அன்பிற்கினிய சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்...
அண்ணல் நம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் காலத்தில் இருந்து யாருக்கெல்லாம் அல்லாஹ்
அருள் புரிந்துவருகிறானோ அவர்கள் எல்லாம் இஸ்லாம் எனும் சத்தியத் திரு நெறியை ஏற்று ஈருலக நன்மையை எய்தும் பேறு பெற்று வருகின்றனர்.
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் முதற்கொண்டு யாரெல்லாம் இஸ்லாமானார்களோ,முஸ்லிம்கள் என்ற உணர்வும் உவகையும் கொள்கின்றனரோ அவர்களெல்லாம் தம்மால் ஆன எல்லா வகையிலும் இஸ்லாம் மார்க்கமும் முஸ்லிம்கள் என்னும் இந்த நடுனிலைச் சமுகமும் தழைத்துச் செழிக்கத் தம்மால் ஆன எல்லாவகையிலும் பகிரங்கமாகவும்,அந்தரங்கமாகவும் உயிரைக்கொடுத்து உழைத்துக்கொண்டே உள்ளனர்-இன்றளவும்!இன்ஷா அல்லாஹ்,இந்த தியாகத் திருக்கூட்டம் எதிர்காலத்திலும் அவன் அருளால் படையென
நடை பயிலும்.(போலிகளை ஒரு பொருட்டெனக் கொள்ளவேண்டாம். நம் நம்பிக்கையும் பயணமும் நல்லவற்றை நோக்கியவையாகவே இருக்கட்டும்.)
உண்மையாகவும்,பூரணமாகவும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பவர்கள்,புதிதாய்ப் பிறந்து,புது வாழ்வு தொடங்குபவர்களே ஆவர்.சொல்லாலோ,செயலாலோ அவர்களுடைய முந்தைய வாழ்வின்-மார்க்கத்திற்கு முரணான-அடையாளங்கள் எவையும் தொடராது பேணுதலாகத் தம்மை வளர்த்தெடுத்துக் கொள்ளவேண்டும்;
அதற்கு நம் போன்றவர்கள் அன்பான, உட்பாசத்தோடு கூடிய அணுகுமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.
இதுவும் முற்றிலும் நபிவழியின்பாற்பட்டதே!
முன்னுரை போதும்-நேரடியாகச் செய்திக்கு வருகிறேன்:-
“தாசன்” என்பது,தமிழ்ச் சொல் அல்ல.அந்தச் சொல்லுக்கு நீண்ட, நெடிய வரலாறும் பொருள் விளக்கமும் உண்டு.தாசன் என்றால் அடிமை என்று பொருள் இருப்பது பரவலாக அறியப்பட்டுள்ளதுதான்.ஒரு முஸ்லிம்
ஆனவர் தம் பெயரை வேறொருவருக்கு-அது யாராக இருந்தாலும்-அடிமை என்ற பொருள் வரும் பெயரை வைத்துக்கொள்ளவே மாட்டார்.அந்த விவரம் தெரிந்தவர் என்ற முறையில் அழகாக அல்லாஹ்வுக்குப் பிடித்த பெயர்களில் ஒன்றான “அப்துல்லாஹ்”என்ற பெயரை முன்னாள் பெரியார்தாசன் மாற்றி வைத்துக்கொண்டார்.இதற்குப் பிறகும் தொடர்ந்து அழைப்பிதழ்களிலும் அறிவிப்பிலும் மற்ற பல நிலைகளிலும் அவர் நம் மக்களாலேயே ”பெரியார் தாசன் என்கிற அப்துல்லாஹ்” என்றோ அல்லது அப்துல்லாஹ்(பெரியார் தாசன்) என்றோதான் இன்றுவரை குறிப்பிடப்படுகிறார்.இது எப்படி சரியாகும்?
நாம் இப்படிக் கேட்பதால் “அப்துல்லஹ் அடியார் என்று அழைக்கப்படவில்லையா?முஹம்மது பிக்தால் என்று அழைக்கப்படவில்லையா?”-என்று கேட்கக் கூடாது.ஏனென்றால் அந்தப் பெயர்களில் நாம் சொல்லும்
முரண்பாடு எதுவும் இல்லை.
அவரை-ஒரு சிந்தனையாளரை-வெறுமனே அப்துல்லாஹ் என்றால் சிறப்பாக இருக்காதே என்று சிலர் கவலைப் படலாம்.அவருக்கு உரிய மதிப்பளித்துச் சிறப்பிப்பதில் நமக்கும் மகிழ்ச்சிதான்.அவரை “இளைய பெரியார் அப்துல்லாஹ்” என்று அல்லது “புதிய பெரியார் அப்துல்லாஹ்”என்று அல்லது”புரட்சிப் பெரியார் அப்துல்லாஹ்”என்றோ அழைக்கலாமே! இதனால் எதுவும் குறைந்துவிடப் போவதுமில்லை;முரண்படப் போவதும் இல்லை.என்ன,இனி அவரை “இளைய பெரியார் அப்துல்லாஹ்”என்று அழைக்கலாம்தானே!
( நான் ஏதோ என் சிற்றறிவுக்குப் பட்டதைச் சொன்னேன்.சமுதாயம் ஒரு நல்ல முடிவை எடுக்குமாக!)
