Wednesday, December 17, 2008

இஸ்லாம் உறுதியான சட்டதிட்டங்களை உடையது. (இஸ்லாம் PART 2)

மதம் என்பது ஆராதனைக் கூடத்தின் நான்கு சுவர்களுக்குள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற கொள்கையை இறைத் தூதர்கள் கற்றுத் தரவில்லை. மாறாக மனித வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவன் வகுத்த விதி விலக்குகள் பேணப்பட வேண்டும் என்பதே மதமாகும். அதனையே இறைத்தூதர்களும் கற்றுத்தந்தனர். முஸ்லிம் என்பவன் தன்னை முழுமையாக இறைவனிடத்தில் அர்ப்பணித்தவன். அதனால் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இறைவனின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்ற விஷயத்தில் எந்த விட்டுக்கொடுத்தல்களுக்கும் முஸ்லிம் தயாராவதில்லை. ஆராதனைக்கூடத்தில் இறை பக்தியும், சுய வாழ்வில் தனது சொந்த விருப்பமும் என்ற மத சித்தாந்தம் இஸ்லாத்திற்கு முரணானதாகும். எனவே எல்லா துறைகளிலுமுள்ள இஸ்லாமிய ஒழுக்கச் சட்டங்கள் கண்டிப்புடன் பின்பற்றுபவனே முஸ்லிம் ஆவான்.


"அல்லாஹ்வைக் கொண்டும், இன்னும் எங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டதைக் கொண்டும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப் (அவர்களின்) சந்ததிகள் ஆகியோரின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றைக் கொண்டும், இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்கள் ஆகியோருக்கு அவர்களுடைய ரப்பிட மிருந்து அருளப்பட்டவற்றைக் கொண்டும் நாங்கள் ஈமான் கொண்டோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை காணமாட்டோம்; மேலும் நாங்கள் அவனுக்கே (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்கள் ஆவோம்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக". (திருக்குர்ஆன் 3:84)


"மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் ரப்பையே வணங்குங்கள் (அதன் காரணமாக) நீங்கள் இறையச்சமுடையோர் களாக ஆகலாம்" "உங்கள் ரப்பு எத்தகையவனென்றால்) அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் (நீங்கள் வாழ்வதற்குத் தக்கவாறு) அமைத்தவன். மேலும், வானிலிருந்து மழையைப் பெய்யச் செய்து, அதன் மூலம் பல வகையான கனிகளிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான். ஆகவே, நீங்கள் (இவற்றையெல்லாம் நன்கு) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு (எவ்வித) இணைகளையும் ஏற்படுத்தி விடாதீர்கள்". (திருக்குர்ஆன் 2:21,22)

by அபூ அப்திர்ரஹ்மான்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!