வைப்பவர்களுடைய அன்பளிப்பையும் நன்கொடையையும் ஏற்பதை விட்டும் தடை செய்யப்பட்டுள்ளேன் என்று கூறினர் (அறிவிப்பவர்: இயான் இப்னுஹிமாஸ் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்,திர்மிதீ)

நிச்சயமாக ஒரு காட்டரபி நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்பாக அனுப்பினார். அதற்குப் பகரமாக நபி صلى الله عليه وسلم அவர்கள் அவருக்கு ஆறு ஒட்டகங்களை அன்பளிப்புச் செய்தனர். எனவே அவர் சினந்து கொண்டார். ஆனால் இச்செய்தி நபி صلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரியவரவே அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து அவனைத் துதி செய்துவிட்டு பின்னர், நிச்சயமாக, இன்னார் எனக்கு ஓர் ஒட்டகத்தை அன்பளிப்புச் செய்தார். எனினும் நான் அவருக்கு அதற்குப் பகரமாக ஆறு ஒட்ட்கங்களை அன்பளிப்பு செய்தேன். ஆனால் அவர் அதற்காகச் சினந்து கொண்டார். எனவே நான் (இனிமேல்) குறைஷிகளிடமிருந்தோ, அன்ஸாரிகளிடமிருந்தோ, ஸகஃபீகளிடமிருந்தோ, தவ்ஸீகளிடமிருந்தோ அன்றி வேறு எவரிடமிருந்தும்) அன்பளிப்பை ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)

ஒருவருக்காக எவரேனும் பரிந்துரைத்து (சிபாரிசு செய்து) அதற்காக அவர் தமக்குப் பரிந்துரைத்தவருக்கு அன்பளிப்புச் செய்து அதனை அவர் ஏற்றுக் கொள்வாரானால் நிச்சயமாக அவர் பெரும்பாலும் வட்டியின் தலை வாயிலில் நுழைந்தவராவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்:அபூ உமாமா َضِيَ اللَّهُ عَنْநூல் அபூதாவூத்)

நபி صلى الله عليه وسلم அவர்களின் திண்ணைப் பள்ளி மாணக்கர்களான ஸுஃப்பாவாசிகளில் சிலருக்கு நான் எழுத்துக் கலையையும் குர்ஆனையும் கற்றுக் கொடுத்தேன். எனவே அவர்களில் ஒருவர் எனக்கு வில் ஒன்றை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். அப்பொழுது நான், என்னிடம் பொருள் இல்லாததால் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்துவேன் என்று கூறி பின்னர், அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் ஒருவருக்கு குர்ஆனை கற்றுக்கொடுத்து வந்தேன். அவர் என்னிடம் பொருள் இல்லாததால் நான் அதைக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அம்பு எய்வேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள், நரக நெருப்பு வளையம் உம்முடைய கழுத்தில் போடப்பட வேண்டும் என்று நீர் விரும்பினால் அதை நீர் ஏற்றுக் கொள்ளும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாபித் َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத்)


ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்து விட்ட பின்னர் அதனையவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெருவது ஆகுமானதாகும். மற்றோர் அறிவிப்பின்படி, எவர் தாம் அளித்த நன்கொடையையோ அல்லது தாம் கொடுத்த சன்மானத்தையோ திரும்பப் பெறுவாராயின் அவர், வாந்தி எடுத்து விட்டுப் பின்னர் தம் வாந்தியைத் தின்னும் நாயைப் போலாவார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் َضِيَ اللَّهُ عَنْ,இப்னு உமர் َضِيَ اللَّهُ عَنْ நூல் ஸூனன்)

நிச்சயமாக என் தந்தை என்னை நபி صلى الله عليه وسلم அவர்களிடம் அழைத்துச் சென்று, நாயகமே நிச்சயமாக நான் இந்த என்னுடைய மகனுக்கு ஓர் அடிமையை நன்கொடையாக அளித்தேன் என்று கூறினார். அதற்கவர்கள், இவ்விதமாகவே உம்முடைய எல்லா மக்களுக்கும் நன்கொடை அளித்திருக்கின்றீரா? என்று வினவினர். அதற்கு என் தந்தை இல்லை என்று மறுமொழி பகர்ந்தார். (அது கேட்ட) நபி صلى الله عليه وسلم அவர்கள், அவ்விதமாயின் அவ்வடிமையைத் திரும்பப்பெற்றுக் கொள்ளும் என்று கூறினர். (அறிவிப்பவர்: நூமான் இப்னுபஷீர் َضِيَ اللَّهُ عَنْ நூல் முஅத்தா, அபூதாவூத்,திர்மிதீ,நஸயீ)

நபி صلى الله عليه وسلمஅவர்கள் எனக்கு நன்கொடைகள் அளித்து வந்தனர். அப்பொழுது நான் என்னைவிட அதிக தேவையுள்ளவர்களுக்கு இவற்றை அளியுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளும் அன்றி, நீர் கோராமலும் நீர் விரும்பாமலும் எந்தப் பொருளையும் நீர் ஏற்றுக்கொள்ளும்; ஆனால் இவ்விதமாக எந்தப் பொருள் மீது நீர் நாட்டம் வைக்காதீர் என்று கூறினர். (அறிவிப்பவர்: இப்னுஸ் ஸயீத் அவர்கள் உமர் َضِيَ اللَّهُ عَنْ மூலமாக அறிந்து நூல் புகாரீ, முஸ்லிம்)

ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர் என்று ஆயிஷா َضِيَ اللَّهُ عَنْ அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத், திர்மிதீ)

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு கிஸ்ரா (எனும் ஈரான் நாட்டு மன்னர்) அன்பளிப்பு அனுப்பினார். அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அன்றி, (மற்ற) அரசர்களும் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு அன்பளிப்பை நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏற்றுக் கொண்டனர். (அறிவிப்பவர்: அலீ َضِيَ اللَّهُ عَنْ நூல் திர்மிதீ)

Monday, January 26, 2009

இஸ்லாமிய ஒழுக்க மாண்பு!ஒருவர் வீட்டினுள் செல்லும்முன் பேணப்படவேண்டிய முறைகள்!!

''நபி صلى الله عليه وسلم அவர்கள் வீட்டிலிருக்கும்போது, பனூ ஆமீர் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, நான் உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டார். (அவர் அனுமதி கேட்ட முறை சரியில்லை என்பதற்காக) நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் பணியாளரிடம், நீ சென்று அனுமதி கேட்கும் முறையை அவருக்குச் சொல்லிக்கொடு (அதாவது) 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்கும்படிச்சொல் என்று கூறினார்கள். இதைச் செவிமடுத்த அம்மனிதர், 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதி வழங்க, அவர் உள்ளே வந்தார்" என ரிப்யீ இப்னு ஹிராஷ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)


''நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து. 'ஸலாம்' கூறாமல், அவர்கள் இருந்த அறையில் நுழைந்துவிட்டேன். நீ திரும்பச் சென்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" நான் உள்ளே வரலாமா என்று கேட்டுவிட்டு, பின்னர் உள்ளே வா என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என கில்தா இப்னு ஹன்பல் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்கள்: அஹ்மது, அபூதாூது மற்றும் திர்மிதீ)


''அனுமதி பெறுவது (மார்க்கச்) சட்டமாக ஆக்கப்பட்டது பார்வையின் காரணத்தால்தான் என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்" என ஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, திர்மிதீ மற்றும் நஸயீ)

''நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு சமுகத்தாரின் (வீட்டு) வாசலுக்கு வந்தால், வாசலுக்கு நேராக நின்று அனுமதி பெறாமல், வாசலுக்கு வலப்புறமோ, இடப்புறமோ ஒதுங்கி நின்று, 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சொல்வார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)


''முன் அனுமதி பெறாமல் பிறருடைய வீட்டின் உட்பகுதிகளைப் பார்ப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. அப்படி ஒரு முஸ்லிம் (பிறருடைய வீட்டின் உட்பகுதிகளை) பார்த்துவிட்டால் (அவர் அனுமதி பெறாமல்) அவ்வீட்டில் புகுந்தவர் போன்று ஆகிவிடுகிறார்" என தவ்பான் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார் .(நூல்: அபூதாூத், திர்மிதீ) மேற்கண்ட நபிமொழியை இமாம் புகாரி அவர்கள், தம் 'அல்அதபுல் முஃப்ரத்" எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

