Saturday, April 2, 2011

தேர்தல் கல கல,

ஒரு ஊர்ல ஒரு விஷமம் புடிச்சவன் இருந்தானாம்.அவனோட வேலை எல்லாரையும் வம்பிக்கிழுத்து சண்ட மூட்டிவிட்டு பிரச்சனை உண்டு பண்ணுவதுதான்.அந்த நேரத்துலஅந்த விஷமம் புடிச்சவன் நைசா நழுவிடுவான்.


அப்பிடித்தான் ஒரு நாலு,இன்னிக்கி என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்குட்டு இருந்தப்போ இப்பிடி ஒரு யோசனை தோணிச்சு.

உடனே மக்கள் நெறஞ்ச மார்கெட்டுக்கு போயி,ஒரு மிட்டாய் வாங்கினான்.அந்த மிட்டாயில பாதியை தின்னுட்டு,ஒரு கண்ணாடி கோப்பைகள்,கண்ணாடி பீங்கான்கள் விக்கிற கடைக்கு 
போயி சாதூர்யமான முறையில அந்த மிச்சம் இருந்த மிட்டாயை ஒரு கண்ணாடி கோப்பையில ஓட்டிவிட்டு,கொஞ்ச தூர போயி நின்னு என்னதான் நடக்குதுன்னு நோட்டமிட்டுக்குட்டு இருந்தான்.

இந்த நேரத்துல அந்த கண்ணாடிக் கடையில இருக்குற மிட்டாயை திங்க ஒரு ஈ வந்துது.அந்த மிட்டாய் மேல உக்காந்து தின்ன ஆரம்பிச்சது.அப்போ ஒரு பல்லி இந்த ஈய பாத்துட்டு - மெது மெதுவா நகர்ந்து வர,இப்போ ஈ பல்லிக்கு போக்கு காட்ட,இப்பிடியே போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு பூனை அந்த பக்கம் வர,அது பல்லியை பாத்துட்டு - ஆஹா நல்ல சந்தர்ப்பம் டோயின்னு ஒரே தாவு தாவ -பல்லி லபக்குன்னு காணாம போக - அந்த பூனை அங்கன இருந்த கண்ணாடி பாத்திரங்களைஎல்லாம் உடைக்க - பூனையோட மொதலாளி எங்க நம்ம பூனையாரை காணோம்னு அந்தக்கடைக்கு வர,இத பார்த்த - கண்ணாடி கடை மொதலாளிக்கு அட இவன் பூனைதான் இதுன்னு தெரிய - கோபம் தலைக்கு ஏறி - இப்போ ரெண்டு பேருக்கும் குடுமிப்பிடி சண்டை.

இதுல மிச்சம் இருந்த கண்ணாடியும் உடைஞ்சு போயி,பூனையோட மொதலாளியோட பல்லும் உடைஞ்சு -கிளைமாக்ஸா போலிசு வந்து- அப்பப்பா இனியும் சொல்லனுமா?

அந்த விஷமக்கார நம்மாளு ,ரகசியமா - சிரிச்சுக்குட்டு இருந்தான்,முழு திருப்தியோட.

அப்பாடா,இந்த தேர்தல பத்தி - அவிங்க தேர்தல் அறிக்கை பத்தி - பிரச்சாரம் பத்தி படிக்கும்போது எனக்கு மேற்கண்ட கற்பனை வந்துது,கொட்டிபுட்டேன்,அவ்வளவுதான்.(நீங்க அந்த விஷமக்கார ஆளு யாருன்னு கருணாநிதி,ஜெயலலிதா,இப்பிடி இன்னும் யாரைப்பத்தியும் கற்பனை பண்ணாலும் நான் பொறுப்பல்ல)

1 comment:

  1. fathima akka, ha h ah ah... urula thee pidichathaane avinga kulir kaaya mudiyjm!!! nalla haasyam!!

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!