Wednesday, December 10, 2008

"அப்படி என்னதான் நியூசு"

சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் வழக்கம்போல எதையாவது ஒன்றை கதைத்துக் கொண்டே இருப்பர்.அதில் அன்றாட அரசியல் முதல் கொண்டு,ஊர்-உலக விஷயங்களையும் விட்டுவைப்பதில்லை. அதில் இஸ்லாமும் இருக்கும், அறிவியலும் இருக்கும்,சமூகவியலும் இருக்கும்.அவர்களை சுற்றி மக்கள் மொய்த்துகொண்டு,அவர்கள் பகிர்ந்து கொள்ளும் நல்ல விஷயங்களை கேட்டு பயன் அடைவர்,இதை அரட்டை கச்சேரி என்பதை விட,அறிவுக் கச்சேரி என சொல்லலாம்.

சரி,நானாவும்,காக்காவும் என்ன கதைக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

*****************************************************************

"என்னவோய் இம்பூட்டு நேரமா காணோம்?"என கேட்டுக்கொண்டே வந்தார் சலீம் நானா."அதில்லை சலீமு ,காத்தும்,மழையுமா இருக்கு,எதுவும் நியூசு இருக்கான்னு ரேடியோவுல கேட்டுட்டு வர்றேன்,"என்றார் பஷீர் காக்கா.

"அப்படி என்னதான் நியூசு,"

"ஆமா காத்து இப்புடி வீசும்,அப்படி வீசும்,இவ்ளோ வேகம்,கடும் சூறாவளி இப்படி நியூசு சொல்ரானுவோ,ஆனா ஒன்னும் இல்லாம புஸ்ஸுன்னு போய்டுது, அதே மாதிரி,இன்று மானம் தெளிவாக இருக்கும்.அப்படின்னு சொல்றாங்க.ஆனா,சரியான மழை பெஞ்சுடுது,இது மூலமா என்ன விளங்குது?"என முத்தாய்பாய்கேட்டார் பஷீர் காக்கா.

"எனக்கு வெளங்கலே காக்கா,நீங்களே சொல்லிபோடுங்க?"கெஞ்சினார் சலீம் நானா.

"ஒனக்கு விளக்கம் சொல்லியே ஒஞ்சி போனேன்,"என ஆரம்பித்தார் பஷீர் காக்கா,"அல்லாஹ்தான் காத்து,மழை,இடி,மின்னல் எல்லாத்தையும் அனுப்புறவன்.அல்லாஹ் நாடினால் தவிர வேறொன்னும் நடக்கப்போவதில்லை.இத குரானில பல இடங்கள்ல பாக்கலாம்.அதே மாதிரி ஒனக்கு ஒரு ஹதீஸ் தெரியுமா?"
"அல்லாஹ்வின் நாட்டத்துல மழை பெஞ்சதுன்னு சொன்னவன் முஸ்லீம்,இன்ன நட்சத்திரம் மூலம் மழை பெஞ்சதுன்னு சொன்னவன் காபிராகி விட்டான்னு சொல்லி இருக்காங்க.(ஹதீஸ் சுருக்கம்)நம்ம ரொம்ப ஜாகிரதையா பேசணும்,ஒரு சின்ன விஷயங்கூட நம்மள கவுத்தி விட்டுடும்"என முடித்தார் பஷீர் காக்கா.

அவரின் பேச்சை எல்லாரும் ஆமோதித்தனர்.

(இங்கு குறிப்பிடப்படும் பெயர்கள் கற்பனையே,யாரையும் சுட்டுவதாக அவதானித்தல் ஆகாது)
**************************************************

நாம் இரவை (உங்களுக்கு ) ஆடையாகவும் ஆக்கினோம்.
நாம் பகலை வாழ்க்கைக்குரிய(வற்றைத் தேடிக்கொள்ளும்)நேரமாக ஆக்கினோம்.
உங்களுக்கு மேல் உறுதியான (வானங்கள்)ஏழினை நாமே உண்டாக்கினோம்.
(வெப்பமும் ஒளியும் கலந்த)பிரகாசிக்கும் ஒரு விளக்கையும் ( சூரியனை)ஆக்கினோம்.
கார் மேகங்களிலிருந்து அதிகமாகப் பொழியும் (மழை)நீரையும் இறக்கி வைத்தோம்.
அல் குர்ஆன் 78:10 to 14

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!