''ஒருவர் தன் பார்வையை ஒரு வீட்டினுள் முறையற்று செலுத்தும்போது அவ்வீட்டுக்காரர் உற்றுப் பார்த்த அவரின் கண்ணைப் பறித்தால்கூட, அதற்காக அவரை நான் குறை கூறமாட்டேன். அடைக்கப்படாத (திரையிடப்படாத) ஒரு வாசலை, யாரேனும் உற்று நோக்கினால், நோக்கியவர் மீது குற்றம் ஏதுமில்லை. வீட்டுக்காரர்களே குற்றவாளிகளாவர் என்றும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்""என அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல் : திர்மிதீ)


''வீட்டில் ஓர் ஆண் தொழுது கொண்டிருக்கும்போது அவரின் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டால், தொழுது கொண்டிருப்பவர் தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் என்று) சொல்வதே அனுமதி அளித்ததாகும். பெண் ஒருத்தி தொழுது கொண்டிருக்கும்போது அவ்வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கேட்கப்பட்டால், அப்பெண் தன் புறங்கையைப் புறங்கையில் அடித்து சப்தம் உண்டாக்குவதே அனுமதி அளிப்பதாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூஹ{ரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: பைஹகீ)


''நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் இரவு மற்றும் பகல் நேரங்களில் வருவேன். நான் இரவில் வரும்போது அவர்கள் கனைத்து எனக்கு அனுமதி அளிப்பார்கள். நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து அனுமதி கேட்கும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் கனைப்பார்கள்; நான் நுழைந்துவிடுவேன். அவர்கள் தொழாமல் இருந்தால் எனக்கு (வாய்மொழியில்) அனுமதி அளிப்பார்கள்" என அலி இப்னு அபீ தாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ (நூல்: நஸயீ)


''நபி(ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் வந்து அனுமதி கோர, யார் அது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்டதற்கு, அபூபக்ர் என்று பதில் சொன்னார்கள். அதன்பிறகு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ வந்து அனுமதி கேட்டார்கள். யார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கேட்க, உமர் என்றார்கள் அதன் பின்பு வந்த உதுமான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களும் தம் பெயர் கூறியே அனுமதி பெற்றார்" என அபூ மூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி, முஸ்லிம்)

''என் தந்தைக்கு இருந்த கடன் விஷயமாக, நான் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, (அவர்கள் வீட்டுக்) கதவைத் தட்டினேன். (வீட்டிற்குள்) இருந்து நபி صلى الله عليه وسلم அவர்கள் (கதவைத் தட்டுவது) யார் எனக் கேட்டார்கள். நான்தான் என்று குரல் கொடுத்தேன். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், நான்தான் ''என்றால் யார்" என்று அதிருப்தியோடு கேட்டார்கள்" என ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூது, மற்றும் திர்மிதீ)


''நபி صلى الله عليه وسلم அவர்களுடன் நான் சென்ற இடத்தில் ஒரு பாத்திரத்தில் பால் இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்கள், அபூஹுரைராவே, திண்ணைத் தோழர்களை இங்கே அழைத்து வாருங்கள் என்றார்கள். நான் திண்ணைத் தோழர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்" என அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி)


''இரவில் நபி صلى الله عليه وسلم அவர்கள் தம் வீட்டிற்குத் திரும்பி வரும்போது, தூங்குபவர்கள் எழுந்துவிடாத முறையிலும் விழித்திருப்பவர்களுக்கு (மட்டும்) கேட்கும்படியாகவும் 'ஸலாம்" கூறுவார்கள்" என மிக்தாத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம்)


''ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும்போது, யா அல்லாஹ்! நல்ல முறையில் நுழைவதையும் நல்ல முறையில் வெளியேறுவதையும் உன்னிடம் வேண்டுகிறேன். இறைவா! உன் திருப்பெயர் கொண்டே நுழைகிறோம். உன் திருப்பெயர் கொண்டே வெளியேறுகிறோம். எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்று கூறிவிட்டுப் பிறகு தன் வீட்டில் உள்ளவர்களுக்கு 'ஸலாம்" கூறட்டும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூ மாலிக்கில் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: அபூதாூத்)


(அடுத்தவர் வீட்டினுள் செல்ல) அனுமதி கேட்பது மூன்று தடவையே. உனக்கு (மூன்று தடவைகளுக்குள்) அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால், (அவ்வீட்டில் நுழையலாம்) அவ்வாறு அனுமதி கிடைக்கவில்லையெனில், திரும்பிவிடு என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூமூஸா அல் அஷ்அரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, முஅத்தா, அபூதாூது மற்றும் திர்மிதீ)

Sunday, January 25, 2009

முதுமை ஒரு அழையா விருந்தாளி!

(சகோ.ஜாஹிர் எழுதிய கருத்தில் கவர்ந்து இழுக்கப்பட்டதால் இந்த சின்ன கவிதை)
முதியோர் சொல் வார்தையும் ,முது நெல்லிகாய்யும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்-இது ப(கி)ழ மொழி!
----------------------------------------------------------------------------
அன்று...
சுருக்கு பையிலிருந்து தோல் சுருங்கிய கையில் வாப்பிச்சா எடுத்து தரும் அந்த 10 நாயா பைசா,தந்த சந்தோசம்!
உம்மாவின் உம்மாவும்,அவர்களின் உம்மாவும் தந்த(முத்தம்) உம்மாக்களின் அன்பு எச்சில் ஈரம் இன்னும் நெற்றியிலும்...கண்ணத்திலும்!
முதியோர் என்ற அந்த(பெருசு???)பெரியோர்கள் நமக்கு நேச,பாசம் காட்டிய நண்பர்கள் நம்முடன் இன்று இல்லாமல் போன பின்..
பாட்டி கதைகளும்,பக்குவ வைத்தியமும், அன்பு(தாத்தா)அப்பா தந்த கலுக்கோனா,கல்லுக்குச்சி மிட்டாயும் அன்னியமானதுவே!
நேற்று வரை நடந்தது நடந்தவையாகவும் கடந்தவையாகவும் இருந்துவிட்டுப்போகட்டும்..
இனியெனும் நம் தாய்,தந்தையர்களுக்கு சில நேரமேனும் ஒதுக்குவோம்.
இல்லையெனில், நமக்கு நாளைய தலைமுறை நேரம் ஒதுக்காமல் ஒதுங்கியே போகும்.
பின்.....
நம் வயதீக காலம் நான்குக்கு, எட்டு சுவருக்குள்ளேயே அடங்கி போகும்.

by(சகோ.முஹம்மது தஸ்தகீர்)
adiraipost

இஸ்லாம் பார்வையில் "முகமன்"

''உங்களுக்கு நம்பிக்கை (ஈமான்) பிறக்கும் வரை நீங்கள் சுவனத்தில் நுழைய முடியாது. உங்களில் ஒருவரையொருவர் உளமாற நேசிக்கும் வரை நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களாக ஆக முடியாது. எச்செயல் பிறரை உளமாற நேசிக்கவைக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (அது உங்களுக்கிடையில் நேசத்தை ஏற்படுத்தி நம்பிக்கையைப் பலப்படுத்தி, சுவனத்தில் நுழைவதற்கு வழி வகுத்துவிடுகிறது) என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம், அபூதாூது, மற்றும் திர்மிதீ)


''இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார், (நூல்: புகாரி, முஸ்லிம்)


''நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் அருள், சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும்!) என்று சொன்னார். அதற்கு, நபி صلى الله عليه وسلم அவர்கள் பதில் சொன்னார்கள். அவர் அமர்ந்தார், நபி صلى الله عليه وسلم அவர்கள், பத்து (நன்மைகள்) என்றனர். பின்பு மற்றொருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்றார் அதற்கு, நபி صلى الله عليه وسلم அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் உட்கார்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் இருபது (நன்மைகள்) என்றார்கள். மேலும் ஒருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பாக்கியமும் உங்கள் மீது உண்டாகட்டும்!) என்றார். அதற்கு, நபி صلى الله عليه وسلم அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் அமர்ந்தார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் முப்பது (நன்மைகள்) என்றார்கள்"" என இம்ரான் இப்னு ஹுஸைன் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: திர்மிதீ, நஸயி மற்றும் அபூதாூது


இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது என்று ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டதற்கு, ''பசித்தோருக்கும், ஏழைகளுக்கும் உணவு வழங்குவது. இன்னும் உனக்கு அறிமுகமான, அறிமுகமல்லாத அனைவருக்கும் 'ஸலாம் சொல்வதுமாகும்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம் மற்றும் அபூதாூத்

''(இருவர் சந்திக்கும்போது) யார் ஸலாமை முதலில் சொல்கிறாரோ, அவர் மக்களிலேயே அல்லாஹ்விடம் மிகுந்த சிறப்பிற்குரியவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்." நூல்: அபூதாூது, அஹ்மத்

''இரண்டு பேர் சந்திக்கும்போது யார் முதலில் ஸலாம் கூறுவார் என, நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ''அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக மேன்மைக்குரியவர் முதலில் ஸலாம் கூறுவார்" என்று அவர்கள் பதிலளித்தார்கள்" என அபூ உமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: திர்மிதீ)


''வாகனத்தில் செல்பவர், நடந்து வருபவருக்கு ஸலாம் கூறுவார். நடந்து வருபவர், அமர்ந்திருப்பவருக்கு ஸலாம் கூறுவார். சிறுகூட்டம் பெருங்கூட்டத்திற்கு ஸலாம் கூறும்" என அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூத் மற்றும் திர்மிதீ புகாரியின் மற்றோர் அறிவிப்பில் சிறியவர்கள், பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவர் என்று உள்ளது.


''இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் 'ஸலாம்" (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூ அல் அன்ஸாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூத்

''இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றோர் இறைநம்பிக்கையாளரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து (பேசாமல்) இருப்பது ஆகுமானதல்ல. மூன்று நாட்கள் இப்படிக் கழிந்துவிட்டால் (ஒருவர் மற்றொருவரைச்) சந்தித்து 'ஸலாம்" கூறட்டும். (மற்றொருவர்) பதில் 'ஸலாம்" கூறிவிட்டால், இருவருமே சன்மானத்தில் கூட்டாகி விடுகின்றனர். பதில் 'ஸலாம்" கூறாவிட்டால் (பதில் கூறாதவர்) பாவத்திற்கே திரும்பிவிடுகிறார். ஆரம்பமாக 'ஸலாம்" கூறியவர் (இறைவனுடைய) வெறுப்பை விட்டும் நீங்கி விடுகிறார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்"" என அபூஹ{ரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: அபூதாூத்


''நபி صلى الله عليه وسلم அவர்களின் தோழர்களிடம் (இருவர் சந்தித்துக் கொள்ளும்போது) (முஸாஃபஹா எனும்) கை கொடுத்தல் இருந்ததா என்று நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ''ஆம்"" என்றார்கள்"" என கதாதா(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, திர்மிதி

உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே என்று என்னிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என அபூதர்رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: முஸ்லிம்

Saturday, January 24, 2009

சின்ன சின்ன அன்பில்தானே...........

நான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் "மெனக்கட்டு" போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபாடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possasivenessலிருந்து ஆரம்பித்ததாக இருக்கும்.


இவர்களின் குறை பெரும்பாலும் "பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா' ...இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , ச்மயங்களில் "நானோ" டெக்னாலஜி பற்றி பேசக்கற்றுகொண்டோம், ஆனால் நமது சின்னவயதில் நம்மை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி வாசலில் நின்ற இதுபோன்ற எத்தனையோ உயிர்களின் உல்லத்தை புரிந்து கொள்ளத்தவறிவிட்டோம்.

நம் ஊரில் எல்லோருக்கும் சம்பாதிப்பதின் முக்கியத்துவம் தெரிந்து விட்டது. இந்த நவீன காலத்தின் தாக்கம் [ தாக்கம் தவறல்ல] சில சமயங்களில் நம் கூட இருந்த முதியவ்ர்களை [அப்பா..உம்மும்மா/ராத்தம்மா, வாப்புச்சி உறவுகள்....அல்லது உங்கள் தாயாக கூட இருக்கலாம்] நம்மையும் அறியாமல் ஒதுக்கி விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது.

இந்த முதியர்களின் புழக்கத்தை அதிகம் போனால் ஒரு 40X50 ல் சுருக்கிவிட்டோம்

பெரும்பாலான பெரியவர்களை நாம் கல்யாணம்/காது குத்து / சுன்னத் மஜ்லீஸ்களில் " வாழ்ந்த மனுசிலெ..அவ்வொ கையாலெ மாலெ போடச்சொல்லுங்க" என்ற வசனத்துக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். அல்லது நோயில் விழுந்தால் கஞ்சி / மாத்திரை கொடுக்கும்போது
மட்டும் விழிக்கிறோம்.

வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களுக்கு இதுவொரு வேண்டுகோள்..முடித்தால் இவர்களுக்கு நோய்க்கும் / பிணிக்கும் பார்க்கும் அமபாசிடர்களை அழைக்கும்போது கொஞ்சம் காற்றோற்றமான பகுதியில் கொஞ்சம் நிப்பாற்றி உலகத்தின் விசாலம் காட்டுங்கள்..முடிந்தால் உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் அவர்களின் கேட்டராக்ட் விழுந்த கண்களும், ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும் எப்படி ஏணியாய் இருந்தது என்று அவர்கள் காது பட சொல்லுங்கள்.

அந்த முதியவர்களை அழைத்துக்கொண்டு குளுமணாலிக்கும்,கொடைக்கானலுக்கும் அழைத்துபோக சொல்லவில்லை. அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்து கடற்கரை, கொஞ்சம் தூரப்போனால் ராஜாமடத்துபாலம் [ அங்கு உட்கார்ந்து அந்தி சாயும் பொழுதை ரசித்துப்பாருங்கள்] ...இப்படி அழைத்துசெல்ல பேரன் இருக்கிறான் / மகன் இருக்கிறான் .என்ற சூழ்நிலை இருந்தாலே இந்த வயதானவர்களின் கடைசிகாலம் கொஞசமாவ்து சந்தோசம் கலந்து இருக்கும்.

"அப்படி ஒன்றும் ஒதுக்கவில்லை அவர்களை" என்ங்கிறீர்களா?..வாழ்துக்கள்...எப்படி
இப்படி வேறுபட்டு அனுசரனையாய் இருக்கிறீர்கள் என்று எழுதுஙகள். வரும் சந்ததியினருக்கு ஒரு reference கிடைக்கும்.

வீட்டுப்பிரச்சினைகளில் இவர்கள் சம்பந்த பட்டிருந்தால் ..தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.சமயங்களில் காலம் மிகத்தாமதமாக் சில விசயங்களை உணர்த்தும்..அது வரை அந்த முதியவர்களும் உயிருடன் இருக்க வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை சந்தோசமாக வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.


சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது.

by zakir hussain
adiraipost

இஸ்லாம் பார்வையில் " வாக்குவாதம் "

தேவையற்ற விஷயத்தில் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்குச் சுவனபதியைச் சூழ ஓர் இல்லம் கட்டப்படும். அன்றி உண்மையின் மீதிருந்தும் எவர் தர்க்கம் செய்வதைக் கைவிட்டு விடுகிறாரோ அவருக்கு சுவனபதியின் மத்தியில் ஓர் இல்லம் எழுப்பப்படும். மேலும் எவர் நற்பண்புகள் உள்ளவராக இருக்கின்றாரோ அவருக்குச் சுவனபதியின் மேலே ஓர் இல்லம் நிர்மாணிக்ப்படும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமாرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மதீ

அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: அபூதாவூத்

நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதர்களில் மிகவும் கோபத்திற்குள்ளாகிறவர்கள் அதிகமாகக் தர்க்கம் புரிபவரேயாவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஆயிஷாرَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

நாங்கள் விதி பற்றி தர்க்கம் செய்து கொண்டிருக்கும்பொழுது நபி صلى الله عليه وسلم அவர்கள் வந்தார்கள். (இதனைக் கண்ட) அவர்கள் மாதுளம் சுளைகளை அவர்களுடைய முகத்தில் பதித்து விட்டதைப் போன்று அவர்களுடைய முகம் சிவப்பாகும் வரை சினமுற்றனர். அப்பொழுது அவர்கள் 'இது கொண்டா கட்டளையிடப்பட்டுள்ளீர்கள்? இதற்குத்தானா நான் உங்களிடம் தூதுவனாக அனுப்பப்பட்டேன்? நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தோர் தங்களின் மார்க்க விஷயத்தில் அதிகமாக தர்க்கம் செய்ததன் காரணமாகவும், தங்களின் நபிமார்களுடன் மாறுபட்டதன் காரணமாகவும் தான் அழிந்தனர் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: திர்மிதீ

