Sunday, September 18, 2011

அவதூறு! பழி! இட்டுக்கட்டு!


ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்திபின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை என்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் : 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும்பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும்தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும்மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 24: 23)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்;ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்(ஸஹீஹுல் புகாரி: 2766
 
 
'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' ' என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமாஎன்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள்,'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்'  (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!