மே மாதம் 16ல் இந்தியாவின் ஆட்சிக்
கட்டிலில் அமரப் போவது யார் என்று தெரிந்துவிடும்.எந்தக் கட்சியாக
இருந்தாலும்,மனிதர்கள் என்ற முறையில் மட்டும் பார்த்து நல்லாட்சியை வழங்க
வேண்டும் என்பதே எல்லோரின் ஆசை.இதில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவன் என்று கூறு போடும் யாரையும் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது திண்ணம்.எல்லா
மக்களும் சமமே.
அதே நேரத்தில்,அந்த, அந்த மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரு கடமை இருக்கிறது.
இந்துக்கள்
அல்லது கிறிஸ்தவர்கள் அவர்களின் மத கூற்றுக்கு மாறாக செயல்படும் அந்த, அந்த
மக்களுடைய பிரச்சனைகளை அரசிடம் பேசி தீர்வு காணவேண்டும்.
உதாரணமாக,இந்துக்கள்
தங்கள் இந்து மத பெயர் சொல்லி பெண்களை ஏமாற்றும்
சாமியார்களையும்,கிறிஸ்தவர்கள் தங்கள் மத பெயர் சொல்லி அசிங்கங்கள்
செய்யும் பாதிரிமார்களையும் தங்கள் மதம் தானே அவர்கள் என்று பாராமல்
அரசிடம் சொல்லி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போன்று முஸ்லிம்களும்
செய்ய வேண்டும்.
அதோடு, முஸ்லிம்களுக்கு கூடுதலாக இன்னொரு ஒரு கடமையும் உண்டு.
இஸ்லாத்திற்கும்
தர்கா கலாச்சாரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது அனைவரும்
அறிந்ததே.எனவே,புதிதாக ஆட்சிக்கு வரப் போகும் அரசிடம் இனியும் காலம்
தாழ்த்தாமல்,இந்தியா முழுக்க உள்ள தர்காக்களை இடித்து தரை மட்டமாக்கிவிட்டு
அங்கெல்லாம் மருத்துவ மனைகள்,பள்ளிக் கூடங்கள்,மதரசாக்கள் கட்ட
வேண்டும்,மேலும் இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாத தர்காக்களை வைத்து
பிழைப்பு நடத்துவோரை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்ற கோரிக்கையை
முஸ்லிம்கள் எழுப்ப வேண்டும்.தான் வயிறு வளர்க்க,இஸ்லாத்தின் மேல் பொய்
உரைக்கும் அவர்களை முஸ்லிம்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
மேலும்,முஸ்லிம்கள் வழிப்படும் இடம் மஸ்ஜித்கள்தான் என்பதை புரிய வைக்க வேண்டும்.
இது குறித்து,இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுக்கு புரிய வைத்து,இந்தியாவில் சாந்தியும் சமாதானமும் நிலவ முஸ்லிம்கள் உழைக்க வேண்டும்.
No comments:
Post a Comment