ஒரு தடவை நபி صلى الله عليه وسلم அவர்கள் தங்களின் தோழர்களுடன் அமர்ந்திருந்தனர். (அப்பொழுது) திடீரென ஒருவன் வந்து அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் மீது வசைமாரி பொழிந்து அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவர்களோ ஏதும் கூறாமல் வாய் மூடி இருந்தனர். பின்னர் அவன் மறு முறையும் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினான். ஏனினும் அவர்கள் ஏதும் கூறவில்லை. மீண்டும் அவன் அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய பொழுது அவனுக்கு பதில் கூறினர். உடனே நபி صلى الله عليه وسلم அவர்கள் எழுந்து விட்டனர். அப்பொழுது அபூபக்கர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், தாங்கள் என்மீது சினமுற்று விட்டீர்களா? என்று வினவினர். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், அல்ல; எனினும் விண்ணிலிருந்து ஓர் வானவர் இறங்கி வந்து தங்களைப்பற்றி கூறிய வசைகளையெல்லாம் பொய்யாக்கி கொண்டிருந்தார். ஆனால் தாங்கள் பதில் கூறியதும் அந்த வானவர் சென்று விட்டார். எனினும் ஷைத்தான் (அவருடைய) இடத்தில் அமர்ந்து கொண்டான்; ஆதலின் ஷைத்தான் அங்கு அமர்ந்தபின் நான் அமர்ந்திருத்தல் தகாது' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுல் முஸையப் رَضِيَ اللَّهُ عَنْهُ அதாரம்: அபூதாவூத்

Friday, January 23, 2009

இஸ்லாம் பார்வையில் "கோபம்"

அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) (புகாரி)


அறிவிப்பாளர் : அத்தியா அஸ் ஸஅதி رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். ”(அபூதாவூத்)


அறிவிப்பாளர் : அபூதர் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும். ” (மிஷ்காத்)



அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்? ”இறைவன் கூறினான்“ எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அனஸ் رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது. ” (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْ
அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் ” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர் ” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்! ”என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்! ” என்றே பதில் தந்தார்கள். (புகாரி)

Thursday, January 22, 2009

இஸ்லாம் பார்வையில் "தற்பெருமை"

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்

அண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)

அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ” (அபூதாவூத்)


அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)

நான் அண்ணல் நபி அவர்கள் கூறக் கேட்டேன்: “இறை நம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு “அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் ”என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)


அறிவிப்பாளர்: இப்னு உமர்

ண்ணல் நபி அவர்கள் அருளினார்கள்: “எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். ( கருணைப் பார்வை பார்க்கமாட்டான் )”

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: “நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா? ” அதற்கு அண்ணலார், “இல்லை, நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். என்று பதிலளித்தார்கள். (புகாரி)


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்

அண்ணல் நபி அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.” (புகாரி)

Wednesday, January 21, 2009

தொழுகையின் முக்கியத்துவம்!!!

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.

அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். “நம் கதி என்னவாகுமோ?”என நினைத்து அண்ணல் நபி அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார். செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.

“பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114) இதைக் கேட்ட அந்த மனிதர் “எனக்கு மட்டும்தானா?” என வினவினார். “இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி அவர்கள். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)

அண்ணல் நபி நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)


அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நபிகள் நாயகம் அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: “எவர் தம் தொழுகைகளைச் சாpயான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஔpயாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது. (முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான்)

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நபி அவர்கள் நவின்றார்கள்: “இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணை வைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.” (முஸ்லிம்)

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நபி அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, “நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,

“நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

உமாடிபின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)

நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)

நான் நபி அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் “வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!” (முஸ்னத் அஹமத்)

Tuesday, January 20, 2009

அமெரிக்க புதிய அதிபர் பராக் ஹுசைன் ஒபாமாவுக்கு வாழ்த்துக்கள்!!!

அமெரிக்காவின் புதிய அதிபராக பராக் ஹுசைன் ஒபாமா பதவி ஏற்றுள்ளார்.முதல் கறுப்பின அதிபர் என்பதால் உலகமே வியக்கிறது.இனி வரும் காலங்களில் அவருடைய செயற்பாடுகளை வைத்தே அவரின் ஆட்சி பற்றி கணிக்கமுடியும் என்ற போதிலும்,அவரின் சில நேர்மையான வாதங்கள்,எல்லா மத மக்களின்,எல்லா நாடுகளின் நலன்களுக்கும் குந்தகம் ஏற்படாவண்ணம் செயல்பட உறுதி பூண்டுள்ளமை விளங்குகிறது.

இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒரு கறுப்பின சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் ஒரு நாட்டின் அதிபர் ஆவதற்கு இவ்வளவு எதிர்பார்ப்பும்,ஆச்சரியமும்,அதிசயமும் கலந்து நோக்கப்படுகிறது.அதே போன்று தென் ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா அதிபர் ஆனபோதும் இவ்வாறே பேசப்பட்டது.இவைகள் நடப்பது இந்த 21ம் நூற்றாண்டில் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால்,சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு,கறுப்பின மக்களை மிக மிக கேவலமாகவும்,அடிமைகளாகவும் நடத்தி வந்த அந்த தருணத்தில்தான்,பிலால் என்ற ஒரு கருப்பரை,அடிமையாக இருந்தவரை,அடிமை தளையிலிருந்து மீட்டு,இஸ்லாத்தின் மிக உயர்ந்த பதவியாக விளங்கும்(மு அத்தின்)தொழுகைக்கு அழைக்கும் ஒரு மிக உயர்ந்த பணியை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அளித்தார்கள்.காட்டு மிராண்டிகள் நிறைந்த அக்காலத்தில் இப்படியானதொரு மாபெரும் புரட்சி நடத்திக்காட்டினார்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.இந்த வகையிலும் அது ஒபாமாவானாலும்,நெல்சன் மண்டேலாவானாலும் சரி,நபிகள் நாயகம் அவர்களே முன்மாதிரி.

அந்த மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் இறுதி உரையாக ஆற்றிய அவ்வுரை எல்லா நாட்டு தலைவர்கள்,எல்லா தரப்பு மக்கள் அனைவருக்கும்,எல்லா பெண்கள் சமுதாயத்துக்கும் ஒரு சிறந்த,சம உரிமை பெற்றுத்தரும் அரு மருந்து என்பதில் ஐயமில்லை.

உலகம் போற்றும் அவ்வுரை இதோ..................

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மது அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல் ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து "மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது "கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, "பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

நபி அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது.

கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

தொடக்க துதி மொழிகள்
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' ஸுனன் இப்னு மாஜா 1892,1893)

பிரிவின் முன்னறிவிப்பு
ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலமைக்குக் கீழ்ப்படிவீர்!
ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

மறுமைக்கு அஞ்சுவீர்!
ஓ... குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)

அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.

வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன். அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ... மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

பெண்களை மதிப்பீர்!
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செயவதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, ஃபிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒ... மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

பிறகு நபி அவர்கள் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹ்ுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

Monday, January 19, 2009

இஸ்லாம் பார்வையில் "மருத்துவம்"

மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி கூறினார்கள். அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஷரீக் (ரலி)நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, ஹாகிம்

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூற்கள்: முஸ்லிம், பைஹகீ

அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்! ஆனால், ஹராம் (தடை செய்யப்ட்ட பொருளின்) மூலம் மருந்துவம் செய்யாதீர்கள்! என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்்: அபூதாவூத்



அல்லாஹ் எந்த நோய்க்கும் அதற்குரிய மருந்தை உருவாக்காமல் இருக்கவில்லை என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, இப்னுமாஜா, பைஹகீ

நபி (ஸல்) அவர்கள் மது தயார் செய்வதைத் தடுக்கவோ அல்லது வெறுக்கவோ செய்தார்கள். அப்போது இதை மருந்துக்காக தயார் செய்கிறோம் என்று கூறியபோது இது மருந்தல்ல! நோயாகும் என்று நபி அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: தாரிக் (ரலி) நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

Sunday, January 18, 2009

பள்ளிப் பருவ செக்ஸ் அவலங்கள்,ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்!

பள்ளியறை' என்ற சொல்லே தமிழில் கொஞ்சம் விவகாரமான சொல்தான்! அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். காதலர்கள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் குறிக்கும். இப்படி இரண்டு பொருள் தரும் பள்ளியறை என்ற வார்த்தையை எந்த மகானுபாவன் எந்த நேரத்தில் உருவாக்கினாரோ தெரியவில்லை? அந்த இரண்டு அர்த்தங்களுமே ஒன்றுதான் என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.

ஐ.டி. எனப்படும் ஹைடெக் மையங்கள்தான் இதுநாள் வரை முறை தவறிய பாலுறவுகளுக்கு மொத்தக் குத்தகைக்கான இடம் என்று நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ அந்த எண்ணத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏன் போக வேண்டும்? நம்மூர்ப் பள்ளிகளில் கூட பாலியல் உறவுகள், அதிலும் பிஞ்சில் பழுத்த பாலுறவுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ``ஒரே ஓர் அரசுப்பள்ளியில் மட்டும் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் 32 மாணவர்கள் மன்மதக் கலையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஆளுக்கு இரண்டு பெண்கள் வீதம் அவர்கள் செக்ஸ் உறவு வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்களில் மாணவிகளும் அடக்கம்'' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார் கோவையைச் சேர்ந்த மனோதத்துவ மருத்துவர் மொஹைய்தீன்.

கோவையில் `ஞானவாணி' என்ற எஃப்.எம். வானொலியில் `மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், அதைத் தீர்க்கும் முறைகள்' பற்றி கடந்த இரண்டாண்டுகளாகப் பேசி வருகிறார் மருத்துவர் மொஹைய்தீன். உளவியல் தொடர்பான நேயர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அதில் அவர் பதிலளிப்பார். அதுமட்டுமல்ல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, ஊட்டி, கூடலூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவச மனோதத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.