--------------------------------------------------------------------------------------------
அதற்குப் பதிலாக டாக்டர் அப்துல்லாஹ் என்று அழைத்தாலே எல்லோருக்கும் எளிதில் புரிந்துவிடும்.
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி
ஆலங்குடி
----------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்,
டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் தற்போது மதிமுக அரசியல் கட்சியில் ( வைகோ ) சேர்ந்துள்ளார். அவரிடமே பேசி உறுதி செய்து விட்டேன். அல்லாஹ் அவரது சரியான எண்ணங்களை நிறைவேற்றி வைப்பானாக. நம் சமுதாயம் அரசியல் ரீதியாக ஓரணியில் இல்லையே என்று மிகவும் வருத்தப் படுபவர். இன்ஷா அல்லாஹ் இவரது இந்த அரசியல் பிரவேசம் நம் சமுதாயத்திற்கு நன்மை பயப்பதாக அல்லாஹ் மாற்ற வேண்டும்.
ABU FAAIZ
------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பெரியார்தாசன் என்பதற்கு பதிலாக பெரியோன் (அல்லாஹ்வின்) தாசன் என அழைக்கலாம். அதற்கு அப்துல்லாஹ் என அழைப்பதே சிறந்தது.
அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல்.

நம் சமுதாயம் அரசியல் ரீதியாக ஓரணியில் இல்லையே என்று மிகவும் வருத்தப் படுபவர்.
மமக வும் ஒரு அரசியல் கட்சிதான். ஓரணியை விரும்பக்கூடிய நமது சமுதாயத்தவர்கள் , மமக வை விட்டிவிட்டு ஏன் மதிமுக வில் சேர வேண்டும். ஒற்றுமையை பற்றி பேசிக்கொண்டு வேற்றுமையை விதைப்பதுபோல் உள்ளது. என் சிற்றறிவுக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்கலாம். (practice what you preach என்று எங்கோ படித்தது வேறு ஞாபகம் வருது).
ANWARDEEN
---------------------------------------------------------------------------------------
வ அலைக்கும் வஸ்ஸலாம்
சகோதரர் அன்வர் சொல்வதுப் போல் நமக்கு என மமக இருக்கும் பொழுது, மதிமுகவில் ஏன் போய் சேர்ந்தார்? எனக்கு வியப்பான கேள்விதான்.
நான் அறிந்தவரை தமிழ் இனவாதம் கொண்டவர் வைகோ. அவருக்கு தனி தமிழ் நாடு உருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அது இந்தியாவிலும், இலங்கையிலும் உருவாக வேண்டும் என நினைப்பவர். அவருக்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் இலங்கையாகட்டும், தமிழ்நாடாகட்டும் அது குறித்து கவலை இல்லை.
இன்று 3 தமிழர்களை காக்க, முதல் மனிதராய் களம் இறங்கி போராடும் இவர், தமிழக முஸ்லிம்களும் நம் சகோதரர்கள்தான் என கருதி, கவலை கொண்டவராக இருந்தால், கோவை கலவரத்திற்கு காரணமான காவி கும்பலை வன்மையாக கண்டித்து இருப்பார். அதில் அநியாயமாக பழி வாங்கப்பட்ட 186 முஸ்லிம் சகோதரர்கள் குறித்து கவலை கொண்டு இருப்பார். இவர்களுக்காக குரல் கொடுத்தாரா? என எனக்கு தெரியவில்லை.
இந்த தமிழ் இனவாதம் பேசும் மதிமுகவில் என்ன கொள்கை இருக்கிறது? என போய் சேர்ந்தார் என தெரியவில்லை.
வஸ்ஸலாம்
அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல்.
சகோதரர் அன்வர் சொல்வதுப் போல் நமக்கு என மமக இருக்கும் பொழுது, மதிமுகவில் ஏன் போய் சேர்ந்தார்? எனக்கு வியப்பான கேள்விதான்.
நான் அறிந்தவரை தமிழ் இனவாதம் கொண்டவர் வைகோ. அவருக்கு தனி தமிழ் நாடு உருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அது இந்தியாவிலும், இலங்கையிலும் உருவாக வேண்டும் என நினைப்பவர். அவருக்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் இலங்கையாகட்டும், தமிழ்நாடாகட்டும் அது குறித்து கவலை இல்லை.
இன்று 3 தமிழர்களை காக்க, முதல் மனிதராய் களம் இறங்கி போராடும் இவர், தமிழக முஸ்லிம்களும் நம் சகோதரர்கள்தான் என கருதி, கவலை கொண்டவராக இருந்தால், கோவை கலவரத்திற்கு காரணமான காவி கும்பலை வன்மையாக கண்டித்து இருப்பார். அதில் அநியாயமாக பழி வாங்கப்பட்ட 186 முஸ்லிம் சகோதரர்கள் குறித்து கவலை கொண்டு இருப்பார். இவர்களுக்காக குரல் கொடுத்தாரா? என எனக்கு தெரியவில்லை.
இந்த தமிழ் இனவாதம் பேசும் மதிமுகவில் என்ன கொள்கை இருக்கிறது? என போய் சேர்ந்தார் என தெரியவில்லை.
வஸ்ஸலாம்
அன்புடன் சகோதரன்
கீழை ஜமீல்.
----------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment