தமிழக முஸ்லிம் மக்களின் பொருளாதார
நிலையை மேன்படுத்தவும் சட்டம், கல்வி, அரசியல், மத்திய மாநில அரசு
நிர்வாகங்களின் மற்றும் IAS,IPS போன்ற துறைகளில் முஸ்லிம் மக்களின் நிலையை
மேன்படுத்தி சமுதாய மக்களை மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி இரண்டிலும்
அறிவில் சிறந்தவர்களாக உருவாக்க தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் தமிழக
முழுவதும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது தாங்கள் அறிந்ததே !
முஸ்லிம் சமுதாயத்தில் பெண்களின் கல்வி நிலையை மேன்படுத்தி மார்க்கம்
காட்டும் வழிமுறையை பின்பற்றி பெண் கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில்
அம்மாபட்டினத்தில் அன்னை கதீஜா பெண்கள் கல்லூரி உருவாக்க சமுதாயநலனில்
அக்கறைக்கொண்ட சமுதாய சிந்தனையாளர்களின் பங்களிப்பில் 8 கோடி
மதிப்பீட்டில் கட்டப்பட்டு அரசு ஆணை பெற்று 100 மாணவிகளைக்கொண்டு சிறப்பாக
செயல்பட்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
அன்னை கதீஜா (மகளிர்) கல்லூரி 200 பங்குகள் சேர்க்க தீர்மானிக்கப்பட்டு
செயல்பட்டு வருகிறது, 165 பங்களிப்பாளர்களின் மூலம் திரட்டப்பட்ட நிதியில்
கல்லூரியின் கட்டிட பணி, அனுமதி மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகள்
முடிவடைந்து அன்னை கதீஜா கல்லூரி செயல்பட்டு வருவதும் மேலும் மீதமுள்ள
பங்குகளின் சேர்க்கையை முடிக்கவேண்டிய நிர்பந்தத்திலும் உள்ளது, மீதமுள்ள
35 பங்குகள் நிறைவடைய அன்புள்ளமும் கொடையுள்ளமும் கொண்ட சகோதரர்களின்
உதவியை நாடுகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் சகோதரர் CMN சலீம் அமீரகம் (UAE)
வருகை தந்தார்கள், அவர்களின் தொடர் சொற்பொழிவுகள் மற்றும் சந்திப்புகளுக்கு
இடையே நமது அதிரைநிருபர் தளத்திற்கென சிற்ப்பு பேட்டி கண்டோம், அதன்
காணொளித் தொகுப்பை இங்கே பகிர்வதில் மகிழ்கிறோம்.
மேலும் அன்னை கதீஜா (மகளிர்) கல்லூரிக்கான உதவிகள் பற்றிய விரிவான
தகவலுக்கு கீழ்கானும் தொடர்பு கொள்ள வேண்டி அதன் பொறுப்பாளர்களால் கேட்டுக்
கொள்ளப்பட்டது.
தமிழகம் - CMN சலீம் -0091-9840182251
அமீரகம் - இம்ரான் கரீம் - 00971-559739408
http://adirainirubar.blogspot.com/2014/05/cmn.html
No comments:
Post a Comment