Saturday, December 20, 2008

அவன் ஒருவனே!

சலீம் நானாவும்,பஷீர் காக்காவும் குளிருக்கு இதமாக ஸ்வெட்டர்,தலைக்கு மங்கி கேப் எல்லாம் போட்டுக்கொண்டு,அந்த அதிகாலை நேரத்திலும் வாகிங் போய்க்கொண்டிருந்தனர்.இரண்டு பெரும் ஸுபுஹ் தொழுது முடித்து,குரான் ஓதிவிட்டு-ஹாஜியார் டீகடைக்கு வந்து,ஆளுக்கொரு சாயா குடித்துவிட்டு வாகிங் போவது வழக்கம்.அந்த நடையிலும் ஒன்று அல்லாஹ்வை திக்ரு செய்துகொண்டு செல்வார்கள்,அல்லது ஏதாவது நல்ல விஷயங்கள் குறித்து விவாதித்த வண்ணம் நடை பயில்வார்கள்.

இன்று அவர்கள் இறைவன் குறித்து அலசினார்கள். சலீம் நானா கேட்டார்,"என்ன பஷீர் காக்கா,எல்லாரும் ஆளுக்கொரு விதமா இறைவனைப் பற்றி சொல்கிறார்கள்.ஒருத்தன் ஒவ்வொரு டிபாட்மேன்ட்டுக்கும் கடவுள் உண்டாக்கி, ஆயிரத்துக்கு மேல சொல்றான்,ஒருத்தன் மூனு என்கிறான்.ஒருத்தன் கடவுளே இல்லங்கிறான்,அல்லாஹ்வே,நீதான் காப்பாத்தனும்"அங்கலாய்த்தார்.

பசீர் காக்காவுக்கும்,கோபமாக வந்தது."என்ன செய்ய?தன் தலயிலேயே மண்ணை, அல்ல நெருப்பை அள்ளிக் கொட்டிக்கொள்கின்றனர். சாதாரணமா ஒரு ஆபீஸ் நிர்வாகத்துலையே ஒரு மானேஜர் இருப்பார்,அவர்க்கு கீழ உதவி மானேஜர் இருப்பாங்க. அவர் சொல்றத,இவர் கேட்பார்.அதே சமயம்,ஒரு ஆபீசுக்கு ஒரே தகுதி,ஒரே முடிவெடுக்கும் அதிகார வரம்பு கொண்ட இருவரயோ, அல்லது மூவரயோ மானேஜரா நியமனம் பண்ணுனா என்ன ஆகும்.அவரவருக்கு உள்ள ஈகோ மற்றும் தன் முடிவுதான் ஏற்கப்படனும் என்கிற ஆசை,வெறி எல்லாம் சேர்ந்து அந்த அலுவலகமே இயங்க முடியாம பண்ணிடும்.ஆப்டர்ஆல்,கேவலம் ஒரு சாதாரண ஒரு ஆபீசுக்கே இந்த கதின்னா,இந்த அண்ட சராசரங்களை படச்சி, பாதுகாத்து,ஒவ்வொரு காரியமும் நடந்தேரனுமுன்னா ஒன்னுக்கு மேல கடவுள் இருந்தால் சாத்தியப்படுமா ? இன்னும் நிறைய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆக ஒரு இறைவன் தான் சாத்தியம்."என்று முடித்தார்.பஷீர் காக்கா.
**********************************************************

(நபியே)நீர் கூறுவீராக!அவன்-அல்லாஹ் ஒருவனே.
அல்லாஹ் (யாவற்றை விட்டும்)தேவையற்றவன்.(யாவும் அவன் அருளையே எதிபார்த்திருக்கின்றன)
அவன் (எவரையும்)பெறவில்லை.(எவராலும்)அவன் பெறப்படவுமில்லை.
மேலும்,அவனுக்கு நிகராக எவருமில்லை.

திருக்குர்ஆன் 112:1 to 4

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!