Saturday, December 13, 2008

உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது!

சலீம் நானாவுக்கு இதைக் கேட்டு விட வேண்டும் என்ற துடிப்புடன் காணப்பட்டார்.ஆனால் பஷீர் காக்காவைத்தான் இன்னும் காணவில்லை.மீன் வாங்கத்தான் கடத்தெருவுக்கு போய்விட்டாரா,அல்லது நெட்டில் அதிரை எக்ஸ்பிரஸ் நோட்டம் விடுகிறாரா?ஒன்னும் புரியலய,நானா அங்கலாய்த்துக் கொண்டிருக்கும்போதே "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற குரல் வரவே திரும்பிப் பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்காவேதான்.

"வ அலைக்கும் சலாம் காக்கா, என்ன இவ்ளோ நேரமா காணோம்?"சலீம் நானா.
"அதில்லை சலீமு,கொடுவா மீனு திண்டு நாளாச்சி,அதான் பொடி நடையா கடைத்தெரு வரைக்கும் போய், கொடுவா மீனு வாங்கி வந்தேன்,அதான் லேட்டு".என்ற பஷீர் காக்காவின் பேச்சில் சோர்வு தெரிந்தது.

"உங்கள ரொம்ப நேரமா எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன்,ஒரு சந்தேகம் கேக்கலாமேன்னு?என்ற சலீம் நானாவைப் பார்த்துக் கேட்டார் பஷீர் காக்கா,"சொல்லு சலீமு,என்ன சந்தேகம்,தெரிஞ்சா சொல்லுதேன்,இல்லியன்ன தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு சொல்றேன்."

"பொதுவா காக்கா,மழயோ,புயலோ,கடல் கொந்தளிப்போ,பூகம்பமோ இன்னும் என்னல்லாம் ஏற்படுதோ,அப்பல்லாம்,அதை இயற்கை,இயற்கை சீற்றம், அப்படீன்னு சொல்லுறாங்க,பேபர்ல எழுதுறாங்க.இப்படி அவைகளை இயற்கை,இயற்கையின் சீற்றம் இப்படி சொல்லலாமா?

பசீர் காக்கா சிறிது யோசித்து விட்டு சொன்னார்,"கூடாது,அப்படி சொல்லக் கூடாது.காரணம் என்னனா,கடல்,மலை,மண்,காத்து,மழை,பிரபஞ்சம்,கோள்கள் இன்னும் சிலவற்றை இறை நிராகரிப்பாளர்கள் தான் இயற்கை,இயற்கை என்பார்கள்.ஏனெனில்,அவர்கள் அவைகள் அனைத்தையும் படைத்தது ஏக இறைவன் அல்லாஹ்தான் என்று ஏற்றுக் கொள்வதில்லை.அதனால்தான் அவைகளைஎல்லாம் இயற்கை என்று விடுகிறார்கள்.இதை நாமளும் நமக்கு அறியாமலேயே பயன் படுத்தி விடுகிறோம்.உதாரணமா கடல் கொந்தளித்தால்,பூகம்பம் ஏற்பட்டால்,அது இயற்கையின் சீற்றம் என்று சொல்லி விடுவது.அதாவது அது இயற்கையினால்,அதன் சில வேதி இயல் அல்லது மற்ற காரணங்களால் ஏற்படுகிறது என்பர்.இப்படி காரணத்தை அடுக்கிக் கொண்டே போவார்கள்.இதைத்தான் ஆங்கிலத்திலும் "மதர் நேச்சர்" என சொல்கிறார்கள்."

"ஆனால் நம்மை பொறுத்தவரை,உண்மையும்,சத்தியமும் அதுதானே,என்ன நடந்தாலும் சரி,அது அத்தனையும் நம் அனைவரையும்,பிரபஞ்சத்தையும்,எல்லாவற்றையும் படைத்து,பரிபக்குவப் படுத்தி,பாதுகாத்துவரும் அல்லாஹ் தான் ஆக்குகிறான்,அழிக்கிறான்,பாது காக்கிறான்.அவன் உத்தரவு இன்றி எதுவும் நடப்பதில்லை,இதை புரிந்து கொண்டால் போதும்" என அழகாக விளக்கினார் பஷீர் காக்கா.சலீம் நானாவுக்கு சந்தோசம்,தன் சந்தேகம் தீர்ந்ததர்க்கும்,உண்மையை விளங்கி கொண்டதற்கும்.
----------------------------------------------------------------------------
திருக்குர்ஆன்

மேலும் (நபியே)உமதிரட்சகன்,தான் நாடியவற்றை படைக்கிறான்.(தன்னுடைய தூதுக்காக அவர்களில் தான் விரும்பியவர்களைத்)தேர்ந்தெடுக்கிறான்.(அவ்வாறு தூதரைத்)தேர்ந்தெடுத்தல் அவர்களுக்கு இல்லை.அல்லாஹ் மிக பரிசுத்தமானவன்.இன்னும் இவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவனாகிவிட்டன்.28:68

வானங்களையும்,பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே)படைத்திருக்கிறான்.இன்னும்,ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக் கொண்டு,கூலி கொடுப்பதற்காகவும் (படைத்துள்ளான்)அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.45:22

(மனிதனே)உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது!பின்னரும் அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது.
பின்னும் உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது! அப்பாலும் உன்னை அழிக்கக் கூடியது நெருங்கி விட்டது.
(எத்தகைய கேள்வி கணக்கும் கேட்கப்படாமல் )வீணாக விடப்பட்டு விடுவான் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா? 75:34,35,36

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!