மருத்துவர் மொஹைய்தீனை நாம் சந்தித்துப் பேசினோம். பள்ளிகள் தற்போது பாலியல் கூடங்களாக மாறிவரும் பிரச்னை, மாணவர்கள் மதன், ரதியாக மாறும் பிரச்னைக்குள் போகும் முன்னால் அதற்கு முத்தாய்ப்பாக சில விவரங்களைச் சொன்னார் அவர்.

```இந்தியா முன்னேற வேண்டுமானால் வருங்கால இளைஞர்களான மாணவ மணிகளின் மன சலனங்கள் அகற்றப்பட வேண்டும்' என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார். இது என்னை மிகவும் ஈர்த்த கருத்து. தற்போது பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் மனரீதியாக பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

சில மாணவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் எதையோ பறிகொடுத்ததைப் போல இருப்பார்கள். நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களால் படிக்க முடியாது. அந்த வேளையில் அவர்களுக்குத் தகுந்த மனப்பயிற்சி அவசியம். இல்லாவிட்டால் அதுவே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடும்.

இப்படியான மாணவ, மாணவிகளை `சைக்காலஜிஸ்ட்' எனப்படும் மனோதத்துவ மருத்துவர்களிடம் கூட்டிப்போக வேண்டுமே தவிர, `சைக்கியாட்ரிஸ்ட்' எனப்படும் மனநோய் மருத்துவர்களிடம் கூட்டிப்போய் சிகிச்சை தரக் கூடாது. அவர்கள் மயக்க மருந்து தந்து தூங்க வைத்து, ஒருகட்டத்தில் அந்த மாணவர்களை மன நோயாளிகளாகவே மாற்றி விடுவார்கள். ஆனால் நாங்களோ, அவர்களுக்கு ஒரு சில பயிற்சிகளைக் கொடுத்து எங்கள் வசமாக்கி, அவர்களின் ஆழ்மன எண்ணங்களை வெளிப்பட வைத்து, `இந்த சமூக முறையில் இதுதான் சாத்தியம், வேலி தாண்டினால் வாழ்க்கை சிக்கலாகவும், கேலிக்குரியதாகவும் ஆகி விடும்' என்று பேசி அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டு வருகிறோம்.

ஒருமுறை ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனை என்னிடம் கூட்டி வந்தார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் வாங்கும் அவன் அண்மைக்காலமாக ஐந்து, பத்து மார்க் வாங்குகிறான் என்பதுதான் அவனிடம் இருந்த பிரச்னை. இங்கே வருவதற்கு முன் அவனை மனநோய் மருத்துவர் ஒருவரிடம் கூட்டிப்போய் இருக்கிறார்கள். அவர் தூக்க மாத்திரை தந்ததில் அந்த மாணவன் வகுப்பறையில் கூட அசந்து தூங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அவனை என்னிடத்தில் கூட்டி வந்தபோது அவனுக்கு மனரீதியாக என்ன பிரச்னை என்று நான் ஆராய்ந்தேன். அது டீன்ஏஜ் பருவத்தில் எல்லாருக்கும் வரும் பிரச்னைதான்.

அந்த மாணவனுக்கு அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி மீது ஒரு தலையாய்க் காதல். அதை அவளிடம் சொல்ல முடியாமல் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் அவன் இருந்திருக்கிறான். அதனாலேயே படிப்பில் கோட்டை விடவும் ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் நான், `இதற்கான வயது இதுவல்ல, அந்தப் பெண் உன்னைவிட படிப்பில் சூரப்புலியாக இருக்கிறாள். நீ படிப்பில் கவனம் செலுத்தி தொடர்ந்து அதிக மதிப்பெண் வாங்கியிருந்தால் அவள் அல்லவா உன்னைக் கவனித்திருப்பாள்? தவிர, அவளைவிட சிறப்பான, அழகான பெண் உனக்கு அமைவாள். அதை நீ ஏன் யோசிக்கவில்லை?' என்று பேசி மனரீதியான சிகிச்சை கொடுத்தேன். அவன் இப்போது படிப்பில் முன்பு போலவே அதிக மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்து விட்டான்.

ஆக, மூளை என்பது ஒரு கம்ப்யூட்டரில் வெளிப்படையாகத் தெரியும் ஹார்டுவேரைப் போன்றது. அதற்குள் மெமரி செய்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை நாம் சாஃப்ட்வேர் என்கிறோம். அந்த சாஃப்ட்வேருக்கு சிகிச்சை தருவதற்குப் பதில் ஹார்டுவேருக்கு சிகிச்சை தருவது சரியில்லை அல்லவா? அதைப்போலத்தான் சிலர் மனோதத்துவ மருத்துவர்களான எங்களிடம் வந்து பெற வேண்டிய சிகிச்சைக்குப் பதில், மனநோய் மருத்துவர்களிடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். மனநோய் மருத்துவர்களும் மனநல மருத்துவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வதால் சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படும் எங்களிடம் செல்ல வேண்டிய சிலர் திசைமாறி அவர்களிடம் போய் விடுகிறார்கள்.

இப்போது விவரம் தெரிந்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் அதிகம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்தான். அவர்களை `கோஹினிட்டிவ் தெரபி' எனப்படும் விழிப்புணர்வு சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி வருகிறேன். பொதுவாக தம்பதிகளுக்கிடையேதான் பாலுறவு தொடர்பான மனப்பிரச்னைகள் வரும். அந்தப் பிரச்னை இப்போது எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் மாணவ மாணவிகளிடம் வருவதுதான் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளாக மதுரை, பெங்களூரு, அருப்புக்கோட்டை, திருச்சி, உடுமலை, கோவை, பாலக்காடு உள்ளிட்ட நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்காக நான் மனோதத்துவ சிகிச்சை முகாம்களை நடத்தியிருக்கிறேன். பள்ளி மாணவர்களுக்குத் தரும் பயிற்சியைப் பொறுத்தவரை பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இருக்கின்றன'' என்றவர், சற்று நிறுத்தி விட்டு தொடர்ந்தார்.

``இந்த மனோதத்துவ முகாம்களின் மூலம் மாணவர்களில் வெறும் ஐந்து சதவிகிதம் பேர்தான் எந்தவித பாலியல்ரீதியான மனஉளைச்சலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிய வந்தது. மற்ற மாணவர்களோ பெற்றோரின் பாசத்துக்கு ஏங்குபவர்களாகவும், சக மாணவியின் அரவணைப்புக்கு ஏங்குபவர்களாகவும், பாலியல்ரீதியாக ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் படிப்பில் நாட்டமில்லாமல் இருப்பவர்கள் எனவும் தெரிய வந்தது. நன்றாகப் படிக்கிற நிறைய மாணவர்களுக்கு ஏழாவது, எட்டாவது வகுப்பை எட்டும்போதுதான் பாலியல் பிரச்னை பாடாய்ப்படுத்துகிறது. என்னிடம் வந்த ஒரு மாணவன் `மூன்றாம் வகுப்பிலிருந்தே சுயஇன்பப் பழக்கத்திற்கு தான் அடிமையாக இருப்பதாகச் சொன்னான். `ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்டபோது, `அப்படிச் செய்தால்தான் அது பெரிசாகும் என்று நண்பன் சொன்னதாகச் சொன்னான். அவனை ஒருமாதம் வரை மனப்பயிற்சிக்கு உட்படுத்திய நான்," அப்படிச் செய்வதால் உன் சக்தி வெளியேறுகிறது. அதனால் படிப்பில் கவனம் குறைகிறது. நாளை உனக்குத் திருமணம் ஆகும்போது உன்னிடம் தேவைப்படும் சக்தி இருக்காது. அதனால் இந்தப் பழக்கத்தை நீ கைவிட வேண்டும்' என்று பேசிப் புரிய வைத்தேன். இப்போது அவன் நார்மலாகி நல்ல மதிப்பெண் எடுத்து வருகிறான்.

கோவை நகரின் நடுப்பகுதியில் குடிசைகள் நிறைந்த பகுதியில் உள்ள ஓர் அரசுப்பள்ளியில் தொண்ணூறு சதவிகித மாணவர்கள் மது, பீடி, சிகரெட், கஞ்சா, ஒயிட்னர் திரவப் போதை போன்றவற்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களது பெற்றோர்களும் அதைக் கண்டுகொள்வதில்லை. சில நல்ல மாணவர்களும் இவர்களைப் பார்த்து இந்த மது, பீடி, சிகரெட், கஞ்சாவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அந்தப் பள்ளியில்தான் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயமும் நடந்திருக்கிறது'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார்.

``இங்கே பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் என்னிடம் உளவியல் சிகிச்சைக்காக வந்தான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு லேத் பட்டறை இருந்திருக்கிறது. அதில் ஒரு பெண் தினம்தினம் இவன் பள்ளிக்குச் சென்றுவரும்போது தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசி கேலி செய்து வந்திருக்கிறாள். ஒருமுறை அவளது வீட்டில் ஆளில்லாத சமயம் இவனை வலுக்கட்டாயமாக கூட்டிப்போய் பாலியல் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அதன்பின் அவளது தோழிக்கும் இந்தத் தகவல் தெரிந்து, அவளும் இவனை செக்ஸ் பசிக்கு உட்படுத்தி யிருக்கிறாள். `ஒரு வருடமாக நடந்து வரும் இந்தத் தொல்லையை என்னால் தவிர்க்க முடியவில்லை' என்று அவன் அழுதான். அவனிடம் நான், `உன்னிடம் எந்தத் தவறும் இல்லை. அந்தப் பெண்களிடம்தான் தவறு. இனி அந்த வழியில் போகாதே. அப்படியே அந்தப் பெண்கள் அழைத்தாலும் அம்மா, அப்பாவைக் கூட்டி வந்து விடுவேன் என்று மிரட்டு. படிப்பில் மட்டும் கவனம் செலுத்து' என்று அனுப்பி வைத்தேன்.

என்ன கொடுமை? அடுத்த நாள் பார்த்தால், அவனைப் போலவே முப்பத்திரண்டு மாணவர்கள் என்னிடம் வந்து அவர்களுக்கும் தலா இரண்டு, மூன்று பெண்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி அழ ஆரம்பித்தார்கள். நான் அதிர்ந்து போனேன். இவர்களுக்கு இப்படி ஒரு பழக்கம் ஏற்பட அந்த முதல்மாணவன் சொன்ன கதைதான் காரணமாக இருந்திருக்கிறது. இப்படி பள்ளி மாணவர்களை பாலியல் வலைக்குள் இழுத்தவர்களில் விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவார்கள். தவிர, இந்த மாணவர்களின் பெண்கள் பட்டியலில் பல மாணவிகளும் இருந்ததுதான் கொடுமை. அந்த மாணவர்களுக்கெல்லாம் நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறி நிறையப் பேச வேண்டியிருந்தது. அவர்களில் பலர் இன்னும் மனோதத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அந்த மாணவிகள் யார் யார் என்று தெரிய வந்தபோது பெற்றோர்களும் சரி, ஆசிரியைகளும் சரி, `சொல்லுடி, யாரடி அவன்?' என்று கேட்டு மாணவர்கள் முன் அந்த மாணவிகளை அடித்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தொடையில் காயம் என்றால் அதை மருந்து போட்டுக் குணமாக்குவதுதான் மருத்துவரின் வேலை. அதை விட்டு அந்தக் காயத்தை வெளியே சொல்லி, நோயாளியின் மனதை நோய்க்கு உள்ளாக்குவது சரியல்ல. இது தொடர்பாக சில ஆசிரியைகளுக்கும் நான் மனப்பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது'' என்றவர், இன்னும் சில பகீர் சம்பவங்களை எடுத்துரைத்தார்.

``ஒரு பன்னிரண்டு வயது மாணவியை, `மார்பு எடுப்பாகத் தெரிகிற மாதிரி துணி போடாதே' என்று அவளது அம்மா பாடாய்ப்படுத்தி வந்திருக்கிறார். மார்பு பெரிதாவது ஒரு குற்றம் என்பது போல புரிந்து கொண்ட அந்த அப்பாவிப் பெண், மார்பகத்தை தினமும் ஒரு கயிறால் இறுக்கிக் கட்டி வந்திருக்கிறாள். விளைவு? காலப்போக்கில் மார்பகம் இரண்டாகப் பிளந்து நான்கு மார்பகங்கள் போல ஆகிவிட்டது. அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்து, முதலிரவின்போது அதைப்பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்து விட்டார். அவளது மார்பகத்தில் ஏதோ நோய் இருந்து அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக கணவன் சந்தேகித்து, பிறகு அந்தத் திருமணம் விவாகரத்து வரை போய்விட்டது. அப்பா அம்மாவும், `எங்களுக்குத் தெரியாமல் நீ ஏதோ செய்து விட்டாய்?' என்று குற்றம்சாட்ட, அந்தப் பெண் கிட்டத்தட்ட மனநோயாளி போல ஆகி விட்டாள்.

அந்தப் பெண்ணை மனநோய் மருத்துவரிடம் கூட்டிப்போய், அவளை அவர் உண்டு இல்லை என்று ஆக்கிய பின் என்னிடத்தில் கூட்டி வந்தார்கள். நான் பேசி, மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்ய வைத்து வேறொரு திருமணம் செய்யச் செய்தேன். இன்று அந்தப் பெண் சௌக்கியமாக இருக்கிறார்'' என்றார் மொஹைய்தீன்.

இதேபோல ஒர்க்ஷாப் வைத்திருக்கும் பையன் ஒருவன் ஒரு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறான். ருசிகண்ட பூனையாக மாறிய அந்த மாணவி இன்னும் இரண்டு மாணவிகளை அந்தப் பையனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள். இரு மாணவிகள் வாசலில் காவல் காக்க, ஒரு மாணவி உள்ளே அந்தப் பையனோடு சல்லாபிப்பது வழக்கமாகி இருக்கிறது. ஆறுமாத காலமாக நடந்த இந்த காமக்களியாட்டத்திற்குப் பின் அந்த மாணவிகளில் ஒருத்தி மருத்துவர் மொஹைய்தீனிடம் குற்றஉணர்ச்சி காரணமாக இதைச் சொல்லியிருக்கிறாள். அதன்பிறகு மற்ற இரண்டு மாணவிகளையும் அழைத்து அவர்களுக்கும் உளரீதியான பயிற்சி தந்தாராம் இவர்.

ஒன்பதாவது படிக்கும் மாணவி ஒருவருக்கு மாதவிடாய் நின்றுபோய் வயிறு வீங்கியிருப்பதாக அவளது தாய் என்னிடம் அழைத்து வந்தார். அந்தப் மாணவியிடம் பேசியபோது, `மயக்க மருந்து கொடுத்து மாணவன் ஒருவன் அவளது கற்பைக் கவர்ந்து கர்ப்பமாக்கிய விஷயம்' அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவளுக்கு முறையான சிகிச்சை அளித்து படிப்பில்நாட்டம் வரச் செய்தாராம் இவர்.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கம்ப்யூட்டரில் பலான சி.டி.க்களைப் பதிவு செய்து தன் சக மாணவர்களுக்கு தலா இருபது ரூபாய், முப்பது ரூபாய்க்கு விற்றுவந்த சம்பவத்தையும், அந்த சி.டி.க்களை பார்த்த மாணவர்கள் பிஞ்சிலேயே பழுத்து பல மாணவிகளுடன் மன்மதலீலை நடத்திய கொடுமைகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் மொஹைய்தீன்.

``இந்தச் சீரழிவுக் கலாசாரத்துக்கு வெறும் மீடியா, சினிமா மட்டுமே காரணமல்ல. பெற்றோர்களும் கூட காரணம்தான். சில குடும்பத் தலைவர்கள், `பிள்ளை தூங்கி விட்டான்' என்று நினைத்து செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். அதை எக்குத்தப்பாகப் பார்த்து விடும் குழந்தைகள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை வாகாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். `நம் நாட்டைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பிறகுதான் செக்ஸ் என்பது உகந்ததாக இருக்கும்' என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த அவலம் அகலும். இல்லாவிடில் இது அதிகமாகி சமுதாயத்தையே பாதித்து விடும். இதுதான் சைக்காலஜிஸ்ட்களான நாங்கள் சொல்லும் செய்தி'' என்று ஒரு மெசேஜோடு முடித்துக் கொண்டார் மொஹைய்தீன்.

reporter

Saturday, January 17, 2009

இஸ்லாம் பார்வையில் "நட்பு"

எவனுடைய கையில் என் உயி இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரையில் சுவனபதி செல்ல இயலாது. உங்களில் ஒருவர் மற்றவரை நேசிக்காதவரை நம்பிக்கையாளராகவும் இயலாது. எனவே நான் உங்களுக்கு கூறுகிறேன். அதனை நீங்கள் மேற் கொண்டால் ஒருவர் மற்றவருக்கு நீங்கள் நேசமுள்ளவராக ஆகிவிடுவீர்கள். அதாவது, உங்களுக்கிடையில் ஸலாம் கூறுவதை பழக்கத்தில் கொண்டுவாருங்கள் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

எனக்காக நட்புக்கொண்டவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு என்னுடைய நிழலில் இடமளிப்பேன். இன்று என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழல் கிடையாது என்று மறுமை நாளில் இறைவன் கூறுவான் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்: முஸ்லிம் முஅத்தா

எனக்காக நட்பு கொள்பவர்கள் மீதும் எனக்காக (மார்க்க உரையாடல்) அமர்பவர்கள் மீதும் எனக்காக ஒருவர் மற்றவரைச் சந்திக்கச் செல்பவர்கள் மீதும் எனக்காககச் செலவழிப்பவர்கள் மீதும் என் அன்பு கடமையாகிவிட்டது. என்று இறைவன் கூறியதாக நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூ இத்ரீஸில் கவ்லான் முஆது (ரலி) முலம் அறிந்து நூல்:முஅத்தா

அல்லாஹ்வுக்காக நட்புக்கொள்வதும் அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளரின்) மேலான செயல்களாகும் என நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அபூசர் (ரலி) நூல்: அபூதாவூத்

அல்லாஹ்வுடைய அடியார்களில் சிலர் நபிமார்களும் அல்ல, தியாகிகளூம் அல்ல. மறுமை நாளில் இறைவனிடம் அவர்களுக்குள்ள பதவிகளைக் கண்டு நபிமார்களும், தியாகிகளும் பொறாமைக் கொள்வர். என்று நபி கூறினர். (அப்பொழுது) அவர்கள் யார்? என்று எங்களுக்கு அறிவியுங்கள் என்று தோழர்கள் கேட்டனர். (அதற்கு) நபி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தங்களிடையே நட்புக்கொள்வர். அவர்களுக்கிடையில் உறவின் முறையும் இருக்காது. பணத்திற்காகவும் அவர்கள் நட்புக் கொள்ள மாட்டார்கள். இறைவன்மீது ஆணையாக அவர்களின் முகம் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அவர்கள் இறை வழியில் செல்வார்கள். மக்கள் அச்சமுறும் பொழுதும், துக்கிக்கும் பொழுதும் அவர்கள் அச்சமுறவும் மாட்டார்கள். துக்கிக்கவும் மாட்டார்கள். ".(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்." என்ற 10:62 வது வசனத்தை ஓதினர். அறிவிப்பவர்: உமர்(ரலி) நூல்: அபூதாவூத்



உங்களில் ஒருவர் தம் சகோதரர் மீது அன்பு கொண்டால், தாம் அவர்மீது அன்பு கொண்டிருப்பதாக அவரிடம் அறிவித்து விடவும். என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஃதீகர்பு (ரலி) நூல்: அபூதாவூத், திர்மிதீ

Friday, January 16, 2009

இஸ்லாம் பார்வையில் "கடன்"

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

"இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். நூல்: புகாரி

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி அவர்களிடம் வந்து, 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டதற்கு நபி அவர்கள், 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்" என்றார்கள். நூல்: புகாரி

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், 'அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி அவர்கள், 'அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்" என்று கூறினார்கள். நூல்: புகாரி



ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), 'நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்" என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது.
என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

Thursday, January 15, 2009

இஸ்லாம் பார்வையில் "மன திருப்தி"

எவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ (ரலி) நூல்: திர்மிதி

எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது (ரலி) நூல்:திர்மிதி

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருப்பின் நிச்சயமாக அவன் உங்களுக்கு உணவளிப்பான், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று. அவை காலையில் வெறும் வயிற்றோடு சென்று மாலையில் வயிறு நிரம்ப உண்டு திரும்புகின்றன என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: உமர் (ரலி) திர்மிதி

செல்வம் என்பது உலகப் பொருள்களின் அதிகரிப்பில் இல்லை. எனினும் செல்வம் என்பது மனத்தின் செல்வமேயாகும். போதுமென்ற மனமேயாகும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: நூல்கள்: புகாரி, முஸ்லிம்

உங்களில் எவரேனும் தம்மைவிட அதிகப் பொருளுடையவரையும் தோற்றத்தில் தம்மைவிட மேலாக உள்ளவரையும் காண நேரிட்டால் அப்பொழுது அவர் தம்மைவிட இவ்விஷயங்களில் கீழாக உள்ளவரை நோக்கவும், ஏனெனில் இவ்விதம் செய்வது நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை, அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை குறைவாகக் கருதாமலிருக்க மிகவும் உதவியாயிருக்கும் என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

Wednesday, January 14, 2009

இஸ்லாம் பார்வையில் "விதி"

வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி

மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத்)

அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.

கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி

அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் கேட்டார்கள்.

அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி


பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதி

இதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

Monday, January 12, 2009

கற்சிலைகளை வணங்குவது சைத்தானின் அருவருப்பான செயல்களே!!!

சலீம் நானா அன்றைய தினசரி ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தார்.ஒவ்வொரு பக்கமும் கேடுகெட்ட அரசியல்,சீரழிவு
சினிமா,கொலை,கொள்ளை,கற்பழிப்பு,சாதகம்,சோதிடம்,"த்தூ"காறித்துப்ப வேண்டும் போல இருந்தது அவருக்கு.பேப்பரை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டார்,வெயிலுக்கு முன்னால்,வீடு பொய் சேர வேண்டும் என எண்ணிக்கொண்டார்.
"அஸ்ஸலாமு அலைக்கும்,சலீம்"குரல் வந்த திசை நோக்கி பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்கா, கையில் உமல் பொட்டியுடன்(பன்னாவா-கொடுவாவா காக்கா).

"வ அலைக்கும் சலாம் காக்கா" முகமனுக்கு பதில் சொல்லிவிட்டு முறுவலித்தார் நானா.

"என்ன சலீம்,கையில பேப்பரும் ஆளுமா,எதுனா தேர்தல் செய்தியா?ஆமா,திருமங்கலத்துல யாரு ஜெயிச்சதாம்?என்ற பஷீர் காக்காவை பார்த்து சொன்னார் சலீம் நானா,"தி மு க தான் ஜெயிச்சிருக்கு,ஆனா அதுல நெறைய தில்லுமுல்லு நடந்திருக்குன்னு அம்மா சொல்லுது,அது கெடக்குது காக்கா,பேப்பர தொறந்தா ஒரே சினிமா,சோதிடம்,ராசி பலன் இப்பிடி சீரழிவு கலாச்சாரமும்,மூட நம்பிக்கையும் தான் அதிகம்,எனக்கு ஒரு விளக்கம் தெரியனும்,அதாவது இஸ்லாம் பார்வையில சோதிடம்,ராசி பலன் போன்ற மூட நம்பிக்கைகள் பற்றி நீங்க எனக்கு விளக்கனும்"வேண்டுகோள் விட்டார் சலீம் நானா.

பஷீர் காக்கா சொன்னார்," நாள், நட்சத்திரம் பார்த்தல்(சோதிடம்), சகுனம் பார்த்தல் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இவை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானாவைகளாகும்."

"ஒருவன் முஸ்லிமாக வேண்டுமெனில் அவன் "நன்மை, தீமை யாவும் இறைவன் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும்" நம்ப வேண்டும். அவ்வாறு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் நாள், நட்சத்திரம் பார்ப்பது அந்த நம்பிக்கைக்கு மாறு செய்வதற்கு ஒப்பானதாகும். அவ்வாறு எவரேனும் செய்தால் அவர் பாவமன்னிப்பு தேடி மீள்வது கட்டாயக் கடமையாகும்."

"அடுத்த நிமிடம் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே. அப்படியிருக்க தன்னை போன்ற ஒரு படைப்பான இன்னொரு மனிதனிடம் சென்று நல்ல நேரம் நிச்சயிப்பது, எதிர் காலத்தில் தனக்கு என்ன நிகழும் என்பதை அறிய குறி கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அம்மனிதனுக்கு இறைவனுக்கு மட்டுமேயுள்ள எதிர் காலத்தை அறியும் சக்தி இருப்பதாக எண்ணுவதற்கு ஒப்பானதாகும். இதையே திருமறை குர்ஆன்,

........அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் , அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன).........(அல்குர்ஆன் 5:3)

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் , அம்புகள் எறிந்து குறி கேட்பதும் , ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

என்று இறைவனின் வார்த்தைகளாகக் குறிப்பிடுகிறது."

"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே."

"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே.
"இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம்" - (அல்குர்ஆன் 3:140)

"சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேற்பகுதி கீழே செல்லும். இதுவே இயற்கை நியதி. இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டுச் சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்."

"எதிர் காலத்தில் இன்னின்ன நடக்கும் என்பதை இறைவன் நபி(ஸல்) அவர்கள் வாயிலாக சிலவற்றை அறிவித்துத் தந்திருக்கிறான். அவற்றைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் அறியும் ஞானம் இவ்வுலகில் யாருக்கும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத சிலவற்றை மற்றவர்களால் அறிய முடியும் என நம்பிக்கை வைப்பது அவர்களை வரும் காலத்தை அறியும் பண்பு கொண்ட இறை நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்பானதாகும். "

"இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம். "

"ஒரு மந்திரவாதி(?)யிடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று சிலர் கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்."

"நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்? இதைச் சிந்திக்க வேண்டாமா? "

"யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி . (அஹ்மத் 9171) "

"இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்களின் நிலைமையை கவனித்தால் அவை அனைத்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் நடத்தும் ஏமாற்று வித்தை என்பதை அறிந்து கொள்ளலாம். "

"மற்றவர்களுக்கு நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கணித்துக் கூறும் இவர்களுக்கு தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள ஏன் முடியவில்லை? அவர்களைப் பொறுத்தவரை யாராவது அவர்களிடம் சென்று குறி கேட்கும் நேரம் தான் அவர்களுக்கு நல்ல நேரம். இல்லையெனில் அன்றைய சாப்பாட்டிற்கே அவர்களுக்குத் திண்டாட்டம் தான். இது ஒரு பித்தலாட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்."

பஷீர் காக்கா சொல்லி முடித்ததும்,சலீம் நானாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை,"ஸுப்ஹாநல்லாஹ்,இஸ்லாம் ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாக விவரிக்கிறது.சத்தியமாக இது ஒரு இறைவனுடைய மார்க்கம்தான்".அவருள் நிம்மதி வெளிப்பட்டது.

Sunday, January 11, 2009

நேரடி ஒளிபரப்பு! நீங்க விரும்பிய டிவியை பாருங்க!என்ஜாய் பண்ணுங்க!!

அல்லாஹ்வின் அருளால்,ஹஜ் பெருநாள் 2008 அன்று தொடங்கப்பட்ட இஸ்லாம் சானெல் நேரடி ஒலிபரப்பு,மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுவருகிறது.எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.இன்ஷா அல்லாஹ்,அதனைத்தொடர்ந்து இன்று முதல் பீஸ் டிவி நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகின்றது.பாருங்கள்,பயன் பெறுங்கள்!!

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 5

ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?

உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?

உமர்: சராசரி 5 பேரு.

ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.

உமர்: ஆமாம்!

முக்கியமானவரை மறப்பதா?

ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை – இது மாதிரி தொந்தரவு இருக்குது.

இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் - நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?

உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.

ஏன்னா, அவங்க ‘சாதி இந்து’ன்னு வைச்சுக்கிறாங்களே தவிர ‘அரிஜன்’ என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.

அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு ‘அரிஜனை’ இந்துவா ஏத்துகிறதில்ல.

ஆக முடியாது

இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி ‘இந்து’க்களுக்கும் ‘அரிஜனனு’க்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி ‘அரிஜன்’ இந்து ஆக முடியும்?

ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.

இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?

உமர்: சந்திக்கலிங்க.

ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?

உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.

‘மதம் மாறாதே’ ‘மதம் மாறாதே’!

‘அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே’

அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.

ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?

உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். “இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.

ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?

உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, “இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு” சொல்லிட்டுப் போயிட்டார்.

ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?

உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

கிறிஸ்தவ மதம் மாறினால்….

ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?

உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.

அபூ சுமையா

Saturday, January 10, 2009

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்!

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.

எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM

சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!!!

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 4

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?
(ஒலிநாடா பதிவிலிருந்து தரப்படுகிறது)

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:-

உமர்செரீப்:

இங்கே வந்த மணியன் கேட்டார், “நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்.” நாங்க சொன்னோம், “இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க” என்று சொன்னேன்!

ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?

உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.

ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?

20 வருடம் முன்பே

உமர்செரீப்:

20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.
இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.
ஆசிரிய: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?
உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்:

நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.

ஏது மரியாதை?

ஆசிரியர்: நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?

உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!

ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?

உமர்:

எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.

ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?

உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.

ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?

உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.

துவேஷமே காரணம்

ஆசிரியர்:

மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?

உமர்:

துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.

இறைவன் நாடினால் வளரும்.

Thursday, January 8, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 3

இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980-ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை - அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக ‘திரிசூலம்’ வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

மத்தியில் உள்ள ஆட்சி பெயரளவுக்குத் தேசிய ஜனநாயக முன்னணி என்ற 23 கட்சிகள் கூட்டணியாக முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாலும், நடைமுறையில் அது பி.ஜே.பி. என்ற பெரிய அண்ணனின் தாக்கீது செல்லும் ஆட்சியாக நடைபெற்று வருவது உலகறிந்த உண்மையாகும்.

அக்கட்சியினர், இந்திய அரசியல் சட்டத்தினைத் தூக்கி எறிந்து விட்டு, பழைய மனுதர்மத்தையே சட்டமாக வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்று வெளிப்படையாகத் தீர்மானம் போட்டு முழங்கும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

‘விசுவ இந்து பரிஷத்’ ஒரு கலாச்சார அமைப்புதானே, உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை இணைத்து ஒரு புது உணர்ச்சியைத் தோற்றுவிப்பது தானே என்ற கருத்தில் இதில் முக்கியப் பங்கு வகித்த டாகடர் கரண்சிங் போன்ற அறிஞர்கள், இந்த பிற்போக்குத் தனத்தை - அதாவது இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமே மீண்டும் அரசியல் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அபாயகரமானது; அது மீண்டும் 2-ஆம் நூற்றாண்டுக்கு நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதால் அவர் அதிலிருந்து விலகி கொண்டார்(இவ்விவரங்கள் மேற்சொன்ன நூலில் 31-ஆம் பக்கத்தில் உள்ளது).

பசு பாதுகாப்பு, கணபதி ஊர்வலம், புதிய கோயில் கும்பாபிஷேகம், அனுமார் ஜெயந்தி விழாக்கள், இராமன் கோயில் கட்டும் விவகாரம் இவைகள் மூலம் தான் பாமர மக்களுக்குப் ‘பக்தி போதை’யைத் தந்து இந்து மதம் என்கிற பார்ப்பன மதத்தினை வலியுறுத்த அவர்கள் முயலுகின்றனர்!.

மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது - அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் - அந்த மக்களைYஏ நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!.

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்.

அபூ சுமையா

Wednesday, January 7, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?வெளிவரும் நிஜங்கள்!!! பாகம் 2

It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high-caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980-81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.

The incident was communally interpreted by the RSS and VHP as ‘an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.’ It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite,, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions. The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP’s socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high-caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.

It is this break that a conservative upper-caste HINDU seemed unable to bear and accept-primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People’s Awakening) to “warn” the HINDUS about “the international conspiracy to devour Hinduism”. During this campaign the VHP managed to collect some funds from the public as donations. However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue.

The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for “national integration”. The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.

இதன் தமிழாக்கம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்றூர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.

விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் என அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.

சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 1980-81 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.

மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.

இறைவன் நாடினால் வளரும்.

அபூ சுமையா

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!